திங்கள், மார்ச் 15

12:07 PM
4

பொதுவாகவே இதில் நல்ல விஷயம் நிறைய உள்ளது. மாடியில் தோட்டம் போடுவதால் வெயில் காலத்திலும் வீடு சில்லுனு இருப்பதை உணரலாம். சுத்தமான காற்று, பசுமை, குளுமை இவை எல்லாம் இலவசமாக கிடைக்கும். இதற்காக பார்க்,பீச் தேடி போகவேண்டாம்.

செடி,கொடிகளின் மீது ஆர்வம் கொஞ்சம் இருந்தால் மட்டும் போதும். என்னங்க மாடியில் தோட்டம் போட நீங்க ரெடியா?

தேவையானவை என்று பார்த்தால் பிளாஸ்டிக் சாக், மண் கலவை (ஏற்கனவே தொட்டியில் ரோஜாசெடி தலைப்பில் மண்கலவை பற்றி விரிவாக கூறியுள்ளேன்), பந்தல் போட சணல் கயறு,சிறிய குச்சிகள், காய்கறி விதைகள். விதைகளை நைட் முழுவதும் சாணி கரைத்த தண்ணிரில் ஊறவைத்தால் நல்லது.

மண் நிரப்பிய சாக்கை மாடியில் இடைவெளி விட்டு வைத்து அதில் விதைகளை ஊன்ற வேண்டும். நீர் குறைந்த அளவு
ஊற்றினால் போதும். விதை வளரும்முன் கொடி வகைகளுக்கு பந்தல் போடவேண்டும். மாடி கைப்பிடி சுவர் ஓரமாக இரண்டு பெரிய
கம்புகளை பத்து அடி இடைவெளியில் வைக்க வேண்டும். கயிறையும் பத்தரை அடியாக வெட்டி வைக்கவும். பின் ஒரு கம்பில் கயிறின் ஒரு முனையை கட்டி விட்டு அடுத்த முனையை இன்னொரு கம்பில் கட்டவேண்டும். இப்படியே கால் அடி இடைவெளிவிட்டு உங்களுக்கு வேண்டிய அளவிற்கு கட்டியபின் இனி குறுக்காக அதே மாதிரி இடைவெளிவிட்டு கட்ட வேண்டும். பந்தல் வேலை முடிந்தது. பிறகு கொடி வளர்ந்ததும் இதன் மேல் விட்டு படரவைக்கவேண்டியது தான்.

உங்கள் வசதிக்கு ஏற்ப கயறுக்கு பதிலாக கம்பியும் கட்டலாம். ஒருமுறை பந்தல் போட்டால் போதும் மேலும் மேலும் புதிதாக கொடிவகைகளை படரவைக்கலாம். சுவர் ஓரமாக உள்ளதை அப்படியே தலைக்குமேல் மாற்றி பந்தலாக போடலாம். இதில் ஒரு வசதி என்னன்னா பந்தலின் அடியில் மற்ற கத்தரி, வெண்டை, தக்காளி, கீரை வகை செடிகளை வைக்கலாம். ஒவ்வொரு சாக்கிலும் செடி இன் அருகில் சிறு குச்சி ஐ சொருகி வைத்தால் செடி சாயாமல் நிமிர்ந்து வளரும். சாய்ந்தால் நூலால் குச்சியுடன் சேர்த்து கட்டிவிடலாம்.

பொன்னாங்கண்ணி கீரையை சிறிய தண்டுகளாக ஒடித்து அப்படியே நட்டாலே போதும் வளர்ந்துவிடும். புதினாவையும் இந்த முறையில் வளர்க்கலாம். கொத்தமல்லிஐ பாதிவரை கட்பண்ணிய பின் வேறுடன் கூடிய பகுதி ஐ நட்டால் அதுவும் வளரும்.

கீரைக்கு வேர் அதிகம் போகாது என்பதால் பிளாஸ்டிக் சாக்கை பிரித்து தரையில் விரித்து செங்கலை சுற்றிவரை வைத்து அதில் மண் பரப்பி கீரையை நடலாம்.

இதே பிளாஸ்டிக் சாக்கில் முருங்கை மரத்தை கூட வளர்க்கமுடியும்
என்பது கூட என் அனுபவம்தான். சென்னையில் வாடகை வீட்டில் குடிஇருந்தபோது குறைந்த இடத்தில் இப்படித்தான் தோட்டம் போட்டோம்.

பூச்சி தொல்லை இருந்தால் வேப்ப எண்ணெய் கலந்த நீரை தெளித்தால் போதும், மண்புழு உரத்தை போட்டால் நல்லது. இந்த உரத்தை பற்றிய எனது பதிவை பாருங்கள்.

செடிகளுக்கு நீர் ஊற்றுவது கண்டிப்பா பெரிய வேலையா இருக்காது. ஏன்னா எல்லோர் வீட்டிலும் மாடியில் தான் watertank இருக்கும் ஓகே யா. வேற சந்தேகம் இருந்தால் மெயில் பண்ணுங்க காத்திட்டு இருக்கிறேன் பதில் சொல்ல.

மாடியில் இடம் இருந்தால் சின்னதா water fountain பண்ணலாம். அதை பற்றி பிறகு சொல்கிறேன். இது எல்லாம் பண்ணியபிறகு பாருங்கள் சொர்க்கம் வேறு எங்கும் இல்லை நம் வீட்டு மாடியில் தான் என்பதை உணருவீர்கள்.Tweet

4 கருத்துகள்:

 1. poosanikai eppadi valrarudu . po vitidhichu aana poosanikai valrava mantikidhu.

  பதிலளிநீக்கு
 2. @@ keerthi suresh...

  வருகைக்கு நன்றி கீர்த்தி சுரேஷ்.

  வீட்டுத்தோட்டம் பற்றிய எனது மற்றொரு பதிவை பாருங்கள் அதன் லிங்க் http://www.kousalyaraj.com/2012/06/1.html#axzz2lLTeVE14

  மேலும் பேஸ்புக்கில் பசுமைவிடியல் தளத்தில் வீட்டுத்தோட்டம் பற்றி தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறேன். அதையும் பாருங்கள்.

  https://www.facebook.com/PasumaiVidiyal

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...