ஞாயிறு, ஜூன் 13

6:26 PM
30

சலனம் 
                                           மௌனமாய் இருக்க மனதும்                                                                                   
                          இடம் கொடுக்க வில்லை....!
                          விலகி செல்ல எனது பாதையும் 
                          எனக்கு தெரியவில்லை....?!
                       
                       ********                                                     


            எந்த நிமிடம் என் மனதினுள் நுழைந்தாய்?
            நட்பு என்ற அடையாளத்துடன் நுழைந்து 
            என் உணர்வோடு கலந்தது ஏன்?
            தெளிந்த என் மன நீரோடையில் 
            முதல் கல் எரிந்தது நீ..... ஏன்?
            கலங்கிய நீரில் நான் 
            கரைந்து போகவா...இல்லை
            துடித்து சாகவா.....?    காரணம் 
            சொல்,   விட்டு விடுகிறேன் 
            நிரந்தரமாக என் மன கூட்டில் இருந்து...!
                               நீ எழுதிய  ஒவ்வொரு வார்த்தையும் 
                முள்ளாய் தைத்ததை நீஅறிவாயா?
           தைக்கட்டும் என்று அறிந்தே எழுதினாயா ?
                வெறும் எழுத்துக்கள்  ஒருவரை 
           சித்திரவதை செய்யுமா....... ?   
                செய்கிறதே என்னை......!?
                       
                     **********


            கல் நெஞ்சகாரனடா  நீ ! என் 
                             
             நெஞ்சை ரணமாக்கி விட்டு, 
                              
             துயில்கிறாய்  நிம்மதியாக !!
                              
             விடமாட்டேன் உன்னை...?
                             
             கடவுளிடம், வருந்தி 
                             
             வரம் பெறுவேன், நிதமும் 
                            
             உன் கனவில் வருவதற்கு!!
                                              
                                                               **********
                      
                             மறந்தும் உன் நட்பை இழக்க, 
               மனம்  இடம் கொடுக்காது 
           என்றானபின், உன் மன நிலையை 
               நான் அறிவது எவ்வாறு ?
           முகமூடி  போட்டு பேச எனக்கு 
               விருப்பம் இல்லை,  உடைத்தே 
           சொல்கிறேன்,  உன் அன்பு வேண்டும் 
               வாழ்வின் இறுதிவரை...!!
           அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் 
                வைத்துகொள்....?! மண்ணுக்குள் நான்  
           போகும் கடைசி நொடி வரை கூட, 
                உன்னை நேரில் சந்திக்காது என் கண்கள் !
           பின் எவ்வாறு நம்  நட்பு கற்பிழக்கும்....??!
                ஆதலினால், தூய நட்பு  கொள்வோம் !!
                                                              
                                                                 ************


இணையம் பிரபலம் ஆன புதிதில் என் நெருங்கிய கல்லூரி தோழி இணைய நட்பை வைத்து எழுதிய கவிதைகள் தான் மேலே இருப்பவை. அவள் இப்போது பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறாள்.  நான் இணையத்தில் எழுதுவதை அறிந்த அவள் அப்போது விளையாட்டாய் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய இந்த கவிதைகளை எனக்கு அனுப்பிவைத்தாள்.  அதை நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். எழுதியவற்றில் பலதும் மறந்துவிட்டது என்று சொன்னாலும் நினைவில்  இருக்கும் இவற்றை படிக்கும் போது வியப்பாகதான் இருக்கிறது !! 

இணையத்தின் உதவியால் இன்று  முகம் தெரியாமல் பல நட்புகள் உருவாகின்றன.  அவை அனைத்தும் ஆரோக்கியமாகவே இருக்கவேண்டும்.  இந்த நட்பால் புது கலாசாரம் உருவாகிவிட கூடாது என்பதில் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும். சிறு சலனமும்  நம் மனதில் நுழைய இடம் கொடுக்காமல் இருந்தால் நட்பு என்பது நீடித்து நிலைத்து இருக்கும்.  

ஆண், பெண் நட்பு மிகவும் போற்றபடகூடிய ஒன்றுதான், ஆனால் இருவரும் தங்களுக்கு என்று எல்லைகளை வரையறுத்துகொண்டு அதன்படி நடப்பதே நன்று. இணைய நட்பை பொறுத்தவரை முகமறியா நட்புதானே என்று கவனக்குறைவாக இல்லாமல், வார்த்தைகளை பரிமாறும்போது மிகவும் கவனமாக கையாள்வது நட்பை கொண்டாடும் இருவருக்குமே நலம் பயக்கும்.

வார்த்தைகளில் மரியாதையை கையாளும்போது அந்த நட்பு வணங்கபட கூடியதாகி விடுகிறது! அவசரப்பட்டோ, உணர்ச்சி வேகத்திலோ, வார்த்தைகளை வெளி இடாமல் நிதானமாக, தேவைக்கு ஏற்ப,  பதில் சொல்வது கண்ணியத்தை கொடுக்கும்.  நன்கு பழகியவர்கள் ரூபத்திலேயே பிரச்சனைகள் உருவாகும் கால சூழ்நிலையில் இணைய நண்பர்கள், அது இரு ஆண்களுக்கு இடையிலான நட்பு, இரு பெண்களுக்கு இடையிலான    நட்பு என்றாலுமே கவனமுடன் நட்புக்கொள்வது தவறான பின்விளைவுகளை ஏற்படுத்தாது.  

தோழமைக்கு  உரிமை அதிகம்தான் ,  அது வரம்பு மீறாதவரை.....?!!
                               
நல்ல பல பதிவுகளை எழுதுவதற்கு இணைய நட்பு உதவியாக  இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அந்த மாதிரி நல்ல நட்பை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள் ! அந்த மாதிரி 30 நண்பர்களை followers ஆகவும் , வோட் மற்றும் பின்னூட்டத்தின் மூலமாக பல நல்ல நண்பர்களை பெற்றதின் மூலம் நானும் கொடுத்து வைத்தவள்தான் !! 

என் நண்பர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு அதிகம் உண்டு என்பதை என்னால் மறைக்க முடியாது .  என் இணைய நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவின் மூலமாக என் அன்பையும் , நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.  எழுதும் என் கையை பலப்படுத்த  உங்கள் நட்பு தொடர்ந்து வேண்டும்....!                                 
                           
எனது தாம்பத்தியம் பாகம் 5 பதிவு அடுத்ததாக  வெளி வரும்....!  காத்திருங்கள் !! நன்றி 


Tweet

30 கருத்துகள்:

 1. மிக மிக நிதர்சனமான வரிகள் தோழி. அனைவரும் உணர வேண்டியவை இவை

  பதிலளிநீக்கு
 2. //கல் நெஞ்சகாரனடா நீ ! என்
  நெஞ்சை ரணமாக்கி விட்டு,
  துயில்கிறாய் நிம்மதியாக !!
  விடமாட்டேன் உன்னை...?
  கடவுளிடம், வருந்தி
  வரம் பெறுவேன், நிதமும்
  உன் கனவில் வருவதற்கு!!//

  கவிதையும் அருமை...கருத்தும் அருமை...

  பதிலளிநீக்கு
 3. அட அட கௌசல்யா உணர்வு மயமான கவிதை.எதற்கும் ஒரு எல்லை உண்டு ,நம்மை சுற்றி கோடு சதுரமாக போட்டுக்கொண்டாலும் சரி,வட்டமாக போட்டுக்கொண்டாலும் அந்தக்கோட்டை எந்த சூழ்நிலையிலும் தாண்டக்கூடாது.தமிழ் மக்கள் மரபு பேணி காப்பவர்கள்.இணைய நட்பாக இருந்தாலும் சரி நேரில் பழகி புரிந்துகொண்டவராக இருந்தாலும் சரி நட்பு மெல்லிய அழுத்தமான இழை போன்றது,அது மிகக்கஷ்டப்பட்டால் ,படுத்தினால் வேறு வழியில்லை,துண்டிப்பதில் தவறு இல்லை.

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா8:43 PM, ஜூன் 13, 2010

  கல் நெஞ்சகாரனடா நீ ! என்

  " நெஞ்சை ரணமாக்கி விட்டு,

  துயில்கிறாய் நிம்மதியாக !!

  விடமாட்டேன் உன்னை...?

  கடவுளிடம், வருந்தி

  வரம் பெறுவேன், நிதமும்

  உன் கனவில் வருவதற்கு!!"

  .மேலே சொன்ன வரிகள் ரொம்ப ரொம்ப அருமை சூப்பர் தான் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. அருமை....தோழி...! வாழ்த்துக்கள் :-)

  பதிலளிநீக்கு
 6. இன்றைய டாப் இருபது வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

  பதிலளிநீக்கு
 7. //கடவுளிடம், வருந்தி

  வரம் பெறுவேன், நிதமும்

  உன் கனவில் வருவதற்கு!! //

  நல்ல ஆசை உங்கள் தோழிக்கு நேர்ல கொடுக்கும் தொல்லைகள் போதாதென்று கனவிலுமா

  இணைய நட்பு பற்றிய தங்கள் கருத்துக்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே..

  பதிலளிநீக்கு
 8. LK
  தொடர்ந்து எனது பல பதிவுகளுக்கு முதல் பின்னூட்டம் கொடுத்து வரும் உங்கள் நட்பிற்க்கு மகிழ்கிறேன்!

  பதிலளிநீக்கு
 9. ராசராசசோழன்

  வருகை தந்தமைக்கும், உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 10. ஆசியா

  //இணைய நட்பாக இருந்தாலும் சரி நேரில் பழகி புரிந்துகொண்டவராக இருந்தாலும் சரி நட்பு மெல்லிய அழுத்தமான இழை போன்றது,அது மிகக்கஷ்டப்பட்டால் ,படுத்தினால் வேறு வழியில்லை,துண்டிப்பதில் தவறு இல்லை//

  சரியாக சொன்னீர்கள் தோழி! நன்றி

  பதிலளிநீக்கு
 11. sandhya

  தோழி நலமா? கருத்திற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 12. dheva

  நண்பருக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 13. வார்த்தைகளில் மரியாதையை கையாளும்போது அந்த நட்பு வணங்கபட கூடியதாகி விடுகிறது! அவசரப்பட்டோ, உணர்ச்சி வேகத்திலோ, வார்த்தைகளை வெளி இடாமல் நிதானமாக, தேவைக்கு ஏற்ப, பதில் சொல்வது கண்ணியத்தை கொடுக்கும். நன்கு பழகியவர்கள் ரூபத்திலேயே பிரச்சனைகள் உருவாகும் கால சூழ்நிலையில் இணைய நண்பர்கள், அது இரு ஆண்களுக்கு இடையிலான நட்பு, இரு பெண்களுக்கு இடையிலான நட்பு என்றாலுமே கவனமுடன் நட்புக்கொள்வது தவறான பின்விளைவுகளை ஏற்படுத்தாது.

  ...... அருமையாய், கரிசனையுடன் சொல்லி இருக்கிறீர்கள்.... :-)

  பதிலளிநீக்கு
 14. chitra,

  தோழி மிக்க நன்றி!!

  பதிலளிநீக்கு
 15. நட்பின் ஆழத்தை உணர
  வைத்த கவிதை
  நட்பு இல்லையேல் நாம் இல்லை .
  வாழ்த்துக்கள் கௌசல்யா.

  பதிலளிநீக்கு
 16. S Maharajan

  //நட்பு இல்லையேல் நாம் இல்லை//

  உண்மைதான் நண்பரே ! நன்றி

  பதிலளிநீக்கு
 17. எந்த நிமிடம் என் மனதினுள் நுழைந்தாய்?
  நட்பு என்ற அடையாளத்துடன் நுழைந்து
  என் உணர்வோடு கலந்தது ஏன்?
  தெளிந்த என் மன நீரோடையில்
  முதல் கல் எரிந்தது நீ..... ஏன்?
  கலங்கிய நீரில் நான்
  கரைந்து போகவா...இல்லை
  துடித்து சாகவா.....? காரணம்
  சொல், விட்டு விடுகிறேன்
  நிரந்தரமாக என் மன கூட்டில் இருந்து...!

  அருமை அருமை... கலக்கல்

  பதிலளிநீக்கு
 18. தோழியின் கவிதையும் , உங்கள் கருத்தும் அருமை ....!!

  குண்டக்க மண்டக்க கருத்து போட்டே பல பிளாக்கில பழகிப்போச்சி எனக்கு என்னத்த சொல்ல ... இருந்தாலும் சீரியசாக நினைக்காத வரை எல்லாம் சரி...!!!

  பதிலளிநீக்கு
 19. jailany...

  //குண்டக்க மண்டக்க கருத்து போட்டே பல பிளாக்கில பழகிப்போச்சி எனக்கு என்னத்த சொல்ல ... இருந்தாலும் சீரியசாக நினைக்காத வரை எல்லாம் சரி...!!!//

  சரி தான் !! நன்றி !

  பதிலளிநீக்கு
 20. thanks friend! yen late?

  இனிமேல் சீக்கிரம் வந்துவிடுவேன்

  பதிலளிநீக்கு
 21. உங்கள் தோழியின் கவிதையும் அருமை அதை விட நட்பை பற்றி நீஙக்ள் எழுதிய வரிகள் மிக அருமை தொடருங்கள் தோழி.... வாழ்த்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. jaleela kamal...

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி!

  பதிலளிநீக்கு
 23. vanathy...

  tholi nan unkalai nettre yethirparthen. varukaikku nanri.

  பதிலளிநீக்கு
 24. nalla pathivu. nalla pakirvu. nanri. inraikkuththaan padiththen.

  :-)

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...