புதன், ஆகஸ்ட் 3

2:34 PM
42



மந்திரம் என்பது ஆன்மீக வாழ்வுக்கானது என்றாலும் நம் சமூக அமைப்பில் சாதாரணமாகச் சொல்லப்படும் பொதுவான ஒரு மந்திரம் தலையணை மந்திரம் !! இது கணவன் மனைவி இருவரும் தங்களின் தனிமையான நேரத்தில் ரொம்ப ஸ்பெஷலாக அன்னியோனியமாக பேசிக்கொள்வதை குறிக்கிறது! ஆனால் இதன் அர்த்தம் வேறு விதமாக நம்மால் எடுத்து கொள்ளபடுகிறது.

எனக்கு தெரிந்தவரை மாமியார் தனது மருமகளை திட்டுவதற்கு கையாளும் ஒரு வசைச் சொல் என்றே தெரிகிறது. 'தலையணை மந்திரம் போட்டு என் மகனை மயக்கிட்டா ', 'அப்படி என்ன தலையணை மந்திரம் போட்டாலோ,இப்படி மயங்கி கிடக்கிறான் '  இதை சொல்லாத மாமியார்கள் குறைவு.....!! ஆனால் மிக உன்னிப்பாக கவனித்தால் இதன் பொருள் அந்தரங்கம் என்றே வருகிறது. இது எவ்வளவு மோசமான உதாரணம் என்று பலருக்கும் புரிவதில்லை....ஆண்கள் எல்லோரும் அந்த உறவிற்கு மயங்கிவிடுவார்கள் என்றும் அதற்காக பெற்றவளையும் உதாசீனம் படுத்தி விடுவான் என்பதாகத்தானே பொருள்...?! அதுவும் பெற்ற தாயே தனது மகனை அவ்வாறு சொல்வது எந்த விதத்தில் ஏற்புடையது !?

மருமகளை திட்டுவதற்காக கூறப்படும் இந்த வார்த்தை அந்த ஆண்மகனை இழிவுக்குள்ளாக்கும் என்பதை ஏன் யாரும் புரிந்து கொள்வதில்லை ?? 'வீட்டுக்காரனை கைக்குள்ள போட்டுகிட்டா' , 'முந்தானையில் முடிஞ்சிகிட்டா' என்பது போன்றவைகள் பெண்ணை குறை சொல்லணும் என்று பேசபட்டாலும் மறைமுகமாக அங்கே கேலிப் பொருளாக்கப்படுவது பரிதாபத்துக்குரிய ஆண்மை...!!

ஆண்களே ?!

என்னவோ ஆண்கள்  என்றாலே எப்போதும் பெண் சுகத்திற்கு அலைபவர்கள் போலவும், அதைத் தவிர அவர்களின் மூளை வேறு எதையும் சிந்திக்காது என்கிற ரீதியில் ஒரு சில பெண்கள் ஆண்களை நடத்துவது மிகவும் வருந்த தகுந்த ஒன்று.......

ஒவ்வொரு ஆணிற்கும் திருமணம் ஆன புதிதில் சில நாட்கள் மனைவி தேவதையாக தெரியலாம். அந்த தேவதை வரம் கொடுக்காமல்,வரம் கேட்டாலும் கொடுப்பார்கள்....!! இது ஆரம்ப சில மாதங்கள் மட்டுமே.....அடுத்து தொடரும் நாட்களில் மனைவிடம் தன் அம்மாவை தேடுவார்கள்/எதிர்பார்ப்பார்கள் என்பது உண்மையில் இங்கே எத்தனை பெண்களுக்கு புரியும் ?!! அம்மாவின் அன்பும் அரவணைப்பையும் மட்டுமே பெரிதாக என்னும் ஆண்கள் பலர், அதையே மனைவி சிறிதும் குறைவின்றி தரும் போது, அந்த ஆண்மகன் சற்று தடுமாறி போவான். அந்த அன்பில் திளைத்து மூழ்கி முத்தெடுப்பவர்கள் பாக்கியசாலிகள் ! மாறாக எந்த ஆண் மகனும் வெறும் உடல் சுகத்தை மட்டும் பெரிது படுத்தமாட்டான். இது புரியாத அறிவிலிகள் தலையணை மந்திரம் என்று எதையாவது சொல்லி அன்பான தம்பதிகளுக்கிடையே பிரிவினையை, விரிசலை ஏற்படுத்தி விடுகிறார்கள். 

அதனால் கணவன், மனைவி இருவருக்குள் மனப்பொருத்தம் ஏற்பட வழி  இல்லாமல் கெடுக்கக்கூடிய காரணங்கள் பெரும்பாலும் பெண்ணின் பக்கத்தில் இருந்தே தொடங்குகிறது.....அதை பெண்கள் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். திருமணம் முடிந்த பெண்ணிற்கு நல்லது சொல்கிறோம்/செய்கிறோம் என்று வருகிற நலம்விரும்பிகளை(?) முதலில் வெளியே நிறுத்துங்கள்.  

மனைவிகளே !


பிறர் கூறும் கணவனை கைக்குள்ள போட்டுக்கோ, முந்தானையில் முடிஞ்சுக்கோ என்பது போன்ற தவறான பேச்சுக்களை முதலில் காதுகொடுத்து கேட்காதீர்கள் ஒருவேளை சொன்னது உங்கள் தாயாக இருந்தாலுமே...!! தாய் நமக்கு நல்லதுக்கு தானே சொல்வாங்க என்று அப்படியே கேட்டு வைக்காதிர்கள்...அவர்கள் அப்படி சொல்வதின் பின்னணியில் சில கசப்பான அனுபவங்கள் குறிப்பா தன் மாமியார் வீட்டில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் அவர்களை இப்படி பேச வைக்கலாம். 'நாம தான் உசாரா இல்லாம போய்ட்டோம் நம் மகளாவது நல்லா இருக்கட்டும்' என்று ஒரு நல்ல எண்ணத்தில் சொல்லலாம். ஆனால் நீங்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை வேறு. கணவன் மனைவி இருவருமே படித்து வேலைக்கு செல்லக்கூடிய இன்றைய தம்பதிகளின் நிலை வேறு.

இருவருமே பொருளாதார ரீதியிலான ஒரு தேடலில் தீவிரமாக போய்  கொண்டிருக்கும் போது...இந்த மாதிரி தலையணை மந்திரம், கணவனை தன் வழிக்கு கொண்டு வரணும் என்று ஈடுபடக்கூடிய இத்தகைய செயல் ஒரு நயவஞ்சக எண்ணம் போல் சென்று, மனதில் எப்போதும் ஒரு இறுக்கமான நெருக்கடியை கொடுத்துவிட கூடிய ஆபத்து இருக்கிறது. அதை முற்றியும் தவிர்த்து அந்தரங்கமான நேரத்தில் இனிமையான நினைவுகளை பரஸ்பரம் பரிமாறி ஒரு தெளிந்த நீரோடை போன்று மனதை வைத்துக்கொண்டு உறவில் ஈடுபடும் போது அங்கே தாம்பத்தியம் மிக அழகாக அற்புதமாக நிறைவு பெறும். மறுநாள் காலை இருவருமே உற்சாகமாக, புது புத்துணர்ச்சியுடன் துயில் எழுவார்கள்...அப்புறம் என்ன, அன்றைய பகல் பொழுது முழுவதுமே அதே புத்துணர்ச்சி தொடரும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ...?!!


ஒரு சர்வே : 


" நகரத்தில் வாழும் 44 சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம குறைந்து கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களிலும் 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள் !!"  


சர்வே வேற இப்படி சொல்லுது...!! நிலைமை இப்படி இருக்க, தலையணை மந்திரம் அப்படி இப்படின்னு எதையாவது முயற்சி செய்து(?) இருந்ததும் போச்சு... அப்படின்ற நிலைக்கு கொண்டு வந்திடாதிங்க...!!

சரி இருக்கட்டும்...தவறாமல் மனைவியுடன் உறவு வைத்து கொள்பவர்கள், என்ன சொல்றாங்க... அதையும் பாப்போம்.....


"எங்கள் வேலைகளிலேயே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம்.  வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறாள். அப்படி ஒரு எண்ணம் மனைவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்து கொள்கிறோம் " 


இது ஏதோ சுவாரசியத்துக்காக எழுதப்பட்டதில்லை...சர்வேயில் சொல்லப்பட்ட தகவல்கள். இன்றைக்கு பல வீடுகளில் இருக்ககூடிய நிதர்சனம் !!



'தலையணை மந்திரம்' இனி இப்படி போடுங்க...!!


* மனதில் சுமப்பதால் நீங்களும் ஒரு தாய்தான். உங்கள் அன்பான அரவணைப்பில் அவரை குழந்தையாய் மாற்றுங்கள்...! அப்புறம் எங்கிருந்து வரும் பிரச்சனை ??!! அதனால் பாசத்தை காட்டும் விதத்தில் ஒரு தாயாய் !!

* அவரது குறைகளை மட்டுமே பெரிசு படுத்தி வாதாடாமல் நிறைகளை சொல்லி ஊக்கபடுத்துங்கள் ஒரு சகோதரியாய் !!

*  கணவர் சோர்ந்து போகும் நேரம் தோளில் தாங்குங்கள் ஒரு தோழியாய் !!

* குடும்பம்/தொழில்/வேலை இவற்றில் பிரச்சனை ஏற்பட்டால் உங்களுக்கு தெரிந்த நல் ஆலோசனைகளை சொல்லுங்கள் ஒரு மந்திரியாய் !!

* எல்லாவற்றிற்கும் பிறகு தனியறையில் நடந்துகொள்ளுங்கள்...முழுமை அடைந்த மனைவியாய் !!

கணவன் தன்னை புரிந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நீங்கள் முதலில் அவரை புரிந்துகொள்ளுங்கள். கணவனின் ஆசைகள், தேவைகள், உரிமைகள் என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வது தான் புரிதல். குடும்பத்தில் யார் பேச்சை யார் கேட்கணும் என்று எடை போட்டு பார்த்து கொண்டிராமல் இருவரும் ஒருவர் பேச்சை ஒருவர் மதித்து செல்வது நல்லது. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

அனைத்தையும் விட ஒருவரை ஒருவர் உண்மையாக நேசியுங்கள், பாசாங்கு இருக்ககூடாது...!! 

பிறரின் தேவையற்ற ஆலோசனைகளை கேட்டு அதன் படி நடந்து மனவிரிசலை  ஏற்படுத்தி கொள்வதை விட இங்கே குறிப்பிட்ட இந்த மந்திரங்களை பின் பற்றுங்கள்...கணவன் உங்களையே சுற்றி வருவார்...! அன்பால் சாதிக்க முடியாததை வேறு எதை கொண்டு சாதித்தாலும் அவை எல்லாம் வெறும் கானல் !!

                                           **********************************


பின் குறிப்பு 


தாம்பத்தியம் பற்றிய தொடரின் 25 வது பாகம் இது ! இந்த தொடர் முதலில் ஒரு பத்து பாகத்துடன் முடிந்துவிடும் என எண்ணி எழுத தொடங்கினேன் . வாசகர்களாகிய உங்களின் அன்பான ஆதரவினால் இது இன்னும் பல பாகங்களை தொடரும் என்று நினைக்கிறேன்...! என்னை தொடர்ந்து எழுத வைக்கும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... 


                                         ***********************************

Tweet

42 கருத்துகள்:

  1. 25 வது தொடர் பாகம்..... வாழ்த்துக்கள்! விரைவில் புத்தகம் வரும்னு சொல்லுங்க....

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. //கணவனின் ஆசைகள், தேவைகள், உரிமைகள் என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வது தான் புரிதல். //

    //தாயாய், சகோதரியாய், தோழியாய், மந்திரியாய், மனைவியாய் நடந்து கொள்ளுங்கள்//

    //அன்பால் சாதிக்க முடியாததை வேறு எதை கொண்டு சாதித்தாலும் அவை எல்லாம் வெறும் கானல் !!//

    மிகச்சரியாக சொல்லி விட்டீர்கள்.
    இருதரப்பிலும் முழுவதும் அன்பும் அரவணைப்பும், ஆறுதலும் தரப்பட வேண்டும். அதுவே வாழ்வின் முழு வெற்றிக்கு வழி வகுக்கும்.

    நல்ல பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தலையணை மந்திரத்தை தெரிந்துக்கொண்டேன்... அன்பு ஒன்றே அத்தனையும் ஆளக்கூடியது என்று அற்புதமாக மன இயல் பாடமாக சொல்லியுள்ளீகள்.... ஆஹா... பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்களுடன் நன்றி

    பதிலளிநீக்கு
  5. அனைத்தையும் விட ஒருவரை ஒருவர் உண்மையாக நேசியுங்கள், பாசாங்கு இருக்ககூடாது...!! //

    எனக்கு மிகவும் பிடித்த வரி இதுதான்.இது சாதாரண வரி அல்ல. மிகவும் சக்தி வாய்ந்த வரிகள்.இந்த முழு பதிவின் அர்த்தத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரே வரி. சூப்பர் மேடம். ஆனா இந்த மாதிரி மந்திரம் எல்லாம் நான் சினிமா படத்தில் தான் பார்த்திருக்கிறேன். எங்கள் குடும்பங்களில் நல்லவேளையாக இது இல்லை.

    பதிலளிநீக்கு
  6. 25 ஆவதுன் பதிவு வந்துவிட்டதா. வாழ்த்துகள் கௌசல்யா. மனத்துக்க் இதமன உண்மைகளை அருமையாக எடுத்துச் சொல்கிறீர்கள்.
    முடிந்தவரை படிக்க முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. தொடர்ந்து எழுதி அசத்துங்க கவுசல்யா வாழ்த்துக்கள்....!!!

    பதிலளிநீக்கு
  8. @@ Chitra...

    //விரைவில் புத்தகம் வரும்னு சொல்லுங்க....//

    முதலில் தொடரை நல்லவிதமாக நிறைவு செய்யணும் தோழி...ஆனா இருக்கிற நிலைமைய பார்க்கிறப்போ எனக்கு மருமகள் வரும் வரை தொடர் தொடரும் போல...! :))

    உங்களின் முதல் பின்னூட்டம் என் தளத்தில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு சித்ரா. மகிழ்ச்சியுடன் நன்றிகள் .

    பதிலளிநீக்கு
  9. @@ FOOD said...

    //எங்களைத் தொடர்ந்து படிக்க வைக்கும் அளவில் எழுதும் உங்களுக்கும் நன்றி.//

    ரொம்ப நன்றி அண்ணா...உங்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் எனக்கு பலம்.

    பதிலளிநீக்கு
  10. @@ வை.கோபாலகிருஷ்ணன் said...

    //இருதரப்பிலும் முழுவதும் அன்பும் அரவணைப்பும், ஆறுதலும் தரப்பட வேண்டும். அதுவே வாழ்வின் முழு வெற்றிக்கு வழி வகுக்கும்.//

    உண்மைதான். மொத்த வாழ்வின் வெற்றியின் சூட்சமமே பரஸ்பர அன்பில் தான் இருக்கிறது. தம்பதிகள் இதை புரிந்து நடந்துகொண்டால் குடும்பத்தில் பிரச்சனை என்பது எது ?

    கருத்திற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  11. @@ கே. ஆர்.விஜயன் said...

    //ஆனா இந்த மாதிரி மந்திரம் எல்லாம் நான் சினிமா படத்தில் தான் பார்த்திருக்கிறேன்.//

    தொலைக்காட்சி சீரியலிலும் பார்க்கலாமே ! :))

    இது போன்ற தவறான ஆலோசனைகள் சில வீடுகளில் நடக்கிறது...

    //எங்கள் குடும்பங்களில் நல்லவேளையாக இது இல்லை.//

    நல்லது.மகிழ்கிறேன் விஜயன்.

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  12. @@ மாய உலகம் said...

    //தலையணை மந்திரத்தை தெரிந்துக்கொண்டேன்... அன்பு ஒன்றே அத்தனையும் ஆளக்கூடியது என்று அற்புதமாக மன இயல் பாடமாக சொல்லியுள்ளீகள்...//

    உங்களின் புரிதலுக்கு மிக்க நன்றிகள். தொடரும் உங்களின் வருகைக்கு மகிழ்கிறேன்

    பதிலளிநீக்கு
  13. @@ வல்லிசிம்ஹன் said...

    //25 ஆவதுன் பதிவு வந்துவிட்டதா. வாழ்த்துகள் கௌசல்யா. மனத்துக்க் இதமன உண்மைகளை அருமையாக எடுத்துச் சொல்கிறீர்கள்.
    முடிந்தவரை படிக்க முயல்கிறேன்.//

    வாழ்த்துக்கு நன்றிங்க. நேரம் கிடைக்கும் போது படியுங்கள்...நீங்கள் படிக்கிறேன் என்று சொன்னது எனக்கு மிக்க மகிழ்ச்சி

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  14. @@ MANO நாஞ்சில் மனோ said...

    //தொடர்ந்து எழுதி அசத்துங்க //

    உங்களின் உற்சாகமான வார்த்தைக்கு நன்றிகள் மனோ.

    பதிலளிநீக்கு
  15. ஒவ்வொரு ஆணிற்கும் திருமணம் ஆன புதிதில் சில நாட்கள் மனைவி தேவதையாக தெரியலாம். அந்த தேவதை வரம் கொடுக்காமல்,வரம் கேட்டாலும் கொடுப்பார்கள்....!! இது ஆரம்ப சில மாதங்கள் மட்டுமே.....அடுத்து தொடரும் நாட்களில் மனைவிடம் தன் அம்மாவை தேடுவார்கள்/எதிர்பார்ப்பார்கள் என்பது உண்மையில் இங்கே எத்தனை பெண்களுக்கு புரியும் ?!! அம்மாவின் அன்பும் அரவணைப்பையும் மட்டுமே பெரிதாக என்னும் ஆண்கள் பலர், அதையே மனைவி சிறிதும் குறைவின்றி தரும் போது, அந்த ஆண்மகன் சற்று தடுமாறி போவான். அந்த அன்பில் திளைத்து மூழ்கி முத்தெடுப்பவர்கள் பாக்கியசாலிகள் ! மாறாக எந்த ஆண் மகனும் வெறும் உடல் சுகத்தை மட்டும் பெரிது படுத்தமாட்டான்.



    உண்மையான வார்த்தைகள் .
    இதனை மனைவி உணர்ந்தால் இல்வாழ்க்கை இனிக்கும்

    பதிலளிநீக்கு
  16. உண்மைதான் கௌசி.தாய்க்குப் பின் தாரம் என்று பெரியோர்கள் சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்.மிகவும் அவசியமான பதிவு !

    பதிலளிநீக்கு
  17. அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்

    அன்பினை அடிப்படையாய் கொண்டதுதான் வாழ்க்கை
    என அருமையான தொடர் பதிவில் அழகாக விளக்கி இருக்கிறீர்கள்.
    அழகு.

    http://www.ilavenirkaalam.blogspot.com/

    பதிலளிநீக்கு
  18. உண்மைகளை அருமையாக எடுத்துச் சொல்கிறீர்கள்.வாழ்த்துக்கள்
    கௌசல்யா.

    பதிலளிநீக்கு
  19. நல்லா எழுதி இருக்கீங்க கௌசல்யா , உங்கள் சட்ட திட்டங்களுக்குள் கட்டுப்படாமல், மனைவியின் அன்பையே , அவள் மேல் காட்டும் அதிகாரத்திற்கு அனுமதிச் சீட்டாய் பயன்படுத்தும் ஆண்களின் முன் அந்தப் பாவம் பெண்களின் அன்பு தோற்றுப் போகிறது.
    All rules have exceptions.

    பதிலளிநீக்கு
  20. விவாகரத்துகள் பெருகிக்கொண்டிருக்கும் இந்த நாளில் அவசியமான பதிவு.
    நல்ல அறிவுரைகள்
    அருமை

    பதிலளிநீக்கு
  21. கணவன் மனைவி உறவுகள் பற்றி மிகவும் அருமையாகவும் சுவாரசியமாகவும் பதிவு செய்து வருகிறீர்கள் பாராட்டுகளும் நன்றிகளும் பல...

    பதிலளிநீக்கு
  22. //இந்த தொடர் முதலில் ஒரு பத்து பாகத்துடன் முடிந்துவிடும் என எண்ணி எழுத தொடங்கினேன் . வாசகர்களாகிய உங்களின் அன்பான ஆதரவினால் இது இன்னும் பல பாகங்களை தொடரும் என்று நினைக்கிறேன்...///

    25 ஆவது தொடருக்கு வாழ்த்துக்கள் மேம்!
    தொடர்ந்து எழுதுங்க...

    பதிலளிநீக்கு
  23. இந்தத் தலைப்பில் இத்தனை எழுதிவரும் உங்கள் உழைப்பும் தீவிரமும் வியப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பெண்களை விரும்பும் வயது வந்த ஆண்கள், எனக்கென்னவோ பெண் சுகத்தை விரும்பாத நேரமே கிடையாது என்றுதான் தோன்றுகிறது :) தலையணை மந்திரமாக இருந்தால் என்ன வேறு மந்திரமாக இருந்தால் என்ன - இதில் ஆண்களுக்கு கேலியோ குறையோ இருப்பதாக எண்ணுகிறீர்களா? ஏன்?

    (தலையணை மந்திரம் தலைப்பு pillow talk என்ற பழைய ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை நினைவுபடுத்தியது. ஏறக்குறைய இதே கருதான். இது போன்ற எளிமையான கதைகளோ படங்களோ வருவதில்லை :)

    பதிலளிநீக்கு
  24. @@ M.R said...

    //உண்மையான வார்த்தைகள் .
    இதனை மனைவி உணர்ந்தால் இல்வாழ்க்கை இனிக்கும்//

    மனைவிக்கு இதை உணர வைக்கணும் என்பதை ஆண்கள் புரிந்துகொண்டால் நல்லது. :)

    கருத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  25. @@ ஹேமா said...

    //தாய்க்குப் பின் தாரம் என்று பெரியோர்கள் சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்//

    உண்மைதான் ஹேமா...! நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  26. @@ மகேந்திரன் said...

    //அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்

    அன்பினை அடிப்படையாய் கொண்டதுதான் வாழ்க்கை//

    உங்களின் முதல் வருகை என நினைக்கிறேன். கருத்திற்கும், வருகைக்கும் நன்றி மகேந்திரன்

    பதிலளிநீக்கு
  27. @@ S Maharajan said...

    //உண்மைகளை அருமையாக எடுத்துச் சொல்கிறீர்கள்.//

    நன்றி நண்பரே...ஆமாம் எப்போ ஊருக்கு வர போறீங்க...? :)

    பதிலளிநீக்கு
  28. @@ நாய்க்குட்டி மனசு said...

    // உங்கள் சட்ட திட்டங்களுக்குள் கட்டுப்படாமல், மனைவியின் அன்பையே , அவள் மேல் காட்டும் அதிகாரத்திற்கு அனுமதிச் சீட்டாய் பயன்படுத்தும் ஆண்களின் முன் அந்தப் பாவம் பெண்களின் அன்பு தோற்றுப் போகிறது.
    All rules have exceptions.//

    இது இருக்கலாம் சில வீடுகளில், ஆனால் அதற்காக பெண் தனது இயற்கை குணமான அன்பு காட்டுதலை கை விட்டுவிட கூடாது...

    உண்மையான அன்பு ஒருபோதும் தோற்காது அக்கா ! வயதான காலத்தில் இந்த அன்பு எவ்வளவு முக்கியம் என்பது அப்படி பட்ட ஆண்களுக்கு புரியும். ஆனால் என்னவொன்று காலம் கடந்த ஞானம் !?

    ஆண்களில் சில விதிவிலக்குகள் இருக்கலாம், அன்பில் இல்லை.

    கருத்திற்கு நன்றி அக்கா !

    பதிலளிநீக்கு
  29. @@ DRபாலா said...

    //விவாகரத்துகள் பெருகிக்கொண்டிருக்கும் இந்த நாளில் அவசியமான பதிவு.//

    உங்களின் வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிங்க டாக்டர் பாலா.

    பதிலளிநீக்கு
  30. @@ மாணவன் said...

    //கணவன் மனைவி உறவுகள் பற்றி மிகவும் அருமையாகவும் சுவாரசியமாகவும் பதிவு செய்து வருகிறீர்கள்//

    இந்த தொடர் எனது சுவாசம் மாணவன். அதனால் சுவாரசியம் கொஞ்சம் இருக்கலாம். :)

    வாழ்த்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  31. @@ அப்பாதுரை said...

    //இந்தத் தலைப்பில் இத்தனை எழுதிவரும் உங்கள் உழைப்பும் தீவிரமும் வியப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.//

    இந்த தொடர் எழுத ஆத்மார்த்தமான ஒரு காரணம் இருக்கிறது சகோ. அதுதான் என்னை எழுதவைத்து கொண்டிருக்கிறது...

    //பெண்களை விரும்பும் வயது வந்த ஆண்கள், எனக்கென்னவோ பெண் சுகத்தை விரும்பாத நேரமே கிடையாது என்றுதான் தோன்றுகிறது :)//

    இதை நான் முழுதாய் ஒத்துக்கொள்ள மாட்டேன்...இதில் (உறவில்,காமம் )முழுமை அடையாத ஆண்கள் வேண்டுமானால் அப்படி இருப்பார்கள், ஆனால் முழுமை அடைந்தவர்களுக்கு இது ஒரு சாதாரண நிகழ்வு அவ்வளவே !!

    அப்படி முழுமை அடைந்தவர்கள் ஒருவரும் இல்லை என்று மறுபடியும் சொல்லி விடாதீர்கள் சகோ :))

    //தலையணை மந்திரமாக இருந்தால் என்ன வேறு மந்திரமாக இருந்தால் என்ன - இதில் ஆண்களுக்கு கேலியோ குறையோ இருப்பதாக எண்ணுகிறீர்களா? ஏன்?//

    உண்மையில் இது ஆண்களை கேலிக்கு உள்ளாக்கும் ஒன்றே...அனுபவத்தில் உறவினர்கள் வீட்டில் கவனித்து இருக்கிறேன், அந்த பெண்மணிகள் தங்கள் வீட்டு ஆண்களை மிக கேவலமாக விமர்சித்து சொல்வார்கள். அவர்களின் அந்த வார்த்தைகள் தான் நான் இந்த தலைப்பில் எழுத காரணம். இதை வைத்து பெரிய சண்டைகள் வந்திருக்கிறது, ஏன் ஒரு விவாகரத்துகூட ?!

    (அதை எல்லாம் பகிரவேண்டும் என்றால் வேறு ஒரு தொடர் தொடங்க வேண்டும் சகோ ) :)

    //(தலையணை மந்திரம் தலைப்பு pillow talk என்ற பழைய ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை நினைவுபடுத்தியது. ஏறக்குறைய இதே கருதான். இது போன்ற எளிமையான கதைகளோ படங்களோ வருவதில்லை :)//

    நம் மக்களுக்கு இது போன்ற கதைகள் அதிக சுவாரசியத்தை தருவதில்லை போலும்.

    சகோ உங்களின் கருத்துரை வந்தபின்னே எனது பதிவு முழுமை பெறுவதாக ஒரு உணர்வு எனக்கு. என் பதிவில் ஏதும் குறை இருப்பினும் அதை எனக்கு சுட்டி காட்ட வேண்டுமாய் வேண்டுகோள் வைக்கிறேன். சரிங்களா ?!

    நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  32. அருமையானதொரு தொடரின் 25வது பாகம்... வாழ்த்துக்கள்.
    தொடருங்கள்...

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  33. தலையணை மந்திரத்தின் பெண்பால் என்ன? 'மனைவியைக் கட்டிப்' போட்டு வைக்கும் வசியத்தினால் பெண்களுக்கு கேலிக்குரியவர்கள் என்றே தோன்றுகிறது. திருமணத்துக்கு முன் உடல் சுகம் பழகாத ஆண்களுக்கு (பெண்களுக்கும்) புதிதாய்க் கிடைத்த அனுபவத்தின் போதை பழைய உறவுகளை சற்று பின்தங்கச் செய்வது இயற்கை. உடல்சுகத்தை விடுங்கள் - நிறைய பேர் மனதளவில் கூட ஒன்றுவதில்லை திருமணத்துக்கு முன். பழைய தமிழ்ப் பழக்கம் இப்படியல்ல. தலையணை மந்திரத்துக்குத் தேவையே இல்லாதிருந்தது பழைய தமிழ் நூல்களைப் படிக்கும் பொழுது (இறையிலக்கியங்களிலும்) புரிகிறது.

    நீங்கள் சொல்லியிருப்பது போல் 'புதுமை' தொலைந்ததும் மனைவி/கணவன் உறவு தொய்ந்து போனால் - தலையணை மந்திரம் சரியாகச் சொல்லவில்லை என்று பொருளா அல்லது அந்தப் புதுமையின் குறுகிய கால அளவைக் கூடப் பொறுக்க இயலாது பழிசொல்லும் சிறுமையா?

    (பொதுவில் சொல்கிறேன் - கணவன் கட்சிக்கும் பொருந்தும்) மனைவியையும் அவள் குடும்பத்தினரையும் ஏளனம் செய்வது, மனைவியை போகப் பொருள்/வேலை எந்திரம் என நடத்துவது, இன்னும் அறிவு குறைந்தவர்களிடையே காணப்படும் கூச்சல்/அடிதடி/ஏச்சு இவற்றை விடவா தலையணை மந்திரம் கேலிக்குரியதாகிறது? தலையணை மந்திரம் என்ற ஜாடிக்குள் இருக்கும் கவர்ச்சி - நல்லுணர்வுகளின் தீவிர வெளிப்பாடு தானே? தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நிலைக்கும் சக்தி இருந்தால் திருமண உறவுகள் செழிக்குமோ?

    தனித்தொடர் எழுத வேண்டும் என்கிறீர்கள். நிறைய பேர் கையாளத் தயங்கும் கருத்துக்கள் இவை - சுவாரசியமாக எழுதுகிறீர்கள் - நீங்களே எழுதுங்களேன்?

    பதிலளிநீக்கு
  34. @@ அப்பாதுரை said...

    // திருமணத்துக்கு முன் உடல் சுகம் பழகாத ஆண்களுக்கு (பெண்களுக்கும்) புதிதாய்க் கிடைத்த அனுபவத்தின் போதை பழைய உறவுகளை சற்று பின்தங்கச் செய்வது இயற்கை.//

    உண்மைதான்

    //உடல்சுகத்தை விடுங்கள் - நிறைய பேர் மனதளவில் கூட ஒன்றுவதில்லை திருமணத்துக்கு முன். //

    எனக்கு புரியல அது என்ன திருமணத்துக்கு முன் ?!

    //நீங்கள் சொல்லியிருப்பது போல் 'புதுமை' தொலைந்ததும் மனைவி/கணவன் உறவு தொய்ந்து போனால் - தலையணை மந்திரம் சரியாகச் சொல்லவில்லை என்று பொருளா அல்லது அந்தப் புதுமையின் குறுகிய கால அளவைக் கூடப் பொறுக்க இயலாது பழிசொல்லும் சிறுமையா?//

    ஒருவேளை உறவு தொய்ந்து போனாலும் பிடிச்சி நிறுத்துவது அன்னையை போன்ற அன்பை தருவது தான் என்ற கருத்தை வலியுறுத்த அவ்வாறு சொல்லப்பட்டது. அதனால் தலையணை மந்திரம் சரியாக போட பட்டால் தான் ஒரு ஆண் தன்னை நேசிப்பான் என்கிற மனப்பான்மையை ஒரு சில பெண்கள் மாற்றி கொள்ளவேண்டும் என்பதற்காகவும் சொன்னேன்.

    //(பொதுவில் சொல்கிறேன் - கணவன் கட்சிக்கும் பொருந்தும்) மனைவியையும் அவள் குடும்பத்தினரையும் ஏளனம் செய்வது, மனைவியை போகப் பொருள்/வேலை எந்திரம் என நடத்துவது, இன்னும் அறிவு குறைந்தவர்களிடையே காணப்படும் கூச்சல்/அடிதடி/ஏச்சு இவற்றை விடவா தலையணை மந்திரம் கேலிக்குரியதாகிறது?

    எனது தொடரில் அந்தரங்கம் என்ற தலைப்பின் கீழ் தலையணை மந்திரம் என்பது வருகிறது...இனி தொடரும் பதிவுகளில் மனைவிகளின் பிரச்சனைகள் பற்றி எழுத உள்ளேன். அதில் நீங்கள் இங்கே குறிப்பிட்டவை அவசியம் இடம் பெறும் சகோ.

    ///தலையணை மந்திரம் என்ற ஜாடிக்குள் இருக்கும் கவர்ச்சி - நல்லுணர்வுகளின் தீவிர வெளிப்பாடு தானே? தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நிலைக்கும் சக்தி இருந்தால் திருமண உறவுகள் செழிக்குமோ?//

    இந்த தலையணை மந்திரம் ஒரு பதிவு போதும் என்று இருந்தேன், இங்கே நீங்கள் கேட்டதை பார்க்கும் போது அடுத்து ஒரு பதிவு எழுத முடிவு செய்துவிட்டேன். இந்த இரண்டுவரியில் அவ்ளோ மேட்டர் எனக்கு கிடைத்துவிட்டது :)) அதற்காக நன்றிகள் சகோ.

    //தனித்தொடர் எழுத வேண்டும் என்கிறீர்கள். நிறைய பேர் கையாளத் தயங்கும் கருத்துக்கள் இவை - சுவாரசியமாக எழுதுகிறீர்கள் - நீங்களே எழுதுங்களேன்?//

    சமயம் வாய்க்கும் போது அவசியம் எழுதுகிறேன், சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை மாற்றி !

    விரிவான கருத்துரைக்கு மகிழ்கிறேன் சகோ.

    பதில் கொடுக்க தாமதமாகி விட்டது. பொறுத்தருளவும்

    பதிலளிநீக்கு
  35. //:)) அதற்காக நன்றிகள் சகோ.

    ஏதோ என்னால ஆனது.. ஹிஹி.

    பதிலளிநீக்கு
  36. தலையணை மந்திரமா தெரியாது - மண நெருக்கத்தைப் புதுப்பிப்பது பற்றிய ஒரு பார்வையில் எழுதிய சிறுகதை இங்கே. நேரம் கிடைக்கும் பொழுது படியுங்களேன்?

    பதிலளிநீக்கு
  37. நல்ல பதிவு.பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்களுடன் நன்றி

    பதிலளிநீக்கு
  38. துளசிதரன் : யாருமே சொல்லத் தயங்கும் ஒரு தலைப்பை வைத்துத் தொடராக எழுதி வருகின்றீர்கள் சகோ. அருமை. நானும் தோழி கீதாவும் எழுதி வருகின்றோம் எங்கள் தளத்தில். வாழ்த்துகள்...

    தோழி முதலில் குடோஸ். நான் அடிக்கடிச் சொல்லும் விஷயங்களை நீங்கள் பதிவாக்கிவிட்டீர்கள். நான் எழுதியதில்லை அவ்வளவே. டிட்டோ...தங்கள் கருத்துகளுடன்.

    ஒன்றே ஒன்று. தலையணை மந்திரம் என்பது இருவரையுமே கேலிக்குள்ளாக்குவது என்றும் இருவருமே அங்கு தரக்குறைவாகப் பேசப்படுகின்றார்கள் என்பதே. இரு மனித உள்ளங்களை இப்படித் தரக்குறைவாகப் பேசுவது என்பது, ஆண்டாண்டு காலமாக உறவில் இருக்கும் மனிதகுலமும், அனுபவமிக்க மூத்தோர்களுமே இப்படிச் சொல்லுவது நம் சமூகத்தின் புரிதலை அதாவது நம் சமூகம் இன்னும் அந்த அளவிற்கு மெச்சூர் ஆகவில்லை என்பதையே குறிக்கின்றது இல்லையோ? இதைப் பற்றிப் பேச நிறைய இருக்கின்றது...இங்கு அது பதிவு போல் நீண்டு விடும் என்பதால் நிறுத்திக் கொள்கின்றேன் தோழி. ஆனால் அருமையாகப் பதிவிடுகின்றீர்கள். எனது மனக் கருத்துகளை அப்படியே....ஏதோ நாம் இதைப் பற்றி முன்பே பேசியது போல....

    பாராட்டுகள் வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  39. நல்ல விசயங்கள் கூறிருக்கிறார்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  40. நல்ல விசயங்கள் கூறிருக்கிறார்கள் நன்றி

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...