மனப்பொருத்தம் இல்லாமை
ஜாதக பொருத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து சேர்த்து வைப்பதுடன் பெற்றோரின் கடமை முடிந்துவிடுகிறது. வேறுபட்ட இரு குடும்ப பாரம்பரியங்களில் , சூழ்நிலைகளில் வாழ்ந்தவர்கள் இனி புதியதொரு சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டாக வேண்டும். புது சூழல் , புது உறவுகள், புது பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் அனுசரித்து பழகி கொள்வார்கள். அதன் பின் பல வருடங்கள் இணைந்து வாழ்ந்து வந்தாலும் அவர்கள் புரிதலுடன் தான் வாழ்கிறார்கள் என்று முடிவிற்கு வந்துவிட முடியாது. பல உட்பூசல்கள் நீருபூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருப்பது வெளியே பெரும்பாலும் தெரிவதில்லை.
கணவன்/மனைவி ஒருத்தருக்கு கருப்பு நிறம் பிடிக்கும் , மற்றொருவருக்கு வெள்ளை நிறம்...இப்படி நிறத்தில் தொடங்கி பலவற்றிலும் விருப்பங்கள் எதிரும் புதிருமாக ! விருப்பங்கள் வேறுபட்டாலும் இருவரையும் இணைப்பது அன்பு என்னும் மகா சக்தி. ஆனால் இந்த அன்பை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ளவேண்டும்...நம்ம மனைவி தானே என்று திருப்தி பட்டு கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதை வெளிப்படுத்தியாக வேண்டும் நேரம் கிடைக்கும் போதெல்லாம்...!! ஆனால் எத்தனை தம்பதிகள் இதை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் விடை மிக சொற்பமே !!?
கணவன் மனைவி இருவரையும் சேர்த்து சொல்வதை விட இருவரின் மனநிலைகளை பற்றியும் தனித் தனியா பார்க்கலாம் என்று நினைக்கிறேன் (அவ்ளோ மேட்டர் இருக்கு இதில.....!! )
இதை படிக்கிற ஆண்கள் தினசரி வாழ்கையில் எப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு நிமிடம் நிதானமாக யோசித்து பாருங்கள்...(எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் சரியா வருதானு பாருங்க)
காலையில், சுடு தண்ணீர் காலில் கொட்டிய மாதிரி அரக்கபரக்க எழுவதில் இருந்து, குளித்து அவசர அவசரமாக மனைவி கொடுக்கிற டிபனை (சிலர் சாப்பிடுவதும் இல்லை!) நின்றுகொண்டே உள்ளே தள்ளிட்டு , வேலைக்கு கிளம்பி ஓடுவீங்க, அங்கே போயும் அந்த வேலை, இந்த வேலைன்னு பார்த்துவிட்டு அதீத சோர்வா வீட்டுக்கு வருவீங்க. அந்த நேரம் பார்த்து உங்கள் குழந்தை உங்களிடம் ஏதும் சொல்ல வந்தா 'அம்மாவிடம் போ, நான் டயர்டா இருக்கிறேன்'னு சொல்லிட்டு...கொஞ்ச டிவி பார்த்திட்டு இரவு உணவை முடிச்சிட்டு படுத்துவிடவேண்டியது...நடு இரவில் விழிப்பு வந்தால் , கண்டிப்பா விழிப்பு வரும்... அப்போதுதான் அருகில் மனைவி ஒருத்தி இருப்பது நினைவுக்கு வரும்... அப்புறம் என்ன... அந்த கடமையையும் ஒரு ஐந்து நிமிசத்தில முடிச்சிட்டு தூங்கிட வேண்டியது.....இது தான் இன்றைய பெரும்பாலான கணவர்களின் வாழ்க்கை முறை ! எப்படிப்பட்ட விபரீத வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்பது தெரியுமா ??
சிலரிடம் உங்க வாழ்க்கை எப்படி போகிறது என்று கேட்டால் போதும் வாய் வலிக்கும் அளவிற்கு அளந்து விடுவார்கள்.எனக்கு பெரிய லட்சியம் இருக்கு, இதை இப்படி செட்டில் பண்ணனும், அதை அப்படி செட்டில் பண்ணனும்', 'இரண்டு கிரௌன்ட்ல வீடு கட்டிட்டு இருக்கிறேன்', அப்புறம் 'அதுல இன்வெஸ்ட் பண்ணி இருக்கிறேன்', 'இதில லோன் வாங்கி இருக்கிறேன்', 'இன்சுரன்ஸ் இத்தனை லட்சத்துக்கு எடுத்து இருக்கிறேன்', என்று போயிட்டே இருக்கும்......இதுவா வாழ்க்கை ? இதில் மட்டும் நிறைவு கிடைத்து விடுமா ?
இந்த மாதிரியான நபர்களை பொறுத்தவரை வாழ்க்கையின் அர்த்தம் இதுதான். பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டால் அனைத்தும் முழுமை அடைந்துவிடும் என்பது மாதிரியான எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து இருக்கிறது.....! பொருள் பின்னே ஓடியே மனஅழுத்தம் அதிகரித்து, தாம்பத்திய வாழ்வில் தோல்வியை தழுவி தங்களின் வாழ்நாட்களை கசப்பாக கழித்து ஏனோ தானோவென்று முடித்துவிடுகிறார்கள்.....! ஆனால் இவர்களின் மனகோளாருகளால் பாதிக்கப்படும் அவர்கள் குழந்தைகளின் நிலை !!?
நான் என் மனைவியை அன்பாக தான் வைத்திருக்கிறேன் என்று ஒரு மிதப்பில் இருக்கும் ஆண்கள் பலர் உண்டு...உண்மையில் எப்படி அன்பாக வைத்திருக்கிறீர்கள் ? எந்த விதத்தில் ? என்று கேட்டால் வரும் பதில் மிக அபத்தமாக இருக்கும்.....! அதனால் அவ்வளவையும் இங்கே விரிவாக சொல்வதைவிட மிக முக்கியமான ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.....
'என் மனைவியை ரொம்ப காதலிக்கிறேன்', 'அவர்களை சந்தோசமாக வைத்திருக்கிறேன்' என்று வரும் பதிலின் உண்மை தன்மை என்ன தெரியுமா? ஆண்கள் ஒரு அரைமணி நேரம் தங்களை ரிலாக்ஸ் பண்ணி கொள்கிறார்கள் அவ்வளவே ! இதில் மனைவியின் சந்தோசம் எங்கே இருக்கிறது ? அல்லது ஒரு நாளாவது 'என்னுடன் இருக்கும் இந்த தனிமையான நேரம் உனக்கு சந்தோசத்தை கொடுக்கிறதா என்று கேட்டு இருக்கிறீர்களா ?' கேட்டுபாருங்கள் , வரும் பதிலில் உடைந்து போய்விடும் உங்களின் ஆண்மை !!
அந்த ஒரு அரைமணி நேரம் !!
உங்களின் தேவையை தீர்க்கும் அந்த ஒரு அரைமணி நேரம் நிச்சயம் பெண்ணிற்கு மகிழ்வை கொடுக்கவே கொடுக்காது. பின் என்ன செய்வது ? உங்களின் அந்த அரைமணி நேரத்திற்கு முன் ஒரு அரைமணி நேரம் மனைவிக்காக ஒதுக்குங்கள், நீங்கள் பெரிய அதிகாரியாக இருக்கலாம்,தொழில் அதிபராக இருக்கலாம்..... ஆனால் தனிமையான அந்த நேரத்தில் உங்கள் மனைவியின் கணவன் மட்டுமே என்பது நினைவில் இருக்கட்டும்.'அன்று வீட்டில்/அலுவலகத்தில் என்ன நடந்தது, அதை பற்றி சொல்லு' என்று கேளுங்கள்.உங்களின் அன்றைய அலுவல் வேலை பற்றியும் சொல்லுங்கள், ஆமாம் அது எல்லாம் அவளுக்கு தெரியாது, சொன்னாலும் புரியவும் புரியாது என்று எண்ணாதீர்கள்.
பதிவர்களுக்கு புரிகிற மாதிரி ஒரு உதாரணம் சொல்றேன்.
நீங்கள் கவிதைகள் எழுத தெரிந்தவராக இருந்தால் அதை பற்றி சொல்லுங்கள் உனக்கு எழுத தெரியுமா என்று வினவுங்கள். அவளுக்கு இதில் எல்லாம் ஆர்வம் இல்லை என்று சப்பைக்கட்டு கட்டுவதை இனியாவது நிறுத்துங்கள்...இன்றைய இளம் மனைவிகள் பல திறமைகளை உள்ளுக்குள் வைத்திருப்பார்கள் , வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்காததால் வெற்று காகிதம் என்று அலட்சிய படுத்திவிடாதீர்கள்..... பல கவிதைகள் அந்த காகிதத்தில் எழுத பட்டு இருக்கலாம் , ஆண் என்ற கண்ணிற்கு அது தெரியாமல் இருக்கலாம். யாருக்கு தெரியும் அவை உங்களின் (கிறுக்கல்) கவிதைகளை விட அற்புதமாக இருக்கலாம் !!
விளையாட்டாய் கேட்டுப்பாருங்கள் 'என்னை பற்றி இரு வரி கவிதை சொல்' என்று அசந்து போய் விடுவீர்கள் இத்தனை நாள் இதை இழந்துவிட்டோமே என்று வருந்தும் நிலைக்கு தள்ளப்படலாம். ஒரு உதாரணத்துக்கு கவிதை என்று சொன்னேன், பேச்சு கொடுத்து பாருங்கள் பல புதையல்கள் வெளிவரலாம். கருத்துக்களை பரிமாறுங்கள், அவர்களையும் பேசவையுங்கள்...பேச்சின் ஊடே அவள் விரல் பிடித்து மெல்ல நீவி, 'இன்னைக்கு வேலை ஜாஸ்தியாடா' என்று கேட்டுபாருங்கள், அந்த நொடி மிதக்க தொடங்குபவள் விடியும் வரை உங்களில் கரைந்து மயங்கி கிடப்பாள். இது தாங்க பெண்மை. இத விட்டு விட்டு எத்தனை கோடி பணம் தலையில் கொட்டினாலும் அந்த சந்தோசம் எல்லாம் சில நொடிகளில் (நாட்களில்...!) முடிந்துவிடும். ஆனால் நான் குறிப்பிட்ட அந்த அரைமணி நேரம் வாழ்வின் இறுதிவரை காதலால் நிறைத்து விடும்.
இந்த மாதிரி சில நிமிடங்கள் மனைவிக்காக ஒதுக்க முடியாதா என்று கேள்வி கேட்கிறேன், ஒதுக்க முடியாதவர்கள் அதன் விளைவை கண்டிப்பாக சந்தித்து தான் தீருவார்கள்...வழக்கம் போல அது என்ன விளைவு என்று யோசியுங்கள்...
*****************
அடுத்த பாகத்தில் 'மனைவிகளே ஏன் இப்படி ?' அடுத்த பதிவு படிச்சா நிச்சயம் பெண்களுக்கு கோபம் வரலாம்...ஆனால் என்ன செய்வது, குறைகள் எங்கே அதிகம் இருக்கிறதோ அதை சொல்லிதானே ஆகணும்...?!! காத்திருங்கள்.....!!
*****************
படங்கள் - நன்றி கூகுள்
கழுகு - கே.ஆர். பி செந்திலுடன் ஒரு சந்திப்பு!
*****************
படங்கள் - நன்றி கூகுள்
கழுகு - கே.ஆர். பி செந்திலுடன் ஒரு சந்திப்பு!
ரொம்ப நாள் கழித்து பதிவு ..அடுத்த பதிவை எதிர் நோக்கி இருக்கிறேன்
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குகுறிப்பிட்டு எதை பாராட்டிச் சொல்வது
எனத் தெரியவில்லை
மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய பதிவு
வெறும் பதிவுக்காக எழுதப்பட்ட ப்திவல்ல இது
மனதில் பதித்துக்கொள்வதற்காக
எழுதப்பட்டதாக உண்ர்கிறேன்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
மிக பிரமாதமாக எழுதப்பட்ட உபயோகமுள்ள பதிவு.. ஆண்கள் எப்போதும் அவசரக்காரர்களாகவும்,தன் தேவையை பூர்த்திசெய்தால் போதும் எனும் சுயநலமிகளாகவும் இருப்பதால் தான் பிரச்சனை வருகிறது..
பதிலளிநீக்குஅதே போல் பெண்கள் சைடிலும் சில குறைகள் உண்டு.. அது அடுத்த பாகத்தில் எப்படி எழுதறீங்கன்னு பார்ப்போம்
என்ன அக்கா ரொம்ப நாளா எழுதவே இல்ல ரொம்ப பிஸியோ
பதிலளிநீக்குnote pannikkiren
பதிலளிநீக்கு:) I loved reading this! And Manaiviyin pakuthikku aavalududan kaathirukiren....
பதிலளிநீக்குCheers
PK!
அனைவரும் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு...
பதிலளிநீக்குஇன்றைய வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்ற பதிவு.
பதிலளிநீக்குஉணர்வுபூர்வமாக எழுதப்பட்ட தங்களது ஆக்கம்
இது மிகவும் வரவேற்க்கத்தக்கது!..வாழ்த்துக்கள்
தொடரட்டும் தங்கள் ஆக்கம் சிறப்பாக.....
மிகவும் நாகரீக வார்த்தைகளை பிரயோகித்து, மிகவும் நாசூக்காக, சொல்ல வேண்டிய மிக முக்கியமான வாழ்வியல் ரகசியத்தை, வெகு அழகாகச் சொல்லிப்போய் இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குபடித்ததும் மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் அவசியமாகப்படித்து உணர்ந்து தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அனைவரும் புரிந்துகொள்ளும்படி யதார்த்தம் கலந்து உணர்வுகளோடு எழுதியிருக்கீங்க சூப்பர் மேம், பதிவுகள் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்குஇன்று இருவருமே மனம் விட்டு பேசுவது இல்லை. அதனால் வரும் பிரச்சனைகள் அதிகம். தனி மனித உரிமைகள் என்ற பெயரில் ஒரே வீட்டுக்கும் கணவன் மனைவியை வாராமல் தனி தனி மனிதர்களாய் இருக்கின்றனர்
பதிலளிநீக்குஉணர்வுபூர்வமாக அருமையா எழுதி இருக்கீங்க மேடம்...!!!
பதிலளிநீக்குஇக் காலத்திற்கேற்ற பதிவு சகோ, ஆணகளால் பெண்கள் சரியான புரிந்துணர்வோடு நடாத்தப்படாமைக்குரிய காரணங்களை அலசியுள்ளீர்கள். இப் பதிவின் தொடர்ச்சியினைப் படிக்காது விட்டு விட்டேனே என்ற கவலை.
பதிலளிநீக்குஆனாலும் ஒவ்வோர் பாகங்களிலும் வித்தியாசமான அர்த்தமுள்ள விடயங்களைக் கையாள்கிறீர்கள் சகோ.
புரிந்துணர்வற்ற கணவன்மார்களின் செயல்கள் தான் இக் காலத்தில் குடும்பத்தில் விரிசலுக்கு காரணமாக அமைந்து கொள்கின்றது. இதனைச் சுட்டிய உங்களின் பதிவிற்குப் பாராட்டுக்கள் சகோ.
@@ இம்சைஅரசன் பாபு...
பதிலளிநீக்குபசங்களோட சேர்ந்து நானும் விடுமுறை எடுத்துட்டேன்... :))
இனி தொடர்ந்து வரும்.
நன்றி பாபு.
@@ Ramani...
பதிலளிநீக்குஉங்களின் அருமையான புரிதலுக்கு மகிழ்கிறேன் சார்.
//வெறும் பதிவுக்காக எழுதப்பட்ட ப்திவல்ல இது
மனதில் பதித்துக்கொள்வதற்காக
எழுதப்பட்டதாக உண்ர்கிறேன்//
என் உணர்வை அப்படியே பிரதிபலித்துவிட்டீர்கள். படிப்பவர்கள் மனதில் பதிந்து கொண்டால் அதுவே இந்த பதிவின் உண்மையான வெற்றி.
நன்றிகள் சார்.
@@ FOOD...
பதிலளிநீக்கு//எல்லோரும் அன்று போடும் பதிவிற்கு டிஸ்கி போடுவாங்க, நீங்க அடுத்த பதிவிற்கு இன்றே டிஸ்கி போட்டுட்டீங்க!//
தாம்பத்தியம் போஸ்ட் ஒவ்வொன்றின் முடிவிலும் இப்படி போடுவேனே ! :))
புரிதலுக்கும் கருத்திற்கு நன்றி அண்ணா
நீண்ட நாட்களின் பின் நல்லா பதிவு தொடருங்கள்
பதிலளிநீக்கு@@ சி.பி.செந்தில்குமார்...
பதிலளிநீக்கு//ஆண்கள் எப்போதும் அவசரக்காரர்களாகவும்,தன் தேவையை பூர்த்திசெய்தால் போதும் எனும் சுயநலமிகளாகவும் இருப்பதால் தான் பிரச்சனை வருகிறது..//
நல்ல புரிதல் செந்தில். மகிழ்கிறேன்
//அதே போல் பெண்கள் சைடிலும் சில குறைகள் உண்டு.. அது அடுத்த பாகத்தில் எப்படி எழுதறீங்கன்னு பார்ப்போம்//
உண்மையை எழுதபோறேன்...! :)))
கருத்திற்கும் புரிதலுக்கும் நன்றிகள்
@@ சசிகுமார்...
பதிலளிநீக்குஇரண்டு மாசம் விடுமுறை...பல ஊர் பயணம் போய் வந்தேன்... ஆன்லைன் பக்கமே வரல...அதுதான் !!
இனி தொடர்ந்து பதிவுகள் வரும்.
நன்றி சசி.
@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பதிலளிநீக்கு//note pannikkiren//
சரியா நோட் பண்ணியாச்சா ?! :))
நன்றி ரமேஷ்
@@ Ponnarasi Kothandaraman said...
பதிலளிநீக்கு//:) I loved reading this! And Manaiviyin pakuthikku aavalududan kaathirukiren....//
கண்டிப்பா விரைவில் பதிவு வரும்...
அதையும் படிச்சிட்டு இதே போல I loved reading this! அப்படின்னு சொல்லணும் சரியா ?! :)))
உங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி தோழி.
@@ சங்கவி...
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்றி சதீஷ்.
@@ அம்பாளடியாள்...
பதிலளிநீக்குமிக்க நன்றிகள்.
உங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன். மகிழ்கிறேன்.
@@ வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்குஉங்களின் கருத்துக்கள் எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறது.
இந்த பதிவை படிக்கும் ஒரு சிலராவது தங்களின் நிலையை மாற்றி கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும் என்பதில் சந்தேகம் இல்லை.
நன்றிகள் சார்.
@@ மாணவன்...
பதிலளிநீக்குபுரிதலுக்கு மிக்க நன்றிகள் மாணவன்.
@@ Anonymous said...
பதிலளிநீக்கு//இன்று இருவருமே மனம் விட்டு பேசுவது இல்லை. அதனால் வரும் பிரச்சனைகள் அதிகம். தனி மனித உரிமைகள் என்ற பெயரில் ஒரே வீட்டுக்கும் கணவன் மனைவியை வாராமல் தனி தனி மனிதர்களாய் இருக்கின்றனர்//
இன்றைய சில வீடுகளின் நிதர்சனத்தை அப்படியே சொல்லிடீங்க
இப்படி இருப்பதால் பாதிக்கப்படபோவது அவர்களின் குழந்தைகள் தான். இதை அவர்கள் புரிந்து நடந்து கொண்டாலே போதும்.
உங்க பேர் போட்டு இருக்கலாம்.
நன்றி ...
@@ MANO நாஞ்சில் மனோ...
பதிலளிநீக்குபுரிதலுக்கு மிக்க நன்றி.
welcome back!
பதிலளிநீக்குநெருக்கம் வளரவும் தொடரவும் அன்பை அடிப்படையாக்கச் சொல்கிறீர்கள். சரியே.
நல்ல நடை! உண்மையான விபரங்கள்!
பதிலளிநீக்குஒரு புத்தகமாக்கலுக்குரிய அனைத்து அம்சங்களும் இருக்கிறது.
வாழ்த்துக்கள்!
வழக்கம் போல தெளிவான புரிதலுடன் சொல்லப்பட்ட பதிவு.. இதில் என்னதான் கணவன் அன்பாக இருந்தாலும் மனைவியிடம் அரைமணிநேரத்துக்கு மேல் மனம் விட்டு பேச வேண்டும் என்று எழுதி இருக்கின்றீர்கள்.. ஏற்கனவே இது குறி நாம் பேசி இருக்கின்றோம் என்று நினைக்கின்றேன்.
பதிலளிநீக்குits amazing ...
பதிலளிநீக்குvazhkai thathuvathai ungalin intha pathivil arumaiyagga unarthi vitirgal..
avaaludam manaivin pathipai ethirparkiren
@@ நிரூபன் said...
பதிலளிநீக்கு//புரிந்துணர்வற்ற கணவன்மார்களின் செயல்கள் தான் இக் காலத்தில் குடும்பத்தில் விரிசலுக்கு காரணமாக அமைந்து கொள்கின்றது.//
உண்மைதான் சகோ. விரிசல் விழுந்தாலும் புரிதல் அதை சரி செய்துவிடும்...
உங்களின் கருத்திற்கு நன்றிகள்.
@@ யாதவன்...
பதிலளிநீக்குநன்றி யாதவன்.
@@ அப்பாதுரை said...
பதிலளிநீக்கு//welcome back!
நெருக்கம் வளரவும் தொடரவும் அன்பை அடிப்படையாக்கச் சொல்கிறீர்கள். சரியே.//
பரஸ்பர அன்பில் தானே அடங்கி இருக்கிறது மொத்த வாழ்வின் மகிழ்ச்சியே !
நன்றி சகோ.
@@ சுரேகா...
பதிலளிநீக்குஉங்களின் முதல் வருகை என நினைக்கிறேன், உங்களின் புரிதலுக்கு மிக்க நன்றிகள்.
@@ ஜாக்கி சேகர் said...
பதிலளிநீக்கு//என்னதான் கணவன் அன்பாக இருந்தாலும் மனைவியிடம் அரைமணிநேரத்துக்கு மேல் மனம் விட்டு பேச வேண்டும் என்று எழுதி இருக்கின்றீர்கள்.. ஏற்கனவே இது குறி நாம் பேசி இருக்கின்றோம் என்று நினைக்கின்றேன்//
இத்தொடரில் எழுதபடுபவை எல்லாம், கேட்ட, பார்த்த, படித்த,உணர்ந்த, அனுபவரீதியிலான மிகைப்பட்ட கருத்துக்களின் தொகுப்பே அன்றி வேறில்லை... :))
கருத்திட்டமைக்கு நன்றிகள்.
@@ charanya said...
பதிலளிநீக்கு//avaaludam manaivin pathipai ethirparkiren//
கண்டிப்பாக உங்களுக்கு மனைவியின் பதிவும் பிடிக்கும்... :)
வருகைக்கு நன்றி தோழி.
இன்றைய இளம் மனைவிகள் பல திறமைகளை உள்ளுக்குள் வைத்திருப்பார்கள் , வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்காததால் வெற்று காகிதம் என்று அலட்சிய படுத்திவிடாதீர்கள்..... பல கவிதைகள் அந்த காகிதத்தில் எழுத பட்டு இருக்கலாம் , ஆண் என்ற கண்ணிற்கு அது தெரியாமல் இருக்கலாம். யாருக்கு தெரியும் அவை உங்களின் (கிறுக்கல்) கவிதைகளை விட அற்புதமாக இருக்கலாம் !!
பதிலளிநீக்குsema super lines..... Excellent
உங்களுடைய பல பதிவுகளையும் படித்தேன்..எல்லாம் ரொம்ப அருமயான பதிவுகள்..இந்த பதிவில்’’’ இன்றைய கணவர்கள்’’’இன்றைய காலத்தின் வெளிபாடுகள்..பலராலும் சொல்லப்படுகின்ற உண்மை உங்கள் பதிவில் தெரிகிறது..
பதிலளிநீக்கு’’’அடுத்த பாகத்தில் 'மனைவிகளே ஏன் இப்படி?’’’அடுத்த பதிவை எதிர் நோக்கி......
கெளசல்யா இன்று தான் மனதோடு மட்டும் பாகம் 23 மற்றும் கருவேல மரம் பற்றிய பதிவையும் படித்தேன் ! மிக நன்றாக உள்ளது ! மிகவும் பயனுள்ளது ! வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்கு