வெள்ளி, மார்ச் 18

பிற்பகல் 7:59
21



ஜப்பானில் அணு உலை விபத்து நிகழ்ந்து அதன் மூலம் உலகின் பல  நாடுகளிலும் கதிரியக்கம் பரவுவதாக பல வதந்திகள் வலம் வருகின்றன. மீடியாக்கள் தங்கள் பங்குக்கு எதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கணும் என்பதை விடுத்து திரித்து சில செய்திகளை மட்டும் பெரிதாக்கி வெளியிட்டு வருகின்றன. வழக்கம் போல மக்கள் இப்போ அரசியல்வாதிகள் பண்ணும் கூட்டணி கூத்துக்கு சிரிக்கவா ? இந்த கதிரியக்கம் பற்றி கவலைபடுவதா என்ற யோசனையில் இருக்கிறார்கள். அரசியல் குழப்பத்தை தெளிவு படுத்த என்னால் இயலாது ஆனால் இந்த கதிரியக்கம் பற்றி எனக்கு வந்த ஒரு முக்கிய தகவல்களை உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது என் கடமை. அதாங்க விழிப்புணர்வு. தொடர்ந்து பதிவை படியுங்கள்...உங்களுக்கு வேறு தகவல் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.  

ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்துவிட்டால் போதும், அதைப்பற்றிய பல புரளிகளை கிளப்பிவிட்டுவிட்டு மக்களை குழப்பத்திலும், தேவையற்ற சஞ்சலங்களிலும் ஆழ்த்துவதில்தான் நம்மவர்களுக்கு எவ்வளவு இன்பம்?! இப்படித்தான் 2000 ஆண்டு உலக அழிவுன்னு சொன்னாங்க, அப்புறம் மிகச்சமீபத்துல 2012, 21 டிசம்பர் அன்றைக்கு உலகம் அழியப்போகுதுன்னு ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு அது இன்னும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில இப்போ அணு உலை பாதிப்புகளால் நிலைகுலைந்துபோயுள்ள ஜப்பான். அணு உலை இருக்கும் கட்டிடங்களின் கூரைகள் வெடித்ததை அணு உலையே வெடித்துச் சிதறிவிட்டது, அதனால் சுற்றுச்சூழலில் கதிரியக்கம் பரவி, உலகெங்கும் அமில மழை பெய்யப்போகிறது ஜாக்கிரதை என்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி ஜப்பான் நாட்டு சுக்குபா நகரில் பணிபுரியும்  இந்திய அணு விஞ்ஞானி திரு.அனிர்பன் பந்தோப்தியாய ஒரு விளக்கமளித்திருக்கிறார். அது பின்வருமாறு......

சுனாமி தாக்கியதும் ஜப்பானில் உள்ள அணு உலைகளின் உற்பத்தி உடனே நிறுத்தப்பட்டு விட்டதால் கதிரியக்க தொடர் வினைகள் எதுவும் அதில் இருக்காது. தொடர் வினைகள் இருந்து கொண்டே இருந்தால் மட்டுமே அணு உலை வெடிப்பதற்கு சாத்தியம் உண்டு. எனவே ஜப்பானின் அணு உலை வெடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. செர்னோபில்  விபத்து போன்றதொரு நிகழ்வு நடக்க வாய்ப்பே இல்லை. தற்போது ஜப்பானில் உள்ள  அணுமின் நிலையத்தில் வாயுக்கள் வெளியாவதாலும், சுற்றுப்புற தட்ப வெட்ப மாற்றங்களாலும் கட்டிடங்களின் கூரைகள் மட்டுமே தற்போது வெடித்துள்ளன. அணு உலை பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதால் கதிரியக்கம் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால் அணு உலை சூடாவதும், கதிரியக்கம் வெளியாவதும் இரு வேறு தனி தனி  நிகழ்வுகள்.

மேலும் நாம் அனைவருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம், காற்றில் கதிரியக்கம் பரவுவதை பற்றி வெளிவரும் செய்திகள். நாம் சில அடிப்படையான விசயங்களை அறிந்து கொண்டால் இதை பற்றி வரும் வதந்திகளை பற்றி கவலைபடவேண்டாம். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

நம் உடல் உறுப்புகளை தாக்கும் கதிர்வீச்சுகளில் அயோடின் கதிர்வீச்சு மட்டுமே ஆபத்தானது.

யுரேனியம் போன்றவை, உடனடியாக எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாது.தொடர்ந்து மிக மிக அதிக அளவிலான கதிர்வீச்சு உடலில் பட்டு வந்தால் மட்டுமே உடல்நல பாதிப்புகளை உருவாக்கும்.ஜப்பானிலுள்ள ஆறு அணு உலைகளில் உள்ள மொத்த யுரேனியத்தின் அளவு அதை விட குறைவாகவே இருக்கும்.

அயோடின் கதிர்வீச்சு பற்றிய  சில உண்மைகள்.

எதிர்காலத்தில்  இதனால்  நமக்கு பாதிப்பு   வரலாம்  என்றும் அதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோடின் சத்து குறைபாடு நமக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் உடம்பில் அயோடின் சத்து குறைவாக இருந்தால், அப்போது காற்றில் உள்ள அயோடினை நம் உடம்பு உறிஞ்சும். அப்படி உறிஞ்சப்படும் அயோடினில் கதிர்வீச்சு இருந்தால் நம் உடல் பாதிக்கப்படும்.

எனவே அயோடின் நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக்கொண்டால் நலம், கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். 

(இந்த தகவல்கள் எனக்கு ஆங்கிலத்தில் வந்தது)

தமிழாக்கம் உதவி - திரு. சங்கரலிங்கம், உணவு உலகம் 
படம் உதவி - கூகுள்

Sharing with you the information related to Explosions at Fukushima Nuclear Reactors received from one of Indian Scientists by name Dr. Anirban Bandyopadhyay working in Tsukuba, Japan.



அணு உலை வெடிப்பா அல்லது அணு உலை கட்டிடங்களின் கூரை வெடிப்பா என்பதை  பற்றி ஜப்பானில் வாழும் தமிழகத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் தனது தளத்தில் மிக தெளிவாக எழுதி இருக்கிறார். தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புவர்கள் அதனை படித்து பாருங்கள். அத்தளத்தின் லிங்க் இங்கே 




Tweet

21 கருத்துகள்:

  1. மிக முக்கியமான பதிவு. அவசியமான நேரத்தில். வாழ்த்துக்களும் நன்றிகளும்.....

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப பொறுமையா கருத்துக்களை பதிவு செய்திருக்கீங்க, சகோ. அவரவர் அறிந்த செய்திகளையும் பகிர சொல்லியிருப்பது நல்ல முன்னுதாரணம்.

    பதிலளிநீக்கு
  3. "ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்துவிட்டால் போதும், அதைப்பற்றிய பல புரளிகளை கிளப்பிவிட்டுவிட்டு மக்களை குழப்பத்திலும், தேவையற்ற சஞ்சலங்களிலும் ஆழ்த்துவதில்தான் நம்மவர்களுக்கு எவ்வளவு இன்பம்?!"

    உண்மைதான் ஏதாவது பரபரப்பாக பேச வேண்டுமென்று மிகுந்த குழப்பத்தை தான் உண்டுபண்ணுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  4. //அணு உலை பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதால் கதிரியக்கம் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.//

    தவறான கருத்து என்று நினைக்கிறேன்.

    எதற்கும் இந்த காணொளியை பார்க்கவும் சகோ

    http://www.youtube.com/watch?v=BdbitRlbLDc

    பதிலளிநீக்கு
  5. "தொடர் வினைகள் இருந்து கொண்டே இருந்தால் மட்டுமே அணு உலை வெடிப்பதற்கு சாத்தியம் உண்டு" என்பது தவறு. பயன் தீர்ந்த fuel rods சூட்டைத் தணிக்காதிருந்தால் அதுவும் வெடித்து radiation பரவ வாய்ப்புண்டு. சாதாரண plutonium கிடங்கில் இருந்தாலும் பரவலாக வெளிவர நேர்ந்தால் அபாயம் உண்டு.

    "யுரேனியம் போன்றவை, உடனடியாக எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாது" என்பது கொஞ்சம் பூசணிக்காய்-சோறு பாணித் தகவல் - இங்கே முக்கியமானது உடனடியாக என்ற சொல். யுரேனிய விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள செர்னோபில் பற்றிப் படித்தால் போதும்.

    அயோடின் உட்கொள்வது ஒருவகை radiationலிருந்து (தொண்டை கேன்சர்?) மட்டுமே பாதுகாப்பு அளிக்கும். பிறவகை radiationலிருந்து iodide ஒரு நிவாரணமோ பாதுகாப்போ வழங்காது.

    நீங்கள் சொல்வது போல் புரளிகளுக்கும் அரைகுறை உண்மை தகவல்களுக்கும் குறைவே இல்லை போலிருக்கிறது.

    எப்படி இருந்தாலும் தென் கொரியா சைனா அமெரிக்கா நாடுகள் பாதிக்கப்படலாம் - அதுவும் மிகக்குறைவாகவே கணக்கிட்டிருக்கிறார்கள்.

    பொறுப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
  6. உபயோகமான பதிவு!
    (எங்கள் பகுதியில் அணுக் கதிரியக்க மழை பெய்தால் என்ன செய்யணும்னு SMS ஓட ஆரம்பிச்சுடுக்சு!!)

    பதிலளிநீக்கு
  7. சரியான நேரத்தில் வெளிவந்த அருமையான பதிவு.
    நன்றி கௌசல்யா.

    பதிலளிநீக்கு
  8. @@ அப்பாதுரை...


    //"தொடர் வினைகள் இருந்து கொண்டே இருந்தால் மட்டுமே அணு உலை வெடிப்பதற்கு சாத்தியம் உண்டு" என்பது தவறு.//

    உண்மைதான். தொடர் வினைகளால் மட்டுமல்லாது பயன் தீர்ந்த யுரேனியம்(அல்லது fuel rods) குளிரூட்டப்படுவது நிறுத்தப்பட்டு தொடர்ந்து அணு உலையினுள்ளே வெப்பம் அதிகரித்தாலும் அணு உலை வெடிப்பதற்கு சாத்தியம் உண்டு!

    //"யுரேனியம் போன்றவை, உடனடியாக எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாது" என்பது கொஞ்சம் பூசணிக்காய்-சோறு பாணித் தகவல் - இங்கே முக்கியமானது உடனடியாக என்ற சொல். யுரேனிய விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள செர்னோபில் பற்றிப் படித்தால் போதும்.//

    யுரேனியம் போன்றவை உடனடியாக எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று சொல்வதற்கு காரணம், யுரேனிய பிளவிலிருந்து வெளிப்படும் கதிரியக்க வேதியல்களில் ஒன்றான அயோடின் 131-க்கு மட்டுமே மிக குறைவான அரை வாழ்வு காலம், ஆனால் சீசியம் 137 போன்றவற்றிற்கு சுமார் 31 ஆண்டு கால அரை வாழ்வு காலம். அதனால் சீசியத்தின் பாதிப்பு 31 ஆண்டு காலத்துக்கு பின்னரே என்பதால் இப்போது பயமில்லை என்ற பொருள் பட எழுதியிருக்கிறார் இதை வெளியிட்ட விஞ்ஞானி! மற்றபடி அயோடின் 131 , நீரில் கலந்தால் ஆபத்துகள் பல உண்டு!

    //யுரேனிய விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள செர்னோபில் பற்றிப் படித்தால் போதும். அயோடின் உட்கொள்வது ஒருவகை radiationலிருந்து (தொண்டை கேன்சர்?) மட்டுமே பாதுகாப்பு அளிக்கும். பிறவகை radiationலிருந்து iodide ஒரு நிவாரணமோ பாதுகாப்போ வழங்காது. நீங்கள் சொல்வது போல் புரளிகளுக்கும் அரைகுறை உண்மை தகவல்களுக்கும் குறைவே இல்லை போலிருக்கிறது.//

    உண்மைதான். அயோடின் தைராய்டு சுரப்பியை மட்டுமே பாதுகாக்கும், உடலின் பிற பாகங்களை அல்ல!

    எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்த நல்ல தகவல்களை பகிர எண்ணி, ஒரு விஞ்ஞானியின் மின்னஞ்சலில் தவறுகள் வாய்ப்பில்லை என்று சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டேன் என்று எண்ணுகிறேன். அவர் அந்த மின்னஞ்சலை பலருக்கும் கொண்டுசேர்க்க சொன்ன அவசியத்தின் பொருட்டு உடனே வெளியிட்டுவிட்டேன்.

    நான் இந்த பதிவை வெளியிட்ட சிறிது நேரத்தில் அவசர வேலையாக வெளியூர் கிளம்பிவிட்டேன்...இன்று தான் வந்தேன்...உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் உடனே வெளியிட முடியாமல் போனதிற்காக மிகவும் வருந்துகிறேன், மன்னிக்கவும்.

    சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிவுடையவளாகிறேன்.

    நன்றி சகோ.அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  9. @@ அன்பரசன்...

    //தவறான கருத்து என்று நினைக்கிறேன். எதற்கும் இந்த காணொளியை பார்க்கவும் சகோ http://www.youtube.com/watch?v=BdbitRlbLDc//

    சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி அன்பரசன்.....

    பதிலளிநீக்கு
  10. @@ FOOD...

    இந்த பதிவிற்கு உங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி அண்ணா. நமக்கு தெரிந்த தகவல்களை பிறரிடம் கொண்டுபோய் சேர்க்கணும் என்கிற உங்களின் ஆர்வத்திற்கு மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. @@ பத்மஹரி...

    உங்களுக்கு என் நன்றிகள் ஹரி.

    பதிலளிநீக்கு
  12. @@ மைதீன்...

    எந்த தகவல்களிலும் உண்மைத்தன்மை/நம்பகத்தன்மை பற்றி சிறிது அக்கறை காட்டினால் வதந்திகள் முக்கியத்துவம் பெறாது என்பது என் கருத்து.

    உங்களின் வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. @@ middleclassmadhavi...

    அந்த மெசஜ் எனக்கும் வந்ததால் தான் இந்த அவசர பதிவு. :))

    நன்றி தோழி

    பதிலளிநீக்கு
  14. @@ பதிவுலகில் பாபு...

    நன்றி பாபு...வெகுநாள் பின்னான இந்த வருகைக்கு மகிழ்கிறேன்.



    @@ புவனேஸ்வரி ராமநாதன்...

    உங்களின் புரிதலுக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  15. @@ asiya omar...

    நன்றி தோழி.



    @@ Kanchana Radhakrishnan...

    வருகைக்கு மிக்க நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  16. ஜப்பான் உறுதியாக ஜெய்ப்பான்
    எப்பாடு பட்டாலும் சோதனைகள் வென்றுதானே எழுந்து நிற்பான்

    தப்பான வழிகளிலேச் செல்லாது உழைப்பினிலே தயங்கா(த) ஜப்பான்

    கூப்பாடு போட்டவர்கள் புலம்பியவர் அழுகையின் கூவல் இல்லை

    சாப்பாடு கேட்டவர்கள் வரிசையில் நிற்பதுவே சாந்த எல்லை



    எல்லார்க்கும் கிடைத்திடவே தேவைக்கும் அதிகமாக எடுக்கா(த) அன்பு

    பொல்லாதத் திருட்டுகள் சாலையில் இடைஞ்சல்கள் புரியா(த) பண்பு

    நில்லாமல் உதவிடவே எந்நேரம் விழிப்புடனே நிற்கும் காவல்

    சொல்லாலே வடித்திடவே முடியாத மீட்புப் பயிற்சி ஆவல்



    சோதனைகள் வந்தாலும் மீட்சியுடன் உழைத்திடவேச் சோரா(த) திண்மை

    சாதனைகள் செய்தாலும் களித்திடாத நடுநிலைமைச் சார்ந்த தன்மை

    வேதனைகள் தொடர்ந்தும் உறுதியுடன் பணியாற்றி வெல்லும் வேட்கை

    போதனைகள் நமக்கெலாம் ஜப்பானின் விடாமுயற்சி போற்றும் வாழ்க்கை


    “கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...