பெண்களுக்கு எதிராக எங்கே என்ன நடந்தாலும் மகளிர் அமைப்புகள் முதலில் குரல் கொடுத்துவிடும். ஆபாச சுவரொட்டி கிழிப்பது முதல் பாலியல் வன்முறைக்கு எதிராக கொடிப் பிடித்து கோஷம் போட்டு போராடுவது வரை இவர்களை பற்றி ஓரளவு அறிந்திருக்கிறேன். உண்மையில் இவர்களின் வேகம் எதுவரை எந்த விதத்தில் என்று ஒரு அமைப்பில் என்னை இணைத்துக் கொள்ளும் வரை எனக்கு தெரியாது. பாதிக்கப்பட்ட பெண்கள் இவர்களிடம் பிரச்னையை கொண்டு செல்லும்போது அதை இவர்கள் கையாளும் விதத்தை அனுபவத்தில் கண்டு அதிர்ச்சியும், கோபமும், சலிப்பும் வந்து விட்டது. அனைத்து இடத்திலும் இப்படித்தானா? இல்லை எனது முதல் அனுபவம் தான் இப்படியா என தெரியவில்லை. (நமக்குனே இப்படி எல்லாம் வந்து சேருமோ என்னவோ ?!)
பதவி(?) ஏற்றதும் முதல் பணி, பிரச்சனையுடன் ஒரு பெண் வந்து சேர்ந்தாள். அவள் சொன்னதின் சுருக்கம் - ஒரு ராங் கால் மூலமாக(?!) லீவ்ல இருக்குற ராணுவ வீரருக்கும் இந்த பெண்ணுக்கும் பழக்கம். திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்த பின் முதல் முறையாக நேரில் சந்திப்பு. கோவில் வாசலில்(?) வைத்து திருமணம். பெண்ணின் சொந்த ஊரில் சில வாரங்கள் குடித்தனம். பெண் தற்போது இரண்டு மாத கர்ப்பம். இவளை விட்டுவிட்டு முதல் மனைவியிடம்(?) போய்விட்டாராம். ஆமாம்ங்க ஆமா அவர் ஏற்கனவே திருமணமானவர். இது முன்பே இந்த பெண்ணுக்கு தெரியுமாம், இருந்தும் காதல் தெய்வீகம்(?) என்பதால் திருமணம் !?? இதில் எனது வேலை என்னனா இந்த இருவரையும் சேர்த்து வைக்கணும். அதுதான் எப்படினுனே எனக்கு புரியல. இவங்க இரண்டு பேரையும் சேர்த்து வச்சுட்டா, அந்த பாவப்பட்ட முதல் மனைவி, இரு சிறு குழந்தைகளின் நிலை !
முதல் மனைவி பேச்சை கேட்டுவிட்டு கர்ப்பிணி என்னை கைவிட்டுட்டார்னு ஒரே அழுகை. இந்த பிரச்சனையில் நான் என்ன செய்யணும் என்று எனக்கு ஆலோசனை என்ற பெயரில் கட்டளை வந்தது வேறு ஒரு மாவட்ட தலைவியிடம் இருந்து... சமூக நலத்துறையிடம் ஒரு புகார் மனு எழுதிக்கொடுக்கணும், அவங்க அனுப்புற கடிதத்தை பார்த்து அவன் வருவான், பேசி முடிக்கணும் என்று. நானும் அந்த தலைவி சொன்னபடி எல்லாம் செஞ்சேன். எனக்கு முதல் கேஸ் வேறயா ? நீதி நியாயம் எல்லாத்தையும் கொஞ்சம் ஓரமா வச்சுட்டு ரொம்ப சின்சியரா பொறுமையைக் கையாண்டேன்.
இதற்கிடையில் இந்த பெண்ணை அவளோட பெற்றோர் வீட்டை விட்டு வெளில அனுப்பிட்டாங்க, சில துணிகளை தோழி வீட்டில் வைத்துவிட்டு மொபைல் போன், ஹான்ட் பேக் உடன் தினம் பஸ்ஸில் திருநெல்வேலி வருவதும் சாயங்காலம் ஊருக்கு போவதுமாக இருந்தாள். செலவுக்கு பணம் இல்லன்னு பணம் கொடுத்து செலவுக்கு வச்சுக்க சொன்னேன். இரண்டு நாள் கழிச்சு "என் வீட்டுக்காரரும் அவர் மனைவியும் என்னை அடிக்கிறாங்க , நெல்லை பஸ் ஸ்டாண்ட்ல இருக்கேன்" னு போன். பதறியடிச்சு ஓடி வந்தா, அடியால் வீங்கிப் போன முகத்துடன் இவ மட்டும் நிற்கிறாள்...! ஜூஸ் வாங்கி கொடுத்து ஆசுவாசபடுத்தினேன்.

"கால் பண்றேன், அவங்ககிட்ட நீங்க பேசுங்க" என்றாள், போனை எடுத்தது முதல் மனைவி, 'ஏன் இப்படி அடிச்சிங்க' னு நான் கேட்ட அடுத்த செகண்ட் 'ஓ அந்த லெட்டர் அனுப்புனது நீதானா, அவளுக்கு தான் புத்தி இல்லைனா உனக்கு எங்க போச்சு புத்தி, அவளுக்கு போய் பரிஞ்சுட்டு வரியே , கல்யாணம் ஆனவர்னு தெரிஞ்சும் வந்துருக்கானா அவளுக்கு பேர் என்ன' அப்டி இப்டின்னு கெட்ட வார்த்தைல திட்ட அப்படியே ஆடிப் போயிட்டேன், டக்னு போன்ன கட் பண்ணிட்டேன். ஆனா அவ கேட்டதுல இருந்த நியாயம் புரிந்தது. 'நீ ஊர் கிளம்பி போ நாளைக்கு பேசிக்கலாம்னு இந்த பொண்ண அனுப்பி வச்சேன்.
ஏதோ ஒரு வேகத்துல காதல், கல்யாணம் என்று போனாலும் இப்போது இந்த பெண்ணை விட்டு விலகுவது தான் அந்த ஆணின் நோக்கமாக தெரிகிறது. ஏற்கனவே என்னிடம் பேசிய அந்த மாவட்ட தலைவி மறுபடி கால் பண்ணி, "அவன் மாசம் இருபதாயிரம் வாங்குறான் இல்லை அதுல பத்தாயிரம் மாசாமாசம் இவளுக்கு கொடுத்துத்தான் ஆகணும், இவளுக்கும் உரிமை(?!) இருக்கு, அதனால அவனோட ஊருக்கு நீங்க கிளம்பி போங்க , போய் பேசுங்க, அதுக்கு பிறகு தான் இந்த பொண்ணு தன்கிட்ட இருக்குற அவனோட சர்டிபிகேட் , ரேசன் கார்ட் எல்லாம் தருவா, அப்டின்னு ஸ்ட்ராங்கா சொல்லிட்டு வாங்க"னு !! எனக்கு அப்போதான் புரியுது , இந்த பெண் முன்னாடியே உஷாரா அவனுடைய முக்கிய ஆவணங்கள் எல்லாம் கைப்பத்திகிட்ட விஷயம்...அவங்ககிட்ட மெதுவா சொன்னேன், 'மேடம் இந்த பொண்ணு சம்பந்தப்பட்ட எதுவும் என் மனசுக்கு சரினு படல, மேற்கொண்டு இதுல நான் தலையிடுறதா இல்லை சாரி' னு சொல்லி போனை வைத்துவிட்டேன் .
நல்லது பண்ணலாம்னு நினைச்சா எது நல்லது என்பதில் எனக்கு குழப்பம் ஏற்பட்டது தான் மிச்சம்.
எனக்குள் நிறைய கேள்விகள் !! இந்த விசயத்தில் நிறைய தவறுகள், குளறுபடிகள்... என் மனசாட்சிக்கு விரோதமாக என்னால் செயல்பட முடியவில்லை. அந்த பெண்ணை பொருத்தவரை உதவி என்றுகேட்டு செய்ய முடியாமல் போனது வருத்தம் என்றாலும் ஒரு பெண்ணிற்கு உதவுவதாக சென்று இன்னொரு பெண்ணுக்கு துரோகம் எவ்வாறு இழைப்பது...
* முதல் மனைவி உயிருடன் இருக்க இரண்டாவது திருமணம் எப்படி ?
* திருமணம் கோவிலில் வைத்து நடைபெறவில்லை, கோவில் குருக்கள் மறுக்கவே கோவில் வாசலில் தாலியை கட்டிக் கொண்டாயிற்று.
* செல்போன்
ஒரு ராங் காலோ, மிஸ்டு காலோ போதும் காதல் என்ற பெயரில் ஒரு கலாசாரச் சீரழிவு அரங்கேற...குரலை வைத்து ஒருவரது குணம், படிப்பு, அழகு, அந்தஸ்து கண்டுபிடித்து விட முடியும் என்று நம்பி தொலைந்துப் போகும் ஆண்களும், பெண்களும் இன்று அனேகம். தனக்கு திருமணமானது எங்கே பெண்ணுக்கு தெரியப் போகிறது என்று பெண்ணை ஏமாற்றும் ஆண்கள்...ஆணை எப்படி தன் பிடிக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று பல சூழ்ச்சிகளை செய்யும் பெண்கள் ! இப்படி நம் சமூகம் ஏதோ ஒன்றை நோக்கி வேகமாகச் செல்வதை போலத் தெரிகிறது. இது மிக மோசமான ஒரு நிலை!
இத்தனை குளறுபடிகள், தவறுகள் உள்ள ஒரு பிரச்னையை ஒரு பெரிய அமைப்பு எப்படி ஒரு தலைபட்சமாக பார்க்கிறது என்று தான் எனக்கு புரியவில்லை. அமைப்பு என்பது ஒரு சிலர் சுயமாக எடுக்கும் முடிவா ? பலர் கலந்து பேசி எடுக்கும் முடிவா ? பலர் கலந்து பேசி எடுப்பதாக இருந்தால் அதில் இடம் பெற்ற ஒருவருக்குமா இது ஒரு தவறான வழிகாட்டுதல் என்று தெரியவில்லை. ஒரு பெண்ணிற்கு வாழ்வு பெற்று கொடுப்பதாக கூறிக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்ணின் வாழ்கையை சிதைப்பதல்லவா இது.
ஒரு பெண்ணின் வாழ்வை கெடுத்தவன் என்று அந்த ஆணுக்கு வேண்டுமானால் தண்டனை கொடுக்கலாம், அப்படிக் கொடுத்தாலும் பாதிப்பு அந்த மனைவிக்கும் அந்த குழந்தைகளுக்கும் தான்...அனைவரையும் அழைத்து யாருக்கும் பாதகம் இல்லாமல் பேசி முடிப்பது ஒன்றுதான் இப்போதைக்கு சரியான ஒன்றாக இருக்க முடியும் ஆனால் இது நடப்பதற்கு ஒரு சதவீதமும் வாய்ப்பு இல்லை என்பதுதான் என் வருத்தம்.

ஒருதலை பட்சமானதா மகளிர் அமைப்புகள், மனித உரிமை கழகங்கள் போன்றவை !!??
மகளிர்க்கு பாதுகாப்பாய் இருக்கவேண்டியது தான் அதற்காக ஒரு பெண் சொல்லிவிட்டால் என்று சம்பந்தப்பட்ட ஆணை மட்டுமே குற்றவாளியாக கூண்டில் நிற்க வைப்பது என்பது தவறான ஒன்று. இந்த பெண் விசயத்தில் அந்த தலைவி நடந்து கொண்ட விதம் மனித உரிமை அமைப்புகள் ,மகளிர் அமைப்புகள் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்ற ஐயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது. கடிவாளம் கட்டிய குதிரையை போல ஒரே திசையை மட்டும் பார்ப்பார்கள் போலும். அவர்களின் ஒரே எண்ணம் அந்த ஆணிடம் இருந்து மாதம் பத்தாயிரத்தை வாங்கி இந்த பெண்ணிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதாக இருந்தது. அதே நேரம் அந்த முதல் மனைவியின் நிலைமையை பற்றிய அக்கறை துளியும் இல்லை. முறையாய் கல்யாணம் முடித்து இரு குழந்தைகளுடன் அந்த பெண் எப்படி வாழ்க்கையை எப்படி சமாளிப்பாள் என்பதை பற்றி சிறிதாவது யோசிக்க வேண்டாமா?
மகளிர் அமைப்பை நாடி வந்த பெண் சிறிதும் குற்றமற்றவள் என்றும் , அவள் கை காட்டும் அத்தனை பேரும் தவறானவர்கள் என்பதை போல பார்க்கும் பார்வையை முதலில் மாற்றுங்கள், இல்லையென்றால் அப்பாவிகள் பலரின் நிலை மிக பரிதாபம் தான்.

மகளிர் அமைப்புகள், சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரித்து யார் மீது உணமையில் தவறு என்பதை ஆராய்ந்தப் பின்னரே ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஆலோசனை கொடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இறங்கி அமைதியாய் சென்றுக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைச் சிதைத்துவிடக் கூடாது.
'அவன விட்டேனா பார், ஒரு வழி பண்ணிடுவேன், கால்ல விழ வைக்கிறேன், ஆம்பளைனா அவ்ளோ திமிரா, இவன மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கிறேன், அவன்கிட பணத்தை வாங்காமல் விட கூடாது' என்பதை போன்ற கூப்பாடுகள் போடும் இடமா மகளிர் அமைப்புகள்...??!!! ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டாள் என்றதும் சம்பந்தப்பட்ட ஆணை எப்படியாவது குற்றவாளி கூண்டில் ஏற்றியே ஆகவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் செயல்பட்டால் அந்த ஆண் நிச்சயம் ஏதோ ஒரு விதத்தில் இறுதியில் குற்றவாளி ஆகிவிடுவான்.
இந்த பெண் விஷயத்தை பொருத்தவரை இந்த பெண்ணிடம் தான் அதிக தவறுகள் இருக்கின்றன. செல்போன் காதலை உண்மை என்று நம்புவதும், திருமணம் ஆனவன் என்று தெரிந்தும் திருமணம்(?) முடித்தது, இறுதியாக அவனது ஆவணங்கள் வைத்துக் கொண்டு மாதம் பத்தாயிரம் பணம் கொடுத்தாக வேண்டும் என்ற ரீதியில் மிரட்டுவதும் அநியாயம்.
ஒருகட்டத்தில் சமாதானமாக போய்விடலாம் என்று சம்பந்தப்பட்ட பெண் முன்வந்தாலும் இவர்கள் விட மாட்டார்கள் போல...ஆண்கள் என்றாலே அயோக்கியர்கள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே மகளிர் அமைப்புகள் செயல்பட்டால் அதன் உதவியை நாடும் பெண்களின் கணவன்/காதலன் குடும்பத்தினரின் நிலை நிச்சயமாக கேள்விக்குறிதான் !!
பின்குறிப்பு
எனக்கு கிடைத்த ஒரு அனுபவத்தின் வைத்து எழுதி இருக்கிறேன். யாரையும் குற்றம் சொல்லவேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம் அல்ல. நிறைகளை சொல்ல பலர் இருப்பதை போல சமூகத்தில் தெரியும் சில குறைகளை நான் சொல்கிறேன் அவ்வளவே! அது எப்படி இப்படி சொல்லலாம் என பெண்ணிய கொடிப் பிடிப்பவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்!
* * * * *

சரியான அலசல்...
ReplyDeleteபாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅந்தப் பெண் ஆவணங்களை எல்லாம் எடுத்து வைத்திருப்பதை பார்க்கும் போது இதை எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டது போல் தெரிகிறது. சரியான நேரத்தில் பிரச்சனையிலிருந்து விலகிய உங்கள் சாதுர்யத்தை பாராட்டுகிறேன். அதே நேரம் அந்தப் பெண்ணுக்கு நல்ல புத்தி சொல்லி அவளை திருத்த முயற்சித்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது..
ReplyDeleteசிறப்பான ஒரு அலசல் இது.
ReplyDelete@@திண்டுக்கல் தனபாலன்...
ReplyDeleteநன்றிகள் சார்.
@@கோவை ஆவி said...
ReplyDelete//அந்தப் பெண் ஆவணங்களை எல்லாம் எடுத்து வைத்திருப்பதை பார்க்கும் போது இதை எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டது போல் தெரிகிறது.//
சில பெண்கள் உஷாராகத்தான் இருக்கிறார்கள்.
//அதே நேரம் அந்தப் பெண்ணுக்கு நல்ல புத்தி சொல்லி அவளை திருத்த முயற்சித்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.//
முழுவதுமாக அந்த தலைவியின் கட்டுப்பாட்டில் இருக்கிறாள். அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்ககூடிய நிலையில் நான் சொல்லும் எதையும் ஏற்க மறுக்கிறாள்.
அதான் வேறு வழியின்றி நான் விலகிவிட்டேன்.
***
நன்றி ஆவி.
@@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி...
ReplyDeleteவாங்க விஜி, நலமா?
***
நன்றிகள் தோழி.
நல்ல அலசல்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
உங்கள் நேர்மையும் மனசாட்சியுடன் செயல்பட்ட விதமும் பாராட்டுக்குரியது...
ReplyDeleteஇது போல விவகாரங்களில் நுழைந்தால் அங்கு கேள்விப்படும் விஷயங்கள் நமக்கு தலை சுற்ற வைக்கும் :-)
ReplyDelete"அப்டி இப்டின்னு கெட்ட வார்த்தைல திட்ட அப்படியே ஆடிப் போயிட்டேன், டக்னு போன்ன கட் பண்ணிட்டேன். ஆனா அவ கேட்டதுல இருந்த நியாயம் புரிந்தது"
எனக்கு இதைப் படித்ததும் "நாடோடிகள்" படத்துல சசிக்குமார் கூறும் "உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு" மாதிரியே இருந்தது :-))
கௌ(க)வுசல்யா நல்ல வேளை திட்டோட தப்பிச்சு வந்தீங்களே!! போன் ல பேசியதால் தப்பித்தீங்க.. நேர்லனா கட்டு போடுற நிலைமை ஆகி இருக்கும் போல :-)
WOW!!!
ReplyDeleteBold Article, keep it up.
இப்பிடியெல்லாம் சிந்திக்கும் பெண்கள் கூட இருக்கிறீர்களா! சிந்திக்க மட்டுமில்லாமல் தெளிவாக எடுத்துரைக்கவும் முடிகிறது உங்களால். மனமார்ந்த வாழ்த்துக்கள்! Keep it up! ஒரே ஒரு வேண்டுகோள்! அடிக்கடி எழுதுங்கள்! எழுப்புங்கள்-அறியாமையினால் வீழ்த்தப்பட்டவர்களை! ஆயிரம் ஆண்களால் திருத்த முடியாத சில பெண்களைக் கூட (ஏன் பல ஆண்களைக் கூடத்தான்!) உங்களை போன்ற ஒரே ஒரு பெண்ணால் நிச்சயம் திருத்த முடியும் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள்!
ReplyDeleteHappy to see still people like you in 2014. Good job. Thanks for sharing your experience
ReplyDelete