Friday, August 13

8:07 PM
28


அந்தரங்கம்

தாம்பத்தியம் சீர்குலைய பல காரணிகள் இருக்கிறது என்று இதுவரை பார்த்தோம், மற்றொரு முக்கியமான காரணம்  ஒன்றும் உள்ளது, அதுதான் கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான அந்தரங்கம். 

கடந்து போன கவலைகளிலும் வர இருக்கிற சிந்தனைகளிலும் மூழ்கி, நிகழ்கால ஆனந்தங்களை அனுபவிக்காமலேயே இருக்கிறார்கள். இதை அவர்கள் புரிந்து கொள்ளும் முன்பே இளமை முடிந்து முதுமை வந்து வாழ்க்கை அவர்களை தாண்டி  போயே விடுகிறது.

வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க வேண்டும் என்பதை விட, சிக்கல் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் எப்படி ஓட்டி செல்வது என்பதே பலரது கவலையாக இருக்கிறது. 

அந்தரங்கம் என்று சொல்லிவிட்டு அதை எப்படி வெளியில் விவரமாக சொல்வது...? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதுதான் பல குடும்பங்கள் பிரிவதற்கு மிக மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. பல சண்டைகளின் ஆரம்ப  அடிப்படை காரணமே இதுதான் என்று என்னால் உறுதியாக கூற முடியும். என்னவொன்று கணவன், மனைவி இருவருமே இதுதான் எங்களுக்குள் பிரச்சனை என்று வெளிபடையாக சொல்வது இல்லை. 

ஒரு ஆணின் அந்தரங்கம் வீட்டில் சரியாக இருக்காத  பட்சத்தில் வெளியில் மாற்று இடம் சுலபமாக தேடிவிட முடியும் அது மற்றொரு பெண்ணை தேடும் வழி என்று சொல்லவில்லை... தங்களை நண்பர்கள், வேலை, பொழுது போக்கு என்ற விதத்தில் ரிலாக்ஸ் செய்து கொள்ளமுடியும் .   ஆனால் பெண்கள் , தங்களின் ஆசை நிராசையாக போய்விட்டால் அது வார்த்தைகளில் எரிச்சலாக, கோபமாக, ஆத்திரமாக வெளிபடுகிறது. நாளடைவில் மன அழுத்தம், மனதெளிவின்மை, ரத்த அழுத்தம், தலைவலி போன்றவற்றில் கொண்டுபோய் விட்டு விடுகிறது..... ஆனால் இதுதான் பிரச்சனைக்கான சரியான  காரணம் என்று அந்த பெண்ணுக்கே சில நேரம் புரிவது இல்லை.

" பொருளாதார ஏற்றதாழ்வுகள் மற்றும் செக்ஸ் உறவு வெற்றி " இவை இரண்டும் ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றனவாம், என்பது க்ரூகர் என்பவரின் கூற்று.  ஆனால் இதனால் பெண்களை விட ஆண்கள் தான் பெரும்பாலும் பாதிக்க படுகிறார்களாம்...??!!


கல்யாணம் முடிந்தவர்களில் எத்தனை பேர்கள் முழுமையான தெளிவை இந்த விசயத்தில் பெற்று இருக்கிறார்கள்..?? மிக சொற்பமே..!!?? குடும்பத்தில்  சண்டை என்று சொல்பவர்களிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் தான் தெரிகிறது...பிரச்சனையின் வேர் படுக்கை அறையில் இருக்கிறது என்பது...!!? 

வெளியில் பேசகூடாத ஒரு விசயமாக தானே இன்றும் இருக்கிறது. காரணம் நாம் வாழும் சமூதாயத்தில் இருக்கும் கட்டுபாடுகள். மற்றவர்களுடன் பேச கூடாத ஒரு அருவருப்பான ஒன்றாகத்தான் பார்க்கபடுகிறது.  கட்டுபாடுகள் இருப்பது நல்லதுதான். ஆனால் ஆரம்ப தெளிவு கூட இல்லாமல் போய்விடுவதுதான் சோகம்.
இதனாலேயே தான் வெளியில் சொல்ல முடியாத சிக்கல்கள் குடும்பத்தில் ஏற்படுகின்றன.

துணிந்து வெளியில் சொல்லமுடியாத நிலையில் இதனை பற்றிய சந்தேகங்களும், கேள்விகளும் விடை தெரியாமல் ஒரு தொடர்கதை போல் போய் கொண்டே  இருக்கிறது. இம்மாதிரியான பதில் இல்லா கேள்விகள் பலரை  மனதளவிலும், உடலளவிலும் பயங்கரமாக பாதிக்கிறது. 

 " இதனால்  அவர்களின் வாழ்க்கை தரமே குறைந்து போக கூடிய நிலையில் தான்  இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் " என்கிறார்கள் மருத்துவர்கள்.

முக்கியமான விஷயம்  என்னவென்றால் , பலரின், குறிப்பாக பல பெண்களின் கேள்வியே, " இதை விட வேற ஒன்றும்  முக்கியம் இல்லையா ? இது மட்டும் தான் வாழ்க்கையா? "  அப்படி உள்ளவர்களுக்கே இந்த பதிவு என்று நினைக்கிறேன். 

'அதற்காக எல்லாம்  எங்களால் நேரம் ஒதுக்க முடியாது' என்று அலட்சியமாக சொல்லும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணம், புகழ், பெயர் இவற்றை சம்பாதிக்க அவைகளின் பின்னால் ஓடவே நேரம் சரியாக இருக்கிறது. அப்படியே நேரம் கிடைத்தாலும் அந்த நேரத்தை 'தகவல் தொழில் நுட்பங்களும்', 'பொழுதுபோக்கு அம்சங்களும்' விழுங்கி விடுகின்றன.  

தனது வீட்டில் என்ன நடக்கிறது என்றே பலருக்கும் தெரிவது இல்லை. அந்த 'பொன்னான நேரத்தை' எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்ப பெற இயலாது என்பதை பலரும் உணருவதே இல்லை.  

அந்த நாலு சுவற்றுக்குள் ஒரு கணவனும் மனைவியும்  இருப்பதை பொறுத்துதான் அவர்களின் வெளி உலக நடவடிக்கை இருக்கும்.

'செக்ஸ்' என்பதின் அர்த்தம்தான் என்ன ??

உடலுறவு என்பது அறிவியல்/மருத்துவரீதியாக சொல்லவேண்டும் என்றால், "உடலின் பல்வேறு தசைகள், நரம்புகள், ரத்த நாளங்கள் இப்படி எல்லாம் ஒரே நேரத்தில் அதிகபடியாக வேலை செய்யும் , சக்தி விரயம் நிறைந்த ஒரு மிதமான நல்ல  உடற்பயிற்சி என்பதே".

" பொதுவாக மூளை வளர்ச்சியை பாதிக்ககூடிய சில ஹார்மோன்களின் தன்மையை மகிழ்ச்சித் தரக்கூடிய (உடலுறவு) அனுபவங்களின் மூலம் மாற்றியமைக்க முடியும் " என்கிறது பிரின்ஸ்டன் பல்கலைகழக ஆய்வாளர்களின் அறிக்கை.

'காதல் உணர்வு' என்பது ஹார்மோன் செய்யும் வேலை என்று சொல்வது உண்டு. அதன் பெயர்தான் 'ஆக்சிடோசின்'. இது பொதுவாக  பிரசவ நேரத்திலும் , உடலுறவு சமயத்திலும் அதிகமாக சுரக்க கூடியது. 'இதுதான் அடிப்படை'

இதை பற்றி அரிய அதீத ஆர்வம், இனம் புரியாத தயக்கம், ஒரு புத்துணர்ச்சி என பலவகையான உணர்வுகள் நம்மை ஆட்க்கொண்டு விடுகின்றன. 

கணவன் , மனைவிக்கு இடையில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும் இங்கே தான்  மறக்கப்படுகின்றன(மறக்கடிக்க படுகின்றன). 

பின்குறிப்பு 

தாம்பத்தியத்தில் முக்கியமான பகுதியான இதை கொஞ்சம் விளக்கமாக விவரிக்க சொல்லி, பலர் கேட்டதின் காரணமாக பதிவு விரிவாக இருக்கும்...பதிவை பற்றிய சந்தேகங்கள்  மட்டும் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். உங்கள் பெயர் வருவதை நீங்கள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டால் பின்னூட்டம் பப்ளிஷ் பண்ணபட மாட்டாது என்பதை சொல்லி கொள்கிறேன். 

அடுத்து இந்த பதிவின் தொடர்ச்சியாக வருவது...தாம்பத்தியம் 18+Tweet

28 comments:

 1. பலரும் பொதுவில் விவாதிக்க தயங்கும் விஷயம். உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். தொடருங்கள் ....

  ReplyDelete
 2. //கல்யாணம் முடிந்தவர்களில் எத்தனை பேர்கள் முழுமையான தெளிவை இந்த விசயத்தில் பெற்று இருக்கிறார்கள்..??//

  நீங்கள்சொல்வது உண்மைதான் ,பலரும் இந்த விஷயத்தை தெளிவு பெறாதவர்களாகவே உள்ளனர்.


  //கணவன் , மனைவிக்கு இடையில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும் இங்கே தான் மறக்கப்படுகின்றன(மறக்கடிக்க படுகின்றன).//

  கணவன் மனைவிக்கு இடையில் சில சமயம் பிரச்சனைகள் ஏற்பட்டு முற்றுபெறுவதும இங்கேதான் .

  உங்களின் பகிர்வு மிக நாகரீகமாக, அதே சமயத்தில் குடும்பதில் ஏற்படும் பிரச்சனைகள்,,, இதன்மூலமகவும் ஏற்படுகிறது என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள் .. மிக பயனுள்ள பகிர்வு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. பலரும் பொதுவில் விவாதிக்க தயங்கும் விஷயம். உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். தொடருங்கள் ....ஆரோக்கியமான் குடும்பவாழ்வுக்கு மிகவும் முக்கியம். மேலும் உங்கள் சேவை .....எழுத்துலகம் தொடரவேண்டும்.நன்றி

  ReplyDelete
 4. brave kousalya. keep on... thanks.

  ReplyDelete
 5. மிகத் தெளிவாக அழகாக எழுதி இருக்கிறீர்கள் , இதுதான் பிரச்சனை என்பதை பலர் உணருவதே இல்லை , பலபேருக்கு இதனால் தான் பிரச்சனை என்றே தெரியாது . நல்ல அருமையானபதிவு

  ReplyDelete
 6. பலரும் வெளியில் சொல்ல தயங்கும், கூச்சப்படும் விஷயம்...

  துணிச்சலுக்கு பாராட்டுக்கள்...

  ReplyDelete
 7. புதிரானதை புனிதமாக்கும் உங்களின் எழுத்துக்களுக்கு பாராட்டுகள் ! !

  ReplyDelete
 8. கத்தியை கையாலும் முறையை தெரிந்து வைத்து உள்ளீர்கள்..

  தொடரட்டும் உங்கள் பணி....
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. ///கட்டுபாடுகள் இருப்பது நல்லதுதான். ஆனால் ஆரம்ப தெளிவு கூட இல்லாமல் போய்விடுவதுதான் சோகம்.
  ///
  அதுதான் இங்கு பிரச்சினைக்கே காரணமாக முடிகிறது
  அவசியமான பதிவும் கூட அக்கா ..!!

  ReplyDelete
 10. மிகவும்அவசியமான பதிவு.. தெளிவான எழுத்து ..பகிர்வுக்கு நன்றி அடுத்த பதிவுக்கு வெய்டிங் தோழி .

  ReplyDelete
 11. உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் அக்கா தொடருங்கள் உங்கள் சேவையை , எங்களை போல இளம் தம்பதிக்கு கண்டிப்பாக தேவைப்படும்

  ReplyDelete
 12. \\பொதுவாக மூளை வளர்ச்சியை பாதிக்ககூடிய சில ஹார்மோன்களின் தன்மையை மகிழ்ச்சித் தரக்கூடிய (உடலுறவு) அனுபவங்களின் மூலம் மாற்றியமைக்க முடியும் " என்கிறது பிரின்ஸ்டன் பல்கலைகழக ஆய்வாளர்களின் அறிக்கை\\

  இதன் மேலதிக தகவல்களுக்காக உரலை(தொடுப்பை தரமுடியுமா?)

  ReplyDelete
 13. மிகவும்அவசியமான பதிவு, தெளிவான எழுத்து.பகிர்வுக்கு நன்றி தோழி.

  ReplyDelete
 14. கௌசல்யா தொடர் நீண்டு கொண்டே போகிறது.எழுதினால் எழுதிகொண்டே இருக்கலாம் போல.இப்ப தான் பார்க்கிறேன்,இத்தனை தொடர் வந்துவிட்டதே,வாசிக்க நிறைய இருக்கு.

  ReplyDelete
 15. LK...

  இதையும் ஒரு மருத்துவம்/அறிவியல் என்று எடுத்து கொண்டோம் என்றால் தயக்கம் என்பது தேவையற்றது என்பது புரியும்.

  :)

  ReplyDelete
 16. jothi...


  //கணவன் மனைவிக்கு இடையில் சில சமயம் பிரச்சனைகள் ஏற்பட்டு முற்றுபெறுவதும இங்கேதான் .//

  புரிதலுக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 17. நிலாமதி...

  தொடரவேண்டும் என்பதுதான் என் எண்ணம்..

  நன்றி தோழி .

  ReplyDelete
 18. adhiran...

  உங்களின் உற்சாகமான வார்த்தைகள்தான் என்னை தைரிய படுத்துகிறது... நன்றி மகேந்திரன்.

  ReplyDelete
 19. மங்குனி அமைச்சர்...

  //இதுதான் பிரச்சனை என்பதை பலர் உணருவதே இல்லை , பலபேருக்கு இதனால் தான் பிரச்சனை என்றே தெரியாது //

  உண்மைதான் அமைச்சரே. தொடர் முடியும் போது சிலருக்கு மட்டுமாவது புரிந்து விடும் என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 20. வெறும் பய...

  //பலரும் வெளியில் சொல்ல தயங்கும், கூச்சப்படும் விஷயம்...//

  என்றாலும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தானே... எதையும் தெளிவாக பேசாததால் தான் பிரச்சனைகளே அதிகமாகின்றன.

  நன்றி நண்பரே.

  ReplyDelete
 21. Ponchandar...

  //புதிரானதை புனிதமாக்கும் உங்களின் எழுத்துக்களுக்கு பாராட்டுகள் ! !//

  உங்களின் முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்க....!

  ReplyDelete
 22. கோவை குமரன்...

  நன்றி சதீஷ்.

  ReplyDelete
 23. ப.செல்வகுமார்...

  //அவசியமான பதிவும் கூட அக்கா ..!!//

  புரிதலுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 24. sandhya...


  //அடுத்த பதிவுக்கு வெய்டிங் தோழி .//

  விரைவில் அடுத்த பதிவு வரும். நன்றி தோழி.

  ReplyDelete
 25. சசிகுமார்...

  //எங்களை போல இளம் தம்பதிக்கு கண்டிப்பாக தேவைப்படும்//

  கண்டிப்பாக நீங்கள் தான் படிக்கணும்....தொடர்ந்து படிங்கள்....வாழ்க்கை என்பது விளையாட்டு இல்லை என்பது புரியும்.

  நன்றி சசி.

  ReplyDelete
 26. ஜிஎஸ்ஆர்...

  நான் தகவல்கள் சேகரித்து எழுதி அதிக நாட்கள் ஆகிவிட்டது. பொதுவாக இந்த தொடருக்காக நெட்டில் விவரங்கள் தேடுவது இல்லை. படித்த புத்தகங்கள், செய்தி தாள்கள், பிறரின் தகவல்கள் இவையே எனக்கு துணை புரிகின்றன.

  நன்றி.

  ReplyDelete
 27. சே.குமார்...

  நன்றி நண்பரே.

  ReplyDelete
 28. asiya omar...

  //எழுதினால் எழுதிகொண்டே இருக்கலாம் போல.இப்ப தான் பார்க்கிறேன்,இத்தனை தொடர் வந்துவிட்டதே,//

  இந்த விஷயம் (தாம்பத்தியம் )ஒரு கடல் மாதிரி....சொல்லப்போனால் நான் அதிக விவரங்களை எழுதாமல் விட்டு இருக்கிறேன் என்றே சொல்லலாம்.... பொறுமையாக படிங்கள் தோழி. நன்றி.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...