பெரும்பாலான குடும்பத்தை ஆட்டி படைப்பது இரண்டே வார்த்தைகள்தான் , ஒன்று ஆணாதிக்கம் மற்றொன்று பெண்ணுரிமை. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் இடத்திற்கு தகுந்தபடி பிரச்சனைகள், இதனை அடிப்படையாக வைத்து வருவதுதான். 'ஈகோ' என்று படித்தவர்கள் மேம்பட்ட ஒரு வார்த்தையை சொல்வார்கள் .
ஆண், பெண் இருவரும் ஒன்றை புரிந்து கொள்வது இல்லை, அது என்னவென்றால் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்பதன் சரியான அர்த்தத்தை , அர்த்தம் என்று சொல்வதைவிட அந்த வார்த்தைகளை எங்கே பயன்படுத்த வேண்டும்....? எங்கே பயன்படுத்த கூடாது.....?! என்பதைத்தான். ( எனக்கு தெரிந்த சில விளக்கங்களை இங்கே சொல்ல எண்ணுகிறேன் இது முழுக்க முழுக்க என் கருத்துகள். தவிர யாரையும் மனம் வருந்த செய்வது என் நோக்கம் இல்லை, எனக்குமே இதில் சில முரண்பாடுகள், வேறுபாடுகள் இருக்கின்றன. என்னை நான் தெளிவு படுத்தி கொள்ளவுமே இங்கே எழுதுகிறேன், தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை சொன்னால் பலருக்கும் தங்களை , தங்கள் எண்ணங்களை சரி செய்து கொள்ள உதவியாக இருக்கும். கருத்துகளை எதிர் பார்க்கிறேன் )
ஆணாதிக்கம்
அது என்ன ஆணாதிக்கம் ? ஒரு ஆண் மற்றொரு ஆணை அதிகாரம் செய்வதையோ...? அல்லது அடக்கி ஆள்வதையோ....? ஆணாதிக்கமாக சொல்லப்படவில்லை. பெண்களை அடக்கி அவர்கள் மேல் ஆண் என்ற திமிர்வாதத்தை காட்டுவதையே ஆணாதிக்கம் என்பதாக கருதுகிறேன். இன்றைய கால கட்டத்தில் எந்த வீட்டில் ஆணாதிக்கம் தலைதூக்கி இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனசாட்சியுடன் சொன்னால் உபயோகமாக இருக்கும். இங்கே முக்கியமாக ஒன்றை குறிப்பிட்டே ஆக வேண்டும், நான் பகிர்ந்து கொண்டு இருப்பது தாம்பத்தியம் பற்றியது. வீட்டிற்கு வெளியே நிலவுகின்ற ஆணாதிக்கம் பற்றி எனக்கும் ஆதங்கம் உண்டு, ஆனால் குடும்பம் என்று பார்க்கும் போது இரண்டையும் ஒன்றாக போட்டு குழம்பிக்கொள்ள கூடாது.
ஆணாதிக்கம், பெண்ணுரிமை பற்றி என்னாலும் பக்கம் பக்கமாக பேச இயலும், மேடை போட்டு மைக் கொடுத்தால் ...!! ஆனால் பெண்ணுரிமை என்று கொடி பிடிக்க குடும்பம், அரசியலும் கிடையாது, வருந்தி பெற்று கொள்ள நாம் உரிமையை, யாருக்கும் விட்டு கொடுக்கவும் இல்லை.
ஏன் ஏற்பட்டது? எதனால்?
ஆண்கள் பெண்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் என்பது நேற்று இன்று ஏற்பட்டது இல்லை. ஆடையின்றி அலைந்த ஆதிகாலத்தில் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட தற்செயலாக தீர்மானிக்கப்பட்ட ஒன்றே. இதை கொஞ்சம் இன்று நன்றாக யோசித்து பார்த்தோம் என்றால் பெண்கள் சரிதான், அப்படியும் இருக்கலாம் என்றாவது சமாதானம் செய்து கொள்வார்கள். ( நான் என்னை சமாதானம் செய்து கொண்டதை போல )
காடுகளில் விலங்குகளுடன் விலங்காக வாழ்ந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் ஆண், பெண் இருவருமே வேட்டையாடி தான் தங்களது பசியை ஆற்றி கொண்டு இருந்தார்கள். அப்படி இருந்த ஒரு சில கட்டத்தில் மாதவிடாய் நேரத்தில் ஏற்படக்கூடிய ரத்தவாடையில் கவரப்பட்ட மிருகங்களால் பெண்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதனால் ஆண்கள், பெண்களை பாதுகாப்பாக ஒரு இடத்தில் இருக்க வைத்து விட்டு , அவர்கள் வேட்டையாட சென்றார்கள். வேட்டையாடி கொண்டுவந்து பெண்களிடம் கொடுத்து, தங்கள் பெண்களையும் , குழந்தைகளையும் கவனித்து கொண்டார்கள். இப்படித்தான் ஆண்கள் வெளியில் வேலைக்கு செல்வதும், பெண்கள் வீட்டை கவனித்து கொள்வதுமாக இருந்திருக்க வேண்டும்.
நாளடைவில் மனதளவிலும் ஆண்களுக்கு நாம் தான் பெண்களைவிட உயர்ந்தவர்கள் , நமது தயவு இல்லாமல் அவர்களால் வாழமுடியாது....நாமே சிறந்தவர்கள்....நமது பேச்சைத்தான் பெண்கள் கேட்கவேண்டும்....எதிர் கேள்வி கேட்ககூடாது...அடங்கி இருக்கவேண்டும் என்பதாக மனதில் பதிந்து இருக்க வேண்டும். அதுவே இன்று வரை பெரிய அளவில் பெண்களை அடக்கி ஆள்வதில் தொடங்கி கொடுமையில் வந்து முடிந்து இருக்கவேண்டும். வேறு என்ன சொல்வது எல்லாம் இயற்கையின் விளைவுகள்.
நாளடைவில் மனதளவிலும் ஆண்களுக்கு நாம் தான் பெண்களைவிட உயர்ந்தவர்கள் , நமது தயவு இல்லாமல் அவர்களால் வாழமுடியாது....நாமே சிறந்தவர்கள்....நமது பேச்சைத்தான் பெண்கள் கேட்கவேண்டும்....எதிர் கேள்வி கேட்ககூடாது...அடங்கி இருக்கவேண்டும் என்பதாக மனதில் பதிந்து இருக்க வேண்டும். அதுவே இன்று வரை பெரிய அளவில் பெண்களை அடக்கி ஆள்வதில் தொடங்கி கொடுமையில் வந்து முடிந்து இருக்கவேண்டும். வேறு என்ன சொல்வது எல்லாம் இயற்கையின் விளைவுகள்.
பெண்களுக்கு எது உரிமை என்று விளக்குவதே பெரும்பாடாக இருக்கிறது. தங்களுக்கு என்ன தேவை என்றே தெரியாமல் இருப்பவர்களை என்ன சொல்வது....? கணவனை அடக்குவது மட்டுமே பெண்ணுரிமை என்றே பெரும் பாலான குடும்ப பெண்கள் எண்ணுகிறார்கள். 'ஆணுக்கு சரிசமம்' என்ற வார்த்தை இப்போது காலாவதி ஆகிவிட்டது, அதற்கு பதில் 'ஆணை விட தான் எதில் குறைந்து போய் விட்டோம்' என்ற வாதமே பிரதானமாக இருக்கிறது. என் விருப்பபடி குடும்பம் நடக்கவேண்டும் என்று ஆண் அதிகாரம் செய்வது போய் இப்போது தன் விருப்பபடி தன் கணவன் நடக்க வேண்டும் என்ற குரலே பல வீடுகளில் எதிரொலிக்க தொடங்கி விட்டது. இது நல்ல முன்னேற்றம் அல்ல என்பது மட்டும் புரிகிறது. ஆணின் அதிகாரம் ஒரு கட்டத்தில் அமைதி பெரும் ஆனால் பெண்கள் செய்யும் அதிகாரம்......??!!
பெண்ணுரிமை கேட்டு வீட்டிற்கு வெளியில் போராடுங்கள், வீட்டுக்குள் வேண்டாமே.... கணவனின் அன்பை கேட்டு மட்டுமே போராடுங்கள் அதுவும் அன்பாக.... வீட்டில் எதற்கு இடஒதுக்கீடு..... ? அதிகாரம் செய்யும் கணவனையும் உங்கள் அன்பால் கட்டி அரசாளுங்கள்..... ஒரு கட்டத்தில் அந்த ஆணின் அதிகாரம் புறமுதுகை காட்டி ஓடிவிடும்
கணவனை பார்த்து 'ஆணாதிக்க மனபான்மையுடன் என்னை நடத்துற 'என்று மனைவி குறைபட்டு கொள்வதும் , மனைவியை பார்த்து ' நான் ஆண் அப்படித்தான் இருப்பேன் , நீ அடங்கி இரு ' என்று கணவன் சொல்வதும் அநாகரீகம்.
ஆண்கள் தங்களது இத்தகைய மனப்பான்மையை வெளிக்காட்டாமல் இயல்பாக மனைவியை கையாளும் போதுதான் அங்கே ஆண்மை கம்பீரம் பெறுகிறது. மனைவி தன்னை விட எதிலும் தாழ்ந்தவள் இல்லை , அவளது எண்ணத்திற்கும், கருத்திற்கும் கண்டிப்பாக மதிப்பு கொடுக்கவேண்டும் என்று கருத வேண்டும் .
குடும்பத்தில் ஏற்படக்கூடிய எந்த விசயத்திற்கும் ஆண், தான் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று இல்லாமல் மனைவியின் ஆலோசனையையும் கேட்கவேண்டும். இருவரும் கூடி விவாதிக்கும் போதுதான் அந்த விசயத்தின் நல்லது, கெட்டது என்ற இரண்டு பக்கமும் வெளிவரும், அதனால் அதை கையாள்வதும் சுலபம். தன்னிச்சை முடிவு தவறாக கூடிய வாய்ப்புகளும் உள்ளது. நாளை இருவரும் சேர்ந்த எடுத்த முடிவு தவறாக இருந்தாலுமே ஒருவர் மீது ஒருவர் பழி போடாமல். 'அடுத்து என்ன செய்யலாம்' என்று அடுத்த அடி எடுத்து வைக்க சுலபமாக இருக்கும்.
தாம்பத்தியத்தில் " பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும் அங்கே இறுதியில் வெல்வது என்னவோ இருவருமேதான் "
தாம்பத்தியத்தில் " பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும் அங்கே இறுதியில் வெல்வது என்னவோ இருவருமேதான் "
முதலில் உங்களுக்கு எனது பாராட்டுக்கள். பொதுவாக ஆணாதிக்கத்தை பற்றி எழுதும் எவரும் பெண்கள் செய்யும் தவறை சுட்டி காட்டுவது இல்லை. என் என்றல் அவ்வாறு தவறை சுட்டிக்காட்டினால், அவரையும் ஆணாதிக்கவாதி என்று முத்திரை குத்துகின்றனர் . நீங்கள் எந்த வித தயக்கமும் இல்லாமல் எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு//வீட்டில் எதற்கு இடஒதுக்கீடு..... ? அதிகாரம் செய்யும் கணவனையும் உங்கள் அன்பால் கட்டி அரசாளுங்கள்..... ஒரு கட்டத்தில் அந்த ஆணின் அதிகாரம் புறமுதுகை காட்டி ஓடிவிடும்//
பதிலளிநீக்குமிக சரியான உண்மை. அன்பே அனைவரயும் வெல்லும் ஆயுதம்
ரிலாக்ஸ் ப்ளீஸ் பார்த்து சிரித்தேன்.
பதிலளிநீக்குஉங்கள் எழுத்துக்கள் சிந்திக்க வைத்தது..
பதிலளிநீக்குபடம் சிரிக்க வைத்தது..
//வீட்டில் எதற்கு இடஒதுக்கீடு..... ? அதிகாரம் செய்யும் கணவனையும் உங்கள் அன்பால் கட்டி அரசாளுங்கள்..... ஒரு கட்டத்தில் அந்த ஆணின் அதிகாரம் புறமுதுகை காட்டி ஓடிவிடும்//
இது என்ன?அன்பாதிக்கமா??:)) ஆணி அடித்தது போல் அன்பை காண முடிகிறது..வாழ்த்துகள்...
//இதன் தொடர்ச்சி நாளை மறுநாள் வெளி வரும்.......//
:)
பயனுள்ள தகவல்கள் நன்றி.....
ரிலாக்ஸ் ப்ளீஸ்...very nice
பதிலளிநீக்கு//தாம்பத்தியத்தில் " பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும் அங்கே இறுதியில் வெல்வது என்னவோ இருவருமேதான் "//
பதிலளிநீக்குnice one too...
சரியா சொல்லியிருக்கீங்க!!
பதிலளிநீக்குரிலாக்ஸ் ப்ளீஸ் LOL!!!!!!
உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு...
பதிலளிநீக்குநல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபெண்களுக்கு எது உரிமை என்று விளக்குவதே பெரும்பாடாக இருக்கிறது. தங்களுக்கு என்ன தேவை என்றே தெரியாமல் இருப்பவர்களை என்ன சொல்வது....? கணவனை அடக்குவது மட்டுமே பெண்ணுரிமை என்றே பெரும் பாலான குடும்ப பெண்கள் எண்ணுகிறார்கள்.
பதிலளிநீக்கு...... அப்படி போடுங்க, அருவாளை!
இதை வாசித்தால் குடும்ப பிரச்சனையை தவிர்கலாம் போல இருக்கே.
பதிலளிநீக்குரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க கௌசல்யா. கடைசியா இருக்கற கார்டூன் நல்ல இருந்துச்சி. இன்னிக்கு பாதி பேரு அப்படித்தானே இருக்காங்க
பதிலளிநீக்குஆண் இல்லாமல் பெண்ணும், பெண் இல்லாமல் ஆணும் தனி தனியாக வாழ்வது குடும்பம் ஆகாது . இருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன் நிறுத்தாமல் யதார்த்த வாழ்க்கைக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்வது சிறந்த குடும்பம்.அங்கு ஆண் பெண் இருவரும் சமம். போட்டி இருந்தால் குடும்பம் ௦...?
பதிலளிநீக்கு'ஆணுக்கு சரிசமம்' என்ற வார்த்தை இப்போது காலாவதி ஆகிவிட்டது, அதற்கு பதில் 'ஆணை விட தான் எதில் குறைந்து போய் விட்டோம்//
பதிலளிநீக்குஆமா இப்போது இதுபோல தான் நடக்கிறது...யாராவது ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும்...
அடுத்த கமெண்ட்.. நாளை மறுநாள் வெளி வரும்.......//
LK...
பதிலளிநீக்கு//நீங்கள் எந்த வித தயக்கமும் இல்லாமல் எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்//
சரி என்று பட்டதை சொல்ல தயக்கம் தேவையில்லையே
வாய்ப்பு கிடைத்தால் மற்றவர்களும் சொல்வார்கள் :))
கோவை குமரன்...
பதிலளிநீக்கு//இது என்ன?அன்பாதிக்கமா??//
இது கூட நல்லா இருக்கே...புதிய சிந்தனை... நன்றி நண்பரே.
கலாநேசன்...
பதிலளிநீக்குநன்றி.
தெய்வசுகந்தி...
பதிலளிநீக்குநன்றி தோழி.
கே.ஆர்.பி.செந்தில்...
பதிலளிநீக்குநன்றி தோழரே.
சசிகுமார்...
பதிலளிநீக்குநன்றி.
Chitra...
பதிலளிநீக்குசரியா போட்டு இருக்கிறேனா....? :))
நன்றி தோழி.
nis (Ravana)...
பதிலளிநீக்குஉங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.
திவ்யாம்மா...
பதிலளிநீக்குநன்றி தோழி.
jothi...
பதிலளிநீக்கு//இருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன் நிறுத்தாமல் யதார்த்த வாழ்க்கைக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்வது சிறந்த குடும்பம்.//
உண்மைதான் நண்பரே. வருகைக்கு நன்றி.
சௌந்தர்...
பதிலளிநீக்கு//ஆமா இப்போது இதுபோல தான் நடக்கிறது...யாராவது ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும்...
அடுத்த கமெண்ட்.. நாளை மறுநாள் வெளி வரும்.......//
இந்த விட்டுகொடுப்பதை பற்றியதுதான் அடுத்த பதிவே...! நன்றி சௌந்தர்.
சமீபத்தில் ஒரு தோழியின் கவிதை படித்தேன்...
பதிலளிநீக்கு" பெண் ஆணை விட....
மேலானவளும் இல்லை
கீழானவளும் இல்லை
அவள் வேறானவள்..."
இது தான் சாரமே...! வெவ்வேறு இயல்புகளை பார்த்து ஆணாதிக்கம் என்பதும் பெண் விடுதலை என்பதும்....ஒரு குறுகிய பார்வைதன். ஆணின் குணம் இது...பெண்ணின் குணம் இது...அவ்வளவே....!
நமது சமூகம் தாய்வழிச் சமூகம்... பெண்தான் வலுவானவளாய் இருந்தால்.., விட்டுக்கொடுப்பவலாய் இருந்தாள்...போராடு குணம் கொண்டவளாய் இருந்தால்...ஆண்....தன்னுடைய இயல்பான குணத்தாலும்...தனது சந்ததியை அறியும் பொறுட்டு பெண்ணுக்கு சில கட்டளைகள் இட்டு...எல்லைகள் இட்டு தனித்து ஓரிடத்தில் வைத்தான்.....!
பெண் பொறுமையாய் விளங்கிக்கொண்டு தனது வலிமையை மறைத்துக் கொண்டு தன்னுடைய இயல்பான சரணாகதி மற்றும்....அன்பு வழி என்பதைக் கைக் கொண்டாள்...
உலக விசயங்கள் ஆயிரம் வேண்டும் ஒரு ஆண் திருப்தி பட.....ஆனால் ஒரு பெண் தன் அன்புக்குரியவரை பார்த்துக் கொண்டே இருந்து அந்த திருப்தியைப் பெற்று விடுவாள் (உதாரணம் தான் சொல்கிறேன்)
நீங்கள் சொல்வது போல நம்ம ஊரில் இப்போ ரொம்ப புரிதல் தேவைப்படுகிறது......ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே போதும்.......!
பகிர்வுக்கு நன்றி தோழி!
வர்ட்டா...!
dheva...
பதிலளிநீக்கு//எனக்குமே இதில் சில முரண்பாடுகள், வேறுபாடுகள் இருக்கின்றன. என்னை நான் தெளிவு படுத்தி கொள்ளவுமே இங்கே எழுதுகிறேன், தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை சொன்னால் பலருக்கும் தங்களை , தங்கள் எண்ணங்களை சரி செய்து கொள்ள உதவியாக இருக்கும். கருத்துகளை எதிர் பார்க்கிறேன் )//
உங்களின் மேலான கருத்திற்கு நன்றி.
என்னிடம் ஆலோசனைக்காக வரும் பலரின் பிரச்சனைகளின் அடிப்படை சாராம்சமே இதை வைத்துதான் இருக்கிறது. நான் எழுதிக்கொண்டு இருக்கும் தொடர் தாம்பத்தியம் பற்றியது தானே. வீட்டிற்க்கு உள்ளே நடக்கும் இந்த முரண்பாடே நாளாக, குடும்ப உறவின் சிதைவில் கொண்டு போய் விட்டு விடுகிறது
//ஆண்....தன்னுடைய இயல்பான குணத்தாலும்...தனது சந்ததியை அறியும் பொறுட்டு பெண்ணுக்கு சில கட்டளைகள் இட்டு...எல்லைகள் இட்டு தனித்து ஓரிடத்தில் வைத்தான்.....!//
இதை தான் நானும் சொல்கிறேன், அந்த இயல்பான குணம் எங்கிருந்து வந்தது என்பதே என் கேள்வி....மரபு வழியாகத்தானே , அந்த மரபு வழியைத்தான் நான் குறிப்பிட்டேன். தவிரவும் அப்படித்தான் இருக்கமுடியும் என்று உறுதியாக கூறவில்லை, அப்படியும் இருந்திருக்கலாம் என்றுதான் சொல்கிறேன்.
வருகைக்கு நன்றி.
தமிழில் தட்டச்சு செய்வது கடினமாக இருக்கிறது. ஏதாவது எளிய முறை தெரிந்தால் சொல்லுங்கள்.
பதிலளிநீக்குதங்களது ஒவ்வொரு பதிவும் மிக மிக அருமை. இதுவும்....அருமை.
உங்கள் எழுத்துக்கள் சிந்திக்க வைத்தது..
பதிலளிநீக்குபடம் சிரிக்க வைத்தது..
கௌஸ், சூப்பர் பதிவு. வேலை அதிகமாக இருந்ததனால் வர முடியவில்லை. தொடருங்கோ...
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள பதிவு தோழி ..எங்கே அன்பு இருக்கோ அங்கே இந்த ஆணாதிக்கத்துக்கும் பெண் உரிமைக்கும் வேலையே இருக்காதுன்னு என் கருத்து ..
பதிலளிநீக்குகமெண்ட் எழுத லேட் ஆச்சு கிருஷ்ணா எப்போ பார்த்தாலும் கேம்ஸ் விளையாடிட்டு இருக்கறா அதான் சாரி ..
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழி
தெம்மாங்குபாட்டு...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
சே.குமார்...
பதிலளிநீக்குநன்றி
vanathy...
பதிலளிநீக்குஅதனால் என்ன தோழி...முடிந்தபோது வந்தால் போதுமே....
நன்றி தோழி
sandhya...
பதிலளிநீக்குஇங்கேயும் அதேதான் தோழி. நேரம் கிடைக்கும் போது படிங்க...சரியா நன்றிப்பா