திங்கள், ஜூன் 25

3:43 PM
7

எங்கிருந்தோ வந்தாய்...! 


 நிறமற்ற என் நாட்களிலும் வண்ணங்களை பூசிச் செல்வாய்...!! உன்னை விட வேறு யார் இப்படி என்னை கவனித்து கொண்டார்கள்...!? உறவுகள் நட்புகளுக்கிடையே ஏதோ ஒரு எதிர்பார்ப்பு உண்டு...! நேசிக்கவும் நிபந்தனை விதிக்கும் சுயநல மனிதர்கள் மத்தியில் வாழும் வாழ்கையில் எந்த வித எதிர்பார்ப்பும் வைக்க இயலாத உன்னை நேசிக்க தூண்டியது எதுவோ...? எனது 11 வயதில் இருந்து தொடங்கிய இந்த உறவு நாளுக்கு நாள் உயிர்ப்புடன் வளர்ந்து கொண்டே செல்லும் விந்தை எதுவோ ?! ஆராய முடியவில்லை, என்றாலும் 'பிடிச்சிருக்கு' என்ற ஒன்றை சொல் பொருத்தமான பதிலாக இருக்கலாம் !!


நமக்கு பிடித்தவர்கள் எது செய்தாலும், சொன்னாலும் அழகு தான், அவர்கள் வைக்கும் ஒரு சிறு புள்ளியை கூட விடாமல் சுற்றிச் சுற்றி வரும் நமது  மனம். அவர்களை நிழலென பின் தொடர்ந்து செல்லும் மனதை கட்டுபடுத்த வழி  ஏது...?!

எங்கோ தூரத்தில் இருந்து கொண்டு குரலால், வார்த்தையால் வழிநடத்த முடியும் என்பதை முதன்முதலாய் சாத்தியமாக்கி காட்டினாய் நீ !!

அழுகைகள், வேதனைகள்,வலிகள்,துயரங்கள், சிக்கல்கள், அத்தனையிலும் மயிலிறகென மனதை வருடி துணையாக இருக்கிறாயே...! மனது சரியில்லாத ஒவ்வொரு நேரமும் உனது பாடலை ஒலிக்க வைத்து அமைதி அடைந்திருக்கிறேன் இன்று வரை...! பிரச்சனைகளால் தூக்கமற்று புரளும் என்னை, பல இரவுகள் தாலாட்டி தூங்க வைத்திருக்கிறாய் ! குழப்பமான மன நிலையை சீராக்கி பிரச்னையை எதிர்கொள்ள வைத்திருக்கிறாய் ! எல்லாம் செய்த உன்னை இன்று மிக அதிக அதிகமாய் நினைக்க வைத்துவிட்டாய்...

இதோ நீ மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்று இன்றுடன் மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன...! பலரும் சொல்றாங்க 'மிஸ் யு ' னு...விடியும் ஒவ்வொரு நாள் காலையிலும் உன் குரல் கேட்டு என் நாளை  தொடங்கிற எனக்கு உன்னை 'மிஸ் யூ' என்று சொல்வது சற்று வேடிக்கையாகத்தான் இருக்கும்...?!

மூன்று வருடங்களுக்கு முன் 

காலை நேர பரபரப்பில் இருந்த என் வீட்டை சென்னையில் இருந்து வந்த அம்மாவின் போன் அழைப்பு மாற்றிப்போட்டது. அம்மா, "அந்த பையன் இறந்துட்டான்டி" புரியாத குழப்பத்தில் நான், "யார்மா, எந்த பையன் ?" அம்மா "அதான் அந்த பையன், உனக்கு பிடிக்குமே MJ " (என் அம்மாவிற்கு இன்னும் நீ பையன் தான் !!)அதிர்ச்சியுடன் "என்னமா சொல்ற ?" "ஆமாண்டி  கொலை பண்ணிட்டாங்களாம், டிவில நியூஸ் போட்டு பாரு...... " என்னென்னவோ சொல்லிக்கொண்டே போக இங்கே என் காலடியில் பூமி நழுவி கொண்டிருந்தது...மயக்க நிலைக்கு போன என்னை என் கணவர் பிடித்து சோபாவில் அமர்த்தினார்...சில நிமிடம் கழித்து பதட்டத்துடன் டிவியை போட்டு BBC , NDTV இரண்டு சேனலையும் மாத்தி மாத்தி பார்க்க அங்கே தெரிந்த உண்மை நெஞ்சை கீறி கிழிக்கத் தொடங்கியது...

ஸ்கூல் போக கிளம்பி நின்ற குழந்தைகளை மறந்தேன், என் நிலை புரிந்த கணவர் அவர்களை கவனித்து தயார் பண்ணி அனுப்பினார்...

தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகளில் அண்ணன், தம்பியினரின் வருத்தமான விசாரிப்புகள்...துக்கவீடாகி போனது என் வீடு...!

'ரிலாக்ஸா இருமா, நான் கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்' என்று என் தனிமையின் அவசியம் உணர்ந்து கிளம்பினார் என்னவர். அதுக்காகவே காத்திருந்ததை போல அதுவரை கண்ணீர் விட்டு கொண்டிருந்த நான் அவர்  அகன்ற அடுத்த நொடி கதற தொடங்கினேன்...எப்போதும் பறிக்கப் பிடிக்காத என் தோட்டத்து ரோஜா பூக்களை (செடியில் இருந்தால் மேலும் 3 நாட்கள் வாடாமல் இருக்கு என்பதால் பறிக்க மாட்டேன்)பறிக்க சென்று, பூத்திருந்த அத்தனை மலர்களையும் கை நிறைய அள்ளி கொண்டுவந்தேன். சுவரில் மாட்டி இருந்த ஆளுயர படத்திற்கு மாலையாக்கினேன்...சில பூக்களை உதிர்த்து மெல்ல தூவி பார்த்துக்கொண்டே இருந்தேன்...!

நெருங்கிய நேசங்களின் பிரிவின் போது என் கண் அழுதிருக்கலாம் , அன்று உனக்காக என் இதயம் அழுததை உணர்ந்தேன்...!!

மிக பிடித்ததால் தான் கடவுள் உன்னை விரைவாக அழைத்து கொண்டார் போலும்...
சிலர் சொன்னார்கள் கண்மூடித்தனமான நேசம் இது, உணர்ச்சி வேகத்தில் ஏதேதோ சொல்கிறேன் என்று...சிறு வயது முதல் கூடவே இருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னை நெறிப்படுத்தி கொண்டு வந்த ஒரு உன்னத உயிரை பற்றி சொல்ல 'உணர்ச்சிவசப்பட்ட நிலை' மட்டும் போதாது அதிகபடியான புரிதலும் பக்குவமும் வேண்டும்...! 

சேவை எண்ணத்தை சிறுவயதில் விதைத்தது நீ ...அது தானே இன்று தொண்டு நிறுவனமாய் செயல்பட்டு கொண்டிருக்கிறது...!! நீ கற்றுக் கொடுத்த நேசத்தை என்னை சுற்றி இருக்கும் அத்தனை பேரிடமும் செலுத்தி எல்லோரையும் நேசிப்பேன்...!இதோ இந்த வீடியோவிலும் உன் பேச்சு நெகிழவைத்து விடுகிறது...


முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் முன் ஜாக்சனின் "Gone to Soon - Heal The World" பாடல்கள்...மனதை மெல்ல ஊடுருவி இதமாய் வருடி கொடுக்கும் ...அத்தனை  பேரும் எழுந்து நின்று ஜனாதிபதி உட்பட கரகோஷ ஒலி எழுப்புவது அருமை ! நம்மை அருகில் அழைத்து வெகு இயல்பாய் எடுத்து சொல்வதை போன்ற  நடை பாவனைகள் அழகு ! இம்மண்ணை விரும்ப, மனிதர்களை நேசிக்க என் மனதில் சிறுவயதிலேயே மனித நேயத்தை பதிய வைத்தது இப்பாடல் (Heal the World) என்பது உண்மை. 

Heal The World
Make It A Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For MeYou Are Not Alone பாடல்.  ஆறுதலாய் தோள்  சாய்க்கும், பலமுறை அனுபவித்திருக்கிறேன்...தனிமையாக உணரும் தருணம் தவறாமல் இப்பாடலை போட்டு கண்கள் மூடி கேட்க, பாடல் முடியும் தருவாயில் என் தியானமும்(!) முடிந்திருக்கும்...!! புது உற்சாகம்  மனதில் பிறந்திருக்கும் !!

(சில வரிகள்...)

Another day has gone
I'm still all alone
How could this be
You're not here with me
You never said goodbye
Someone tell me why
Did you have to go
And leave my world so cold

Everyday I sit and ask myself
How did love slip away
Something whispers in my ear and says
That you are not alone
For I am here with you
Though you're far away
I am here to stay

You are not alone
I am here with you
Though we're far apart
You're always in my heart
You are not alone

வாழ தகுதி அற்ற இடமாக மாறி கொண்டிருக்கிறது இந்த பூமி...! சுயநலதிற்க்காக, வசதிக்காக, தேவைக்காக இன்னும் எவைகளுக்கோ மனிதன் உலகை, சுற்றுப்புறத்தை சிதைத்து கொண்டிருக்கிறான், சிதைந்து கொண்டிருக்கிறான்...!! இப்பாடலில் தெறிக்கும் வேதனை வரிகள், இசை, காட்சிகள் மனதை வலிக்க செய்யும் கேட்கும்போதெல்லாம்...!!  What about sunrise
What about rain
What about all the things
That you said we were to gain...
What about killing fields
Is there a time
What about all the things
That you said was yours and mine...
Did you ever stop to notice
All the blood we've shed before
Did you ever stop to notice
The crying Earth the weeping shores?

What have we done to the world
Look what we've done
What about all the peace
That you pledge your only son...
What about flowering fields
Is there a time
What about all the dreams
That you said was yours and mine...
Did you ever stop to notice
All the children dead from war
Did you ever stop to notice
The crying Earth the weeping shores


கடந்த வருடங்களில் இதே தினத்தில்  எழுதிய இரு பதிவுகள்
நினைவு தினம் 
மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு கடிதம்...!
ஒரு ரசிகையாய் என் உணர்வுகளை வருடம் தோறும் இந்த நாளில் எழுதி பதிவு செய்வதால் கிடைக்கும் மன நிறைவு மிக பெரிது...!! அதற்க்கு துணை செய்யும் பதிவுலகத்துக்கு என் நன்றிகள்...

இவ்வுலகம் அழகானது, மிக அருமையானது மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் ஒவ்வொரு கடமையை சேர்த்தே கொடுத்திருக்கிறது...மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கடமை பிற உயிர்களை நேசிப்பது !! எல்லோரையும் தூய மனதுடன் அன்பால் அரவணைப்போம்...!! வாழும் நாட்களை அர்த்தமுள்ளதாகிகொள்வோம்.

பிரியங்களுடன்
கௌசல்யா


Tweet

7 கருத்துகள்:

 1. அக்கா...
  ஜாக்சனின் பாடல்கள் உயிரோட்டமானவை.
  உங்கள் பதிவில் தெரிகிறது உங்களின் ஜாக்சன் பக்தி...
  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. ராகுல் திராவிட் ஓய்வு பெற்ற போது எனக்கு இந்த மாதிரி ஒரு உணர்வு வந்தது. இனி கிரிக்கெட் பார்க்க அவசியம் இல்லை என்று தோன்றி விட்டது. சிலருக்கு புரிவதில்லை, ஏன் இப்படி உறங்கிறோம் என்று, கேலி பேசுவார்கள்.
  என்னை பொறுத்தவரை, அவரிடம் இருந்து நிறைய கற்று கொண்டிருக்கிறேன். நான் சிறுவனாய் வளர்ந்த காலம், விடலைப்பருவம் இப்போது அதையும் தாண்டிய வயது என இது வரை கூடவே இருந்த மாதிரி ஓர் ஃபீலிங். அவர் அடித்த சதங்களை நினைத்து பார்க்கும் போது அப்போது அந்த வயதில் நடந்த என் வாழ்வின் நிகழ்வுகளும் நினைவுக்கு வரும். புதிய தலைமுறை வந்து விட்ட பின் அவரும் ஓய்வு பெற்று விட்ட பின் அந்த விளையாட்டில் ஆர்வம் இல்லை.

  உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

  பதிலளிநீக்கு
 3. இங்கிலீசு பாட்டெல்லாம் அக்கா கேக்கறாங்க பா......... சிட்டி பொண்ணுன்னு நிரூபிச்சுட்டாங்க..... ஹி ஹி ஹி :-)

  பதிலளிநீக்கு
 4. எழுதுவீங்கனு நெனச்சேன் :)

  பதிலளிநீக்கு
 5. @@ சே. குமார்

  நன்றிகள் குமார்.

  ***

  @@ கவி அழகன்...

  நன்றி

  ***

  @@ Bhuvaneshwar...

  சிறுவயதில் பதிந்துவிடுபவை என்றும் நினைவில் இருக்கும்.

  நன்றி புவனேஷ் :))

  ***

  @@ அப்பாதுரை...

  புரிந்து கொண்டவர் நீங்கள்!! :))

  பதிலளிநீக்கு
 6. just a brilliant article... i too loved him verymuch and when he left it was a dark day...

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...