Thursday, August 26

11:18 AM
37



ஒரு சமுதாயம் நல்ல விதத்தில் இருப்பதற்கு இன்றைய குழந்தைகளின் வளர்ப்பு மிகவும் அவசியம், இவர்கள் தான் நாளைய சமுதாயம். அதனால் இந்த விசயத்தில் நாம்  அசட்டையாக இருக்காமல் இன்னும் அதிகமாக கவனம் எடுத்து கொள்வது காலத்தின் கட்டாயம்.    




இன்றைய அவசர உலகத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன்  செலவு செய்யும்  நேரம் மிகவும் குறைவு தான். குழந்தைகள் நம்முடன்  வீட்டில் இருக்கும் நேரத்தை விட ஸ்கூல், டியூஷன், playground , டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ்  இந்த மாதிரி இன்னும் பல காரணங்களால் வெளியே தான் பல நேரத்தை செலவு செய்கிறார்கள். வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தையும் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் அவர்களை ஆக்கிரமித்து கொள்கின்றன.


பெற்றோர்களும் நம்மை தொந்தரவு செய்யாமல்  விட்டால் சரி தான் என்று விட வேண்டியதாகி விடுகிறது. பெற்றோர்களையும் குறை சொல்ல முடியாது, பெரும்பாலான இளம் பெற்றோர்களில்  இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பார்கள், அலுவலக களைப்புடன் வீட்டில் உள்ள வேலைகளையும் செய்ய வேண்டி இருப்பதால் சோர்ந்து விடுவார்கள். தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளவே அவர்களுக்கு நேரம் கிடைப்பது இல்லை. இதில் குழந்தைகளுடன் இருக்க இயலாத நிலையே உள்ளது.

ஆனால் இதையே காரணமாக சொல்லி தங்களை தாங்களே சமாதானம்  செய்து கொள்வது சரி இல்லை.

சமுதாயதிற்கு நல்ல பிள்ளைகளை கொடுப்பது உங்கள் கடமை.  ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்ககூடிய 'தார்மீக பொறுப்பு' இளம் பெற்றோருக்கு இருக்கிறது. நம்முடைய அன்பான, கண்டிப்புடன் கூடிய அரவணைப்பில் வளராத பிள்ளைகளின் எதிர்காலம் நிச்சயமாக சுபிட்சமாக, வளமாக இருக்காது !!


'குழந்தை வளர்ப்பு பற்றிய திட்டமிடல்' இப்போது கண்டிப்பாக தேவை படுகிறது. குழந்தைகளை நோய்கள், விபத்துகள் இவற்றில் இருந்து பாதுகாத்து வளர்க்கணும்... நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுக்கணும், படிப்பு மற்றும் பள்ளி சம்பந்தமான விவகாரங்களை பார்த்துக்கொள்ளவேண்டும். இது மாதிரி இன்னும் பல உள்ளன..அவற்றை சொல்லி கொண்டே போகலாம். இந்த மாதிரியான விசயங்களை  பெற்றோர்கள் நேரடியாக கண்காணித்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக  உருவாகும்.      

சர்வதேச கணக்கெடுப்பு ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டது. அதை படிக்கும் போதுதான் இன்றைய நமது நிலை அதிர்ச்சி அளிக்கிறது...அந்த விவரங்கள் கீழே.....

*  பெற்றோர் இருவரும் வேலை பார்க்கும் சராசரி குடும்பங்களில் ஒரு வாரம் முழுமைக்கும் ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றாக இருந்து செலவழிக்கும் நேரம் வெறும் 45 நிமிடங்கள் மட்டும்தானாம்....??!!

*   சுமார் 5 முதல் 16  வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருவர் வாரத்துக்கு இரண்டு நாள்களாவது தம் பெற்றோரை பார்க்காமலேயே உறங்கச் செல்கிறார்களாம்...??!

*   வெறும் 20 சதவீத குடும்பத்தினர்தான் வாரத்துக்கு ஒரு நாளோ இரண்டு நாட்களோ குடும்பத்துடன் மொத்தமாக அமர்ந்து காலை உணவோ மதிய உணவோ அல்லது இரவு உணவோ உட்கொள்கிறார்கள்...??! 

*   கிட்டத்தட்ட இரண்டாயிரம் பெற்றோரிடம் கணக்கெடுப்பு  நடத்தியதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோர் ஒத்து கொண்ட  ஒரே  கருத்து , 'தங்கள் குழந்தைகளின் ஒரே பொழுது போக்கு, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் போன்ற நவீன சாதனங்கள்தான் ' என்பது தானாம்.....!!?

இது நிச்சயம் ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை. என்ன செய்ய போகிறோம் பெற்றோர்களே...!!? 

நாம் எல்லோருமே வாழ்கையில் நம் குழந்தைகளுக்கு மிக சிறந்த விசயங்கள் எல்லாவற்றையும் கிடைக்க செய்ய  வேண்டும் என்று தானே விரும்புவோம்..அப்படி நல்ல விசயங்களை கொடுத்து வளர்க்க செய்ய சில நல்ல வழி முறைகள் இருக்கின்றன. 

அவை என்ன வென்று தொடர்ந்து அடுத்த பதிவில் பார்ப்போம்...  


         ௦      
Tweet

37 comments:

  1. மிக மிக அவசியமான பதிவு.. இன்று பலரும் இதில் தவறு செய்கிறார்கள்.. இளம் பெற்றோருக்கு மிகத் தேவையான ஒன்று.. பகிர்வுக்கு :))

    ReplyDelete
  2. வேலை செய்து பணம் சேர்ப்பது மட்டும் முக்கியம் இல்லை அதை விட குழந்தைகளை சிறப்பாக வளர்க்க வேண்டும் நல்ல பயன் உள்ள பதிவு

    ReplyDelete
  3. எங்களை போன்றவருக்கு உபயோகமான தகவல் அக்கா, மேலும் எதிர் பார்த்த வண்ணம்.

    ReplyDelete
  4. இன்றைய குழந்தைகளின் பெற்றோர், பொறுப்பற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். பணத்தின் பின்னால் ஓடி அடுத்த தலைமுறையை பாழாக்குபவர்கள் அதிகம். இரண்டையும் திறமையாகச் சமாளிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் சதவிகிதம் குறைவு. அக்கறையுள்ள இடுகை.

    ஸ்ரீ....

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  6. மிக மிக அவசியமான பதிவு.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. ungaL pathivukaL ennangaL Miga nanRaaka uLLathu, thodarattum ungaL pani, vaRaVERkiREn VaazththukiREN

    ReplyDelete
  8. அருமையான... குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் அவசியமான பதிவு.
    வாழ்த்துகள் கௌசி.

    ReplyDelete
  9. மிக மிக அவசியமான பதிவு.

    ReplyDelete
  10. Thank you for sharing the article from "aval vikatan"

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு..

    ReplyDelete
  12. LK...

    //இளம் பெற்றோருக்கு மிகத் தேவையான ஒன்று.//

    :))

    ReplyDelete
  13. சௌந்தர்...

    //வேலை செய்து பணம் சேர்ப்பது மட்டும் முக்கியம் இல்லை அதை விட குழந்தைகளை சிறப்பாக வளர்க்க வேண்டும்//

    பதிவை நல்லா படிச்சி புரிஞ்சுக்கணும் ....நாளைக்கு உதவும்...சரியா சௌந்தர்..??

    ReplyDelete
  14. சசிகுமார்...

    //எங்களை போன்றவருக்கு உபயோகமான தகவல் அக்கா,//

    உங்களுக்கு தகவல் உதவியாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியே...நன்றி சசி.

    ReplyDelete
  15. ஸ்ரீ....


    //இன்றைய குழந்தைகளின் பெற்றோர், பொறுப்பற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். பணத்தின் பின்னால் ஓடி அடுத்த தலைமுறையை பாழாக்குபவர்கள் அதிகம். இரண்டையும் திறமையாகச் சமாளிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் சதவிகிதம் குறைவு.//

    மிக குறைவு என்பதுதான் சோகம். கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  16. asiya omar...

    நன்றி தோழி.

    ReplyDelete
  17. THE PEDIATRICIAN...


    நன்றிங்க.

    ReplyDelete
  18. anbudan amalg...

    உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

    ReplyDelete
  19. ஹேமா...

    //குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் அவசியமான பதிவு.//

    ஆமாம் தோழி. நன்றி.

    ReplyDelete
  20. வெறும்பய...

    நன்றி சகோ.

    :)

    ReplyDelete
  21. சே.குமார்...

    நன்றி.

    ReplyDelete
  22. Chitra...

    //Thank you for sharing the article from "aval vikatan"//

    அந்த புள்ளிவிவரங்களை நானா யோசிச்சு சொல்ல முடியாதே...?! அதுதான் அவள் விகடனின் உதவியை நாடினேன். நல்ல விஷயம் எங்க இருந்தாலும் தேடி கண்டு பிடிக்கணுமே தோழி.

    :))

    ReplyDelete
  23. பதிவுலகில் பாபு...

    நன்றி.

    ReplyDelete
  24. நல்ல பயனுள்ள பதிவு எல்லா பெற்ற்றோரும் படிக்க வேண்டிய பதிவு ..பகிர்வுக்கு நன்றி தோழி

    ReplyDelete
  25. உங்கள் பதிவில் வழக்கம் போல நல்ல விசயங்கள்...அவசியமான ஒன்றும் கூட...

    ReplyDelete
  26. கட்டுரையின் வரிக்கு வரி ஒத்துப் போகிறேன்....அதுவும் நகர்ப்புறங்களில் இருக்கும் குழந்தைகளின் வாழ்க்கை முறையை இந்த எலக்ட்ரானிக் மயமான ஒரு உலகத்திலிருந்து காப்பாற்றுவது மிகப்பெரிய வேலையாய் இருக்கிறது.

    தொலைக்காட்சி வேறு நமக்கு தெரியாத விசயங்களையும் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து விடுகின்றன.......எல்லா பெற்றோர்களும் நின்று நிதானித்துப் படித்துணர வேண்டிய கட்டுரையினை பகிர்ந்தமைக்கு நன்றிகள்....!

    ReplyDelete
  27. எனக்கு நிறைய புத்திமதி சொல்வது போன்ற பகிர்வு

    நன்றி

    ReplyDelete
  28. வணக்கம் சகோதரி
    நல்ல பதிவு நான் பெருங்கனவு கொண்டிருக்கிறேன் வருங்காலத்தில் என்
    குழ்ந்தைகளை வளர்ப்பதற்க்கு...
    கனவோடு வாழும் தனிமரம்
    http://marumlogam.blogspot.com/2010/08/blog-post_19.html

    ReplyDelete
  29. sandhya...

    //எல்லா பெற்றோரும் படிக்க வேண்டிய பதிவு//

    உண்மைதான் தோழி. நன்றி.

    ReplyDelete
  30. ஈரோடு கதிர்...

    //எனக்கு நிறைய புத்திமதி சொல்வது போன்ற பகிர்வு//

    புத்திமதி என்பதைவிட எல்லோருக்கும் நல்ல ஆலோசனையாக இருக்கும் என்று எண்ணுகிறேன் சகோ. குழந்தைகள் வளர்ப்பில் நாம் மிக கவனமாக இருக்ககூடிய கட்டத்தில் இருக்கிறோம்.

    வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  31. dineshkumar...

    //நான் பெருங்கனவு கொண்டிருக்கிறேன் வருங்காலத்தில் என் குழ்ந்தைகளை வளர்ப்பதற்க்கு...
    கனவோடு வாழும் தனிமரம்//

    இப்பவே குழந்தைகள் வளர்ப்பு பற்றிய கனவில் இருக்கும் சகோதரரை வாழ்த்துகிறேன். உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற கடவுளை வேண்டுகிறேன்.

    வருகைக்கு நன்றி தினேஷ்.

    ReplyDelete
  32. எல்லா பெற்றோரும் தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...