தாம்பத்தியம் பதிவு என்பது சாதாரணமாக குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் எந்த அளவிற்கு அந்த குடும்பத்தின் நிம்மதியை கெடுக்கிறது என்றும் அதனால் அந்த வீட்டில் இருக்கும் பிள்ளைகள் எந்த அளவுக்கு பாதிக்க படுகிறார்கள் என்பதையும் அலசும் ஒரு பகிர்வு தான். ஒரு சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் வேண்டும் என்றால் முதலில் ஒவ்வொரு குடும்ப அமைப்பும் சீராக இருக்கவேண்டும். பல வன்முறையாளர்கள் தானாக உருவாவது இல்லை, உருவாக்கபடுகிறார்கள். அவர்கள் பிறந்து வளர்ந்த குடும்பத்தின் அமைப்பு சரியில்லாமல் போய்விடுவதும் அவர்கள் தடம் மாற ஒரு காரணம்தான் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கபோவது இல்லை.
எது ஆரம்பம் ?
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பொதுவாக அடிப்படையில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன, சிலர் அதை பெரிது படுத்துகிறார்கள். சிலர் அது இயல்புதானே என்று கண்டுகொள்வதில்லை. முந்தைய பாகத்தில் நான் குறிப்பிட்ட ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்பது எல்லாம் குடும்பத்தில் இன்றும் நிலவி கொண்டுதான் இருக்கிறது....ஆனால் வேறு பெயரில்....!!? ஒரு மனைவி, 'எனக்கென்று இந்த வீட்டில் என்ன மரியாதை இருக்கிறது..? நான் உன்னைவிட எதில் குறைந்து போய்விட்டேன்' என்று கொடி பிடித்தாலே அது உரிமைகோரும் ஒரு நிலைதானே. இந்த உரிமை கோரலே நீதிமன்றம் வரை போய் முடிகிறது என்பதை என்னால் அழுத்தமாக சொல்லமுடியும்.
என்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களில், பெண் , 'அந்த ஆளை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன்' என்றும் அவளின் கணவன் 'ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிர் இருந்தால், ஆம்பளை எனக்கு எவ்வளவு இருக்கும்...? ' என்றும் ஆலோசனை கேட்க வந்த இடத்திலும் சண்டை போடுவதை பார்க்கும் போது இதை ஆணாதிக்கம், பெண்ணுரிமைக்கு இரண்டுக்கும் நடுவில் இருக்கும் பிரச்சனை என்று தான் எண்ண முடிகிறது.
வேண்டாமே குடும்பத்தில் ஈகோ
'நான் பெரியவன்' இல்லை 'நான் பெரியவள்' என்ற வாதம் சாதாரண குடும்பம் நடத்த தேவையா ? மாட்டுவண்டியில் பூட்ட பட்ட இரண்டு மாட்டில் ஒன்று ஒரு பக்கமாகவும், மற்றொன்று வேறு பக்கமாகவும் போனால் வண்டி ஓடுவது எவ்வாறு ? குடும்பத்திற்கும் இது சரியாக பொருந்தும். அலுவலகத்தில் சக ஊழியர் ஏதாவது குறை சொல்லி பேசினால் கூட பரவாயில்லை, 'சொன்னால் சொல்லிட்டு போறாங்க ' என்று பெருந்தன்மையாக மன்னித்து விடுகிறோம் , ஆனால் சொந்த வீட்டில் அந்த 'விட்டுக் கொடுத்தல்' என்பது ஏன் இல்லாமல் போய்விடுகிறது .
இந்த இடத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும். என்னிடம் சில பெண்கள் நான் விட்டுகொடுப்பதை பற்றி சொன்னபோது அவர்கள் என்னிடம் கேட்டதை அப்படியே இங்கே குறிப்பிடுகிறேன்.
* விட்டுக்கொடுத்தல் என்றால் என்ன ?
* எதை விட்டுக்கொடுக்கணும் ?
* எதுக்கு விட்டுக்கொடுக்கணும் ?
* யார் விட்டுக்கொடுக்கணும் ?
* எவ்வளவு விட்டுக்கொடுக்கணும் ?
* விட்டுக்கொடுத்தால் மறுபடி எப்போது, எப்படி திருப்பி வாங்குவது ?
இந்த கேள்விகள் வேடிக்கையாக தெரிந்தாலும் , 'உண்மை என்ன' என்பதை அறியாமல் தானே இருக்கிறோம் என்றே தோன்றுகிறது . எனக்கு தெரிந்த பதில்கள் கீழே,
* கணவன் கோபமாக பேசும்போது பதிலுக்கு மனைவியும் கோபப்படாமல் பொறுமையை கைக்கொண்டு, தனக்குள் எழும் கோபத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்.
அதே போல் மனைவியின் கோபத்தின் போது கணவனும் நடந்து கொள்ளவேண்டும்.
* கோபம், ஆத்திரம் , பழி வாங்கும் உணர்ச்சியை, தான் என்ற கர்வத்தை, சில நேரம் சுயமரியாதையை....?!! (அது பிரச்சனையின் தீவிரத்தை பொறுத்தது) எல்லாம் விட்டு கொடுத்தும் கதை நடக்கலேன்னா, வேற வழியே இல்லை... கடைசியாக விழுந்துவிட வேண்டியதுதான் கையில் அல்லது காலில் ( உங்க விருப்பத்தை பொறுத்தது ) ஆண், பெண் இருவருக்கும் இது பொருந்தும்....??! ) நமக்கு அரசாங்கத்தில் ஏதாவது காரியம் ஆகணும் என்றால் கை, காலையாவது பிடித்து வேலையை முடிக்கிறோம் அல்லவா..., அப்படி நினைத்து கொள்ள வேண்டியதுதான்.( வேற வழி...?! )
* அப்போதுதான் தாம்பத்தியம் என்ற வண்டி நன்றாக ஓடும். இல்லையென்றால் தடம் மாறி பெரிய விபத்தைத்தான் சந்திக்க வேண்டியது இருக்கும்.
* யார் விட்டுக்கொடுத்தாலும் நல்லதே. முதலில் விட்டுக்கொடுத்தவர்களே வென்றவர்களாக மதிக்கப்படுகிறார்கள் . குடும்பத்தைப் பொறுத்தவரை தோல்வியும் இன்பமே. கிட்டத்தட்ட வாழ்நாளின் இறுதி மூச்சை விடும்வரை கூட இருந்தாகக் கூடிய துணைக்காக பொறுத்து போவதால் பெரிதாக என்ன இழப்பு நேர்ந்து விட போகிறது? அதனால் இன்பமும், நிம்மதியும் பல மடங்கு அதிகரிக்குமே தவிர இழப்பு ஒன்றும் இல்லை.
* விட்டுக்கொடுகிறது என்று முடிவு செய்தபின், அதில் அளவு என்ன வேண்டி இருக்கிறது...?? அரைகுறையாக இல்லாமல் முழு மனதுடன் முழுதாக விட்டு கொடுப்பதே சிறந்தது.
* நாம் ஒன்றும் நல்ல விசயங்களை விட்டு கொடுக்கவில்லை.... அதை திருப்ப பெற...?! தீய தன்மைகளான கோபம், ஆத்திரம், வெறுப்பு, எரிச்சல், ஈகோ, பழி உணர்ச்சி, வறட்டு பிடிவாதம் போன்றவைகளைத்தான் விட்டு கொடுக்கிறோம்.... இவற்றை விடுவதால் உங்கள் மனது தெளிவாகிறது, மன அழுத்தம், இறுக்கம் குறைகிறது, ரத்த அழுத்தம் குறைகிறது, முகம் பிரகாசம் அடைகிறது . இதை விட வேறு என்ன வேண்டும்...? ஆரோக்கியம் தான் பெருகும், குடும்பமும் சந்தோசம் பெறுகிறது, முக்கியமாக குழந்தைகளுக்கு நிம்மதி கிடைக்கிறது தங்கள் பெற்றோர்களை எண்ணி.....!!
மாற்றி சொல்வோம்
ஒரு பெண் தன் ஆயுள் முழுக்க தந்தையை, கணவனை , மகனை என்று ஏதாவது ஒரு ஆணை சார்ந்து தான் இருக்கணும் என்று சொல்வாங்க... ஆனால் இனி அப்படி சொல்லாமல் அப்படியே மாற்றி சொல்வோமே....!!? எல்லா ஆண்களுமே தங்களது வாழ்வை கழிக்க தாயாகவோ, மனைவியாகவோ, மகளாகவோ ஏதோ ஒரு வடிவில் பெண்ணின் துணை தேவை படுகிறது என்று....!! ஆண்கள் தங்கள் வாழ்வை நிறைவாய் முடிக்க பெண் அவசியம்.
கணவன் இறந்ததும் ஒரு பெண் சூழ்நிலையை சமாளித்து வாழ்க்கையை நகர்த்திவிடுவாள், ஆனால் திடிரென தன் மனைவியை இழந்த ஆண்களால் அப்படி சமாளிக்க இயலாது, தடுமாறி விடுவார்கள்.
**********************************************************
பின் குறிப்பு
( என் மனதை பாதித்த சில விசயங்களையும், தினம் சந்தித்து கொண்டு இருக்கும் சிலரின் குடும்ப பிரச்சனைகளையும், பிறரின் அனுபவங்களையும் இங்கே எழுதுகிறேன். தனிப்பட்ட என் கற்பனை இல்லை, அனைவருக்கும் தெளிவாக புரியும் அளவிற்கே என் எழுத்து நடை இருப்பதாக எண்ணுகிறேன். இதை ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு என்று இல்லாமல் உங்களுக்கு தெரிந்த அனுபவங்கள் ஏதும் இருந்தால் , இங்கே பகிர்ந்து கொண்டால் பலர் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் .)
தாம்பத்தியம் சீர்குலைய பல காரணிகள் இருக்கிறது என்று இதுவரை பார்த்தோம், மற்றொரு முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளது, அதுதான் கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான அந்தரங்கம். அடுத்து தொடர்ந்து வரும் பதிவுகளில் அதன் உண்மையான அர்த்தம் என்ன ? இருவரும் அந்த விசயத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ? அந்தரங்கம் சரியில்லாமல் போவதால், அது மொத்த குடும்ப உறவையும் எப்படி எல்லாம் பாதிக்கிறது என்றும் விரிவாக, தெளிவாக அதே நேரம் நாகரீகமாக பகிருகிறேன். நட்புடன் தொடருங்கள்.......நன்றி.
************************************
விட்டுக் கொடுத்தாலே தாம்பத்ய வாழ்க்கையின் அடிப்படை . அதை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்
பதிலளிநீக்கு//முதலில் விட்டுக்கொடுத்தவர்களே வென்றவர்களாக மதிக்கப்படுகிறார்கள்/
முற்றிலும் உண்மை
//அந்தரங்கம் சரியில்லாமல் போவதால், அது மொத்த குடும்ப உறவையும் எப்படி எல்லாம் பாதிக்கிறது என்றும் விரிவாக, தெளிவாக அதே நேரம் நாகரீகமாக பகிருகிறேன்./
காத்திருக்கிறோம்
தோழி விட்டு கொடுத்தல் பத்தி அருமையா சொல்லி இருக்கீங்க ..உங்க கருத்து எனக்கு பிடிச்சிருக்கு நானும் இதினே பின்பற்றுகிறேன் ..
பதிலளிநீக்கு"அந்தரங்கம் சரியில்லாமல் போவதால், அது மொத்த குடும்ப உறவையும் எப்படி எல்லாம் பாதிக்கிறது என்றும் விரிவாக, தெளிவாக அதே நேரம் நாகரீகமாக பகிருகிறேன்."
சரி நானும் வெய்டிங் ..
நன்றி
நல்ல பகிர்வு...
பதிலளிநீக்குசிந்தித்தற்கும் type செய்வதற்கும், time spare செய்ததற்கும்
நன்றி...
விட்டு கொடுப்பதற்கே ஓரு சண்டை நடக்கும் ஏன் நான் விட்டு தரவேண்டும்...அவர் விட்டு தர கூடதா... அவள் விட்டு தர கூடதா...
பதிலளிநீக்குஓரு ஆண் விட்டு கொடுத்தால் அவனை பொண்டாட்டிக்கு பயந்தவன் என்று அவன் குடும்பத்தார் கூறுவார்கள்..
விட்டு கொடுத்தால் அப்போதே அந்த சண்டை முடிவுக்கு வரும் பதிலுக்கு சண்டை போட்டால் கடைசியில் அது எங்கு போய் முடியுமோ... விட்டு கொடுப்பதை பற்றி நன்றாக சொல்லியிருப்பது வாழ்த்துக்கள்..அக்கா...
விட்டு கொடுக்கும் தன்மை இருந்தால் அனைத்து குடும்பங்களும் அமைதியாக இருக்கும் நல்ல பகிர்வு நண்பரே உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமுதலில் விட்டுக்கொடுத்தவர்களே வென்றவர்களாக மதிக்கப்படுகிறார்கள்
பதிலளிநீக்குஉண்மை
நமக்கு அரசாங்கத்தில் ஏதாவது காரியம் ஆகணும் என்றால் கை, காலையாவது பிடித்து வேலையை முடிக்கிறோம் அல்லவா..., //
பதிலளிநீக்குஎங்கோ நம் தன்மானத்தை விட்டுகொடுத்து நம் காரியத்தை சாதிக்கும்போது ,நம்மில் பாதி,..... வாழ்வின் கடைசிவரை வரும் துணையிடம் விட்டுகொடுப்பது தோல்வி இல்லை, வெற்றிதான்....! நல்லபகிர்வு வாழ்த்துக்கள்....இன்னும்..... அதிகம் எதிர்பார்க்கிறோம் .....
மிகவும் சிறப்பானப் பதிவு அனுபவத்தின் வார்த்தைகள் அழகாய் உதிர்ந்திருகிறது . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் . மீண்டும் வருவேன்
பதிலளிநீக்குசொல்ல ஒன்றுமே இல்லை தோழி.அத்தனையும் உண்மை.தொடருங்கள்.
பதிலளிநீக்குகௌஸ், நல்ல பதிவு. தொடருங்கள்.
பதிலளிநீக்குயார் விட்டுக் கொடுத்தல் என்ன?? இறுதியில் வெற்றி இருவருக்குமே
பதிலளிநீக்குவிட்டு கொடுக்கும் தன்மை இருந்தால் அனைத்து குடும்பங்களும் அமைதியாக இருக்கும்...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு... தொடருங்கள்.
LK...
பதிலளிநீக்கு:)))
sandhya...
பதிலளிநீக்கு//உங்க கருத்து எனக்கு பிடிச்சிருக்கு நானும் இதினே பின்பற்றுகிறேன் ..//
வெளிபடையா நீங்கள் சொல்வது எனக்கு பிடிக்கிறது தோழி... நன்றி
கோவை குமரன்....
பதிலளிநீக்குவித்தியாசமா நன்றி சொல்றீங்க.
:))
சௌந்தர்...
பதிலளிநீக்கு//ஓரு ஆண் விட்டு கொடுத்தால் அவனை பொண்டாட்டிக்கு பயந்தவன் என்று அவன் குடும்பத்தார் கூறுவார்கள்..//
கணவன் , மனைவி உறவை பொறுத்தவரை மற்றவர்களின் அனாவசியமான தலையீட்டை கண்டுகொள்ளாமலும் பெரிசு படுத்தாமலும் இருப்பதுதான் நல்லது. நன்றி சௌந்தர்.
சசி குமார்...
பதிலளிநீக்குஉண்மைதான் சசி. நன்றி
S. Maharajan...
பதிலளிநீக்கு100% unmai. thanks friend
jothi...
பதிலளிநீக்கு//எங்கோ நம் தன்மானத்தை விட்டுகொடுத்து நம் காரியத்தை சாதிக்கும்போது ,நம்மில் பாதி,..... வாழ்வின் கடைசிவரை வரும் துணையிடம் விட்டுகொடுப்பது தோல்வி இல்லை, வெற்றிதான்....!//
நல்ல கருத்து நண்பரே. நன்றி.
பனித்துளி சங்கர்...
பதிலளிநீக்குஅனுபவம்தான் நண்பரே...தொடர்ந்து வாருங்கள்...எதிர் பார்கிறேன்...
நன்றி
ஹேமா...
பதிலளிநீக்குநன்றி தோழி
vanathy...
பதிலளிநீக்குthanksppa...... :))
திவ்யாம்மா...
பதிலளிநீக்குஉண்மை. நன்றி தோழி.
சே.குமார்...
பதிலளிநீக்குநன்றி
விட்டு கொடுத்தல் என்பது மிக சிறந்த விஷயம்....
பதிலளிநீக்குஅதை சிறப்பாக உணர்ந்தவர்கள் தன் ஈகோவை துடைத்தெறிந்து விட்டு நடந்து கொள்வர்...
குடும்பத்தின் அனைத்து குழப்பங்களுக்கும் ஆணிவேரான ஈகோவை விட்டுக்கொடுத்தால், அந்த குடும்பம் சண்டை, சச்சரவிலிருந்து விடுபட்டு அங்கு ஆனந்த தாண்டவம் எப்போதும் இருக்கும்....
sooparu......!!!
பதிலளிநீக்கு