திருச்சியில் நான்கு நாள் ட்ரைனிங் ப்ரோகிராம் ஒன்று கடந்த மாதம் 23 லிருந்து 26ம் தேதி வரை நடந்தேறியது. இதனை நடத்தியவர்கள் நாஸ்காம் பவுண்டேஷன் . NASSCOM பற்றி பலருக்கும் தெரிந்திருக்கலாம், National Association of Software and Service Companies. இவர்கள் இதுவரை இதுபோன்ற 34 ஒர்க்சாப் நடத்தி இருக்கிறார்கள். எங்களுக்கு இதில் பங்குபெற வாய்ப்பு கிடைத்து திருச்சி சென்றோம். இந்த ட்ரைனிங் முக்கியமாக NGO'S அதாவது தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள்,
சொசைட்டிகள் போன்றவற்றிற்காக நடத்தப் படுகிறது. அதிலும் புதிதாக
நிறுவனம் ஆரம்பித்தவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
இதில் கலந்துகொள்ள தகுதி என்றால் ஒரு NGO (Non Governmental Organisation) வாகவும் , அடிப்படை கணினி அறிவும் பெற்று இருக்கவேண்டும்.
பொதுவாக தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு என்று இணையத்தில் ஒரு வெப்சைட்டை உருவாக்குவதில் இருந்து, அதன் வடிவமைப்பு, தள இணைப்புகள், நிறுவனம் மேற்கொள்ளும் சேவை குறித்த செயல்களை தங்கள் தளத்தில் இணைப்பது மற்றும் , பயனாளர்கள்,டோனர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது, புதிய தன்னார்வலர்களை இணைப்பது, தன் நிறுவனத்தின் செயல்பாடுகளை உலக அளவில் கொண்டு சேர்ப்ப இன்னும் பல வேலைகளுக்கு இணையத்தை நன்கு கையாளத் தெரிந்த பிறரிடமோ, அல்லது வெப் டிசைனிங் நிறுவனங்களின் உதவியை நாடவேண்டும். இதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டும். ஒவ்வொரு முறை ஒரு ஈவன்ட் முடிந்த பின்னும் அதை அப்டேட் செய்ய மீண்டும் அவர்களிடம் செல்ல வேண்டும். நாஸ்காம் பௌண்டேஷனின் இந்த வொர்க்சாப் இது போன்ற பல வேலைகளை செய்ய வெறும் நான்கு நாட்களில் பயிற்றுவிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறது.
மேலும் கணினி நம் வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்ட இன்றைய நாளில் சமூக பணியில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர்களுக்கு கணினி பற்றிய அறிவு மிக இன்றியமையாதது. முக்கியமாக பண பரிவர்த்தனைகள் பற்றிய கணக்குகளை எப்படி கையாளுவது, டோனர்களிடம் இருந்து உதவிகளை பெறுவது, தன்னார்வலர்களை ஒன்றிணைப்பது என சேவை நிறுவனம் குறித்த அனைத்து பணிகளையும் துரித கதியில் செய்வதற்கு இவர்களின் வழிகாட்டுதல் மிக உதவியாக இருக்கிறது.
இன்னும் சிலவும் பயிற்றுவிக்கபட்டன.
Mr.Karim Padaniya
இந்த ஒர்க்சாப் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும்
Presentation
நான்காவது நாளின் முடிவில் ஒவ்வொருவரும் தனி தனி தலைப்புகளில் பிரசென்டேஷன் கொடுத்தோம். வந்திருந்த அனைவரும் தாங்கள் கற்றதை கணினியில் ப்ரோகிராம் தயார் செய்து அதை விளக்கிய விதம் மிக அருமையாக இருந்தது. presentation கொடுப்பதை பலரும் முதல் அனுபவம் என்று சொன்னாலும், அப்படி தெரியவில்லை என்பதே உண்மை. கணினியில் வடிவமைக்கப்பட்ட தேர்வு ஒன்றையும் அட்டென்ட் செய்தோம். அனைவரின் மார்க் அறிவித்த போது எல்லோருக்கும் அவர்களின் பள்ளி, கல்லூரி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை...!
இறுதியாக பாரதிதாசன் பல்கலைகழகத்தின் துணை வேந்தர்.அவர்கள் அனைவருக்கும் சர்டிபிகேட் வழங்கினார். அதற்கு முன் தனக்கும் நாஸ்காம் பவுண்டேசன் நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி கூறிவிட்டு எங்களுக்கு சில வழிகாட்டுதல்களை மிக உற்சாகமாக கூறினார். அவர் எங்களுக்கு வாழ்த்துக்களை சொல்ல, நாங்கள் நன்றிகளை சொல்ல ட்ரைனிங் முடிவுக்கு வந்தது.
'மிக சுவாரசியமாக சென்ற நான்கு நாட்கள்' இறுதிகட்டத்தை நெருங்கவும் ஏதோ ஒரு உணர்வு நெஞ்சை கவ்வியதை உணர முடிந்தது. பல வயதினர் பல ஊர்கள் பல வாழ்வியல் சூழ்நிலைகள் இருந்தும் ஒரே உணர்வில் நான்கு நாட்களை கடந்தோம் ! நட்புகள் தொடரவேண்டும் என்று செல்பேசி எண்கள், இமெயில் முகவரிகளையும் எங்களுக்குள் பரிமாறி கொண்டு பிரியாவிடைபெற்றோம்.
சில சுவாரசியங்கள்
Presentation
நான்காவது நாளின் முடிவில் ஒவ்வொருவரும் தனி தனி தலைப்புகளில் பிரசென்டேஷன் கொடுத்தோம். வந்திருந்த அனைவரும் தாங்கள் கற்றதை கணினியில் ப்ரோகிராம் தயார் செய்து அதை விளக்கிய விதம் மிக அருமையாக இருந்தது. presentation கொடுப்பதை பலரும் முதல் அனுபவம் என்று சொன்னாலும், அப்படி தெரியவில்லை என்பதே உண்மை. கணினியில் வடிவமைக்கப்பட்ட தேர்வு ஒன்றையும் அட்டென்ட் செய்தோம். அனைவரின் மார்க் அறிவித்த போது எல்லோருக்கும் அவர்களின் பள்ளி, கல்லூரி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை...!
இறுதியாக பாரதிதாசன் பல்கலைகழகத்தின் துணை வேந்தர்.அவர்கள் அனைவருக்கும் சர்டிபிகேட் வழங்கினார். அதற்கு முன் தனக்கும் நாஸ்காம் பவுண்டேசன் நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி கூறிவிட்டு எங்களுக்கு சில வழிகாட்டுதல்களை மிக உற்சாகமாக கூறினார். அவர் எங்களுக்கு வாழ்த்துக்களை சொல்ல, நாங்கள் நன்றிகளை சொல்ல ட்ரைனிங் முடிவுக்கு வந்தது.
அங்கே வந்திருந்த 28 பேரில் ஒருவரும் பிளாக்கர் இல்லை என்பது எனக்கு ஒரு வருத்தம். ஆனா மூன்றாவது நாளில் அந்த வருத்தம் போயே போச்சு. எப்படின்னு யோசிக்கிறீங்களா தொடர்ந்து படிங்க.....
பிளாக் பத்தி யாருக்கும் தெரியுமா என்று Mr.கரீம் கேட்டபோது நான் கை உயர்த்தி 'தெரியும், எழுதி கொண்டு இருக்கிறேன்' என்றேன். 'ஒகே குட்'னு சொல்லிவிட்டு 'உங்க பிளாக் லிங்க் சொல்லுங்க' என்று ப்ரொஜெக்டர் ஸ்க்ரீனில், பிளாக் ஓபன் பண்றதில் இருந்து ஒவ்வொண்ணா விளக்கம் கொடுத்து, போஸ்ட் எழுதி முடிச்சதும், பப்ளிஷ் பண்ணிய போஸ்ட் இப்படி இருக்கும் 'மனதோடு மட்டும்' தளத்தை சுட்டி காட்டினார்.
'மனதோடு மட்டும்'ல இருந்து 'பயணத்திற்காக வரை' உள்ளதை 'இது பிளாக் டைட்டில் இப்படி டாப்ல இருக்கும்' என்றவுடன் நான் திரு திருன்னு ஒரு முழி முழிச்சேன். அதை சரியா நோட் பண்ணிட்டார் போல ! 'எஸ் கௌசல்யா எனித்திங் ராங் ?' நான் 'பஸ்ட் ஒன் இஸ் டைட்டில் அண்ட் செகண்ட் ஒன் இஸ் டிஸ்க்ரிப்ஷன்'னு தயங்கிட்டே சொல்லவும். 'ஓ !ஒகே பைன், கௌசல்யா யு டூ ஒன்திங், பெட்டெர் யு கேன் டேக் திஸ் செஷன், உங்க தாய்மொழில பிளாக் இருக்கிறதால மத்தவங்க புரிஞ்சிக்கிறது ஈசியா இருக்கும்' சொல்ல நான் என் கணவரை பார்க்க அவரோ, 'என்ன பாவம் பண்ணினாங்களோ எல்லோரும்' அப்படின்னு சிக்னல் காட்ட...ம்...நம்ம சைடு இந்த அளவு வீக்கா இருக்கேன்னு நொந்தபடி மெதுவா எழுந்து, உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் ஒருவழியாக சொல்லி(உளறி) முடிச்சேன். சோதனை அதோட முடியல, பிராக்டிகல் நேரத்தில் மறுபடியும் கரீம் சார், 'if anybody have doubt, ask kousalya' கூலா சொல்லிட்டார்.
அப்புறம் என்ன மக்கள் எல்லோரும் பதிவுலக படைப்பாளிகளாக(!) ஆகியே தீருவது என்று முடிவு பண்ணிட்டாங்க. நான் மாத்தி மாத்தி ஒவ்வொருத்தருக்கும் பிளாக் ஓபன் பண்ண ஹெல்ப் செய்கிறேன் என்கிற பேர்ல சுத்தி சுத்தி வந்தேன்...கடைசில ஒரு சிலர் தவிர எல்லோரும் ஓபன் பண்ணிட்டாங்க. ஒரு சிலர் வார்ட்பிரஸ்ல, சிலர் பிளாக்கர்ல. சிலர் அவர்களை பற்றி ஒரு இன்றோ எழுதி போஸ்ட் போட்டுடாங்க. சந்தோசமாக இருந்தது. ஒரு பதிவரும் இல்லையே என்ற ஆதங்கம் இப்ப இத்தனை பேர் பதிவரானதும் போயே போச்சு.
இங்கே நான் ஒன்றை கவனித்தேன்,
* பிளாக்கில நாம எழுதினா மத்தவங்க எப்படி வந்து படிப்பாங்க?
* போஸ்ட் போட்டதும் யார் எல்லாம் வருவாங்க ?
* போன் நம்பர், வீட்டு முகவரி எல்லாம் போடலாமா?
* நாம போஸ்ட் எழுதி வச்சது எத்தனை நாள் வரை இருக்கும் ?!!
இது போன்ற நிறைய கேள்விகளும், எனது ஜிமெயில் ஓபன் செய்த போது, அருகில் இருந்தவர்கள் மெயில் தமிழில் டைப் எப்படி பண்றீங்க என்று கேட்டதும் ஆச்சரியம். இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் ஆபீசில் கம்ப்யூட்டரில் வேலை செய்து வருபவர்கள் !! மேலும் பிளாக் என்ற ஒன்றை பற்றி தெரியாதவர்கள் என்பது ஆச்சர்யம் என்றாலும் இது தான் நிதர்சனம். ஆனால் இது புரிந்தும் பதிவர்கள் என்ற பேரில் நாம (என்னையும் சேர்த்துத்தான் !) பண்ற அலம்பல் கொஞ்ச நஞ்சமா?
நண்பர் ஒருவர் அப்ப அப்ப ஏதாவது குறுக்கு கேள்வி கேட்டு சூழ்நிலையை கககலப்பாக மாற்றினார்.
* Mr.விகாஸ் 'உணவு, தேநீர் உங்களுக்கு ஒகே தானே, ஏதும் குறை இருக்கா?னு கேட்க நண்பர் 'அசைவம் இல்ல, அதுதான் பெரிய குறை' என சொல்ல எல்லோரும் சத்தமா சிரிச்சிட்டோம்.
* ப்ரோபைல்ல ஆணா பெண்ணா என்ற ஆப்ஷன் இருக்குதே நிறுவனம் பேர்ல ஆரம்பிச்சா என்ன போடுறது ?!! (என்னா, ஒரு சந்தேகம் ?!)
* Presentation கொடுக்க வந்த மற்றொருவர், வந்ததும், 'ஆள்காட்டி விரலை தூக்குங்க' என்றதும் நாங்க வேகமா ஆள்காட்டி விரலை உயர்த்தினோம். ஆனா அவர் தூக்கி இருந்ததோ கட்டை விரல் !! இதை கவனிச்சிட்டு நாங்க கேட்க, அவர் நிதானமாக 'எல்லோரின் கவனம் எங்கே இருக்கிறது' என செக் செய்ததாக சொல்ல அசந்துவிட்டோம். எல்லோரின் கவனத்தை தன் பக்கம் திருப்ப அவர் கையாண்ட விதத்தை Mr.கரீம் & Mr.விகாஸ் மிக ரசித்தார்கள் .
* Mr.விகாஸ் 'உணவு, தேநீர் உங்களுக்கு ஒகே தானே, ஏதும் குறை இருக்கா?னு கேட்க நண்பர் 'அசைவம் இல்ல, அதுதான் பெரிய குறை' என சொல்ல எல்லோரும் சத்தமா சிரிச்சிட்டோம்.
* ப்ரோபைல்ல ஆணா பெண்ணா என்ற ஆப்ஷன் இருக்குதே நிறுவனம் பேர்ல ஆரம்பிச்சா என்ன போடுறது ?!! (என்னா, ஒரு சந்தேகம் ?!)
* Presentation கொடுக்க வந்த மற்றொருவர், வந்ததும், 'ஆள்காட்டி விரலை தூக்குங்க' என்றதும் நாங்க வேகமா ஆள்காட்டி விரலை உயர்த்தினோம். ஆனா அவர் தூக்கி இருந்ததோ கட்டை விரல் !! இதை கவனிச்சிட்டு நாங்க கேட்க, அவர் நிதானமாக 'எல்லோரின் கவனம் எங்கே இருக்கிறது' என செக் செய்ததாக சொல்ல அசந்துவிட்டோம். எல்லோரின் கவனத்தை தன் பக்கம் திருப்ப அவர் கையாண்ட விதத்தை Mr.கரீம் & Mr.விகாஸ் மிக ரசித்தார்கள் .
'சமூகத்தில் பலதரப்பட்ட மக்களின் நடுவில்தான் தன்னார்வலர்களின் பெரும்பாலான நேரம் கழியும். நாம் பேசக்கூடிய விசயங்கள், அவர்களை சென்றடைய நமது 'பேச்சுத் திறன்' மிக முக்கியம். கூட்டத்தினரை நம் பக்கம் திருப்ப கூடிய லாவகம் தெரிய வேண்டியதன் அவசியத்தை இவர் புரிய வைத்துவிட்டார்' என்று Mr.காம்ளே வெகுவாக பாராட்டினார்.
* சென்னையில் இருந்து ஒர்க்சாபிற்கு வந்திருந்த திரு.சுப்ரமணி என்பவர் தன் விருப்பத்தின் பேரில் உணவு இடைவேளையில் 'தகவல் அறியும் உரிமை சட்டம்', அதன் முக்கியத்துவம் பற்றி தெளிவாக எடுத்து கூறினார். எங்களின் புரிதலுக்காக என்பதால் தமிழில் சொல்ல தொடங்கினார். உடனே 'ஆங்கிலத்தில் கூறுங்கள் நாங்களும் அறிந்து கொள்கிறோம்' என்று Mr.கரீம் & Mr.விகாஸ் ஆர்வமாக சொல்லவும் பின் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். (பாடம் எடுக்க வந்தவர்களுக்கு, நாங்க பாடமும் எடுப்போம்ல...!)
இப்படி நான்கு நாட்களும் பல விசயங்கள் இடைவெளியின்றி கற்றுக்கொண்டே இருந்தோம்.
திருநெல்வேலியின் பார்வையில் திருச்சி !
என் பசங்களுடன் சென்றதால் ஒவ்வொரு நாள் மாலையிலும் ஊர் சுற்ற கிளம்பிவிடுவோம்.
மலைகோட்டை
உச்சிபிள்ளையார் கோவில் படிஏற மூச்சு வாங்கினாலும் நின்று நின்று மெல்ல உச்சியை அடைந்தோம். அங்கே கம்பீரமாக அமர்ந்திருதார் பிள்ளையார். அங்கிருந்து பார்த்தால் ஊர் விளக்கொளியில் தகதகவென கண்கொள்ளா காட்சி !!
கல்லணை :
கரிகாலன் கட்டிய கல்லணை என்று பசங்களிடம் வரலாற்றை சிறிது நினைவு கூர்ந்தோம். அணையின் கட்டுமானம் பிரமிக்க வைத்தது. இரவில் அந்த பகுதி மிக அற்புதமாக தெரிந்தது.
ஸ்ரீரங்கம் கோவில்
இராமாயாண காவியத்தை கம்பர் அரங்கேற்றிய இடம் இந்த ஸ்ரீரங்கம் என்பதை எண்ணி கோவிலை வலம் வந்தோம். நாங்கள் சென்ற நேரம் உற்சவர் வீதி உலா நடைபெற்றதால் பக்தியுடன் அருகில் கண்டு ரசித்தோம். சுவாமி ரங்கநாதரை பார்க்க இயலவில்லை என்று ஒரு வருத்தம். நடை சாத்திட்டாங்க. (போனதே ராத்திரி,இதில வருத்தம் வேற ?!)
முக்கொம்பு
பகலில் சென்ற ஒரே இடம் . மிக அற்புதமான காவேரி நதி மூன்றாக பிரியும் இடம். ரொம்ப நேரம் அங்கே இருந்தோம்,திரும்பி வர மனமே இல்லை. இங்கிருந்து கல்லணை வரை காவிரி நதியின் அழகை அள்ளி எடுத்து கேமராவில் வைத்துகொண்டோம்.
நீதிமன்றம் பக்கத்தில் இருக்கும் ஐயப்பன் கோவில் போகவேண்டும் என இருந்தோம், நேரம் சரியாக வாய்க்கவில்லை.
ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு விதத்தில் மிக பிடித்திருந்தது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் திரும்பிய பக்கமெல்லாம் நிறைய பெரிய ஹோட்டல்கள் !!
திருச்சி ரோட்ல குறைந்தது ஒரு 200 பேரிடமாவது பேசி இருப்போம். ஸ்ரீனிவாச நகர்(தங்கி இருந்த இடம்) எப்படி போகணும் என்ற ஒரு கேள்வியை மட்டும் ஒரு நாளைக்கு பத்து முறை கேட்டு இருப்போம்,அப்ப மத்த இடங்கள எப்படி விசாரிச்சு இருப்போம்னு பாருங்க !!திருச்சி மக்கள் மிக பொறுமையா லெப்ட், ரைட்,ஸ்ரைட் னு சொன்ன விதம் இருக்கே ! அழகோ அழகு !! முதல் நாள் கேட்ட ஆளிடமே மறுநாளும் கேட்டோமான்னு வேற தெரியல !! எங்க பார்த்தாலும் பாலமா இருக்கு (எது எங்க போகுதுன்னு கண்ணுக்கு தெரிற மாதிரி போர்ட் வச்சா என்ன மக்களே !?) ஆனா அடுத்து முறை திருச்சி போனா நான் நிறைய பேருக்கு வழி சொல்வேன் (அந்த அளவு அனுபவபட்டாச்சு !)
பொதுவா பார்க்கும் போது ஊர்ல குப்பைகள் அவ்வளவா கண்ணுக்கு படல. சுத்தமாக தெரிந்தது. ஆனா மலைகோட்டை போனபோது பயங்கர மழை. அங்க இருக்கிற ரோட்ல தண்ணி நிறைய தேங்கி மக்கள் நடக்கவே முடியல...ரொம்ப கஷ்டபட்டாங்க ! அந்த தண்ணியும் சாக்கடை கலந்த மாதிரி இருந்தது ! அங்கே ஒருத்தரிடம் கேட்டேன், 'மழை பெய்தா இப்படிதான் மத்த நேரம் பிரச்சனை இல்லை' என்றார். மக்களின் இந்த சகிப்புத்தன்மைதான் அரசியல்வாதிகள், அதிகாரிகளை காப்பாற்றி வருகிறது...!!
எங்கே பார்த்தாலும் பசுமை, கம்பீரமாக பாய்ந்து ஓடும் காவேரிநதி,அழகான கட்டிடங்கள், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்,வணிக வளாகங்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோவில்கள், இனிமையாக பழகும் மக்கள் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்......!! மொத்தத்தில் திருச்சி எங்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டது...!
வாழ்க எம்மக்கள் ! வளர்க அவர்தம் பெருமை !!
அருமை!பயிற்சியை விளக்கி,பதிவுலகு வகுப்பைப் பற்றிச் சொல்லி, நகைச் சுவையைதெளித்து,திருச்சியை சுற்றிக்காட்டி--ஒரே பதிவில் இவ்வளவா!
பதிலளிநீக்குமலைகோட்டை, கல்லணை, ஸ்ரீரங்கம் கோவில் (Missing photo)
பதிலளிநீக்குபயிற்சியில் முழுமனதோடு ஈடுபாடோடு
பதிலளிநீக்குகலந்து கொண்டதால்தான் உங்களால்
இவ்வளவு சிறப்பாகப் பதிவைத் தர முடிந்தது
என நினைக்கிறேன்
நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்
த.ம 4
பதிலளிநீக்குஏ யப்பா கவுசல்யா இப்பிடி கலக்குறீங்களே....!!!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கவுசல்யா...
பதிலளிநீக்குஎங்கள் திருச்சியைப்பற்றி எழுதியுள்ளது படிக்க மிகவும் சந்தோஷமாக இருந்தது.
பதிலளிநீக்குவந்த இடத்தில், கிடைத்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு பல புதிய பதிவர்களை உருவாக்கியுள்ள நீங்கள் Really Very Great! தங்களின் followers எண்ணிக்கையும் குப்பென்று கூடியிருக்குமே! வாழ்த்துக்கள்.
//உங்க தாய்மொழில பிளாக் இருக்கிறதால மத்தவங்க புரிஞ்சிக்கிறது ஈசியா இருக்கும்' சொல்ல நான் என் கணவரை பார்க்க அவரோ, 'என்ன பாவம் பண்ணினாங்களோ எல்லோரும்' அப்படின்னு சிக்னல் காட்ட...ம்...//
நல்லதொரு நகைச்சுவை தான்.
http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_24.html திருச்சியைப் பற்றிய இந்த என் பதிவு, தங்களுக்கு கொஞ்சமாவது பயன் பட்டிருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. vgk
To, kousalya ji,
பதிலளிநீக்குWonderful work...
சுவாரஸ்யமான பதிவு
பதிலளிநீக்குWow !!! superb.
பதிலளிநீக்குசுவாரஸ்யமா இருந்தது ஆங்காங்கே உங்கள் ட்ரேட் மார்க் நகைச்சுவையுடன்
திருச்சி ரொம்ப அழகு ,அடுத்த முறை போகணும் .
@@ சென்னை பித்தன்...
பதிலளிநீக்குபதிவு இன்னும் பெரிசா இருந்தது, ரொம்ப யோசிச்சி சுருக்கிடேன் :))
நன்றிங்க.
@@ Alda...
பதிலளிநீக்குpost பெரிசா போய்விட்டது, அதுதான் போடோஸ் நிறைய போடல...
வருகைக்கு நன்றி ஜெயகுமார்.
@@ Ramani...
பதிலளிநீக்குஉங்களின் புரிதலுக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.
தரமான பதிவுகள் நிச்சயம் தொடரும்.
@@ MANO நாஞ்சில் மனோ...
பதிலளிநீக்குஅது எப்படி ஒரே வார்த்தையில் உங்க உற்சாகத்தை, அப்படியே எனக்கும் மாத்திவிட்டுடீங்க ?!! :)
நன்றி மனோ.
@@ வை.கோபாலகிருஷ்ணன்...
பதிலளிநீக்குபதிவில் உங்களை பற்றி குறிப்பிடாமல் விட்டுட்டேன். உங்களின் திருச்சி பற்றிய போஸ்டை படிச்சி 'இதுவரை போனதில்லை, உங்கள் பதிவை படித்தும் அவசியம் திருச்சி போகணும்' என்று முடிவு செய்ததாக பின்னூட்டம் எழுதி விட்டு வந்தேன்.ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைக்கவில்லை.
நீங்கள் எழுதி இருந்தது ஒன்றும் மிகையில்லை என்பதை நேரில் உணர்ந்தேன். ஒவ்வொரு இடம் போகும் போதும் உங்கள் பதிவை நினைத்துக் கொள்வேன்.
//followers எண்ணிக்கையும் குப்பென்று கூடியிருக்குமே! //
அதை ஏன் கேட்குறீங்க, எப்படி பாலோ பண்ணனும் என்று சரியா சொல்லி தராம வந்துவிட்டேன்.:( மூணு பேரு மட்டும் தான் இணைந்தார்கள் என நினைக்கிறேன். :))
உங்களுக்கு என் நன்றிகள் பல.
@@ karim padaniya...
பதிலளிநீக்குi was learned lot from u. And also u encouraging me as well.
thank u very much sir.
@@ middleclassmadhavi...
பதிலளிநீக்குநன்றி தோழி.
@@ angelin...
பதிலளிநீக்குதோழி நலமா ? ரொம்ப நாள் ஆச்சு.
சந்தர்ப்பம் அமைந்தால் திருச்சி சென்று வாருங்கள். அருமையான இடங்கள்.
நன்றி
பயிற்சியில் நாங்களும் ஈடுபட்டதுபோல ஒரு உணர்வு
பதிலளிநீக்குநகையுணர்வோடு அழகிய கட்டுரை.
நானும் உங்களோட சேர்ந்து ஒரு வாழ்க போட்டுக்குறேன். NGOக்கு பொருளே இப்பத்தான் புரியுது.
பதிலளிநீக்குமுகப்புப் படம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குNicely detailed out Kousalya! nice presentation.
பதிலளிநீக்குவணக்கம். எங்கள் சங்கத்துக்கும் இந்த பயிற்சி தேவைப்படுகிறது. எங்கள் சங்கம் 40 படிக்கும் மாணவ இளைஞர்களை கொண்ட ஓர் கூட்டமைப்பாகும்.
பதிலளிநீக்குமுகவரி:
மக்கள் சமூக சேவை சங்கம்,
நியாய விலைக்கடை அருகில்,
மாதப்பூர்,
மாதப்பூர் (அஞ்சல்)-641664,
பல்லடம் (வட்டம்),
திருப்பூர் (மாவட்டம்).
Email : mathapurpssa@gmail.com.
தலைவர்:9698071290
ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சிடிங்க.பயிற்சிக்கும் போன மாதிரி ஆச்சு..திருச்சிய சுத்தி பார்த்தது மாதிரியும் ஆச்சு..
பதிலளிநீக்கு