நம் இந்திய கலாச்சாரம் பிற நாட்டினரும் பார்த்து பொறாமை பட கூடிய அளவில் தான் இருந்தது சிறிது காலம் வரை....!? அதிலும் முக்கியமாக நமது திருமண முறை, பல ஜாதி, மதத்தினர் இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த மாதிரியான சம்பிராதயங்கள், கட்டுபாடுகள், கலாச்சாரங்கள் என்று மிகவும் நல்ல முறையில் அமைந்திருந்தது.'புனிதம்' என்று இன்று வரை நினைத்து மதித்து கொண்டிருந்த ஒரு பண்பாடு இப்போது வேறு விதமாக போய் கொண்டிருக்கிறது....!!?
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான திருமண வழக்கங்கள். மோதிரம், தாலி என்று எந்த முறையில் நடந்தாலும் எல்லா திருமணங்களும் பதிவு செய்ய பட்டுதான் வருகிறது, அதுவே கணவன், மனைவி இருவருக்கும் ஒரு சமூதாய அங்கீகாரமாகும். அதுவே முறையான திருமணமாக இருக்கிறது .எல்லாவற்றிலும் மேலை நாட்டினரை பார்த்து முன்னேறி (பின்னேறி) பழகி போன சிலரால் ஒரு புது கலாச்சாரத்தையும் பின்பற்றுவது என்பதும் சரியானதாகவே தான் தெரிகிறது போலும்.
அப்படிப்பட்ட ஒரு புது கலாசாரம் தான் LIVING TOGETHER என்று சொல்லகூடிய ஒன்று. மனதிற்கு பிடித்த ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்வது....!!எப்போது இருவருக்கும் ஒத்து போகவில்லையோ அப்போதே பரஸ்பரம் பேசி 'இனி நண்பர்களாக மட்டும் இருப்போம்' என்று சொல்லி பிரிவது....?! இது என்ன கொடுமைங்க...!!? சென்னை போன்ற பெரிய நகரங்களில் இந்த கலாசாரம் பரவி கொண்டிருக்கிறது என்பதை பத்திரிக்கைகளின் மூலம் தெரிந்து அதிர்ச்சியாகிவிட்டது.
ஒருவேளை இந்த மாதிரியான வாழ்க்கையில் தவறி குழந்தை ஏதும் பிறந்து விட்டால், பிரிந்த பின் அந்த குழந்தையை என்ன செய்வார்கள்....! ஏதும் பிரச்னை என்றால் உதவிக்கு யாரிடம் செல்வார்கள்....?! இது எந்த அளவுக்கு அந்த பெண்ணிற்கு பாதுகாப்பை கொடுக்கும்......? அல்லது எதுவரை...??! முறையான திருமணம் முடித்த கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பிரச்னை என்றால் வீட்டு பெரியவர்கள் பேசி தீர்த்து வைப்பார்கள், அல்லது முடியாத பட்சத்தில் போலீஸ் ஸ்டேஷன், அதையும் மீறி போனால் கோர்ட் உதவியை நாடுவார்கள்.
ஆனால் இது எதை பற்றியும் ஒரு கவலை இல்லாமல் படித்து நல்ல வேலையில் இருக்கும் நாகரீகமானவர்களிடம் இத்தகைய புதிய கலாசாரம் இப்போது வேகமாக பரவிக்கொண்டு வருகிறது. இது மிகவும் ஆபத்தான, அதே சமயம் வருத்தப்பட கூடிய ஒரு நிகழ்வு.
இந்த முறையானது 'நமது கலாசாரத்திற்கு களங்கம் கற்பிக்கும்' என்று சிலர் கொதிக்கும் அதே நேரம், இந்த மாதிரியான சீர் கேட்டையும் 'தனி மனித சுதந்திரம்' என்று சப்பை கட்டு கட்டி விதண்டாவாதம் செய்கிறார்கள் வேறு சிலர்.
இப்படி பட்ட ஒரு முறை தவறு என்றே உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறி உள்ளது. இந்த மாதிரி சேர்ந்து வாழ்பவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லை. மேலும் இந்த மாதிரி வாழ்பவர்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால் கோர்டில் வழக்கு தொடர்ந்தாலும் செல்லுபடியாகாது. மேலும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் இந்த மாதிரியான உறவுகள் வராது என்றும் திடமாக தீர்ப்பு அளித்துவிட்டனர். இந்த தீர்ப்பு தான் இப்போது நம்மவர்களின் பொழுது போக்கு நேர பேச்சே....!
எது கலாசாரம்...?
இனி வரும் தலைமுறையினர் பண்பாடு , கலாசாரம்னு சொல்றங்களே அப்படினா என்ன என்று கேட்க கூடிய நிலையில் இருப்பது வருத்தம் தான். பெரியவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு படிப்பை கற்க வைப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், ஒழுக்கம், பண்பாடு, விருந்தோம்பல் பண்பு, நம் கலாசாரம் போன்றவற்றையும் சொல்லி கொடுக்க வேண்டும். (இதை கற்று கொடுக்க ஏதாவது கோச்சிங் சென்ட்டர் இருந்தா தேவலை....?!!) நம் வீட்டில் கல்லூரி செல்லும் பிள்ளைகளோ, அல்லது வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதிக்கும் பிள்ளைகளோ இருந்தால் இனியாவது அவர்கள் மேல் ஒரு கண் வைத்து கவனியுங்கள்....சொல்லமுடியாது உங்கள் பிள்ளை வீட்டுக்கு வெளியே ஒரு வீட்டை ரெடி செய்து குடும்பம் நடத்தி கொண்டிருக்கலாம்...!?? (உண்மையை சொல்றேங்க...!?)
யோசியுங்கள் பெற்றோர்களே !
பிள்ளைகள் இப்படி செய்வதற்கு பெற்றோர்கள் எப்படி காரணமாவார்கள் என்று நினைக்ககூடாது. வீட்டில் கிடைக்காத அன்பு, அரவணைப்பு, பாசம் இந்த மாதிரியான முறையில் கிடைக்கலாம் என்று போகலாம்...! மேலும் இது முழுவதும் உடல் தேவைக்காக மட்டும் தான் என்று ஒதுக்கி விடமுடியாது. அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. எல்லோரின் மனதுமே ஒரு சின்ன அங்கீகாரம், ஆதரவாய் சாய ஒரு தோள், அன்பாய் தலை வருட ஒரு கரம், நிம்மதியாய் உறங்க ஒரு மடி இவற்றுக்காக தான் ஏங்குகிறது என்று கருதுகிறேன்..... இல்லை என்று யாரும் மறுக்க முடியாது அல்லவா ....?!
இதை தேடித்தான் ஓடுகிறார்கள், அவர்களாகவே இப்படி ஒன்றை ஏற்படுத்தி நிம்மதி, சந்தோசம் காண முயலுகிறார்கள், அவசர முடிவு என்று தாமதமாக உணர்ந்து அதில் இருந்து அதே அவசரமாக விடுபடுகிறார்கள்....ஆனால் பிரச்சனை அத்துடன் முடிந்து விடுவதில்லை....பழகிய நாட்களின் எண்ணங்களில் இருந்து அவர்களால் முழுதும் விடுபட இயலாது.....விளைவு குற்ற உணர்ச்சி, ஏமாற்றம், வேதனை கடைசியில் மன அழுத்தத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறது.....!!? என்ன படிச்சி, என்ன சம்பாதித்து என்ன பலன்....இனி வாழ்க்கையின் பக்கங்கள் அனைத்தும் வெறும் வெள்ளை காகிதம் போன்றது தான்....!?
என்ன முடிவு...?
மற்ற மாநிலத்தவர்களை விடுங்கள்...தமிழர்களுக்கு என்று பெரிய பாரம்பரிய கலாசாரம் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து போக போய்தான் இந்த மாதிரி சீர்கேடான புது நாகரீகம் தலையெடுக்க தொடங்கிவிட்டது. என்ன செய்து இதனை நிறுத்த போகிறோம் அல்லது தடுக்க போகிறோம்...? நாடு முழுவதும் யோசிக்க வேண்டிய சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் இது. பல பட்டிமன்றங்கள் கூட நடை பெறலாம், இப்படி சேர்ந்து வாழ்வதை சட்ட பூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமா அல்லது தடுத்து நிறுத்த
வேண்டுமா என்று ...??
வேண்டுமா என்று ...??
முதல் பின்னூட்டம்.. :)
பதிலளிநீக்குவெகுநாள் ஆசை சகோ!
Balaji saravana said...
பதிலளிநீக்கு//முதல் பின்னூட்டம்.. :)
வெகுநாள் ஆசை சகோ//
இப்படி ஒரு ஆசையா சகோ...??
:))
//இப்படி சேர்ந்து வாழ்வதை சட்ட பூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமா அல்லது தடுத்து நிறுத்த வேண்டுமா...??//
பதிலளிநீக்குஇதபத்தி தெளிவா என்னால சொல்லமுடியல சகோ..
ஒருவிதத்துல எந்த கமிட்மென்ட்டும் இல்லாம, பிடிச்சிருந்தா சேர்ந்தே வாழலாம் இல்லைனா நல்ல நண்பர்களாப் பிரிஞ்சுடலாம் அப்படிங்கிறது நன்மை என்றாலும்
நீங்க சொன்னது போல சமூக மதிப்பு, பண்பாடு அப்படின்னு பார்க்கும் போது பல பிரச்சனைகள்..
ஆனா ஓரினச் சேர்க்கைய அனுமதித்தது மாதிரி பின்னால சட்டப் பூர்வமா அங்கீகரிப்பாங்கன்னு நினைக்கிறேன்..
//இப்படி ஒரு ஆசையா சகோ...??
பதிலளிநீக்கு:)) //
ஹி ஹி.. :)
அந்தமாதிரி பழக்கங்களை வச்சிருக்கவங்க.. தெரிஞ்சேதான அப்படி வாழ்றாங்க.. பின்னர் கண்டிப்பாய் இதற்காக வருத்தப்படப்போவது உறுதி..
பதிலளிநீக்குநீங்கள் சொன்னதுபோல் ஏதும் தவறு நேர்ந்துவிட்டால் குழந்தை கதி.. கஷ்டகாலம்..
தேவையில்லாத விடயங்களை மேலை நாட்டினரை பின்பற்றுவார்கள் ஆனால் நல்ல விடயங்களை மேலை நாட்டினரை பார்த்து திருந்த மாட்டார்கள். ராக்கிங் என்கின்ற சித்திரவதை தாரளமாக இந்தியாவில் நடக்கிறது. மேலை நாடுகளில் அப்படி ஒன்றே இல்லை.ஜாதி கொடுமையும் அதே மாதிரி தான்.
பதிலளிநீக்குநிச்சயம் இது கொஞ்சம் தவறான ஒன்றாகவே நான் கருதுகிறேன் அக்கா , ஆனா நீங்க சொன்னது மாதிரி பெற்றோர்கள் இதைக் கொஞ்சம் கவனிக்கணும் . அதாவது பணம் மட்டுமே வாழ்க்கை என்று அவுங்களும் பணத்தின் பின்னால் ஓடி தங்களது குழந்தைகளையும் பணத்தின் பின்னால் ஓட விட்டு போயிட்டிருக்கும் போது நிச்சயம் இந்த மாதிரி பழக்கங்கள் ஏற்ப்பட வாய்ப்புகள் உள்ளது அப்படின்னு நினைக்கிறேன் ..!!
பதிலளிநீக்குமேலை நாடுகளில் பல நல்ல விசயங்கள் இருக்கிறது அதை எல்லாம் நம்மாட்கள் கடைபிடிக்கமாட்டார்கள்... இந்த மாதிரி விசயங்களைத்தான் பின்பற்றுவார்கள்... தலைவிதி...
பதிலளிநீக்குகலாச்சாரம் என்பது ஒழுக்கம். ஒழுக்கம் மனம் சம்பந்தப் பட்டது. மனம் புறச்சூழல் சம்பந்தப்பட்டது. புறச்சூழல் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. பொருளாதரம் திடப்படப்பட திடப்பட உறவுகள் உடைய ஆரம்பிக்கிறது. பணம் எல்லாம் கொண்டு வந்து கொடுக்கும் என்ற எண்ணம். அப்படி பணம் எல்லாம் கொண்டு வந்து கொடுக்கத்தான் செய்கிறது பெருமபாலும். பணத்தால் பெற முடியாத ஒன்று இருக்கிறது....அது நிம்மதி....! அன்பு என்று சிலர் சொல்லலாம்.......ஆனால் அசலைப் போல போலி அன்பினை பெற்றுத்தர பணத்தால் முடியும்...ஆனால் நிமம்தி என்பது நம்மை சம்பந்தப்பட்டது.
பதிலளிநீக்குஆண் பெண் உறவு மீறல் கலாச்சாரம் என்ற ஒரு விசயத்தை நலிவடையச் செய்வதை விட தனிமனித நிம்மதியை நிச்சயமாய் சீரழிக்கிறது. ஏனென்றால் காமம் என்ற ஒன்று உடல் சம்பந்தப்பட்டது என்ற ஒரு மாயையில் மானுடம் நகன்றாலும் அங்கே சூட்சும ஆன்ம கலப்பும் இருக்கிறது. ஒரு ஆணோ பெண்ணோ ஜஸ்ட் லைதட்....சேர்ந்தோம் பிரிந்தோம் என்று காமத்தில் ஈடு பட முடியாது. அங்கே மறை முக ஆன்ம கலப்பு நிகழ்ந்தேறி வாழ்வின் எல்லா இடத்திலும் அந்த ஞாபகங்கள் அதை மறுத்து விட்டு அல்லது உதறிவிட்டு வாழும் போது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
கல்வியும் செல்வமும் தெளிவாய் வாழத்தானே ? நிம்மதியாய் வாழத்தானே....அது கிடைக்காமல் சீரழியும் ஒரு நாகரீகம் தேவையா?....தமிழ் கலாச்சாரம் அப்படியே இருக்கிறது.....அதற்கு எதிராய் செயல்படுபவர்கள் மனப்பிறழ்வு கொண்டவர்கள்.
கலாச்சாரம் ஆண் பெண் உறவு தாண்டி பண்பாட்டோடு இயைந்தது.
தீர்க்கமான ஒரு கட்டுரையை கொணர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்....!
மேலை நாட்டவர்களிடம் எத்தனையோ நல்ல பழக்கங்கள் இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு எது தேவையில்லையோ அதை எடுத்துக்கொள்கின்றனர். வருந்த வேண்டிய விஷயம். தில்லி போன்ற பெரு நகரங்களில் பரவலாக உள்ள ஒரு விஷயமே இந்த Living Together.
பதிலளிநீக்குஉச்சநீதிமன்றம் சரியான தீர்ப்புபை தான் சொல்லி இருக்கிறது....
பதிலளிநீக்குஇப்படி சேர்ந்து வாழ்வதை சட்ட பூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமா அல்லது தடுத்து நிறுத்த வேண்டுமா...?///
சட்ட பூர்வமாக அங்கீகரிக்க கூடாது இதை தடுத்து நிறுத்த வேண்டும். LIVING TOGETHER இதை அங்கீகரித்தால் மேலும் பல புதிய கலாச்சாரம் வரும்...
Balaji saravana said...
பதிலளிநீக்கு//எந்த கமிட்மென்ட்டும் இல்லாம, பிடிச்சிருந்தா சேர்ந்தே வாழலாம் இல்லைனா நல்ல நண்பர்களாப் பிரிஞ்சுடலாம் அப்படிங்கிறது நன்மை//
இதில் எப்படி நன்மை இருக்க முடியும்??
//நீங்க சொன்னது போல சமூக மதிப்பு, பண்பாடு அப்படின்னு பார்க்கும் போது பல பிரச்சனைகள்.//
என்ன சொல்ல வரீங்க...அப்ப இதை எல்லாம் பார்க்க வேண்டாமா???
//ஓரினச் சேர்க்கைய அனுமதித்தது மாதிரி பின்னால சட்டப் பூர்வமா அங்கீகரிப்பாங்கன்னு நினைக்கிறேன்..//
சட்டபடியா அங்கீகரிக்க கூடாது பாலா...! இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இது வேறயா ?? குடும்ப அமைப்பே சிதைந்து விடும்....
தனி மனித சுதந்திரம் என்று குரல் கொடுக்கிற கூட்டதில நீங்க ஒருத்தரா பாலா...?! :)
பதிவுலகில் பாபு said...
பதிலளிநீக்கு//அந்தமாதிரி பழக்கங்களை வச்சிருக்கவங்க.. தெரிஞ்சேதான அப்படி வாழ்றாங்க.. பின்னர் கண்டிப்பாய் இதற்காக வருத்தப்படப்போவது உறுதி..//
100% வருத்த படுவார்கள்..உறுதி !!
//நீங்கள் சொன்னதுபோல் ஏதும் தவறு நேர்ந்துவிட்டால் குழந்தை கதி.. கஷ்டகாலம்..//
:((
மேலை நாடுகளில் இதுபோன்ற செயல்கள் சாதரணமான ஒன்றாக இருந்தாலும் நம் நாட்டில் பரவி வரும் இது போன்ற கலாசாரங்களால் முன்பே பல தற்கொலைகளும், கொலைகளும் நடந்துள்ளன...
பதிலளிநீக்குசகோதரி நீங்கள் கூறியது போன்று நமக்கு சொந்தமான இடத்தில் தேவையான ஓன்று கிடைக்கவில்லை என்றால் நிச்சயமாக அது எங்கே கிடைக்கும் என்று தேடிச்சென்று விடும் நம் மனது... இது போன்று தான் பல வீடுகளில் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கிடைப்பதில்லை... காசுக்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் பல பெற்றோர்களை பிள்ளைகள் பார்த்து ஒரு சில வார்த்தைகள் பேசுவது என்பதே பெரிய விசயமாக போய்விடுகிறது... இதனால் குழந்தைகள் இந்த அன்பும் அரவணைப்பும் எங்கே கிடைக்கிறதென்று தேடுகிறார்கள்... இது போன்ற தேடல்களால் கானல் நீரை போன்ற சில நட்புகளின் கொடிய வலையில் சிக்கி சீரழிந்து விடுகிறார்கள்... இந்த அன்பும் அரவணைப்பும் வீட்டில் கிடைத்தால் இவர்கள் வேறெங்கும் அதை தேடிப்போவதில்லை... இது போன்றதே சந்தேகம் என்ற கொடிய நோயும்...
பெரும்பாலும் பெற்றோர்கள் கையில் தான் உள்ளது பிள்ளைகள் அழிவதும், ஆளுவதும்...
அடிபடையான விசயங்களை தெரிந்து கொண்டு பதிவு போடுங்க?
பதிலளிநீக்குபண்பாடுனா என்னானு தெரியுமா?
கலாச்சாரம்னா என்னானு தெரியுமா?
ரெண்டும் ஒண்ணா? வேற வேறயானு தெரியுமா?
நாடு வளரவளர பண்பாடு சீரழிந்து வருவது உண்மைதான்
பதிலளிநீக்குமேலை நாடுகளில் சாலை விதிகளை எப்படி மதிக்கிறார்கள். அதையெல்லாம் பின்பற்ற மாட்டார்களே இந்த 'நாகரீக' (நாருகிற?) மக்கள்.....
பதிலளிநீக்குRather than living together the bigger problem is child abuse.
பதிலளிநீக்குMany of them dont come out.A recent survey from U.K says 40% of children are sexually abused.
Even though the percentage may be bit hiked up,its a much serious problem than living together.
India never had a culture.What kings did as yaham's cant be written.They are so obscene.
நல்ல பதிவு .>>>வீட்டில் கிடைக்காத அன்பு, அரவணைப்பு, பாசம் இந்த மாதிரியான முறையில் கிடைக்கலாம் என்று போகலாம்...!>>> சத்தியமான வார்த்தை
பதிலளிநீக்குஇப்படி ஒரு சூழல் நிலவுவதற்கு காரணம் தவறான வளர்ப்பு முறை மட்டுமே..
பதிலளிநீக்குஇது பிற்காலத்தில் பிரச்ச்னைகளை உண்டுபண்ணும். உங்கள் சமுதாய விழிபுணர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குஆகா இருவருமே ஒரே சிந்தனையில் சற்று மாறுபட்டு யோசித்துருக்கிறோம்.
பதிலளிநீக்குமுதிர்ச்சியற்ற கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை! காலம் விரிய விரிய சில எண்ணங்கள் உதிர்ந்து விழுவதும், ஏறிக் கொள்வதும் தனி மனித பரிணாம வளர்ச்சிதானே. அந்த விதத்தில் இந்த கட்டுரையின் எண்ணம்சார் எடுத்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குபதிவின் பின்னூட்டம் சற்று பெரிதாகி விட்டது. நிதானமா படிங்க. உடைச்சு, உடைச்சு போடுறேன்.
பகுதி -1
* வாழ்க்கை என்பது ஒரே நேர் கோட்டில் ஓடுவது கிடையாது. அது மனிதருக்கு மனிதர் புரிந்து கொள்ளும் படிகளைக் கொண்டு வித்தியாசப்பட்டு நிற்கிறது.
உங்களுக்கு ஒரு விசயம் அதிருப்தியையும், கலக்கத்தையும் ஏற்படுகிறது என்பதற்காக காலம் பிறருக்கு அனுபவத்தின் மூலமாக தேடிச் சென்றடையக் கூடிய பாடங்களை வழங்காமல் அவர்களின் வாழ்கையை முடித்து விடுவது கிடையாதுதானே.
இங்கு நம்மால் முடிந்தது, ஒதுங்கி நின்று அது போன்ற அனுபவப் பாடம் வேண்டியவர்களை விட்டு அதன் சாதக பாதகங்களை பெற விடுவது மட்டுமே! இக்காரியத்தில் ஈடுபடுபவர்கள் ஒன்றும் பள்ளிச் சிறார்கள் இல்லையே, அடல்டுகள் தானே... சோ, எல்லாம் அவர்களுத் தெரியும்.
----- தொடர்கிறது...
நிச்சயம் ஆபத்தான கலாச்சாரம் தான். படித்தால் வாழலாம், இல்லை பிரிந்து விடலாம் என்பதில் என்பதில் நீங்கள் கூறியது போல் குழந்தைகள், எதிர்காலம் என்பதெல்லாம் கேள்விகுறிதான். சிந்திக்கவைக்கும் பகிர்வு.
பதிலளிநீக்கு....பகுதி -2
பதிலளிநீக்கு//'நமது கலாசாரத்திற்கு களங்கம் கற்பிக்கும்' //
//என்ன செய்து இதனை நிறுத்த போகிறோம் அல்லது தடுக்க போகிறோம்...?//
அடுத்து கலாச்சாரம், கலாச்சாரம் என்று பேசுகிறோமே, எது கலாச்சாரம்? பெற்றவர்களை புறந்தள்ளி வாழ்வது, தனக்காக தனது படிப்பை/தேவைகளை விளக்கி வைத்து மற்றவருக்காக வழி விட்டு வாழ்ந்தவர்களை தன் தேவை முடிந்தவுடன் அவர்களை தூக்கி கடாசிவிட்டு வாழத் துணிவது, வரதட்சிணைக்கென வயதானவர்களையும் நொந்து சாகும்படியான சூழலுக்கு இட்டுச் செல்வது, நாட்டையே சுரண்டும் வாக்கில் ஊரான் சொத்தை திருடி கொண்டு போய் வைத்துக் கொள்ளும் களவாணித் தனமெல்லாம் இந்த கலாச்சார கூண்டிற்குள் வராதா?
ஆண்/பெண் உறவு சார்ந்தும், ஆடைகள் உடுத்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பாங்கில் மட்டுமே இந்தக் கலாச்சாரம் விழிப்புடன் இருக்கிறதே அது ஏன்? அதுவும், இந்த உறவு நிலையில் போலியாக இணைந்தே 30, 40 வருடங்கள் என ஊருக்காக வாழ்ந்து முடிக்கும் நிலையில் (இடையில் அடிதடி, நிம்மதியின்மை, டிப்ரெஷன், அடுத்தவருக்கு என்ன வேண்டும், தன்னுடைய டேஸ்ட் என்ன என்றே தெரியாமல் விழிபிதிங்கி என்னமோ பிறப்பெடுத்துவிட்டேன் வாழ்ந்து முடிக்கணுங்கிற கடமை...), இப்படியாக உறவுகளின் சிக்கல்களை புரிந்து கொண்டு மீண்டும் நிலையான உறவுகளுக்குள் வருவது எவ்வளவு மேல் எனலாம்... sum of experiences = lifely wisdom for future harmony இன்னும் எவ்வளவோ இருக்கிறது பேசுவதற்கு.
கலாச்சாரமென்பது யாது... அப்படியே இதனையும் வாசிச்சு வைங்க, முதல் பகுதி இந்தக் கட்டுரையுடன் தொடர்புடையது...
http://kalvetu.blogspot.com/2010/10/blog-post_13.html
உரையாடலுக்கான ஒரு தொடக்கம் மட்டுமே ... இரும்புக்கை கொண்டெல்லாம் எதனையும் தன் சக்திக்கு மீறியதை ஒடுக்கி விட முடிவதில்லை.
No hard feelings, Plz! சுபம்!
//அடிபடையான விசயங்களை தெரிந்து கொண்டு பதிவு போடுங்க?
பதிலளிநீக்குபண்பாடுனா என்னானு தெரியுமா?
கலாச்சாரம்னா என்னானு தெரியுமா?
ரெண்டும் ஒண்ணா? வேற வேறயானு தெரியுமா? //
உங்களுக்குத் தெரியுமா முதலில். இப்படி கல்யாணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது நமது கலாசாரப் படியும் தவறு ,இப்ப சட்டப்படியும் தவறு ...
'நமது கலாசாரத்திற்கு களங்கம் கற்பிக்கும்' என்று சிலர் கொதிக்கும் அதே நேரம், இந்த மாதிரியான சீர் கேட்டையும் 'தனி மனித சுதந்திரம்' என்று சப்பை கட்டு கட்டி விதண்டாவாதம் செய்கிறார்கள் வேறு சிலர்//
பதிலளிநீக்குஇது தான் உண்மை..இது போன்ற சீர்கேட்டை எதிர்த்தால்..வந்துட்டாங்க ’கலாச்சார காவலர்கள்’ என்று கேலி செய்வதும் ஒரு கலாச்சாரம்..
இதனைத் தொடர்ந்து ஒரு பதிவாவே போட்டுட்டேன்...
பதிலளிநீக்குகண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு: A template post
//பெரியவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு படிப்பை கற்க வைப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், ஒழுக்கம், பண்பாடு, விருந்தோம்பல் பண்பு, நம் கலாசாரம் போன்றவற்றையும் சொல்லி கொடுக்க வேண்டும்.//
பதிலளிநீக்குகண்டிப்பாக.
நல்ல கருத்து.
அருமையான பதிவு கௌசல்யா அக்கா...
பதிலளிநீக்குவாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் வேண்டும் தான். ஆனால் எதை நோக்கி முன்னேறுகின்றோம் என்பது முக்கியம். இவர்கள் சுதந்திரம், நாகரீகம் என்ற பெயரில் வீழ்ச்சியை நோக்கி முன்னேறுவது வருத்தத்தை அளிக்கின்றது.
உலகம் போற்றிய/போற்றும் நம்முடைய கலாசாரத்தின் அருமையை அறியாது இருக்கின்றார்களே இப்பொழுது உள்ள சில இளம் தலைமுறையினர்.
அவர்களிடம் ஒரு மாற்றம் வரும் என்று நம்புவோம். அந்த மாற்றத்தை கொண்டு வர நமக்கும் பங்கு உண்டு என்பதை உணர்ந்து நாமும் பணியாற்றுவோம்.
நல்ல பதிவு அக்கா.
கலாச்சாரம் ,பொருளாதாரம் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னி தான் தான் இருக்கிறது .
பதிலளிநீக்குவெளிநாட்டை பார்த்து நாம் பின் பற்றும் போது அவர்களுக்கு நேர்ந்த கதி இங்கேயும் வரும் கூடிய விரைவில் ........பொருளாதார சிக்கல் .........இதை அனுபவித்தே தீரவேண்டும் நாம் ...... வேறு வழி இல்லை
YOUR CHILDREN AND MY CHILDREN IS PLAYING WITH OUR CHILDREN என்ற நிலைமை உண்மைலேயே வந்து விடுமோ பயமாக தான் இருக்கிறது சகோ
பதிலளிநீக்குAnonymous said...
பதிலளிநீக்கு// ராக்கிங் என்கின்ற சித்திரவதை தாரளமாக இந்தியாவில் நடக்கிறது. மேலை நாடுகளில் அப்படி ஒன்றே இல்லை.ஜாதி கொடுமையும் அதே மாதிரி தான்//
மேலை நாடுகளில் சாதி கொடுமை நம்முடைய அளவிற்கு இல்லை ஆனால் அங்கும் சாதி இருக்கத்தான் செய்கிறது. நிற பேதம் படுத்தும் பாடு இன்றும் தொடருகிறதே....
வருகைக்கு நன்றி.
ப.செல்வக்குமார் said...
பதிலளிநீக்கு//அதாவது பணம் மட்டுமே வாழ்க்கை என்று அவுங்களும் பணத்தின் பின்னால் ஓடி தங்களது குழந்தைகளையும் பணத்தின் பின்னால் ஓட விட்டு போயிட்டிருக்கும் போது நிச்சயம் இந்த மாதிரி பழக்கங்கள் ஏற்ப்பட வாய்ப்புகள்//
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சரியாக கவனித்து வளர்த்தாலே இந்த மாதிரியான சீர்கேடுகள் நடைபெறாது. புரிதலுக்கு நன்றி செல்வா.
சங்கவி said...
பதிலளிநீக்கு//மேலை நாடுகளில் பல நல்ல விசயங்கள் இருக்கிறது அதை எல்லாம் நம்மாட்கள் கடைபிடிக்கமாட்டார்கள்... இந்த மாதிரி விசயங்களைத்தான் பின்பற்றுவார்கள்... தலைவிதி..//
இக்கரைக்கு அக்கறை பச்சை என்று பார்ப்பதே மனித இயல்பு...என்ன செய்வது... கருத்திற்கு நன்றி சகோ .
dheva said...
பதிலளிநீக்கு//பணத்தால் பெற முடியாத ஒன்று இருக்கிறது....அது நிம்மதி....! அன்பு என்று சிலர் சொல்லலாம்.......ஆனால் அசலைப் போல போலி அன்பினை பெற்றுத்தர பணத்தால் முடியும்...ஆனால் நிமம்தி என்பது நம்மை சம்பந்தப்பட்டது.//
அசல் எது போலி எது என்று பிரித்தெறிய தெரியாத நிலையில் தானே இந்த சிலர் பணத்தால் கட்டுண்டு கிடக்கிறார்கள். பணத்தை வைத்து தங்கள் சந்தோசத்தை வாங்கிவிடலாம் என்ற குறுகிய புத்தியில் தங்கள் நிம்மதியை தொலைத்து கொள்கிறார்கள்.
வாழ்நாள் முழுதும் தொடரும் குற்ற உணர்ச்சி. சோகம்
//தமிழ் கலாச்சாரம் அப்படியே இருக்கிறது.....அதற்கு எதிராய் செயல்படுபவர்கள் மனப்பிறழ்வு கொண்டவர்கள்.//
உண்மைதான்.
//கலாச்சாரம் ஆண் பெண் உறவு தாண்டி பண்பாட்டோடு இயைந்தது.//
புரிந்து கொண்டேன்.
நன்றி dheva.
வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்கு// தில்லி போன்ற பெரு நகரங்களில் பரவலாக உள்ள ஒரு விஷயமே இந்த Living Together.//
பரவலாக இருக்கிறதா...?? வருந்துகிறேன்.
சௌந்தர் said...
பதிலளிநீக்கு//உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்புபை தான் சொல்லி இருக்கிறது....//
வெங்கட் நாகராஜ் சொல்வதை பார்க்கும் போது தீர்ப்புகள் திருத்த படலாம் போல தோணுது...!?
LK //கல்யாணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது நமது கலாசாரப் படியும் தவறு//
பதிலளிநீக்குநீங்க ஏன் அந்த எடதுல கலாசாரம்னு போட்டுருகிங்க
பண்பாடுன்னு போடாம. பண்பாட்டின் படி தவறுன்னு போட்டுருக்கலாமே?
எதுகை மோனைக்காக அப்டி போட்டுருகிகளா இல்ல வேற எதாவது காரணம்
இருக்கா??
//இப்படி பட்ட ஒரு முறை தவறு என்றே உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறி உள்ளது.//
பதிலளிநீக்குWhen was that?
Check this out...
March 24, 2010 witnessed a landmark verdict by the Supreme Court, legalizing live-in relationships in India. The Apex court justified that if two sound-minded adults of the opposite sex seek to live together without getting married the question of a “criminal offence” does not arise at all. It also cited the example of Lord Krishna and Radha’s relationship to substantiate its judgment.
This verdict was arrived at in response to multiple petitions filed against South Indian actress Khusboo. An astounding 22 FIRs were filed against the actress, in 2005, in response to her statement to an entertainment magazine about the rampancy of live-in relationships and pre-marital sex in India. Alarmingly, the actress’s effigies were burnt and life was threatened, for what reason? Exercising her fundamental right to speech?
The verdict is being widely criticized by certain political and social groups on the ground that it would encourage the practice of live-in relationships in India. Also, while Khusboo continues to receive widespread flak for her comments, the fact remains that live-in relationships have become a common (and practical) norm in most Indian Metros. If two adults choose to have physical relations, without a marriage certificate to reinforce the legality of their actions, it is nobody’s business but their own.
//எல்லாவற்றிலும் மேலை நாட்டினரை பார்த்து முன்னேறி (பின்னேறி) பழகி போன சிலரால் ஒரு புது கலாச்சாரத்தையும் பின்பற்றுவது என்பதும் சரியானதாகவே தான் தெரிகிறது போலும்.//
பதிலளிநீக்குமனைவியாக வாழ்கிறேன் என்று ஜீவனாம்சம் கோர முடியாது: உச்ச நீதிமன்றம்
கணவன் -மனைவி போல சேர்ந்து வாழ்ந்தோம் என்று கூறி, அதற்காக ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டின் கோயமுத்தூரைச் சேர்ந்த டி. பச்சையம்மாள் என்பவர் டி.வேலுசாமி என்பவருடன் கணவன் - மனைவி போல வாழ்ந்ததாகவும், வேலுசாமி இப்போது தன்னைப் புறக்கணிப்பதால் தனக்கு மாதம்தோறும் ஜீவனாம்சம் தருமாறு அவருக்கு உத்தரவிடவேண்டும் என்றும் வழக்கு தொடுத்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, டி.எஸ். தாக்கூர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. வீட்டுக்குள் நடக்கும் கொடுமைகளிலிருந்து பெண்களை அதிலும் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களைப் பாதுகாக்கும் 2005வது சட்டத்தின் அடிப்படையில் பச்சையம்மாள் வழக்கு தொடுத்திருந்தார்.
பச்சையம்மாள் தனக்கு மனைவி அல்ல என்றும் லட்சுமி என்பவரே தன்னுடைய மனைவி என்றும் எதிர் வழக்காடிய வேலுசாமி வாதாடினார்.
வார விடுமுறைகளில் சேர்ந்து வாழ்வதோ, வாரத்துக்கு ஒரு நாள் ஒரே வீட்டில் தங்கியிருப்பதோ, கணவன் - மனைவிக்கு இடையிலான தாம்பத்ய உறவுக்கு ஈடாகக் கருதப்பட மாட்டாது என்று கூறிய நீதிபதிகள் , கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கோரும் மனைவியர் 4 அம்சங்களைப் பூர்த்தி செய்தவர்களாக இருக்க வேண்டும் என்றனர்.
ஒரு ஆணும் பெண்ணும் வாழ்க்கைத் துணைவர்கள் என்று சமூகம் ஏற்க வேண்டும். இருவரும் திருமண வயதை எட்டியிருக்க வேண்டும், இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கேற்ற தகுதிகளுடன் இருக்க வேண்டும். இருவரும் விருப்பப்பட்டே சில காலம் ஒன்றாகத் தங்கியிருக்க வேண்டும்; அதன் மூலம் அவர்களை கணவன், மனைவியராக சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.
இந்த நாலும் இல்லாமல் ஒரு ஆடவனின் அழைப்பை ஏற்று அவருடன் கூடி வாழ்ந்தோம் என்று கூறுவதையெல்லாம் ஏற்று அவர்களுக்கு ஜீவனாம்சம் தர உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் உறுதிபடத் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் வேலுசாமி கூறுகிறார்போல அவருக்கு லட்சுமி என்ற முதல் மனைவி இருந்தாரா என்றும் விசாரிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
@பிள்ளைவாள்
பதிலளிநீக்குநாம் பண்பாடு கலாசார வேற்றுமையை வேறு இடத்தில விஆதிப்போம். இப்போது தலைப்பை பற்றி மட்டுமே பேசவும்
LK //இப்போது தலைப்பை பற்றி மட்டுமே பேசவும்//
பதிலளிநீக்குஇப்போ கலாசாரம் மாறுகிறது.அது மாறகூடாது.
மாறினால் ஏற்படும் தீமைகள்.இதுதான் பதிவின் நோக்கம்.
ஆனால் கலாசாரம் என்பது மாறகூடியதுதானே????
வெறும்பய said...
பதிலளிநீக்கு//பெரும்பாலும் பெற்றோர்கள் கையில் தான் உள்ளது பிள்ளைகள் அழிவதும், ஆளுவதும்...//
எனக்கும் நீங்க சொல்றது தான் சரி என்று தோணுகிறது... சமூகம் என்று பழி போட்டு ஒதுங்காமல் தன் பிள்ளைகளை சரியாக கவனித்து வளர்த்தாலே இந்த மாதிரியான பிரச்சனைகள் தலை எடுக்காது.
உங்களின் கருத்திற்கும் ரொம்ப நன்றி சகோ.
pillaival said...
பதிலளிநீக்கு//அடிபடையான விசயங்களை தெரிந்து கொண்டு பதிவு போடுங்க?
பண்பாடுனா என்னானு தெரியுமா?
கலாச்சாரம்னா என்னானு தெரியுமா?
ரெண்டும் ஒண்ணா?//
நீங்க இப்படி கேள்வி கேட்டதுக்கு பதில் அதை பற்றிய விளக்கம் கொடுத்திருந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
வருகைக்கு நன்றி சகோ.
அருண் பிரசாத் said...
பதிலளிநீக்கு//நாடு வளரவளர பண்பாடு சீரழிந்து வருவது உண்மைதான்//
உண்மைதான் சகோ. புரிதலுக்கு நன்றி
பலூன்காரன் said...
பதிலளிநீக்கு//மேலை நாடுகளில் சாலை விதிகளை எப்படி மதிக்கிறார்கள். அதையெல்லாம் பின்பற்ற மாட்டார்களே இந்த 'நாகரீக' (நாருகிற?) மக்கள்....//
பலரின் ஆதங்கமும் இதுதான். உங்களின் முதல் வருகைக்கும். கருத்திற்கும் நன்றி சகோ.
Anonymous said...
பதிலளிநீக்கு//Many of them dont come out.A recent survey from U.K says 40% of children are sexually abused.//
கேட்கவே வருத்தமாக இருக்கிறது...!
உண்மையில் இதுதான் மிகவும் மோசமான நிலை.
சர்வே எடுப்பதுடன் நின்றுவிடாமல் இதை குறைப்பதற்கு ஏதாவது முழு அளவில் முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும். குழந்தைகள் காப்பாற்ற படுவார்கள்
வருகைக்கு நன்றி
சி.பி.செந்தில்குமார் said...
பதிலளிநீக்கு//நல்ல பதிவு .>>>வீட்டில் கிடைக்காத அன்பு, அரவணைப்பு, பாசம் இந்த மாதிரியான முறையில் கிடைக்கலாம் என்று போகலாம்...!>>> சத்தியமான வார்த்தை//
புரிதலுக்கு நன்றிங்க
கே.ஆர்.பி.செந்தில் said...
//இப்படி ஒரு சூழல் நிலவுவதற்கு காரணம் தவறான வளர்ப்பு முறை மட்டுமே..//
100 % உண்மைதான் தோழரே. நன்றி
நிலாமதி said...
பதிலளிநீக்கு//இது பிற்காலத்தில் பிரச்ச்னைகளை உண்டுபண்ணும். உங்கள் சமுதாய விழிபுணர்வுக்கு நன்றி//
கண்டிப்பாக உண்டு பண்ணும். புரிதலுக்கு நன்றி அக்கா
ஜோதிஜி said...
//ஆகா இருவருமே ஒரே சிந்தனையில் சற்று மாறுபட்டு யோசித்துருக்கிறோம்.//
அப்படியா....?? உங்களின் முதல் வருகைக்கு நன்றிங்க.
Thekkikattan|தெகா said...
பதிலளிநீக்குகலாச்சாரம் என்பது மாறக்கூடியது தான், ஒத்துகொள்கிறேன். சொல்லப்போனால் ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒருமுறை எல்லாமே மாறுகிறது தேர்தல் மாதிரி. கலாச்சாரத்தை காப்பாற்றுங்கள் என்று நான் அறைகூவல் விடவில்லை. ஆனால் இப்படியும் சில விசயங்கள் இப்போது புதிதாக வந்து இருக்கிறது......
'தெளிவடையுங்கள்' 'உங்கள் பிள்ளைகளை கவனித்து வளருங்கள் , வளர்ந்த பின்னும் கவனியுங்கள்' இது தான் என் கட்டுரையின் வேண்டுகோள்.
கலாச்சாரம் , பண்பாடு என்ற வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்வது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல என்பதை நண்பருக்கு சொல்லி கொள்கிறேன்.
தவிரவும் உங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்து என் பதிவுக்கு அழகான, விளக்கமான பின்னூட்டம் போட்டதிற்கு வணங்குகிறேன்...
வருகைக்கு மகிழ்கிறேன் கருத்திற்கு நன்றி.
அம்பிகா said...
பதிலளிநீக்கு//நிச்சயம் ஆபத்தான கலாச்சாரம் தான். படித்தால் வாழலாம், இல்லை பிரிந்து விடலாம் என்பதில் என்பதில் நீங்கள் கூறியது போல் குழந்தைகள், எதிர்காலம் என்பதெல்லாம் கேள்விகுறிதான். //
நிதர்சனம் அதுதான் தோழி. குழந்தைகளை நாம கவனமா கையாளவில்லை என்றால் சிதறி விடுவார்கள்.
கருத்துக்கு நன்றி தோழி
LK said...
பதிலளிநீக்குபதிவை பற்றி ஒண்ணும் சொல்லாமல் வெறும் கேள்வி மட்டும் கேட்டால் எப்படி....?
ஓ.கே இருக்கட்டும்...வருகைக்கு மகிழ்கிறேன்
ஹரிஸ் said...
பதிலளிநீக்கு//இது தான் உண்மை..இது போன்ற சீர்கேட்டை எதிர்த்தால்..வந்துட்டாங்க ’கலாச்சார காவலர்கள்’ என்று கேலி செய்வதும் ஒரு கலாச்சாரம்.//
அழகா சொல்றீங்களே....! விமர்சனங்களுக்கு நம்ம நாட்டில பஞ்சமா என்ன ?? உங்களின் முதல் வருகைக்கு நன்றி
Thekkikattan|தெகா said...
பதிலளிநீக்கு//இதனைத் தொடர்ந்து ஒரு பதிவாவே போட்டுட்டேன்...
கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு: A template post//
உங்களை ஒரு பதிவு போட வைத்ததிற்காக மகிழ்கிறேன். பதிவை படித்தேன்....நல்ல விளக்கங்கள். வாழ்த்துக்கள்.
அன்பரசன் said...
பதிலளிநீக்கு//கண்டிப்பாக.
நல்ல கருத்து.//
புரிதலுக்கு நன்றி சகோ
நம் நாடு சந்தையை என்று உலக வர்த்தகத்திற்கு திறந்து விட்டோமோ ,அன்றே இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் நாட்டில் நுழைந்து விட்டது. எப்போதோ படித்த ஒரு ஆங்கில வாக்கியம் "ஒரு நாட்டை அழிக்க, அந்த நாட்டின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் சீரழி" நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குஇத்தகைய போக்கு தவறு என்று பல மேல்நாட்டவர் திருந்தி நம் கலாசாரத்தை பின்பற்ற துவங்கி உள்ள இந்த காலத்தில், எதிலும், வெளிநாட்டு மோகம் கொண்ட நம்ம ஆட்கள் அவர்கள் வழிக்கு மாட்ட துவங்கி உள்ளனர். இது மிக வருந்தக் கூடிய விஷயம். நம் குழந்தைகளை வளர்ப்பதில் மிகக் கவனம் செலுத்த வேண்டி உள்ளது
கேள்வி பார்த்தவுடன் அதற்கு பதில் அளித்தேன்.. இப்பொழுது பதிவை பற்றி என் பதில். சரியா ???
பதிலளிநீக்குவழிப்போக்கன் said...
பதிலளிநீக்கு//அவர்களிடம் ஒரு மாற்றம் வரும் என்று நம்புவோம். அந்த மாற்றத்தை கொண்டு வர நமக்கும் பங்கு உண்டு என்பதை உணர்ந்து நாமும் பணியாற்றுவோம்.//
நல்ல புரிதலுடனான கருத்துக்கள் சொல்லி இருக்கீங்க சகோ.
இப்படி நடக்கிறதே என்று ஆதங்கபடுவதை விட்டுவிட்டு மாற்றங்களை கொண்டு வர நாமும் பணியாற்றுவோம் என்று நன்றாக சமூக அக்கறையுடன் சொல்லி இருப்பதை கண்டு மகிழ்கிறேன்.
உங்களுக்கு என் நன்றிகள்.
இம்சைஅரசன் பாபு.. said...
பதிலளிநீக்கு//YOUR CHILDREN AND MY CHILDREN IS PLAYING WITH OUR CHILDREN என்ற நிலைமை உண்மைலேயே வந்து விடுமோ பயமாக தான் இருக்கிறது சகோ//
சில பிரபலங்கள் இப்படித்தான் சொல்லி கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்பவே வந்து விட்டது வெகு சில இடத்தில்.
உங்களின் கருத்திற்கு நன்றி சகோ.
Indian said...
பதிலளிநீக்குநான் சில வரிகளில் குறிப்பிட்டதை நீங்கள் மிக தெளிவாக சட்டத்தின்
முழு விவரம் முதல் கொண்டு இங்கே தந்ததிற்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.
//மனைவியாக வாழ்கிறேன் என்று ஜீவனாம்சம் கோர முடியாது: உச்ச நீதிமன்றம்//
முக்கியமான ஒன்று தான் இது.
நீதிபதிகள் முன் வைத்த வாதமும், தீர்ப்பும் மிக சரியானதே....
வரவேற்க வேண்டிய ஒன்று...
உங்களின் முதல் வருகைக்கும் , கருத்திற்கும் மகிழ்கிறேன். மீண்டும் ஒரு முறை
உங்களுக்கு நன்றி.
||Thekkikattan|தெகா said...||
பதிலளிநீக்குவழி மொழிகிறேன்..
நாகரீகமானவர்களிடம் இத்தகைய புதிய கலாசாரம் இப்போது வேகமாக பரவிக்கொண்டு வருகிறது. இது மிகவும் ஆபத்தான, அதே சமயம் வருத்தப்பட கூடிய ஒரு நிகழ்வு.
பதிலளிநீக்குஉண்மை தான் சகோ ....அவர்கள் மனதில் ஒரு புரட்சி செய்வதாக நினைப்பு ....சமிபத்தில் கூட ஒளிப்பதிவாளர் ஸ்ரீ ராமின் மகள் மொட்டை மாடியில் தண்ணி பார்டியில் மாடியில் இருந்து விழுந்து உயிரை விட்டதி அறிவிர்கள் ....நமது நாட்டில் சிறுவர்களாக இருக்கும் பொழுது சிறிதளவே பாக்கெட் மணி கொடுக்கிறோம் ...எனவே படித்து முடித்ததும் பல்லாயிரக் கணக்கில் சம்பளமாக பணம் கிடைக்கும் பொழுது இவர்கள் பெற்றோர்களை மறந்து தன்னிச்சையாக செயல்பட முயல்வதே இதற்கெல்லாம் காரணம் ....பெற்றோர்களின் கண்காணிப்பில் இருந்து விலகி போகிறார்கள் ...பணம் மூலம் எல்லாவற்றையும் அடைந்து விடலாம் என்ற நினைப்பே ....
ஆனால் பிரச்சனை அத்துடன் முடிந்து விடுவதில்லை....பழகிய நாட்களின் எண்ணங்களில் இருந்து அவர்களால் முழுதும் விடுபட இயலாது....இதில் அதிகம் பாதிக்க படப்போவது பெண்கள் தான் ...
மேலும் இது முழுவதும் உடல் தேவைக்காக மட்டும் தான் என்று ஒதுக்கி விடமுடியாது. அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன.
நம் நாட்டில் மூடி மூடி வைத்தே ...நம் முன்னோர்கள் நம்மளை கெடுத்து விட்டார்களோ என்று நான் நினைக்கிறேன் .செக்ஸ் பற்றி பேசினாலே குற்றம் என்று தான் நம் பெரியவர்கள் நினைத்து நம்மளை வலி காட்டுகிறார்கள் ...இது எங்கு போய் விட்டுள்ளது என்றால் ...நிறைய இளைஞர்கள் முதல் இரவில் இன்றும் தடுமாறிக் கொண்டு தான் உள்ளார்கள் ....இப்பொழுது திருமணமாணவர்களே வாரம் இரு முறை என்பதே அதிகம் என கேள்வி படும்பொழுது ஆச்சரியமாக உள்ளது ....நான் எங்கேயோ போகிறேன் ...இவர்கள் பெற்றோர்களின் பார்வையில் இருந்து வேலை வைப்பிற்காக தொலை தூரம் போவதால் ......கண்டிப்பு ....வழிகாட்டுதல் இன்றி செக்சை நாடுவதர்ககவே ஒன்றாக இருக்கிறார்கள் என தான் நினைக்கிறேன் ...
//'தெளிவடையுங்கள்' 'உங்கள் பிள்ளைகளை கவனித்து வளருங்கள் , வளர்ந்த பின்னும் கவனியுங்கள்' இது தான் என் கட்டுரையின் வேண்டுகோள்.//
பதிலளிநீக்குகவனிச்சு வளருங்கன்னா, எது போன்ற கண்கானிப்பு. ஒரு குழந்தை இந்த பூமியில விழுந்த நாளிலிருந்து மன முதிர்ச்சி அடையற வரைக்கும் பாதுகாப்பா இருந்து கண்கானிப்பு செய்யலாம். ஆனா, அதுவே மன/உடல் ரீதிய அதாவது தனக்கேயானதைத் தானே ‘தெரிவு’ செஞ்சிருக்கிற வயசுக்கு எட்டிய பின்பும், என்ன மாதிரி கண்கானிப்பு கொடுக்கணுங்கிறீங்க.
எல்லாத்திலும் என்னோட விருப்பை திணிச்சா அப்போ அந்தப் புள்ளய என்னோட வாழ்க்கையையில்ல வாழச் சொல்லுறேன்... அதுக்கான வாழ்க்கை வாழுறதிற்கான முழுத் தகுதியுமிருந்தாலும்.
இதையும் படிங்க... குழந்தைகளும், தனித்துவத்தன்மை பேணலும்...
சேர்ந்து வாழ்வதெல்லாம் சரியில்லாத போக்கு. இதனால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு//நிற பேதம் படுத்தும் பாடு இன்றும் தொடருகிறதே. //
பதிலளிநீக்குஉண்மை. இவன் தாழ்த சாதி, இவன் உயர்ந்த சாதி, இவன் நடுத்தர சாதி என்று பார்க்கும் தமிழ் இனத்திலேயே இருந்து வந்தபடியால் மேலை நாட்டவர் பார்க்கும் நிற பேதம் என்னை பாதிக்கவில்லை. தமிழர்களிடமே தமிழர்களாகிய நாம் சாதி பார்க்கும் போது மேலை நாட்டவர் வேறு நிறமானவர்களிடம், வேறு நாட்டவர்களிடம், வேறு மொழி பேசுபவர்களிடம் நிற பேதம் காட்டுவதில் உள்ள நியாயத்தையும் நான் ஏற்று கொள்கிறேன்.
//அங்கும் சாதி இருக்கத்தான் செய்கிறது. //
அது உண்மை அல்ல சகோதரி.
இந்திய கலாச்சாரம் என்று எதுவும் இல்லை, நான் படித்த மட்டில் இந்தியா பல மொழி மற்றும் பல்கலாச்சாரங்கள் தனக்கே கெண்ட நாடுதான் இந்தியா!
பதிலளிநீக்குLK said...
பதிலளிநீக்கு//இத்தகைய போக்கு தவறு என்று பல மேல்நாட்டவர் திருந்தி நம் கலாசாரத்தை பின்பற்ற துவங்கி உள்ள இந்த காலத்தில், எதிலும், வெளிநாட்டு மோகம் கொண்ட நம்ம ஆட்கள் அவர்கள் வழிக்கு மாட்ட துவங்கி உள்ளனர். இது மிக வருந்தக் கூடிய விஷயம். நம் குழந்தைகளை வளர்ப்பதில் மிகக் கவனம் செலுத்த வேண்டி உள்ளது//
உண்மைதான்...குழந்தைகள் வளர்ப்பில் அதிகமான கவனமும், அக்கறையும் இன்று தேவை படுகிறது... உங்கள் கருத்திற்கு நன்றி.
pillaival said..
பதிலளிநீக்கு//இப்போ கலாசாரம் மாறுகிறது.அது மாறகூடாது.
மாறினால் ஏற்படும் தீமைகள்.இதுதான் பதிவின் நோக்கம்.
ஆனால் கலாசாரம் என்பது மாறகூடியதுதானே????//
மாறக்கூடியது தான் ஒத்துகொள்கிறேன்...ஆனால் மாறும் நல்லவற்றை ஏற்றுக்கொண்டு இந்த மாதிரி மாற்றத்தை தள்ள வேண்டும். கலாச்சாரம் என்றால் என்ன...என்று விளக்கம் பெறுவதை விட இந்த மாதிரியான ஒன்று சரியா தவறா என்ற வாதத்திற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும் சகோ. நன்றி
கலகலப்ரியா said...
பதிலளிநீக்கு//||Thekkikattan|தெகா said...||
வழி மொழிகிறேன்..//
உங்களின் வருகைக்கும், வழி மொழிதளுக்கும் மிகவும் நன்றி தோழி.
murugan said...
பதிலளிநீக்கு//எனவே படித்து முடித்ததும் பல்லாயிரக் கணக்கில் சம்பளமாக பணம் கிடைக்கும் பொழுது இவர்கள் பெற்றோர்களை மறந்து தன்னிச்சையாக செயல்பட முயல்வதே இதற்கெல்லாம் காரணம் ....பெற்றோர்களின் கண்காணிப்பில் இருந்து விலகி போகிறார்கள் ...பணம் மூலம் எல்லாவற்றையும் அடைந்து விடலாம் என்ற நினைப்பே ....//
மிக சரியான புரிதல் சகோ. பணம் மூலம் எல்லாவற்றையும் அடைந்து விடலாம், ஆனால் நிம்மதி கிடைக்குமா. அதில் இருந்து மீண்டு வந்து விட்டாலும் அந்த எண்ணங்களை மறக்க முடியுமா?? நிச்சயம் குற்ற உணர்ச்சி இருந்தே தீரும்...இதற்க்கு எல்லாம் என்ன பதில் இருக்கிறது....?? புரியவில்லை
//வழிகாட்டுதல் இன்றி செக்சை நாடுவதர்ககவே ஒன்றாக இருக்கிறார்கள் என தான் நினைக்கிறேன் ..//
ஆனால் சகோ நாங்கள் அதற்காக இப்படி பட்ட ஒன்றை தேர்ந்து எடுக்கவில்லை, ஜஸ்ட் நட்பிற்காக தான் இருக்கிறோம் என்று கூட சப்பை கட்டு கட்டுவார்கள்....ஒருவருக்கு ஒருவர் அன்பை நட்பை பரிமாறிக்கொண்டு ஒன்றாக வாழ்கிறோம் இதில் மற்றவர்களுக்கு என்ன என்று நம்மை திருப்பி கேட்பார்கள்....இன்னும் எங்களுக்குள் இப்பவரை வேறு ஒன்றும் நடக்கவில்லை என்றும் சொல்வார்கள்.....ஒருவேளை அப்படி நடந்து இருந்தாலும் இது ஜஸ்ட் டிபன் சாப்பிடுவது மாதிரி தான் இதில் என்ன கெட்டுவிட போகிறது என்று வேதாங்கம் பேசுவார்கள் சகோ.....தவறை சரி என்று சொல்ல பலர் இருக்கும் போது இது புனிதமாகும் வெகு விரையில்.........நாம் வெறும் பார்வையாளர்களாகவே இருப்போம்.......???!!!
உங்களின் புரிதலுக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.
Thekkikattan|தெகா said...
பதிலளிநீக்கு//கவனிச்சு வளருங்கன்னா, எது போன்ற கண்கானிப்பு. ஒரு குழந்தை இந்த பூமியில விழுந்த நாளிலிருந்து மன முதிர்ச்சி அடையற வரைக்கும் பாதுகாப்பா இருந்து கண்கானிப்பு செய்யலாம். ஆனா, அதுவே மன/உடல் ரீதிய அதாவது தனக்கேயானதைத் தானே ‘தெரிவு’ செஞ்சிருக்கிற வயசுக்கு எட்டிய பின்பும், என்ன மாதிரி கண்கானிப்பு கொடுக்கணுங்கிறீங்க.
எல்லாத்திலும் என்னோட விருப்பை திணிச்சா அப்போ அந்தப் புள்ளய என்னோட வாழ்க்கையையில்ல வாழச் சொல்லுறேன்... அதுக்கான வாழ்க்கை வாழுறதிற்கான முழுத் தகுதியுமிருந்தாலும்.//
உங்களின் கருத்துக்களை நான் ஏற்று கொள்கிறேன்....! கவனித்து வளருங்கள் என்றால் அவர்களின் நடவடிக்கையை கவனியுங்கள் என்று சொல்கிறேன். மேலும் என்னுடைய பழைய பதிவு ஒன்று உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்லும் என்று கருதுகிறேன். முடிந்தால் அதையும் படியுங்கள்.
http://kousalya2010.blogspot.com/2010/09/blog-post.html
ஜெயந்தி said...
பதிலளிநீக்கு//சேர்ந்து வாழ்வதெல்லாம் சரியில்லாத போக்கு. இதனால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.//
ஆண்கள் இதை ரொம்ப ஈஸியா எடுத்திட்டு போய்டுவாங்க ஆனா அந்த பெண்ணோட நிலை மிகவும் வருந்த கூடியது.... புரிதலுக்கு நன்றி தோழி.
யாதவன் said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள்//
நன்றி
இந்தப் போஸ்ட் உங்களுக்கு ஒரு சின்ன விளக்கம் கொடுக்கிறதுக்காகப் போட்டதுங்க. உங்களுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் கிடையாது. கூட இருக்கிறவங்க உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லுவாங்க. பார்த்துக்குங்க.
பதிலளிநீக்குஉங்களுக்கு உங்க கருத்த சொல்ல எல்லா உரிமையும் இருக்கு. எனக்கு மைனஸ் போடவும் அப்டியே.
அவ்ளோதான். நன்றிங்க.
http://kalakalapriya.blogspot.com/2010/11/blog-post_4248.html
கலகலப்ரியா...
பதிலளிநீக்குஎனக்கு சரின்னு படுவதை நான் எழுதுகிறேன்...மற்றபடி நீங்க சொல்வதை போல் எனக்கும் உங்களுக்கு நடுவில் எந்த கொடுக்கல், வாங்கல் பிரச்சனையும் இல்லை. உண்மைதான்.
என் பதிவை படித்த பலருக்கும் சரி என்று படவே தான் ஆதரித்து பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன்....ஒருத்தருக்கு பிடிக்கலை என்பதால் நான் எழுதியது தவறு ஆகிவிடாது.
மேலும் விதண்டாவாதம் செய்வது எனக்கு ஏற்புடையது அல்ல என்பதால் எனது கருத்தை - vote போட்டு சொல்லி இருக்கிறேன். அவ்வளவே.
எழுத்து சுதந்திரம் உள்ள என் நாட்டில் யாரும் எதையும் எழுதலாம் மற்றவர்களின் உணர்வை புண்படுத்தாமல்....!
சகோதரிக்கு என் வாழ்த்துகளும் , நன்றியும்....
NONO said...
பதிலளிநீக்கு//இந்திய கலாச்சாரம் என்று எதுவும் இல்லை, நான் படித்த மட்டில் இந்தியா பல மொழி மற்றும் பல்கலாச்சாரங்கள் தனக்கே கெண்ட நாடுதான் இந்தியா!//
இந்த மௌசை ஸ்குரோல் பண்ணி பண்ணி கமெண்ட் reply பண்ணியதில் உங்களை விட்டுடேங்க.....பொறுத்துக்கோங்க......
நீங்க சொன்ன மாதிரி இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கொண்டிருக்கிற ஒரு நாடு தான்....
உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க....
Well said LK and THEka .....
பதிலளிநீக்குThese are by-products of globalization. We have to learn to live with them ... unfortunately :(
It is all about what you teach your kids as cultural dimensions are changing by day.
the culture is changing time to time. It influence the society.once,ladies were not allowed to go to school,workplace.Now not like that.Night travels consisting of lady passengers are common.Staying in hostel and working in outstations are in practical.so many changes in our culture have come, yet to come also.Nobody can stop the changes.
பதிலளிநீக்குதங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .
பதிலளிநீக்குபெருகி வரும் இக்கலாச்சாரம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் என்பதே உண்மை. பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்குபண்பாட்டு அசைவுகள்(காலச்சுவடு பதிப்பகம்) என்னும் தொ.பரமசிவன் அய்யாவின் புத்தகமும், எது கலாச்சாரம்?(பாரதி புத்தகாலயம்) என ச.தமிழ்ச்செல்வன் எழுதிய புத்தகமும் நம் பண்பாடு, கலாச்சாரம் பற்றி மிக எளிமையாகவும் ஆழமாகவும் விளக்குகிறது. நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகங்கள் இவையிரண்டும்.