Thursday, June 7

12:16 PM
50


பதிவுலகத்தில் இருக்கும் சிலருக்கு ஒருநாளில் இரண்டு பதிவுக்கு அதிகமாக எழுத இயலும்...ஆனால் என் போன்ற வெகு சிலருக்கு வாரத்திற்கு இரு பதிவு என்பதே அதிகம். இந்நிலையில் கொஞ்சமும் மனசாட்சி இன்றி எனது பதிவுகளை எவ்வித அனுமதியும் பெறாமல் சுலபமாக திருடி தங்கள் தளத்தில் வெளியிடுகிறார்கள்...இதில் எனது பார்வைக்கு வராதவை எத்தனையோ !!?   எங்கிருந்தும் யார் பதிவையும் சுலபமாக இரு நிமிடத்தில் இடம் மாற்றிவிடலாம்...அவ்வாறு செய்வது தவறு என்று பதிவு திருடர்களுக்கு ஏனோ உரைப்பது இல்லை. ஒருவரின் சொந்த கருத்தை அவரறியாமல் திருடுவது அநாகரீகம், அசிங்கம், கேவலம் ...!!

எது ஒன்றும் எங்கிருந்தாவது எடுத்ததாகத்தான் இருக்கும். ரிஷி மூலம் எது என்று யாருக்கும் தெரியாது. ஒரு பதிவை அப்படியே காப்பி செய்து போடுவதை விட அதில் இருக்கும் மூல கருத்தை எடுத்துகொண்டு அத்துடன் தங்களின் சொந்த கருத்துக்களையும் சேர்த்து எழுதுவது ஏற்புடையது. 

அதை விட்டுவிட்டு  ஒரு எழுத்துக்கூட விடாமல் அப்படியே காபி செய்து வெளியிடுவதை பார்க்கும் போது எரிச்சல் தாள முடியவில்லை. இப்போது தான் தெரிகிறது என் போன்ற நிலையை ஏற்கனவே சந்தித்த மற்றவர்களின் நிலை...! சகோதரி ஜலீலா அவர்கள் அப்போது எத்தனை வேதனை அடைந்திருப்பார்கள் என்பதை உணருகிறேன். அடுத்தவர்களின் வயிற்றேரிச்சலை கொட்டி திருடர்கள் கண்ட பலன் என்னவோ???

காப்பி  ரைட் வாங்கி வச்சுகோங்கனு நண்பர்கள்  சொன்னாங்க...'நானும் எடுத்து வச்சிருக்கிறேன்' அப்டின்னு சொல்லிக்கலாம்...ஆனா அதை வச்சு கோர்ட்ல கேசா போட முடியும்...?! வேதனை !!

சொந்த(நொந்த) அனுபவங்கள்... 

* முக நூலில் தன்னை சமூக சேவகர் என்று ஒருவர் கூறி கொள்வார், குழந்தைகள் சம்பந்தப்பட்ட எனது பதிவுகளின் சில பாராக்களை காப்பி செய்து முக நூலில் போட்டு இருந்தார். எனது பெயர், லிங்க் எதுவும் இல்லை...அவரது நண்பர்களும் இவர் சொன்ன கருத்து என்று ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி இருந்தார்கள், அதை அனுசரித்து இவரும் பதில் கூறி இருந்தார். தொடர்ந்து இங்கிருந்து காப்பி பண்ணி ஸ்டேடஸ் தொடர்ந்து போட்டு கொண்டே இருந்தார்...எனக்கு அதீதமாக படவே, இன்பாக்சில் சுட்டி காட்டினேன், உடனே 'சாரி' என்றதுடன் என் தள லிங்கை அங்கே குறிப்பிட்டார். ஆனால் சற்று நேரத்தில் லிங்க் குறிப்பிட்ட அந்த ஸ்டேடஸ் டெலீட் செய்யப்பட்டு விட்டது... ஏன் இந்த ஈகோ ?! லிங்க் குறிப்பிட்டால் எங்கே தான் அதுவரை போட்டு வந்த பெரிய மனிதன் வேடம் கலைந்துவிடும் என்ற அச்சமா ?!! மனதில் சேவை எண்ணம் சிறிதும் இல்லாத, இவர் ஒரு சமூக சேவகர் ?!

* தனி நபர் வளர்த்த காடு பற்றி நான் எழுதிய மற்றொரு பதிவு முக நூலில் சுற்றி வருகிறது...ஆனால் வேறு ஒருவரின் பெயரில்...??! இது எந்த விதத்தில் நியாயம் என புரியவில்லை. நானே எனது இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தான் எழுதி இருந்தேன். ஆனால் லிங்க் , என் பெயர் போடவில்லை என்றாலும் பரவாயில்லை , வேறு ஒருவர் பெயரில் வெளிவருவது  படு அபத்தம் !!?

அந்த பதிவை எழுத எனக்கு  மூன்று வாரம் ஆகியது. The Times of India வில் வந்த செய்தியை பார்த்து அது குறித்த வேறு விரிவான தகவல்கள்  இணையத்தில் இருக்கிறதா என தேடி, மொழிபெயர்த்து என் கருத்துக்களையும் கலந்து எழுதினேன். ஜாதவ் பயேங் போட்டோ தேட இரண்டு நாள் ஆச்சு... இப்படி சிரமப்பட்டு எழுதிய ஒன்றை கொஞ்சமும் வெட்கமில்லாமல் தங்களது பெயரை போட்டு வெளியிடுகிறார்கள்.

கூகுள்ல 'ஜாதவ் பயேங்' என்று டைப் பண்ணினா என் பதிவு மட்டும் தான் இருக்கும் என்பதை பார்க்கலாம்...தமிழ் பிளாக்கில் அவரை பற்றி இதுவரை வேறு யாரும் எழுதவில்லை என்று நினைக்கிறேன் (இருந்தால் லிங்க் கொடுக்கவும்)

* மெதுபக்கோடா என்கிற  முக நூல் தளம் ஒன்று சில நாட்களாக எனது தாம்பத்தியம் பதிவுகளை அப்படியே காபி செய்து வெளியிட்டு வருகிறது...அங்கிருந்து பல இடங்களுக்கு பகிரப்பட்டு சென்று கொண்டிருக்கிறது...இப்படி பலராலும் பிற இடங்களுக்கு செல்வது எனக்கு  மன உளைச்சலை கொடுக்கிறது. இதை பலர் ஷேர் செய்வதின் மூலம் அவர்களும் இத்திருட்டுக்கு உடந்தையாகிறார்கள்.

இப்படி மொத்தமாக காபி செய்து போடுவதை விட இன்னார் எழுதியது, இந்த லிங்கில் இருக்கிறது படித்து கொள்ளுங்கள் என்று லிங்க் கொடுக்கலாம்...எல்லோருக்கும் பயன்படதானே எழுதுகிறோம் போய் சேரட்டும் என விட முடியவில்லை...சிலரும், நல்ல விஷயம் தானே பகிரப்படுகிறது என்று சொல்கிறார்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு படைப்பாளி, தன் படைப்பு மற்றவர் பெயரில் வெளியாவதை பார்க்கும் போது எவ்வளவு கோபம் வரும்? அது தானே எனக்கும்...

மேலும் இந்த தொடரை புத்தகமாக போட இருக்கிறேன்...! நாளை அதை படிப்பவர்கள்  என்னை திருடியாக(?) பார்க்கப்படவும் வாய்ப்பு  இருக்கிறது...!!???  ( வேடிக்கை அல்ல, இப்படியும் நடக்கலாம்...மக்களே !!)

* இந்த பதிவை நேற்று காலையில் எழுதி முடித்தேன்...அதற்குள் மாலையில் சௌந்தர் மெயில் பண்ணி சொல்றான், 'அக்கா உங்க கவிதை இங்க இருக்கு, இது தான் லிங்க்' என்று !! இது ஒரு பெண்(!) சௌந்தர் அங்கே சென்று இது வேறு ஒருவரின் கவிதை, குறைந்த பட்சம் அவங்க பேராவது குறிப்பிடுங்கள் என்று போட்ட அத்தனை கம்மெண்டும் உடனுக்கு உடன் டெலீட் செய்யப்பட்டுவிட்டது...(எவ்வளவு உஷாரா இருக்காங்க ?!)
    
எனது  பல நாள் சிந்தனை, உழைப்பு இப்படி ஒரு நொடியில் திருடபடுவது மனதை மிக வருத்துகிறது...தயவு செய்து பிறரை வேதனைபடுத்தும் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள்...

பதிவை பாதுகாத்துக்கொள்ள என்ன வழி மேற்கொண்டாலும் பிரயோசனம் இல்லை. எல்லாவற்றுக்கும் குறுக்கு வழி கண்டுபிடித்து விடுகிறார்கள் திருடர்கள்!!

சுத்த  அயோக்கியத்தனம்

சிலர் நல்ல விஷயம் தானே பகிரப்படுகிறது என்று சொல்கிறார்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு படைப்பாளி, தன் படைப்பு மற்றவர் பெயரில் வெளியாவதை பார்க்கும் போது எவ்வளவு கோபம் வரும்? 

பிறருடைய உழைப்பை, கருத்துக்களை,கற்பனைகளை, படைப்புகளை  திருடி தன்னுடைய பெயரை போடுவது என்பது (வெளிபடையா சொல்ல முடியவில்லை) அவ்வளவு கேவலம்.

எந்த  உரிமையில் தன்னுடையது என்று கூறுகிறார்கள்...கொஞ்சங்கூட யோசிக்க மாட்டார்களா?? அடிப்படை நாகரீகம் என்பதே இல்லாமல் போய்விட்ட மட ஜென்மங்களா...?

தகவல் எடுக்கப்பட்ட எனது தளத்தின் லிங்க் குறிப்பிடாமல் இருப்பது

என் கருத்தை அப்படியே தனது கருத்தாக திரித்து கூறுவது

காபி பேஸ்ட் செய்வது

ஒரு சில எழுத்துக்களை மட்டும் மாற்றுவது.

இது  போன்ற எதுவாக இருந்தாலும் தவறு தான்.

முகநூலில் ஒருத்தர் வெளியிட்ட கவிதை, கட்டுரை படிக்கிறவங்க கொஞ்சம் யோசிங்க...இதை வெளியிட்டவர் இந்த மாதிரி எழுத கூடியவர் தானா ? பிளாக் ஏதும் வச்சி அதில் எழுதி இருக்கிறாரா ??  ஒருவேளை வேறு இடத்தில் இருந்து எடுத்தது போல சந்தேகம் வந்தால்/தெரிந்தால் கம்மேண்டில் அதை குறிப்பிடுங்கள்...நண்பர் தானே என்றும் , நேரமின்மை என்றும் ஒருவரின் தவறுக்கு துணை போகாதீர்கள்.
வேண்டுகோள் 

இது  போன்றவை இனி தொடர்ந்து கொண்டே இருந்தால் பிரைவசி செட்டிங்க்ஸ் மூலமாக  குறிப்பிட்ட சிலர் மட்டும் படிக்குமாறு செய்யலாம் என நினைக்கிறேன்...

'மனதோடு மட்டும்' தளத்தில்  உள்ள ஆக்கங்கள் , கட்டுரைகள், தொடர்கள், கவிதைகள் போன்றவற்றை புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் எக்காரணம் கொண்டும் என் அனுமதி இன்றி இனிமேல் பிரதி எடுக்க கூடாது என்பதை இங்கே வேண்டுகோளாக வைக்கிறேன்.

                                                                 * * * * *
 
எனது பதிவுகளை என் அனுமதி  இன்றி பிரதி எடுத்து அவர்களின் பதிவு போல் வெளியிட்ட அத்தனை பேர் மேலும்  என் கண்டனத்தை வன்மையாக இங்கே பதிவு செய்கிறேன்...

                                                                 * * * * *
இரண்டு திருடல்களை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

இந்த படத்தில் உள்ளது என் கவிதை - என்னவனே....!

கவிதை இங்கே - http://sanvishblue.blogspot.in/2010/11/blog-post_5550.html

இந்தப் பதிவை திருடியவர் - Nayaki Krishna

இந்த படத்தில் உள்ளது என் பதிவு - தாம்பத்தியம் - பாகம் 25 - போடுங்க ' தலையணை மந்திரம் ' !?

பதிவு இங்கே - http://www.kousalyaraj.com/2011/08/25.html

இந்த பதிவை திருடியவர்[கள்] - மெது பக்கோடா

இன்னும் நிறைய முகப்புத்தகத்தில் உலாவுகின்றன.

நன்றிகள் : 

* தாம்பத்தியம் பதிவுகள் எங்கே திருடப்பட்டன என்பதை கண்டு அங்கே சென்று பல எதிர்ப்பு கமெண்டுகளை பதிவு செய்த தம்பி புவனேஷ்க்கு என் நன்றிகள். இவரது தளம் பிரியமுடன் புவனேஷ்

* வாசல் தளத்தின் பதிவுகள் வெளியிட பட்ட இடத்தை கண்டு எனக்கு தெரிவித்த தம்பி சௌந்தருக்கும் என் நன்றிகள்.

* Screen shot photos எடுத்து கொடுத்த தம்பி பிரபுவுக்கு என் நன்றிகள்.
                                                                    * * * * *

படம் - நன்றி கூகுள் 
               
Tweet

50 comments:

  1. யார் என்ன சொன்னாலும் எத்தனை பதிவு போட்டாலும் இந்த மாதரி ஆளுங்க கேக்குற மாதரி தெரியல...

    அப்படி காபி பண்ணி போட்டு பெயர் வரணுமா என்ன..??

    கவிதைய படிச்சு ஒருத்தர் பாராட்டுறாங்க அந்த பாராட்டை ஏத்துக்க எப்படி அவங்களுக்கு மனசு வருதேன்னே தெரியலை...

    நாணும் பல முறை நிறைய பேரிடம் சொல்லி பார்த்துட்டேன் யாரும் கேட்பது போல் தெரியவில்லை..

    திருடனையாய் பார்த்து திருந்தா விட்டால்.......

    ReplyDelete
  2. இவங்களுக்கு எல்லாம் ஒண்ணு சொல்வாங்களே,

    யாரோ பெத்த புள்ளைக்கு, ..........

    ReplyDelete
  3. உங்க ஆதங்கம் என்னிடமும் உண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டேன் . முகநூல் பக்கத்தில் ஒருவரிடம் சண்டை போட்டேன் விளைவு ஒரு நல்ல கருத்தை நாங்களும் பகிர்ந்தால் என்ன தவறு என்று கேட்கிறார்கள் . அதற்கு ஷேர் என்ற ஆப்சன் இருப்பதை பயன் படுத்தலாமே . என்னும் என்ன சொல்லி திருத்துவது இவர்களை .

    ReplyDelete
  4. பதிவை படித்தேன். நம்ம ஊர்ல ஒருத்தர் இருக்கிறார், இந்த மாதிரி திருட்டு வேலை செய்றவனுக்கு முட்டை ஓதி வைப்பார். திருடன் அடுத்த நாளே ரத்தம் ரத்தமா கக்குவான். ம்ம்னு சொல்லுங்க முட்டை ஓதி வச்சிருலாம். இல்லைனா இந்த மாதிரி திருடுபவர்களை நேரில் சந்தித்து அவர்களின் தலை முடியையோ இல்லை அவர்கள் அணிந்திருக்கும் உடையில் சிறு நூலையோ எடுத்து வரவும். அதை வைத்து அவர்களின் மீது குரலியை ஏவி விடலாம்.

    ReplyDelete
  5. பாத்துங்க அக்கா இன்னைக்கு போஸ்ட கூட எவனாவது காப்பி பேஸ்ட் பண்ணி இருக்க போறான்,

    ReplyDelete
  6. @ ராஜகோபால்.S.M,

    :-)

    ReplyDelete
  7. என்னுடைய பதிவை படித்தவர்களை விட காபி பேஸ்ட் பண்ணியவர்கள் தான் அதிகம் .. :(

    ReplyDelete
  8. இந்த கண்டனங்களை நமது ஆதங்கதுக்காக நாம் எழுதுகிறோம். ஆனால் அந்த வெட்கங்கெட்ட மூடர்களுக்கு இன்னும் கெக்கலி கொட்டி சிரிக்கவே நமது வலியும் வேதனையும் பயன்படும்.
    அதை திருடிய பெரிய மனிதனிடம் நான் சொன்னேன் ஒன்று எழுத்தாளர் யார் என அறிவித்து பின் எழுது, பகிர். இல்லையா வாளாயிரு என்று. ஒன்றுமே தெரியாதவன் போல எதை அழிக்க சொல்கிறீர்கள் என்று கேட்கிறான்.
    அடுத்த வீடு திறந்து இருந்தால் இவர்கள் திருட மாட்டார்கள். அது தப்பு என தெரிந்த மாதிரி இதுவும் தப்பு, தண்டனை கிடைக்கும் என உள்ளத்தில் உறைக்க வேண்டும். அட அறுபது வயதான அந்த மனிதருக்கு இது தவறு என நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் யார் வந்து வேலை மெனக்கெட்டு தண்டிக்க போகிறார்கள் என்ற இறுமாப்பு/அலட்சியம்.
    என்னுடைய வலைப்பதிவையே வெளியில் வைத்திருக்க பயமாக இருக்கிறது எனக்கு.
    கனடாவில் இப்படி நடந்தால் பெரிதாக ஆப்பு வைத்து விடுவார்கள். பல லக்ஷம் டாலர்கள் வரு அபராதமாக அழ வேண்டி இருக்கும்.
    ---

    எனது தளத்திற்கு அறிமுகம் கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள் அக்கா :)
    இங்கு உள்ள அன்பு உள்ளங்களை எனது தளத்திற்கு வருகை தருமாறு அழைப்பதில் உவக்கிறேன்.

    ReplyDelete
  9. இந்த கண்டனங்களை நமது ஆதங்கதுக்காக நாம் எழுதுகிறோம். ஆனால் அந்த வெட்கங்கெட்ட மூடர்களுக்கு இன்னும் கெக்கலி கொட்டி சிரிக்கவே நமது வலியும் வேதனையும் பயன்படும்.
    அதை திருடிய பெரிய மனிதனிடம் நான் சொன்னேன் ஒன்று எழுத்தாளர் யார் என அறிவித்து பின் எழுது, பகிர். இல்லையா வாளாயிரு என்று. ஒன்றுமே தெரியாதவன் போல எதை அழிக்க சொல்கிறீர்கள் என்று கேட்கிறான்.
    அடுத்த வீடு திறந்து இருந்தால் இவர்கள் திருட மாட்டார்கள். அது தப்பு என தெரிந்த மாதிரி இதுவும் தப்பு, தண்டனை கிடைக்கும் என உள்ளத்தில் உறைக்க வேண்டும். அட அறுபது வயதான அந்த மனிதருக்கு இது தவறு என நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் யார் வந்து வேலை மெனக்கெட்டு தண்டிக்க போகிறார்கள் என்ற இறுமாப்பு/அலட்சியம்.
    என்னுடைய வலைப்பதிவையே வெளியில் வைத்திருக்க பயமாக இருக்கிறது எனக்கு.
    கனடாவில் இப்படி நடந்தால் பெரிதாக ஆப்பு வைத்து விடுவார்கள். பல லக்ஷம் டாலர்கள் வரு அபராதமாக அழ வேண்டி இருக்கும்.
    ---

    எனது தளத்திற்கு அறிமுகம் கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள் அக்கா :)
    இங்கு உள்ள அன்பு உள்ளங்களை எனது தளத்திற்கு வருகை தருமாறு அழைப்பதில் உவக்கிறேன்.

    ReplyDelete
  10. நீங்கள் உங்கள் எழுத்துக்களை அடைக்காக்க விரும்பினால் பிளாக்கர் சிறந்த தளமல்ல.அப்படியும் பலரையும் போய் எழுத்து சேர்கிறதென பிளாக்கரில் இருக்க விரும்பினால் உங்கள் எழுத்தை காபி பேஸ்ட் செய்யாதபடி வழிகள் இருக்கின்றன.இதற்கு பதிலாக சொந்தமாக கடை திறந்து கொண்டால் பிரச்சினையே இல்லை.

    கருத்துக்கள் பலருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அமெரிக்க ராணுவதுறைக்கும்,நாசாவுக்கும் மட்டுமேயான சங்கேத மொழி இணையமென்று பெயர் பெற்றது.உங்களை மாதிரியே நினைத்தால் விக்கிபீடியாவெல்லாம் வேறு கிரகத்தில்தான் குடியேற வேண்டி வரும்.கருத்து திருடலும்,திரட்டலும்,திட்டலுமே விக்கிலீக்ஸ்:)

    சுடுவதும் சுகமே!

    ReplyDelete
  11. மன்னிக்கவும்.நீங்கள் தனிக்கடை வைத்துள்ளீர்கள் என்பதை கவனிக்கத்தவறி விட்டேன்.

    In that case you should have a better security lock.

    ReplyDelete
  12. வருத்தம் புரிகிறது. ஆனால், இதெல்லாம் ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்...’ கதைதான். :-(((((

    ReplyDelete
  13. நமது மன திருப்திக்காகவும் தமிழில் பல நல்ல விஷயங்கள் பலருக்கு படிக்க இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதாலும் நாம் இங்கு எழுதுகிறோம். இதை செய்வதன் மூலம் நாம் எந்த லாபத்தையும் அடைய போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.இதில் இருந்து நமக்கு கிடைப்பது நமது எழுத்தின் அங்கிகாரமும் நமது பெயரும்தான். அதையும் திருடுபவர்களை நாம் நாகரிமாக சுட்டிக் காட்டலாம். அப்படியும் திருந்தாதவர்களை அப்பன் பெயர் தெரியாதவர்களாகவும் யாருக்கு பிறந்தவர்கள் என்று தெரியாதவர்களாகவும் இருப்பார்கள்.அதனால் அவர்களுக்கு சுயம் என்று ஏதும் இல்லாததால் நமது கருத்தையும் திருடுகிறார்கள் என்று அவர்களை விட்டு தள்ளுங்கள்.


    எனது பதிவுகளை பல பேர் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பல பதிவுக்ளை செய்து இருக்கிறார்கள். அவர்கள் செய்வது இதுதான் தலைப்பை சற்று மாற்றி எனது தளத்தில் போட்ட படங்களுக்கு பதிலாக வேறு சில படங்களை போட்டு இருப்பார்கள்.மானமில்லாமல் பொறந்தவர்கள் நமது கருத்துக்கள் அவர்களுக்கு பிடித்து இருக்கும் போது அதை அவர்கள் நமது பெய்ரை குறிப்பிடாமல் தன்மானம் கருதி அவர்கள் கருத்தாக பதிவிடுகிறார்கள்

    ReplyDelete
  14. இங்கு பதிவாளர்கள்தான் நமது கருத்தை திருட வில்லை தமிழகத்தின் புகழ் பெற்ற வாரப்பத்திரிக்கைகள் நமது கருத்துக்களை திருடுகின்றன. உதாரணமாக "குமுதம்" நிறுவினத்தில் இருந்து வெளிவரும் "குமுதம் ரிப்போர்டர்" எனது பதிவை அப்படியே காப்பி அடித்து தலைப்பை கூட மாற்றாமல் என் பெய்ரை போடாமல் வெளிடிட்டு இருக்கிறார்கள். காப்பிரைட் பற்றி நங்கு தெரிந்த பத்திரிக்கைகலே இப்படி செய்கின்றன். இதை எனது வாசகர் பின்னுட்டத்தில் முதலி தெரிவித்தார் அதன் பின் தமிழக்ததில் வசிக்கும் எனது நண்பர்கள் உறவினர்கள் இதை தெரிவித்து அந்த இதழை எனக்கு வாங்கி அனுப்பித்து அவர்கள் மேல் வழக்கு தொடுக்குமாறு சொல்லி ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். எனது வேலையில் சிறிது பிஸியாக இருப்பதால் இன்னும் அதற்கான நேரம் வரவில்லை.

    ஒரு வேளை நான் வழக்கு தொடுத்தால் அதை பதிவின் மூலம் தெரியப்படுத்துகிறேன்.

    இறுதியாக வருத்தப்படாமல் தொடருங்கள்..வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்

    ReplyDelete
  15. @@ சௌந்தர்...

    //திருடனையாய் பார்த்து திருந்தா விட்டால்.......//

    இப்படியே பலரும் எண்ணி விட்டுவிடுவதால் தான் திருடி கொண்டே இருக்கிறார்கள்...அவ்வாறானவர்களை உடனுக்கு உடன் இயன்றவரை அடையாளம் காட்டணும்...

    ...

    நன்றி சௌந்தர்

    ReplyDelete
  16. @@ Prabu Krishna...

    ம்...

    இந்த பதிவு எழுத வைத்த உனக்கு நன்றி.

    ReplyDelete
  17. I feel stealing will be low if we keep ourselves to word of mouth references which would mean the audience to our blogs are largely fellow bloggers who know the pain of having their original work stolen. Few bloggers would risk their reputation by stealing.

    It is a different story when we go on facebook and put the link up! That gives access to lot of non-bloggers, the lazy bums who do not write nor think originally. they jump at the first opportunity to steal something under our very noses. After all, there millions on facebook and chances are the blogger never knows about the theft, and for the thief, his/her friends on face book never know the blog, so they think it's his work and appreciate!

    ReplyDelete
  18. Sasi Kala said...

    உங்கள் ஆதங்கத்தை வெளியே கொட்டி விட வேண்டும்...மனசு பிரீ ஆகிடும்.

    //ஒரு நல்ல கருத்தை நாங்களும் பகிர்ந்தால் என்ன தவறு என்று கேட்கிறார்கள் .//

    இப்படி சொல்லியே தங்கள் தவறை நியாயபடுத்துகிறார்கள். நல்ல கருத்தை பகிர்வதற்கு நல்ல எண்ணம் இருந்தால் பெயர் போட்டு இருப்பார்கள்.

    ...

    நன்றி சசிகலா

    ReplyDelete
  19. @@ ராஜகோபால்.S.M...

    இந்த முட்டை ஓதுரவங்க, குரலி ஏவுரவங்க அட்ரஸ் இருந்தா கொடுங்க...வேற வழி இல்லை...செஞ்சிடுவோம்...!! :))

    உங்க கம்மென்ட் பார்த்து இருந்த டென்ஷன் எல்லாம் போயே போச்சு !!

    ...

    நன்றி ராஜகோபால்.

    ReplyDelete
  20. @@ Surya Prakash said...

    //பாத்துங்க அக்கா இன்னைக்கு போஸ்ட கூட எவனாவது காப்பி பேஸ்ட் பண்ணி இருக்க போறான்,//

    அப்டின்ற ??!

    :))

    ReplyDelete
  21. @@ வரலாற்று சுவடுகள் said...

    //என்னுடைய பதிவை படித்தவர்களை விட காபி பேஸ்ட் பண்ணியவர்கள் தான் அதிகம் //

    அப்படியா ?! அதற்க்கு ஒன்னும் பண்ணலையா நீங்க?!

    ReplyDelete
  22. @@ Bhuvaneshwar...

    அவரிடம் எடுத்து சொல்லி புரியவைக்க நிறைய பிரயாசைப்பட்டு இருக்கீங்க...
    ஆனால் இது தவறு என்று தெரிந்து தான் செய்கிறார்கள்...ம்...பார்ப்போம்

    நன்றிகள் புவனேஷ்

    ReplyDelete
  23. @@ ராஜ நடராஜன்...

    தங்களின் விளக்கத்திற்கு நன்றி.

    தனது எழுத்து அனுமதி இன்றி வேறு ஒருவர் பெயரில் வெளிவருவதை பார்த்தும் வருத்தப்படாமல் கண்டுகொள்ளாமல் இருப்பது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. உணர்வு உள்ள யாருக்கும் முதலில் கோபம் வரவே செய்யும்...!!

    இது தனிகடைதான் என புரிந்து கொண்டதுக்கு என் நன்றிகள் திரு ராஜ நடராஜன்

    ReplyDelete
  24. @@ ஹுஸைனம்மா...

    சரிங்க சகோ.

    நன்றிகள்

    ReplyDelete
  25. @@ Avargal Unmaigal said...

    உண்மையில் இங்கே எழுதுவதால் வேறு எந்த லாபமும் இல்லை, ஆனால் நல்ல உறவுகள் பதிவுலகம் மூலம் கிடைத்திருக்கிறது ஒன்றே பெரிய விஷயம்.

    நம் திருப்திக்காக எழுதுகிறோம் என்பதால் தான் இது போன்ற திருட்டுகள் மனதை வருத்துகிறது.

    //அவர்களுக்கு சுயம் என்று ஏதும் இல்லாததால் நமது கருத்தையும் திருடுகிறார்கள் என்று அவர்களை விட்டு தள்ளுங்கள்.//

    உண்மைதான்

    //"குமுதம் ரிப்போர்டர்" எனது பதிவை அப்படியே காப்பி அடித்து தலைப்பை கூட மாற்றாமல் என் பெய்ரை போடாமல் வெளிடிட்டு இருக்கிறார்கள்//

    ஆச்சர்யமாக இருக்கு...!!!

    உங்களின் முயற்சி வெற்றி அடையட்டும். வாழ்த்துக்கள்.

    விரிவான கருதிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  26. அறிவுத்திருடர்கள்-அவமானம்.

    ReplyDelete
  27. நீங்கள் இவர்களைப்போன்றவர்களை கண்டுகொள்ளாமல் போவதே நல்லது...

    முதல் முறை நம் படைப்பு வேறு ஒருவர் பெயரில் வருகையில் ரத்தம் கொதிக்கத்தான் செய்யும்...

    இவர்களைத்தேடி அலைவது கால விரையம்...

    உங்கள் படைப்புகள் எப்படி உங்களை இணையத்தில் வெளிச்சம் போட்டு காட்டியனவோ அதைப்போல தான் உங்கள் இனி வரும் புத்தகங்களும்...

    வாழ்த்துக்கள் உங்கள் புத்தக முயற்சிக்கும்...படைப்புகளுக்கும்...

    ReplyDelete
  28. இணையத்தில் படித்து மொழிப்பெயர்த்து வெளியிட்டாலும் அதுவும் ஒரு படைப்பே என்ற அளவில் , அடுத்தவர்கள் எடுத்து ஆள்வது சரியல்ல,அதுவும் அப்படியே காப்பி& பேஸ்ட் ஆக செய்வது சரியல்ல.தங்கள் கண்டனம் நியாயமானதே.

    ஆனால் அதற்கு பிறகு சொல்வது தான் ...கொஞ்சம் இடிக்கிறது,

    //அந்த பதிவை எழுத எனக்கு மூன்று வாரம் ஆகியது. The Times of India வில் வந்த செய்தியை பார்த்து அது குறித்த வேறு விரிவான தகவல்கள் இணையத்தில் இருக்கிறதா என தேடி, மொழிபெயர்த்து என் கருத்துக்களையும் கலந்து எழுதினேன். ஜாதவ் பயேங் போட்டோ தேட இரண்டு நாள் ஆச்சு... இப்படி சிரமப்பட்டு எழுதிய ஒன்றை கொஞ்சமும் வெட்கமில்லாமல் தங்களது பெயரை போட்டு வெளியிடுகிறார்கள்.//

    டைம்ஸ் அப் இந்தியாவில் ஏற்கனவே வந்த கட்டுரை, மேலும் அவர்களே மிக தாமதமாகவே எழுதியுள்ளார்கள்.பல செய்திகள் ஜாதவ் பயேங்க் பற்றியுள்ளது விக்கிப்பீடியாவிலும் கட்டுரை உள்ளது. படங்களும் பல இணைய தளங்களில் கிடைக்கிறது.

    டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரைப்போட காரணமே ஒரு எம்.பி இது பற்றி பாராளுமன்றத்தில் பேசப்போவதாக சொன்னதால் தான். வனத்துறை மூலம் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

    ஜாதவ் பயேங்க் என கூகிளில் தட்டினாலே பல பக்கங்கள் வருகிறது.அப்புறம் ஏன் அவ்ளோ கஷ்டம்னு சொல்லிக்கிறிங்க? நீங்கள் சொல்வதைப்பார்த்தால் இனிமேல் யார் ஜாதவ் பயேங் பற்றி எழுதினாலும் அது உங்களைப்பார்த்து எழுதப்பட்டது என்று சொல்லிவிடுவீர்கள் போல இருக்கு.

    நீங்கள் எழுதி இருப்பதே மிகவும் குறைவான தகவல்களை கொண்டே இருக்கிறது. இன்னும் கூட விரிவாக தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறது.
    மேலும் 1360 ஏக்கர் என்று ஒரு இடத்தில் சொல்லிவிட்டு அடுத்து 30000 ஹெக்டேர் என்றும் சொல்கிறீர்கள். ஆற்றுக்கு நடுவில் அவ்வளவு இடம் இருக்கிறதா? இல்லை ஒட்டு மொத்த அசாம் பரப்பையும் சொல்கிறீர்களா?

    விக்கி முதல் பலவற்றிலும் இருக்கும் தகவலை மொழிமாற்றம் செய்துவிட்டு பெரிதாக காப்புரிமை என சொல்ல வாய்ப்பில்லை.

    சொந்த ஆக்கங்களான கவிதை, கதைகளுக்கு முழு காப்புரிமை கிடைக்கும்.

    ReplyDelete
  29. //நன்றினு சொல்லும் போது எவ்ளோ சந்தோசமா இருக்கு ஆனா நம்ம மக்கள் ஏன் இதை அவ்வளவா உபயோகிப்பது இல்லை என்பது எனக்கு புரியல.//
    இந்த பதிவும் அங்கேதானிருக்கு
    கௌசி ...இதையும் அங்கிருந்து தான் எடுத்து வந்தேன்

    ..என்ன சொல்வது இப்படியானவர்களை .பகிர்வதில் தவறில்லை
    ஆனா படைப்பாளிக்கான அங்கீகாரத்தை தரவேண்டுமே .

    ReplyDelete
  30. எனது முந்தைய பின்னூட்டம் குறித்த உங்கள் மனநிலை வெளிப்பாடு எப்படியிருக்குமென்று மீண்டும் பார்க்க வந்தேன்:)நேர் முகமாக எடுத்துக்கொண்டதற்கு நன்றி.

    உண்மையை சொல்லப்போனால் பதிவின் சாரத்தை மட்டுமே படித்து விட்டு உங்கள் கடையைக் கூட பின்பே கவனித்தேன்.

    நான் ஆக்கபூர்வமாக உங்களுக்கு சொல்ல விரும்புவது உங்கள் எழுத்தை யாரும் காபி பேஸ்ட் செய்ய இயலாதபடி வழிகள் இருக்கின்றன.சி.பி செந்தில்குமார் கூட அப்படித்தான் தனது பதிவுகளை இட்டார் என்பது உங்களுக்கான கூடுதல் தகவல்.

    ReplyDelete
  31. ஹூசைனம்மா சொல்வதை ஏற்க வேண்டும். திருட்டை ஒழிப்பது திருடர் கையிலே.

    உங்கள் வலி புரிகிறது. எத்தனை பாதுகாப்பு சேர்த்தாலும் அடித்தட்டுத் தொழில்நுட்பமான இணையப் பக்கத்திலிருந்து சுலபமாக க&பே செய்ய முடியும். பொது ப்லாக் என்று வந்ததும் இதைப் பற்றி கவலைப் படாதிருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.

    அல்லது நீங்கள் கோடிட்டிருப்பது போல் 'திருடர்கள்' என்று ஒரு பொது ப்லாக் தொடங்கி யார் வேண்டுமானாலும் பதிவுத் திருடர்களை அம்பலப்படுத்தும் வசதியைக் கொடுக்கலாம்.. இருப்பினும்..

    ReplyDelete
  32. @@ FOOD NELLAI said...

    //அறிவுத்திருடர்கள்-அவமானம்.//

    நானே ரொம்ப மெனக்கிட்டு எழுதுறேன், அதையும் இப்படி பண்றாங்க...எழுதுற விருப்பமே போய்டும் போல...

    ...
    ஒரே வார்த்தைல நச் :)
    நன்றி அண்ணா.

    ReplyDelete
  33. ரெவெரி said...

    //முதல் முறை நம் படைப்பு வேறு ஒருவர் பெயரில் வருகையில் ரத்தம் கொதிக்கத்தான் செய்யும்...//

    புரிதலுக்கு நன்றிகள்

    //உங்கள் படைப்புகள் எப்படி உங்களை இணையத்தில் வெளிச்சம் போட்டு காட்டியனவோ அதைப்போல தான் உங்கள் இனி வரும் புத்தகங்களும்...//

    உங்களின் உத்வேகமான இந்த வரிகள் எனக்கு நிறைவை கொடுக்கிறது...மகிழ்வுடன் என் நன்றிகள்.

    ReplyDelete
  34. வவ்வால் said...

    //டைம்ஸ் அப் இந்தியாவில் ஏற்கனவே வந்த கட்டுரை, மேலும் அவர்களே மிக தாமதமாகவே எழுதியுள்ளார்கள்.பல செய்திகள் ஜாதவ் பயேங்க் பற்றியுள்ளது விக்கிப்பீடியாவிலும் கட்டுரை உள்ளது. படங்களும் பல இணைய தளங்களில் கிடைக்கிறது.//

    தகவல்களை நான் இல்லைன்னு சொல்லலையே...உண்மையில் நான் போஸ்ட் எழுதிய நேரத்தில் இரண்டு நாள் கழித்துதான் தற்போது பதிவில் இருக்கும் படங்கள் எடுத்தேன்...ஒருவேளை என் தேடல் சரி இல்லையோ :)

    // வனத்துறை மூலம் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்க இருக்கிறார்கள்.//

    நல்ல தகவல்.

    //ஜாதவ் பயேங்க் என கூகிளில் தட்டினாலே பல பக்கங்கள் வருகிறது.அப்புறம் ஏன் அவ்ளோ கஷ்டம்னு சொல்லிக்கிறிங்க? நீங்கள் சொல்வதைப்பார்த்தால் இனிமேல் யார் ஜாதவ் பயேங் பற்றி எழுதினாலும் அது உங்களைப்பார்த்து எழுதப்பட்டது என்று சொல்லிவிடுவீர்கள் போல இருக்கு.//

    அடடா. நான் சிரமம்னு சொன்னத நீங்க வேற மாதிரி புரிஞ்சிகிடீங்கனு நினைக்கிறேன். இந்த பதிவுன்னு இல்லை எதா இருந்தாலும் ஒரு பதிவு எனக்கு எழுத ரொம்ப நாள் ஆகும்...நம்ம வொர்த்தே அவ்வளவு தான் :)) அதான் இப்படி சிரமப்பட்டு(!) எழுதுறத காபி பண்றாங்கன்னு சொன்னேன்.

    அது எப்படிங்க அப்படி சொல்லமுடியும்?! அப்டி சொல்ற அளவுக்கு எனக்கு புத்திசாலித்தனம் பத்தாதுங்க... :) ஆனா 'யார் இந்த மாமனிதர்' என்று குறிப்பிட்டு எங்க பதிவு இருந்தாலும் அது என் பதிவுதான்.

    //நீங்கள் எழுதி இருப்பதே மிகவும் குறைவான தகவல்களை கொண்டே இருக்கிறது. இன்னும் கூட விரிவாக தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறது.//

    ஏதோ என்னால முடிஞ்சது...விரிவான தகவல்களை வச்சு வேற யாரும் தமிழ்ல பதிவு எழுதிருந்தா சொல்லுங்க அதை நான் காப்பி பன்றதா இருக்கேன் :))

    //மேலும் 1360 ஏக்கர் என்று ஒரு இடத்தில் சொல்லிவிட்டு அடுத்து 30000 ஹெக்டேர் என்றும் சொல்கிறீர்கள். ஆற்றுக்கு நடுவில் அவ்வளவு இடம் இருக்கிறதா? இல்லை ஒட்டு மொத்த அசாம் பரப்பையும் சொல்கிறீர்களா?//

    நல்ல கேள்வி. பதிவை நல்லா கவனிசீங்களா? 300௦௦// இப்படி போட்டு இருக்கேன், நானே நீங்க சொன்ன பிறகு தான் பார்த்தேன். டைபிங் மிஸ்டேக் !! அப்புறம் 1,360 னு போட்டு இருக்கிற இடத்துல கமா இருக்கு, அது மாதிரி 30000 னு எழுதினா கண்டிப்பா கமா போட்டு இருப்பேனே, அது 300 தான். ஜாதவ் சாரை இப்படி கண்ணை மூடிட்டு மிகைபடுத்தி புகழ்ரதுனால எனக்கு ரொக்கமா கிடைக்க போகுது ? :))

    ஆனாலும் நீங்க ஒரு கழுகு சார். பார்வைல என்ன கூர்மை...?! :)
    உங்களை போன்ற ஒருத்தர் பதிவுலகத்துல இருப்பது நல்லது. பலரின் குறைகளை சுட்டி காட்டுங்க...திருத்தி கொள்கிறோம்

    வெளிப்படையான விரிவான கருத்துரைக்கு எனது நன்றிகள் வவ்வால்.

    ReplyDelete
  35. @@ angelin...

    வாங்க தோழி. நலமா ?!

    //இந்த பதிவும் அங்கேதானிருக்கு
    கௌசி ...இதையும் அங்கிருந்து தான் எடுத்து வந்தேன் //

    இந்த பதிவை நல்ல படிச்சி பார்த்து இருந்தார்னா ஒரு நன்றியாவது போட்டுருப்பார். :)

    இப்படி பட்டவர்களை பற்றி தெரிந்தால் வெளி கொண்டு வரணும் பா...அப்போதுதான் திருட நினைகிரவங்களும் கொஞ்சம் தயங்குவாங்க/யோசிப்பாங்க...நமக்கென்ன னு இருந்தா இது இன்னும் அதிகமா தொடர்ந்துட்டு தான் இருக்கும்.

    ...
    நன்றி தோழி

    ReplyDelete
  36. @@ ராஜ நடராஜன் said...

    //எனது முந்தைய பின்னூட்டம் குறித்த உங்கள் மனநிலை வெளிப்பாடு எப்படியிருக்குமென்று மீண்டும் பார்க்க வந்தேன்:)நேர் முகமாக எடுத்துக்கொண்டதற்கு நன்றி.//

    மறுபடி வந்ததற்கு மகிழ்கிறேன். நீங்க தவறா ஏதும் சொல்லலையே...உங்க ரைட்டிங் ஸ்டைல் அப்படி!! :) உண்மைய சொல்லபோனா உங்க கருத்தை நான் ரசிக்கவே செய்தேன். :)

    //நான் ஆக்கபூர்வமாக உங்களுக்கு சொல்ல விரும்புவது உங்கள் எழுத்தை யாரும் காபி பேஸ்ட் செய்ய இயலாதபடி வழிகள் இருக்கின்றன.//

    அந்த வழிகள் என்ன என்பதை எனக்கு சொல்லுங்களேன்...உபயோகமாக இருக்கும்.

    //சி.பி செந்தில்குமார் கூட அப்படித்தான் தனது பதிவுகளை இட்டார் என்பது உங்களுக்கான கூடுதல் தகவல்.//

    பதிவின் இறுதியில் எங்கிருந்து எடுத்தார் என்பதை குறிப்பிட்டு நன்றி என போட்டுவிடுவார்.

    இத்தகைய நாகரிக பண்புகூட இல்லை என்பதே எனது வருத்தம்.

    மீண்டுமாய் எனது நன்றிகள் திரு ராஜ நடராஜன்.

    ReplyDelete
  37. @@ அப்பாதுரை said...

    //பொது ப்லாக் என்று வந்ததும் இதைப் பற்றி கவலைப் படாதிருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.//

    சரி.ஆனால் நம் வருத்தத்தை/எதிர்ப்பை குரல் கொடுத்து தெரிவிப்பது சரி என நினைக்கிறேன். வாளாவிருப்பதை விட எதிர்த்து வீழ்வது மேல் !! :) (சரியா சொல்றேனா ?!)

    //அல்லது நீங்கள் கோடிட்டிருப்பது போல் 'திருடர்கள்' என்று ஒரு பொது ப்லாக் தொடங்கி யார் வேண்டுமானாலும் பதிவுத் திருடர்களை அம்பலப்படுத்தும் வசதியைக் கொடுக்கலாம்.. இருப்பினும்..//

    பலரும் இத்தகைய பிரச்னையை சந்தித்து இருக்கிறார்கள் என்னும் போது இது போல் செய்வது நல்லதுதான்...அதற்க்கு முதலில் நமக்குள் ஒற்றுமை இருக்கணுமே ?!!
    சோ...???!!

    ...

    நன்றிகள் அப்பாதுரை.

    ReplyDelete
  38. கவுசல்யா,

    நன்றிங்க, நான் இருப்பக்கத்தினையுமே சொன்னேன்,சரியாக புரிந்துக்கொண்டமைக்கு நன்றி!

    கமா போடலைனாலும் எண்களின் மதிப்பு அப்படியே தான் மாறாது, கஷ்டப்பட்டுன்னு ரொம்ப அழுத்தி சொன்னதால அதை குறிப்பிட்டேன். அவ்ளோ தான்!

    ராஜநடராஜன் சொல்ல வருவது அதுவல்ல, சிபியின் பதிவில் எழுத்துகளை ரைட் கிளிக் செய்து செலக்ட் செய்ய முடியாமல் செய்திருப்பதை சொன்னார். ஆனால் அதுவும் பெரிய பாதுகாப்பு அல்ல, ஓபரா உலாவியில் ஆதர் மோட்டில் காபி&பேஸ்ட் செய்துவிடலாம் :-))

    வாட்டெர் மார்க் வருவது போல செய்து ,காபி& பேஸ்ட் செய்தால் அதுவும் சேர்ந்து ஆவது போல செய்யுங்கள்.

    எப்படினு எனக்கு தெரியாது சில தளங்களில் அப்படி இருப்பதை பார்த்துள்ளேன்.

    என்ன செய்தாலும் காபி செய்ய வழி இருக்கு என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுவது மன உளைச்சலை குறைக்கும்.

    ReplyDelete
  39. @@ வவ்வால்...

    //கமா போடலைனாலும் எண்களின் மதிப்பு அப்படியே தான் மாறாது,//

    மறுபடியும் முதல்ல இருந்தா ?! முடியல :)

    எண் மதிப்பு எனக்கும் தெரியுமுங்க :)

    எண்கள் போடுறதா இருந்தா கமா போட்டுடுவேன், போடாம எழுத மாட்டேன்...சோ இது தவறுதலாக வந்துவிட்டதுன்னு சொன்னேன்...

    //கஷ்டப்பட்டுன்னு ரொம்ப அழுத்தி சொன்னதால அதை குறிப்பிட்டேன். அவ்ளோ தான்!//

    எல்லா பதிவுமே இப்படி கஷ்டபட்டுதான் எழுதுறேன்னு அர்த்தம் :))

    //ராஜநடராஜன் சொல்ல வருவது அதுவல்ல, சிபியின் பதிவில் எழுத்துகளை ரைட் கிளிக் செய்து செலக்ட் செய்ய முடியாமல் செய்திருப்பதை சொன்னார். //

    மறுபடியும் என் புரிதல் மிஸ்டேக். சாரி.

    //ஆனால் அதுவும் பெரிய பாதுகாப்பு அல்ல, ஓபரா உலாவியில் ஆதர் மோட்டில் காபி&பேஸ்ட் செய்துவிடலாம் :-))//

    நல்லாதான் ஐடியா சொல்லி கொடுக்குறீங்க :))

    //வாட்டெர் மார்க் வருவது போல செய்து ,காபி& பேஸ்ட் செய்தால் அதுவும் சேர்ந்து ஆவது போல செய்யுங்கள்.//

    சுத்தமா புரியல...தெரிந்தவர்கள் விளக்கமாக கூறினால் புண்ணியமா போகும் :)

    உண்மையில் நேத்து இருந்த மன உளைச்சல் இன்னைக்கு சுத்தமா இல்லை...!

    நம் வருத்தத்தை இப்படி எழுத்து மூலமா வெளில கொட்டிடா அதுவே பெரிய ரிலீப்...!! அனுபவம் பேசுது :))

    மகிழ்வுடன் நன்றிகள் வவ்வால்

    ReplyDelete
  40. மெது பக்கோடா என்ன சொல்லுறாரு கேட்டீங்களா?

    ReplyDelete
  41. @@ அப்பாதுரை said...

    //மெது பக்கோடா என்ன சொல்லுறாரு கேட்டீங்களா?//

    நான் கேட்கவில்லை. புவனேஷ் கேட்டதற்கு " திருட்டா? எந்த போஸ்ட் ? அப்டி ஒன்னும் நினைவு இல்லை" னு சொன்னாராம்...மறுபடி மறுபடி அவரிடம் பேசி பார்த்து வெறுத்து போச்சுன்னு இவர் சொன்னார்.

    நேத்து மேலும் ஒரு இடத்தில் பல தாம்பத்தியம் பதிவுகளை பார்த்தேன்
    http://www.nidur.info

    ReplyDelete
  42. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .

    ReplyDelete
  43. வருத்தமாக இருக்கிறது தோழி. இதைத் தடுக்கவும் முடியவில்லை. தங்கள் படைப்புகளாகப் போட்டுக் கொள்பவர்களை எதுவும் செய்யவும் முடிவதில்லை:(! எனது பல புகைப்படத் தொகுப்புகளையும் கட்டுரை, கவிதைகளையும் பெயரோ சுட்டியோ குறிப்பிடாமல் பிறதளங்கள் வெளியிட்டிருக்கின்றன. பல பேரின் ஆதங்கமாக அமைந்திருக்கிறது தங்களின் இப் பதிவு.

    ReplyDelete
  44. ஆதங்கம் நியாயமானது.எப்படிச்சொன்னாலும் இந்தத் திருடர்கள் ஏனோ திருந்துவதாயில்லை ..வருத்தத்திற்குரியது சொந்தமே..!

    ReplyDelete
  45. உண்மைதான், என்னதான் செய்வது, திருடர்களுக்கு தெரியனும், என்னுடைய பல பதிவுகள் திருடபட்டு அங்கு அங்கு வெளியிடுவார்கள்; நானும் அங்கு சென்று சொல்லி சலிப்படைந்துவிட்டேன், இதனாலே அதிகமாக பதிவு எழுதுவது இல்லை... என்ன சொல்லவது, அப்படி திருடுபவர்கள் ------------------ இருக்க முடியாது.

    ReplyDelete
  46. என்ன செய்ய எனக்கு தெரிந்து பல காலமாக இது இருக்கு. இதை தடுக்க சில முயற்சிகளை செய்தேன். சரி வரவில்லை

    ReplyDelete
  47. தங்கள் பதிவை வாசித்ததும் வருத்தமாக இருந்தது. இப்படி பிறரது பதிவை அவர்கள் பெயரைக் குறிப்பிடாமல் எடுத்து கையாள்வது தவறு.

    ஆய்வாளர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்கள் எழுதிய உப்பிட்டவரை என்னும் நூலின் முன்னுரையில் படித்த ஒரு செய்தி ஞாபகம் வருகிறது. அவரிடம் எம்ஃபில் ஆய்வு செய்ய வந்த மாணவனுக்கு அவர் வாசிக்க கொடுத்த ஒரு கட்டுரையை அவர் தன்னுடைய ஆய்வேட்டில் அப்படியே பயன்படுத்திக் கொண்டாராம். ஆ.சிவசுப்ரமணியன் அவர்களின் பெயரைக் கூட குறிப்பிடாமல். இப்படி நிறைய நடக்கிறது. என்ன செய்வது?

    ReplyDelete
  48. Your article may have lots of flaws. You may have gathered all the information from internet or newspapers. Your article may not be impressive at all to readers whose intellectual level is high. The contents you have given may be insufficient for their expectations.

    SO WHAT?

    Your point is someone is reproducing your scribblings without properly "refering"/"quoting" you or your blog-post.

    One should not reproduce (copy and paste) your article without QUOTING your link.

    It is WRONG!

    Some cheap Tamils do do such. The best thing you could do is what you have just done here.

    ReplyDelete
  49. Mam
    I am a budding blogger. I used to go through many blogs and I admire about many talented posts. Even I copied some historical events. I also mentioned the link's name in those posts. But not with the motive of stealing others talent.. Now I decided not to copy others, but when I have same opinion I may write the concept with my own point of view.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...