சனி, நவம்பர் 28

10:15 AM
10




இந்தியா சகிப்புத்தன்மை உள்ள நாடு என்ற ஒரு நல்ல பேரு நம்ம  நாட்டுக்கு உண்டு, அந்த பேரை சூட்டியதும் நாமதான். ஏகப்பட்ட இனம் மதம் சாதி இங்க இருக்கு, ஆனாலும் நாம ஒற்றுமையா இருக்கிறோம் அப்டினு நாட்டுக்கு வெளில இருக்கிறவங்கள விட நாமதான் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லி பெருமைப்பட்டுக்குவோம். ஆனா சொல்றதோட சரி  செயலில் இல்லை அதுதான் நம்ம பிரச்சனையே.

ரோட்ல நடந்து போறப்போ மேல மழை தண்ணிய அடிச்சிட்டு போற பைக் காரன நடந்து போறவனும்,  கார்ல போறவனை பைக் காரனும் கெட்ட வார்த்தையால திட்டித்  தீர்க்கிற நாம  தான் இப்ப சகிப்புத் தன்மையை பற்றி பேசுகிறோம். திட்டுவதால் மேல விழுந்த தண்ணீ உடனே காயாது என்பது தெரிந்தாலும் திட்டினால் தான் அப்போதைக்கு நமது மனசு ஆறும். இப்படிதான் கூட்ட நெரிசலில் பஸ்ல தெரியாமல் கால் மிதி படுவது, மேல இடிபடுவது என்று தினமும் நாம் சந்திக்கும் அத்தனையிலும் எதிர்வினை ஆற்றவில்லை என்றால் நாமெல்லாம் மனுஷ லிஸ்ட்லயே சேர்த்தி இல்ல. அப்படிப்பட்ட நாம சகிப்புத்தன்மையை பற்றி இப்ப கிளாஸ் எடுக்கிறோம். குறைந்தபட்சம்  ஊர்ல எத்தனை பேர் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுறாங்க. அதுவும்தவிர  ஆம்புலன்ஸ் பின்னாடியே போனா சுலபமா நமக்கும் வழி கிடைக்கும் என்று போகிற ஜந்துக்கள் எல்லாம் சகிப்புத்தன்மை, தேசபக்தி என்று பேசுதுகள் !!?

சமீப காலமாக  இந்தியா என்றால் இந்து என்ற கூச்சல் அதிகரித்திருப்பதற்கு காரணம் மோடி அரசு என்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது அவர்கள் அப்படி நடக்காவிட்டால்தான் ஆச்சர்யம்.  இத்தனை காலமாக பிற மதத்தினரின் காலடியில் நாடு இருந்ததை போலவும் அதை மீட்பதே தங்களின் தலையாய கடமை என்பதுமான அவர்களின் செயல் முட்டாள்தனம் தவிர வேற என்ன. இந்துமதம் பிரதான மதம் மற்றவை அதன் அடிப்பொடிகள் அடங்கி கிடக்கவேண்டும் மீறினால் அடக்கப் படுவீர்கள். இதுதான் இன்றைய நிஜம்.  இந்து மதத்தை விட்டு வெளியே போனவர்கள் தான் கிறிஸ்துவம் முஸ்லிம் புத்தம் என்றால் ஏன் சென்றார்கள் இந்து மதத்தில் ஏதோ பிடிக்கவில்லை அல்லது அடுத்த மதத்தில் ஏதோ பிடித்திருக்கிறது என்பது தானே அர்த்தம். அவ்வாறு விரும்பி சென்றவர்களை திரும்பி அழைக்க இந்து மதத்தில் உள்ள நல்லதை மீண்டும் மீண்டும் அழுத்தமாக சொல்லி வலியுறுத்தலாம். அதை விடுத்து பிற மதத்தினர் ஒரு கருத்தை கூறினாலும் அதற்கு கண் காது மூக்கு எல்லாம் வைத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சும் லெவலுக்கு கொண்டு போவது மதவெறி அல்லாமல் வேறு என்ன.

என்னே தேசபக்தி

இத்தனை காலமாக இல்லாத தேசபக்தி இப்ப திடீர்னு பொத்துகிட்டு ஊத்துது, தேசபக்தி ஒரு சாராருக்கு மட்டும் சொந்தமானது என்றால் மத்தவங்க எல்லாம் தேசத்தை(தேசபக்தியை) அடகு வச்சா சாப்ட்டுறாங்க.  பிற மதத்தினரை தேசத்துரோகி என்று  கட்டம் கட்டிவிடுவதில் காட்டும் தீவிரத்தை நாட்டின் வளர்ச்சியில் காட்டினால் நல்லது. ஆனால் அதை செய்ய மாட்டார்கள், ஒவ்வொரு கட்சிக்கும் அரசியல் செய்ய ஏதோ ஒன்று தேவை. மொத்தத்தில் பொதுசனம் பற்றிய அக்கறை யாருக்கும் இங்கே  சுத்தமாக இல்லை.

நாமெல்லோருமே ஏதோ ஒருசமயத்திலாவது நாட்டை குறை சொல்பவர்கள் தான். நாடாடா இதுன்னு காரி துப்பியவர்களும் உண்டு. வாய்ப்பு கிடைத்தால் வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகவும் பலருக்கும் ஆசைதான். இக்கரைக்கு அக்கரை பச்சை தானே.  அப்படிப்பட்ட ஆட்கள் இன்று அமீர்கானை வாரி தூற்றுவதை பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அமீர்கான் சொன்னது  'முஸ்லிம்களுக்கு இப்படியே பிரச்னை தொடர்ந்தால் நாமும் நாட்டை விட்டு போகவேண்டி இருக்குமா என்று என் மனைவி என்னை கேட்டார்' என்பதை தனது பேச்சோடு  பேச்சாக குறிப்பிட்டார். இந்த பேச்சுக்குள்  மீடியாக்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி காரச்சார பொடியை தூவ அவ்வளவு தான் பத்திகிச்சு. ஒரு இந்து இதை சொல்லி இருந்தால் கதையே வேற ஆனா சொன்னது ஒரு முஸ்லிம் ஆச்சே.  

அமீரின் பிகே , சத்யமேவ ஜெயதே ப்ரோகிராம் பற்றி எல்லாம் அலசி ஆராய்ந்து வரிஏய்ப்பு பிரச்சனையை மறைக்க பிளான் பண்ணியே அமீர் இப்டி பேசினார்னு ஒரு வாரமாக மீடியாக்கள், சமூக தளங்களிலும் கருத்து சொல்றேன்னு ஆளாளுக்கு தங்களின் மத துவேசத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். வரி ஏய்ப்பு செய்தார் என்றால் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அரசு எடுக்க வேண்டியது தானே, மாறாக மத துவேசத்தை கையில் எடுத்து கொடும்பாவி எரிப்பு , பாடை கட்டுறது என்று கீழ்த்தரமா ஏன் இறங்கணும்.  இதையெல்லாம் அரசு செய்யவில்லை சில குரூப்புகள் என்றால் அவர்களை மத்திய அரசு தடுக்காமல் ஏன் வேடிக்கைப் பார்க்கிறது? அவர்களால் ஏற்படும் வன்முறை சம்பவங்களில் இருந்து  பொதுமக்களை  பாதுகாப்பது அரசின் கடமை அல்லவா?  ....... இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நானும் தேசத்துரோகி ஆகிவிடுவேனே!?  

எது சகிப்புத்தன்மை 

அப்புறம் அம்பேத்காரை எதற்கு இவ்விசயத்தில்  இழுக்கிறார்கள் என்று தான் என் புத்திக்கு  எட்ட மாட்டேன்றது. முஸ்லிம் மக்களுடன் சகோதர அன்பை பாராட்டி மகிழ்ந்தவர், முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்டு முதல் வெற்றியை பெற்றவர். மத பேதம் பார்க்காமல் பழகிய/வாழ்ந்த அவரது பெயரை தங்களின் தேவைக்கு இப்போதைய அரசியல்வாதிகள் உபயோகிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் காந்தியை கொன்ற  கோட்சேவுக்கு சிலை வைப்பார்கள், அவர் ஒரு போராளி என்று மாணவர்களின் பாட புத்தகத்தில்  எழுதியும்  வைப்பார்கள்.  

பிற மதத்தினரின் நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது, எதை சாப்பிடுவது என்பதிலும் மூக்கை நுழைப்பது,....என்பதெல்லாம் மிக அநாகரீகமான செயல்கள். கருத்துரிமை பேச்சுரிமை எழுத்துரிமை  எல்லாம் இந்த நாட்டில் பிறந்த எல்லோருக்கும்  உண்டு. ஒரு பிரபலம் சாதாரணமாக பேசினால் பெரிதாக்குவதும், எளியமக்கள் 'வாழும் உரிமை'க்கு குரல் கொடுத்தால் கண்டுகொள்ளப் படாததும் தற்போதைய நிலை.  நீ  சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அதை சொல்வதற்கான உரிமை உனக்கு உண்டு அதை நான் மதிக்கிறேன் என்று சொல்வதற்கு பெயர் தான் சகிப்புத் தன்மை.

இதை ஆட்சியில் இருப்பவர்கள் முதலில் உணரவேண்டும். அதை விடுத்து சொன்னவர் என்ன சாதி என்ன மதம் என்று அலசி ஆராய்ந்து ஓ நீ அந்த மதமா அதுதான் அப்படி பேசுகிறாய் என தரம் பிரிப்பது அநாகரீகம். இதை அரசு , மீடியா தனி நபர்  யார் செய்தாலும் தவறுதான் தவிர்க்கப் படவேண்டிய ஒன்று. சகிப்புத்தன்மை உள்ள நாடு என்று கூச்சலிட்டுக் கொண்டே இருந்தால் போதாது... செயல்களில் காட்டவேண்டும் முக்கியமாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இனிமேலாவது இதை செயல்படுத்தினால் நல்லது. ஆனால் அதற்கு சிறிதும் வாய்ப்பே இல்லை.  

சமூக வலைத்தளங்களில் அமீர்கானை இழுத்துவச்சு படு கேவலமா கும்மி அடிக்கிறவங்களை பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது. கண் முன்னாடி நடக்குற கொடுமையை வேடிக்கை பார்த்துட்டு போற நமக்கெல்லாம் சகிப்புத்தன்மையை பற்றி பேச என்ன அருகதை இருக்கு   தனிநபரை தாக்குவதாக கூறிக் கொண்டு அவரது மதத்தை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்... இவர்களை போன்ற மத வெறியர்களுக்கு தேவை ஒரு சந்தர்ப்பம்...அது யார் மூலமாக எவ்வகையில் ஏற்பட்டாலும் தங்களின் மன வக்கிரங்களை வெளிக் காட்டியேத் தீருவார்கள்... அரசிற்கு எதிராக கருத்துக்களைத் தெரிவிப்பவர் முஸ்லிமாக இருந்தால் பாகிஸ்தானுக்கு ஓடணும் கிறிஸ்துவராக இருந்தால்  ஜெருசலமிற்கு  ஓடணும் என்பதை சட்டமாக்கி விடுவார்கள் போல ! ஒரு ஜனநாயக நாட்டில் அரசை குறைக் கூற விமர்சிக்க பொதுமக்களுக்கு உரிமை இல்லை. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பொதுமக்களை பொறுத்தவரை 'ம்' என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் ??!!!

இதுபோன்ற சகிப்புத்தன்மையை சகிச்சுக்கப்  பழகி கொண்டோமென்றால் இங்கே வாழ்தல் இனிது !!!


சொற்களை சிறை வைத்தீர்கள்
பிரியங்களை கல்லெறிந்தீர்கள்
கருணையை கழுவேற்றினீர்கள்
இவையெல்லாம் பிரபஞ்சம் சாட்சியாக
நீங்கள் தான் பரிசளித்தீர்கள்
உடலில் இருக்கும் சொச்ச உயிரை
கொஞ்சம் மிச்சம் வையுங்கள்
உங்களுக்கு பின்னால் கடவுள் வேற நிற்கிறான் !

(பேஸ்புக்கில் நண்பர் செய்தாலி அவர்கள் எழுதிய இந்த கவிதையை இன்று காலை படிக்க நேர்ந்தது.  எளிமையான இந்த வரிகள் பல அர்த்தங்களை எனக்கு உணர்த்தியது. நன்றி செய்தாலி !!)  
Tweet

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இது தான் சகிப்புத்தன்மை !!

      வாசிப்பிற்கு நன்றி தனபாலன் சார்.

      நீக்கு
  2. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கௌஸ் ...மிக அருமையான வார்த்தைகள் ..

    மிக சமீப காலமாகத்தான் இந்த மாதிரி அசிங்கங்கள் அரங்கேறுது ...எதற்கெடுத்தாலும் சண்டை ..
    உண்மையை சொன்னாலும் ஏற்க தயாராக இல்லை சமூகம் ..
    எதற்கெடுத்தாலும் போட்டி ஒருவர் 40 இஞ்ச் டிவி வாங்கினா உடனே போட்டியா 50 இன்ச் டிவி வாங்கிறதில் துவங்கி யாரோ ஒருவருக்காக தெரிந்த நட்புக்கலையே ஆண் பெண் பேதமின்றி தூஷிக்கும் அவலம் ..என்னத்தை சொல்ல அந்த அளவுக்கு வெறுப்பு வேர் விட்டு வளர்ந்து விட்டது ..ஒரு வாழ்த்து அட்டை சாண்டா கார்ட் போட்டேன் நினைவிருக்கா பசுமை விடியலில் உடனே ஒரு அறிவு ஜீவி வந்து சொல்லுது இந்தியாவுக்கு கிறிஸ்தவர்களும் க்ரிஸ்துமசும் தேவையில்லை ..என்ன ஒரு வெறி :( அந்த முட்டாளுக்கு தெரியாது நான் தீபாவளிக்கும் கார்ட் போட்டேன் ரம்ஜானுக்கும் கார்ட் போட்டேன் ..மனதில் வேற்றுமை எனும் விஷ செடியை பார்த்தீனிய செடியை யாரோ விதைக்கிறார்கள் அது புரியாம மக்களும் அமில வார்த்தைகளை தெறிக்க விடுகிரறாகள் ..
    அனைவருக்கும் தற்போதைய தேவை UNCONDITIONAL LOVE ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏஞ்சல்...

      என்ன சொல்றோம் என்பதை விட யார் சொல்றா அவங்க background , குலம் கோத்திரம் எந்த கட்சி எல்லாம் பாக்குறது தான் முதல் வேலை ...

      எல்லா மதத்தையும் கொண்டாடினாலும் நடுநிலை வியாதிகள் என்ற பட்டம் வேற...

      unconditional love வாய்ப்பு கம்மிதான் தோழி

      நீக்கு
  3. சகிப்புத்தன்மை என்ற வார்த்தையையே இப்போது சகிக்கமுடியவில்லை சகோதரி,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஆகிவிட்டது வருத்தமே ...

      வாசிப்பிற்கு நன்றி குமார்.

      நீக்கு
  4. இப்போ புதுசா ஒண்ணு ஆரம்பிச்சு இருக்காணுக..

    அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறினாலும் அவர்களை அம்மதத்திலும் சமமாக நடத்துவதில்லை!!! என்று.

    இதை இந்து மதத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் மற்றும் தன்னை உயர்சாதி என்று வரையுறுத்திக் ஒள்ளும் எல்லாப் பெரிய மனுஷனும் சொல்றாங்க. பதிவுலகில் கூட இவர்கள் உளறுவதைப் பார்க்கலாம். பொதுவா இவர்கள் சொல்றது என்னனா "கீழ்சாதினு உன்னை நாங்க கேவலப்படுத்தினாலும் எங்களோட இந்துமதத்தையே நீ தொடர்ந்து கட்டி அழு" என்பதுதான்! அதாவது நீ அங்கே போனாலும் உன்னை இஸ்லாமியன் அல்லது கிருந்த்தவன் அல்லது புத்த மதத்தவன்னு சொல்லிக்கொண்டாலும் உன்னை அங்கேயும் சாதி அடையாலத்துடந்தான் ஒருபடி "கீழேதான்" வைத்திருப்பாங்க என்கிற அறிவுரை. இவர்கள் மேல் கரிசனம்! அதாவது சாதிப் பாகுபாட்டை நாங்கதான் எங்க உயர் தர ஹிந்து மதத்தில் உருவாகினோம், அதை நீ எத்தனை மதம் மாறினாலும் மாத்த முடியாது. அந்தளவுக்கு நாங்க ஒரு அழியா கீழ்சாதி முத்திரையை நாங்க உன்மேல் குத்தியிருக்கோம்னு வெக்கங்கெட்ட தனமா சொல்லாமல் சொல்லிக்கிட்டு அலைகிறானுக பல பெரிய மனுஷனுக. என்னைப் பொருத்தவரையில் பார்ப்பனர்களுக்கோ, தன்னை உயர்சாதினு நினைத்துக் கொள்ளும் இந்துக்களுக்கோ மதமாறும் "இவர்களை" விமர்சிக்க எந்தத் தகுதியுமே இல்லை! அவர்களை மற்றமதத்திலும் இவர்கள் குத்திய சாதி முத்திரையை வைத்து அவமானப் படுத்தினாலும், அவர்கள் அவல நிலையை விமர்சிக்க "இந்த மேதாவிகளுக்கு" எந்தத் தகுதியும் இல்லை. அது ஏன் இந்த "கீழ்ப் புத்தி" காரர்களுக்கு அது புரிவதில்லை? நீ உயர் சாதினு மமதையில் இந்துமதத்தையே கட்டி அழுது, வாழ்ந்து சாவு. அதில் யாருக்கும் பிரச்சினை இல்லை! நீ கீழ்சாதி முத்திரை குத்திய அவன் எப்படியும் போறான பிறமதத்திற்கு போயி எப்படியும் போறான். நீ என்னத்துக்கு அந்த மதத்திலும் நாங்க குத்திய முத்திரையை அழிக்க முடியாதுனு விமர்சிக்கிற?

    நீ பார்பனரா? இல்லைனா உன்னை உயர்சாதினு நினைத்துக்கொள்ளும் இந்துவா? இல்லை உன் சாதி "பிள்ளை"னு வெக்கமில்லாமல் விக்கில போட்டுக்கொள்ளும் இந்துமத வெறிபிடிச்ச் மேதாவி ஜெயமோகனா? நீ முதலில் மதம்மாறும் அவர்களை விமர்சிக்காமல் வாயை மூடிக்கிட்டு இருமுனக்கு அவர்களை விமர்சிக்க எந்தத்தகுதியும் இல்லை! புரியுதா? புரிஞ்சுக்கோ!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...