புதன், நவம்பர் 10

PM 7:47
35

கணவன் மனைவி பாதை தவறுவது (மாறுவது )எதனால்??


பல காரணங்கள் இருக்கிறது. இது தான் என்று எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் சொல்ல இயலாது. ஆனால் பொதுவாக சில காரணங்களை இங்கே கூறலாம் என்று இருக்கிறேன்.

* ஒருத்தருக்கு மற்றொருவர் மீதான அதிகபடியான பொசசிவனெஸ்
*  உடல் ரீதியான திருப்தியின்மை
*  மன பொருத்தம் இல்லாமை
*  கணவன் மனைவிக்கு இடையில் அதிகபடியான வயது வித்தியாசம்.

அதிகபடியான பொசசிவ்னெஸ்

பாதை தவறி செல்வதற்கு இது எப்படி காரணமாகும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஒருவர் மேல் மற்றொருவருக்கு அதிகபடியான அன்பு, காதல் இருப்பது எப்படி தவறாகும். அந்த அன்பின் காரணமாகத்தான் தன்  துணையை சந்தேகபடுவதும் , கண்டிப்பதும் ஆகும். இதை  காரணமாக வைத்து எப்படி தவறான பாதைக்கு போவார்கள் என்று கேள்வி எல்லாம்...!!  அதிக  அன்பு வைப்பது கூடாதா....??

அன்பு வைப்பது  தவறாகாது....ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அதீத அன்பு ஒரு கட்டத்தில் வெறுப்பில் கொண்டு போய் விட்டு விடுகிறது....அன்பு எப்படி வெறுப்பாகும் என்று முதலில் பார்போம்.....

ஒருவர் மீது ஒருவர் 'நீ இப்படித்தான் இருக்கணும், வேற யாரிடமும் அன்பா இருக்க கூடாது, உன் அன்பு முழுவதும் எனக்கு மட்டும்தான் ' என்று சொல்லும் போது தொடக்கத்தில் மிகவும் மகிழ்வாக இருக்கும். அன்பை மழையாய் பொழியும் போது பரவஸத்தில் அப்படியே ஆழ்ந்து போய் விடுவார்கள். ஆனால் போக போக இந்த பேரன்பு கொடுக்கிற அதிகபடியான அழுத்தம் நம்மை நாமாக இருக்க விடாது...!!

எப்படி இதில் இருந்து வெளிவர போகிறோம் என்று துடிக்க வைத்துவிடும்...ஒருவரின் இயல்பை மாற்ற முயற்சிக்கும் போது அது இருவருக்கும் இடையிலான உறவையே கெடுத்து முடிவுக்கு கொண்டு வந்து விடுகிறது.....அதற்கு பிறகு, தன் இயல்பை அப்படியே ஏற்றுகொள்ளும் வேறு ஒருத்தரின் பால் கவனத்தை திசை திருப்பி விடுகிறது....!?

சிறு பிள்ளை அல்லவே நாம்

நம் குழந்தைகளிடம் கூட நீ இப்படி இருக்கணும், இப்படி இருக்க கூடாதுன்னு நம் விருப்பத்தை திணிக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் உண்டு. இதை விடுத்து நாம் பிரஷர் கொடுத்தோம் என்றால் நம்மிடமிருந்து கொஞ்சங்  கொஞ்சமாக  விலகி தள்ளி போவார்களே தவிர பாசிடிவாக எந்த பலனும் கிடைக்காது. எல்லோரின் மனதும் தன் நிம்மதி , தன் சந்தோசம் என்ற ஒன்றுக்காகத்தான்  ஏங்கிக்கொண்டிருக்கிறது.....! இந்த நிம்மதியையும், சந்தோசத்தையும் கொடுக்கிற ஒரு நல்ல அன்பு நெஞ்சம் தான் தேவையே தவிர, அன்பு என்ற பெயரில் நம்மை அழுத்தும்  ஒரு சக்தி தேவை  இல்லை.....!!?

திருமணம் முடிந்த புதிதில் கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பொசசிவ்வாக   இருப்பது அப்போது இனிமையாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் , வேலை  பளு என்று வந்த பின்னும், இது தொடர்ந்தால் காலபோக்கில் சந்தேகமாக மாற கூடிய வாய்ப்புகள் தான் அதிகம்.  'ஆரம்பத்தில் நீ எங்க போனாலும், என்ன செய்தாலும் என்கிட்ட சொல்லுவ...., இப்ப வர வர எதுவும் சொல்றது இல்லை , ஏன் இப்படி மாறிட்ட...??'  இப்படிப்பட்ட வார்த்தைகள் வரத்  தொடங்கும்....! பின்னர் இந்த வார்த்தைகள் தடிக்க தொடங்கி பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பிக்கும்... ஆனால் இந்த மாதிரி ஆட்கள் ஒன்றை புரிந்துக் கொள்வதில்லை.    

திருமணம் முடிந்த புதிதில் புதிய சூழல், புது மனிதர்கள் சுற்றி இருக்க, தன் துணையை மட்டுமே முழுதாய் சார்ந்து இருக்க வேண்டி இருப்பதாலும், பெரிய பொறுப்புகள் ஏதும் இல்லாத அந்த சூழ்நிலையில் ஒருவருக்கு ஒருவர், மாறி மாறி அன்பை பொழிந்து தள்ளுவார்கள். அந்த சமயத்தில் சின்ன சின்ன விஷயம் கூட  ரொம்ப முக்கியமாகப்படும்    தன் துணையிடம் பகிர்ந்து கொள்ள நேரமும் கிடைத்து இருக்கும், ஆனால் சில வருடங்கள் கடந்த  பின் இருவருக்குமே பொறுப்புகளும், கடமைகளும் அதிகரித்திருக்கும். எதையும் சொல்லகூடாது என்று யாரும் வேண்டும் என்றே மறைக்க போவது இல்லை. ஆனால் 'சின்ன விசயம் தானே, இதை போய் எதுக்கு சொல்லிக்கிட்டு'  'மெதுவாக சொல்லிகொள்ளலாம்' என்று அசட்டையாக இருந்திருக்கலாம்.  

தன் கைக்குள்....!

தன் துணை தன் கைக்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் பள்ளி செல்லும் சிறுவன், சின்ன சின்ன விசயத்துக்கும் அம்மாவின் அனுமதியை எதிர்பார்ப்பது போல், துணையின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல்  மட்டும் தான் நடக்க வேண்டும் என்று வற்புறுத்துவது தான் தவறு.

"வளைந்து நெளியும் நாணலுமே, குறிப்பிட்ட அளவிற்கு மேல்  வளைத்தால் ஒடிந்துதான் போகும்"

நிதர்சனம்

கணவன் மனைவியாக இருந்தாலுமே, இருவருமே தனி தனி நபர்கள் , தனிப்பட்ட விருப்பங்கள், தனிப்பட்ட இயல்புகள் என்று இருக்கும். ஒருவருக்காக மற்றொருவர் முழுதாய் மாறுவது என்பது முடியாத காரியம்.  தனது சுயத்தை இழப்பது யாராலும் இயலாது. ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்துக்கு மாறாக  அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது துணையாக இருந்தாலுமே, இன்றைய காலகட்டத்தில் தவறுதான்.  'துணை தன் இயல்பு படி செயல்படுவதே, அவர்களுக்கு  நிம்மதியை  தரும்' என்பதை மற்றொருவர்  புரிந்து கொண்டு நடப்பதே, தாம்பத்தியதிற்கு நல்லது.   

எதிர் விளைவு 

முக்கியமான எதிர் விளைவு ஏற்படக்கூடிய  வாய்ப்பு ஒன்றும் உள்ளது....?! ஒருவர் விருப்பத்திற்கு மாறாக மற்றொருவர் வளைக்க முயலும்போது, தனக்கு சாதகமான விசயங்களை மட்டும் சொல்லிவிட்டு பாதகமான விசயங்களை மறைக்க பார்ப்பார்கள். நீங்களாகவே  அவர்களை திருட்டுத்தனத்தை செய்ய வைக்கிறீர்கள்.....??! இறுக்கி பிடித்தால் திமிறத்தான் பார்ப்பார்களே தவிர பிடிக்குள் இருக்க மாட்டார்கள். இப்படியும் கணவன்/மனைவி பாதை மாற வழி ஏற்பட்டுவிடுகிறது. 

கணவன் மனைவி இரண்டு பேருக்குமே இப்படி over possesssive   என்ற விதத்தில் அழுத்தும் அதீத அன்பே துணையை மூச்சு திணறடித்து விடும்.  இதில் இருந்து வெளிவர space தேவை.  இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் வெளியிடங்களில் பேச பழகி கொண்டிருக்கிற ஒரு நட்புடன் சாதாரணமாக ஏற்படும் ஒரு பழக்கம் ஈர்ப்பில் கொண்டுபோய் விட்டு விடுகிறது.....?? 

பாதைகள் மாறுகின்றன....விருப்பம் இன்றி பயணமும் தொடர்ந்து விடுகிறது....!!??

தாம்பத்தியத்தில் அடுத்து தொடருவது 'உடல் ரீதியான திருப்தி இன்மை.....?!' 

  


வாசலில் விடை கொடு.....!



Tweet

35 கருத்துகள்:

  1. பெரியவங்க நீங்க சொன்னா சரிதான்

    பதிலளிநீக்கு
  2. Kavithai ethiparthen...
    Anyway Nalla irukku..
    i am proud persons has dare to post like this in open forum..

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப interesting ஆக தொடர் போய் கொண்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. //அதிகபடியான பொசசிவ்னெஸ்//

    உண்மையிலேயே ஆபத்தான ஒரு விஷயந்தான்.

    பதிலளிநீக்கு
  5. அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள.

    பதிலளிநீக்கு
  6. தொடரட்டும் உங்கள் பயணம் நிறைய பேர் பயன் பெறுகிறார்கள் நானே ரெண்டு மூன்று பேர்களுக்கு உங்கள் பதிவை படிக்கும் படி கூறி இருக்கிறேன் .....எல்லோரும் பாராட்டுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  7. உண்மையிலேயே இந்த தொடர் எனக்கு ஒரு வரம் தன் இப்போ
    அருமையான விளக்கங்கள் தொடருங்கள்
    கௌசல்யா! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்...

    தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  9. அதிகப்படியான அன்பும் பிரச்சினைகளுக்குக் காரணமாகும் என்பதும் உண்மைதான் அக்கா ., அது கணவன் மனைவி என்ற உறவில் மட்டும் அல்ல , அனைத்து உறவுகளிலுமே இருக்கிறது .. ஆனா மற்ற உறவுகள் பிரிந்து போனாலும் அதிக பிரச்சினைகள் ஏற்ப்படுவதில்லை .. ஆனால் கணவன் மனைவி உறவு அப்படி இல்லையே ..! தொடர்ந்து எழுதுங்க ..!!

    பதிலளிநீக்கு
  10. கூடவே மனம் விட்டு பேசாததும் பிரச்சினைக்கு காரணம்தான்.
    அந்த காலத்தில் கூட்டுக் குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை வரும்போது பெரியவர்கள் இரண்டு பேரையும் கூப்பிட்டு பேசுவாங்க. இப்பல்லாம் அப்படியில்லை. மனசை விட்டு பேசுனா பிரச்சினை வளராம இருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. கௌசி...அனுபவப்பட்டதுபோல உணர்வோடான எழுத்து !

    பதிலளிநீக்கு
  12. நல்ல கருத்துக்கள்.என்னக்கவர்ந்த வரிகள்>>>>
    நம் குழந்தைகளிடம் கூட நீ இப்படி இருக்கணும், இப்படி இருக்க கூடாதுன்னு நம் விருப்பத்தை திணிக்க முடியாது. >>>

    சூப்பர் லைன்ஸ்

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் மனவியல் (சைக்காலஜி) படித்தவர் என நினைக்கிறேன்.அதனால்தான் மிக துல்லியமாக மனித மன் எண்ண ஓட்டங்களை கணிக்க முடிகிறது

    பதிலளிநீக்கு
  14. பொசசிவ்னெஸ் - அன்பின் காரணமாக உருவாவதில்லை என்பது என் கருத்து. அன்பிருக்கும் இடத்தில் நம்பிக்கையும் மன்னிக்கும் மனப்பான்மையும் பெருந்தன்மையும் இருக்கும். பொசசிவ்னெஸ் என்பது 'உடைமை'யுரிமை என்று நினைக்கிறேன். தன்னுடையதைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற உரிமை மீறலே பொசசிவ்னெஸ் என்று நினைக்கிறேன். (கொன்ட்ரோல்) இதை வெகு சுலபமாக அன்பின் போர்வைக்குள் மறைத்து விட முடியும். அன்பிருப்பதால் தானே அக்கறை? அக்கறையிருப்பதால் தானே ஆத்திரம்?... இப்படி கேஸ்கேட் செய்து கொண்டே போகலாம். அன்பின் இலக்கணம் புரிதல். புரிதல் இருக்கும் இடத்தில் பொசசிவ்னெஸ் வராது. (என் அனுபவத்தில் ஏற்பட்ட மகத்தான இழப்பில் அறிந்து கொண்ட பாடம்).

    பதிலளிநீக்கு
  15. அன்பிருப்பதால் தானே அக்கறை? அக்கறையிருப்பதால் தானே ஆத்திரம்?... இப்படி கேஸ்கேட் செய்து கொண்டே போகலாம். அது தவறான இலக்கில் முடியும். means must justify end - not the other way around. அன்பின் இலக்கணம் புரிதல். புரிதல் இருக்கும் இடத்தில் பொசசிவ்னெஸ் வராது. (முந்தைய கமென்டின் வெட்டு ஒட்டில் பிசகு.)

    பதிலளிநீக்கு
  16. அத்தனையும் உண்மை.
    அன்பாக ஆரம்பித்த உறவு அதீதமான
    ஆதிக்கத்தில் முடியும்போது,ஆக்கிரமிக்கப்பட்டவர் சொல்லிப் பார்க்கலாம்.

    மறுபாதி அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில்
    சொல்ல வேண்டும். உண்மையான அன்பு வெற்றி
    அடையும். இல்லாவிட்டால் இரு வாழ்வு அன்றே முறிகிறது:(

    பதிலளிநீக்கு
  17. நசரேயன் said...

    //பெரியவங்க நீங்க சொன்னா சரிதான்//

    இப்படி சொன்னா எப்படி சகோ....? உங்க கருத்தையும் சொல்ல வேண்டாமா?? :))

    பதிலளிநீக்கு
  18. சௌந்தர் said...

    //அதித அன்பும் ஆபத்தா....!//

    அதீத அன்பு ஆபத்துதான் சில நேரம், சிலருக்கு....!

    பதிலளிநீக்கு
  19. யாதவன் said...

    //அருமை//

    நன்றி சகோ.


    Thanglish Payan said...

    //Kavithai ethiparthen...
    Anyway Nalla irukku..
    i am proud persons has dare to post like this in open forum..//

    கவிதை படிக்க வாசல் தளம் போகணும் சகோ.

    இதில் தயக்கத்திற்கு, அச்சத்திற்கு என்ன இருக்கிறது...? இப்படி சமூக நிலை இருக்க போய்தான் தவறுகளும் அதிகரித்து கொண்டு செல்கிறது என்பது என் கருத்து

    உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க

    பதிலளிநீக்கு
  20. Chitra said...

    //ரொம்ப interesting ஆக தொடர் போய் கொண்டு இருக்கிறது.//

    நீங்க சொன்னால் சரிதான் சித்ரா....

    பதிலளிநீக்கு
  21. அன்பரசன் said...

    //உண்மையிலேயே ஆபத்தான ஒரு விஷயந்தான்.//

    ஆமாம் சகோ. அதை நாம கையாளுற விதத்தில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. நிலாமதி said...

    //அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள.//

    நன்றி அக்கா...இதை பற்றிய உங்களின் கருத்தையும் சொல்லலாமே....நானும் தெரிந்து கொள்வேன்..

    பதிலளிநீக்கு
  23. இம்சைஅரசன் பாபு.. said...

    //தொடரட்டும் உங்கள் பயணம் நிறைய பேர் பயன் பெறுகிறார்கள் நானே ரெண்டு மூன்று பேர்களுக்கு உங்கள் பதிவை படிக்கும் படி கூறி இருக்கிறேன்.//

    கண்டிப்பா தொடர்ந்து எழுதுவேன் சகோ....எனக்கு வரும் மெயில்களை பார்க்கும் போது பலருக்கும் உபயோகமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளமுடிகிறது. இப்போது உங்க மூலமாவும் தெரிந்து கொண்டேன்..மற்றவர்களுக்கு லிங்க் அனுப்பியதுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. S Maharajan said...

    //உண்மையிலேயே இந்த தொடர் எனக்கு ஒரு வரம் தன் இப்போ
    அருமையான விளக்கங்கள் தொடருங்கள்//

    நிச்சயமா தொடரும் நண்பரே....நன்றி

    பதிலளிநீக்கு
  25. சே.குமார் said...

    //அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்...

    தொடரட்டும்.//

    தொடரும் சகோ.

    பதிலளிநீக்கு
  26. ப.செல்வக்குமார் said...

    //அதிகப்படியான அன்பும் பிரச்சினைகளுக்குக் காரணமாகும் என்பதும் உண்மைதான் அக்கா ., அது கணவன் மனைவி என்ற உறவில் மட்டும் அல்ல , அனைத்து உறவுகளிலுமே இருக்கிறது .. ஆனா மற்ற உறவுகள் பிரிந்து போனாலும் அதிக பிரச்சினைகள் ஏற்ப்படுவதில்லை .. ஆனால் கணவன் மனைவி உறவு அப்படி இல்லையே ..!//

    மிக சரியா சொன்னீங்க செல்வா. அதில் தான் பாதிப்புகளும் மிக அதிகம்.....! உங்களின் புரிதலுக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  27. எஸ்.கே said...

    //கூடவே மனம் விட்டு பேசாததும் பிரச்சினைக்கு காரணம்தான்.
    அந்த காலத்தில் கூட்டுக் குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை வரும்போது பெரியவர்கள் இரண்டு பேரையும் கூப்பிட்டு பேசுவாங்க. இப்பல்லாம் அப்படியில்லை. மனசை விட்டு பேசுனா பிரச்சினை வளராம இருக்கும்.//

    சரிதான்...பெரியவர்களிடம் இருந்து விலகி இருப்பதால் தான் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. சின்ன விஷயம் கூட பெரிதாகி விடுகின்றணன்.....அவர்களின் வழி காட்டுதல் மிக அவசியம் என்பதை இந்த தலைமுறையினர் கண்டுகொள்வதில்லை.

    கருத்திற்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  28. ஹேமா said...

    //கௌசி...அனுபவப்பட்டதுபோல உணர்வோடான எழுத்து !//


    பிறர் சொல்வதை கேட்ட அனுபவம்பா....! :))

    பதிலளிநீக்கு
  29. சி.பி.செந்தில்குமார் said...

    உண்மைதானே சகோ...நம்ம பசங்களே இப்படி இருக்கும் போது பெரியவங்களை என்ன சொல்ல முடியும்...?? விருப்பங்களை யார் மீதும் வலுகட்டாயமாக திணிக்க முடியாது, ஒருவேளை மீறி கட்டாயபடுத்தினால் பலன் எதிர் விளைவாதான் இருக்கும்.

    மன ஓட்டங்களை அறிந்து கொள்வது ஒண்ணும் சிரமம் கிடையாது சகோ...ஒருத்தரின் பேச்சை நாம் முழுமையா உள்வாங்கினாலே அவரை பற்றிய புரிதலுக்கு வர முடியும் என்பது என் கருத்து.

    தொடர் வருகைக்கு மகிழ்கிறேன்.
    .

    பதிலளிநீக்கு
  30. அப்பாதுரை said...

    //பொசசிவ்னெஸ் - அன்பின் காரணமாக உருவாவதில்லை என்பது என் கருத்து//

    ஆரம்பத்தில் அன்பு இருப்பது உண்மைதான்...ஆனால் போக போகத்தான் இந்த அன்பு அளவை தாண்டி அத்துமீறளாய் போய் விடுகிறது

    //பொசசிவ்னெஸ் என்பது 'உடைமை'யுரிமை என்று நினைக்கிறேன். தன்னுடையதைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற உரிமை மீறலே பொசசிவ்னெஸ் என்று நினைக்கிறேன். ///

    இந்த உரிமை மீறலை தான் அதிக அன்பு என்ற போர்வையை போர்த்திட்டு நடந்துகிறாங்க...! துணையும் தொடக்கத்தில் இதுதான் உண்மையான அன்புபோல என்று மகிழ்ந்து போக போக துன்புறுத்தல் ஆகும் போதுதான் வெறுப்படைய ஆரம்பிக்கிறார்கள்


    எல்லாவற்றையும் விட புரிதல் என்பது மிக அவசியம்... பத்து பேருக்கு நடுவில் இருந்தாலும் துணையின் மனம் முழுதும் என் எண்ணம் தான் ஆக்கிரமிச்சு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கூடிய புரிதல்...!

    //என் அனுபவத்தில் ஏற்பட்ட மகத்தான இழப்பில் அறிந்து கொண்ட பாடம்//

    வருந்துகிறேன் சகோ.

    உங்களின் தொடரும் அருமையான கருத்துக்கும், புரிதலுக்கும், தெளிவான விளக்கத்திற்கும் மகிழ்கிறேன் .

    பதிலளிநீக்கு
  31. //அத்தனையும் உண்மை.
    அன்பாக ஆரம்பித்த உறவு அதீதமான
    ஆதிக்கத்தில் முடியும்போது,ஆக்கிரமிக்கப்பட்டவர் சொல்லிப் பார்க்கலாம்.//

    இந்த மாதிரி ஆட்களுக்கு சொல்லி புரிய வைப்பது மிக சிரமம்...தங்களது உரிமை மீறலை அவர்களா புரிந்தால் தான் உண்டு.....

    புரிய வைக்க முயன்றால் , உன் மேல எனக்கு அக்கறை, உரிமை இருக்க போய் தான் சொல்கிறேன் என்று செண்டிமெண்டா பேசி கவுத்தி விட்டுடுவாங்க.

    //மறுபாதி அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில்
    சொல்ல வேண்டும். //

    மறுபாதிக்கு இந்த பக்குவம் இருக்க வேண்டுமே....?!

    உங்களின் ஆதங்கம் புரிகிறது...! கருத்திற்கு நன்றி தோழி

    பதிலளிநீக்கு
  32. நாம் அனுபவித்த அந்தகாலத்து விளையாட்டுகளை நம் குழந்தைகள் இழந்துள்ளன. ஒரு இரவு லைட் போனால் கூட எல்லோரது பிள்ளைகளும் தெருவில் வந்து ஊனு கத்திகிட்டு ஒரு அலப்பறை பண்ணுவோம் பாருங்கள் ...தெருவே அதகள படும் ....உடனே ஒரு கள்ளன் போலிஸ் விளையாட்டு தான்..... ..நிலா சோறு .....எல்லாம் காணமல் போய் விட்டது .....இரவில் சோறு சாப்பிடுவதே நின்று போய் விட்டது ... நானும் முடிந்தவரை என் பிள்ளைகளை வெளியில் விளையாட அனுமதிக்கிறேன் ...பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் பொழுது தான் நல்லது கேட்டது அவர்களுக்கு தெரியும் ...சும்மா வீட்டிலேயே குழந்தைகளை அடைத்து வைக்காமல் அதன் போக்கில் விட்டு பிடியுங்கள் என குழந்தைகள் தினத்தில் வாழ்த்துகிறேன் ...தச்சை கண்ணன்

    பதிலளிநீக்கு
  33. //'துணை தன் இயல்பு படி செயல்படுவதே, அவர்களுக்கு நிம்மதியை தரும்' தொடங்கி பிரச்சனை தனக்கு சாதகமான விசயங்களை மட்டும் சொல்லிவிட்டு பாதகமான விசயங்களை மறைக்க பார்ப்பார்கள். நீங்களாகவே அவர்களை திருட்டுத்தனத்தை செய்ய வைக்கிறீர்கள்.....??! இறுக்கி பிடித்தால் திமிறத்தான் பார்ப்பார்களே தவிர பிடிக்குள் இருக்க மாட்டார்கள். இப்படியும் கணவன்/மனைவி பாதை மாற வழி ஏற்பட்டுவிடுகிறது//

    // இந்த வார்த்தைகள் தடிக்க தொடங்கி பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பிக்கும்...//
    கல்யாணம் ஆனவர்களும் , ஆகப்போகிறவர்களும் தெரிந்துக்கொள்ளவேண்டிய அவசிய பதிவை .....அழகிய வார்த்தை நடையில் கொடுத்தமைக்கு மனதார நன்றி... அடுத்த பதிவையும் கையோட படித்துவிடுகிறேன்....

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...