Sunday, June 20

8:07 AM
24



இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் நன்றி உணர்வோடு கொண்டாடபடுகிறது. அன்னையர் தினம், தந்தையர் தினம் என்பது முதலில் மேலை நாடுகளில் தான் கொண்டாடப்பட்டு வந்தது . இப்போது அந்த கலாசாரம் மெதுவாக இந்தியாவிலும் பரவி இங்கும் கொண்டாடபடுகிறது.  

"மேலை நாடுகளில் பிள்ளைகள் தங்களது தாய் தந்தையரை விட்டு பிரிந்து தனியே வாழகூடிய சூழ்நிலை காரணமாக, இந்த நாளை  ஏற்படுத்தி அந்த நாளில் தங்களது பெற்றோர்களுக்கு பரிசுகளையும் வாழ்த்துகளையும் பரிமாறி தங்களது அன்பை பரிமாறி கொள்வார்கள், ஆனால் நம் நாட்டு வாழ்க்கை முறை பெற்றோர்களுடன் இணைந்து வாழும் கலாசாரம் கொண்டது.  அதனால் இந்த நாட்களை நினைவு கூறுவது தேவை இல்லாதது "  என்பது ஒரு சாராரின் கருத்து.

ஆனால் நிதர்சனம் என்னவென்றால் நம்ம குடும்ப கட்டுகோப்பும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டே வருகிறது!!  முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும் பெருகி கொண்டே போகிறது...!  வீட்டில் இருக்கும் வயதான பெற்றோர்கள் பெரும்பாலான இல்லங்களில், தேவையற்ற  சுமைகளாய் கவனிக்க படாமலேயே இருக்கிறார்கள்.  

அரசாங்கமே இதற்காக ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டியதாகிவிட்டது...! கவனிக்காத  பிள்ளைகள், கொடுமை படுத்தினால் அந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மேல் புகார் கொடுக்கலாம், அதன் பின் தண்டனையும் வாங்கி கொடுக்க முடியும் என்பதே அது!!  அந்த அளவிற்கு இந்த நிலைமை மோசமாகி இருக்கிறது!! 

அதனால் அன்னையர் தினம், தந்தையர் தினம் கொண்டடபடுவது ஒரு வகையில் சரி என்றே படுகிறது.  சிலருக்கு இப்படியாவது பெற்றோர்கள் இருப்பது நினைவுக்கு வரட்டுமே!!

தியாக சுடர்-தந்தை 

தாயின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை தந்தையின் தியாகம்! தனது குழந்தை பிறந்த அடுத்த நிமிடத்தில் இருந்தே தந்தை ஆனவன் அந்த குழந்தையின் நல்வாழ்வை பற்றி நினைக்க தொடங்கி விடுகிறான். பிறகு அந்த குழந்தைக்காக கடினமாக உழைக்க  தொடங்கி  தன் வருவாயின்  ஒரு பகுதியை அந்த குழந்தையின் வருங்காலத்திற்காக சேமிக்க தொடங்குகிறான்.  நல்ல கல்வியை கொடுப்பதற்காக அவன் படும் பாட்டை சொல்லி முடியாது.  இன்னும் பல தேவைகளையும் பார்த்து பார்த்து செய்யும் அவனது அன்பை அளவிட முடியாது.  இப்படி தன் வாழ்வையே அந்த பிள்ளைக்காக அர்பணிக்கும், அந்த தன்னலமற்ற தியாகத்தை நன்றி பெருக்கோடு நினைவு கூறும், நாள் தான் ஜூன் மாதம் 3 வது ஞாயிற்று கிழமை தந்தையர் தினமாக கொண்டாடபடுகிறது.  

ஒரு பெண்ணே காரணம்

அவள் பெயர் சோநோரா லூயிஸ். தனது தாயின் இறப்பிற்கு பின் அவளது தந்தை தன்னந்தனியாக இவளுடன் சேர்த்து ஆறு பிள்ளைகளையும் அன்போடு கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினார். தனது 27 ம் வயதில் அன்னையர் தினம் போல்   தனது தந்தைக்காக ஒரு தினத்தை கொண்டாடவேண்டும் என்று தீர்மானித்து கொண்டாட தொடங்கினார். பின்னாளில் 1972 ல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் ஜூன் மாதம் 3 ம் ஞாயிறு தந்தையர் தினம் கொண்டாடபடுவதை அங்கீகரித்தார்.  இதுவே இன்று வரை உலகம் முழுவதும் கடைபிடிக்க படுகிறது.  

நம் கடமை

இன்று ஒவ்வொரு மகனும், அல்லது மகளும் தனது தந்தைக்கு ஏதாவது சிறு பரிசையாவது அளித்து அவர்களின் ஆசிர்வாதத்தை பெறலாம். இயலவில்லை என்றால்  ஒரு அன்பான வாழ்த்து சொல்லை சொல்லியாவது உங்கள் அன்பை தெரிவிக்கலாம்.  தனது வாழ்நாள் முழுவதையும் உங்களுக்காக அர்பணித்த அல்லது அர்பணித்து கொண்டு இருக்கிற தந்தைக்கு இது நாம் செலுத்தும் நன்றி கடனின் சிறு வெளிப்பாடாக இருக்கட்டுமே .......!!

தவிரவும் இந்த ஒரு நாள் மட்டும் அல்ல,  நம் வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரையும் நாம் அவர்களுக்கு கடமை பட்டவர்கள்  தான். இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் "எக்காரணம்  கொண்டும் எனது  பெற்றோரை அவர்கள் தளர்ந்த காலத்தில் கைவிட மாட்டேன் " என்ற உறுதிமொழியை   எடுப்பது சால சிறந்தது...!!   

முதியோர் இல்லத்தில் சேர்ப்பது என்பது 'ஒரு கொடுஞ்செயல்' என்பதை பிள்ளைகள் அனைவரும் மனதில் வைத்தால் நல்லது !  " நம்மை பேணி வளர்த்த பெற்றோரை, நாமும் பேணுவோம்"
   

Tweet

24 comments:

  1. //வும் இந்த ஒரு நாள் மட்டும் அல்ல, நம் வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரையும் நாம் அவர்களுக்கு கடமை பட்டவர்கள் தான். இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் "எக்காரணம் கொண்டும் எனது பெற்றோரை அவர்கள் தளர்ந்த காலத்தில் கைவிட மாட்டேன் " என்ற உறுதிமொழியை எடுப்பது சால சிறந்தது...///

    அருமை

    ReplyDelete
  2. //முதியோர் இல்லத்தில் சேர்ப்பது என்பது 'ஒரு கொடுஞ்செயல்' என்பதை பிள்ளைகள் அனைவரும் மனதில் வைத்தால் நல்லது !///

    சரியா சொன்னீங்க

    ReplyDelete
  3. அனைத்து தந்தையர்களுக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அப்பாக்கள் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அப்பாக்கள் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. தந்தையர்கள் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. தந்தையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. முதியோர் இல்லங்களை நம் நாட்டில் குறைப்போம்! அதுவே இன்று நாம் எடுக்கும் உறுதிமொழியாய் இருக்கட்டும்.

    அன்புடன்,
    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  9. http://labelleetleblog.files.wordpress.com/2009/05/fathers_day_graphics_08.gif

    ReplyDelete
  10. வாழ்க அப்பாக்கள். எனது மகன்கள் எனக்கொரு சிறிய பரிசைக்கொடுத்து அசத்தினார்கள். நன்றி.

    ReplyDelete
  11. I couldnt give anything to my father. just even a word. things goes that way.

    ReplyDelete
  12. அன்புடன் வணக்கம் நீங்கள் கூறியது போல் தந்தையர் தினம் தேவை இல்லை என்பது ஒரு சாராரின் வாதமாக இருந்தாலும்... குறைந்தது இன்றாவது தனது தந்தைன் தியாகங்களை நினவு கூறலாம் வாழ்த்து கூறலாம் ..ஆனால் தநனிலை உணர்ந்த ஒரு மகன் மகளுக்கு இது சொல்லி தெரிய வேண்டியதில்லை தெரியாதவர்களுக்கு சொன்னாலும் தெரிவதில்லை எனக்கு தெரிந்த நண்பரின் மகன் மிக கஷ்டப்பட்டு படிக்க வைத்தார் படிக்கலை ? கண்டவன் காலில் விழுந்து வேலை வாங்கி கொடுத்து கல்யாணம் பண்ணி வைத்தார் வந்தவ !!!!!!"""ஆகா கோயில் வச்சு கும்பிடனும்""" ????எதுக்கு இவங்களை சிரமபடுதுவானே!!!!! என்று தன வீட்டுக்கு கூட்டி கொண்டு போய் விட்டாள் இப்போ அவனுடிய வருமானம் வசதிகள் எல்லாம் அவள வீட்டுக்கு ..எப்பூடி ??? நண்பர் இவன் முகத்திலே விழிக்க விருப்பமில்லை ??.

    ReplyDelete
  13. ஒரு தந்தையாய் கேடடு மகிழ்கிறேன்.

    ReplyDelete
  14. asiya omar...

    thanks.

    கே ஆர் பி செந்தில்...

    nanri.

    Soundar...

    :)

    அன்புடன் மலிக்கா...

    thanks

    S.Maharajan...

    nanri.

    ReplyDelete
  15. ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  16. பிரியமுடன்... வசந்த்...

    excellent pic!
    thank you.

    ReplyDelete
  17. adhiran...

    கொடுத்து வைத்த அப்பா! வாழ்த்துகள் !!

    கொடுத்து வைக்காத அப்பா! :((

    நன்றி

    ReplyDelete
  18. hamaragana...

    உங்களின் முதல் வருகைக்கு நன்றி!

    உங்கள் ஊர் கோமதி அம்மாள் கோவில் பிரசித்தம் தானே?!!

    மருமகள்தான் அப்படினா மகனுமா? படிக்கும் போதே வருத்தமாகத்தான் இருக்கிறது. .

    ReplyDelete
  19. தாராபுரத்தான்...

    உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

    அனுபவத்தில் பெரியவர்கள் என் பதிவை படிப்பது என்னை நெகிழ்வடைய செய்கிறது!

    உங்களின் பதிவு என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. இதனை எனக்கு அறிமுக படுத்தி வைத்தமைக்கு உங்களுக்கு நன்றிகள் பல!!

    ReplyDelete
  20. அன்புடன் வணக்கம் எங்கள் ஊர் கோமதி அம்மன் ,சங்கரலிங்க சுவாமி பிரசிதம்தான்
    நண்பரின் மகனும்தானே அவளுடன் கிளம்பிட்டான் .??
    இதில் பின்னூட்டம் இட்டிருக்கும் அனேக நண்பர்கள் தங்கள் தந்தையரின் வாழ்த்தி இருப்பார்கள்
    நானும் வாழ்த்து பெற்றேன் ...மிக்க நன்றி

    ReplyDelete
  21. எல்லோர்க்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  22. கௌஸ், நல்லா இருக்குங்க. எல்லோருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. hamaragana...

    sandhya...

    vanathy...

    அனைவருக்கும் நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...