ஞாயிறு, நவம்பர் 6

AM 10:24
38


நன்றி கூறும் இடத்திற்கு வந்துவிட்டது எனது நட்சத்திர வாரம் ! ஆரம்பத்தில் எப்படி எழுத போகிறோம் என்று பிரமிப்பாக இருந்தது, இப்போது மிக வேகமாக நாட்கள் முடிந்துவிட்டதை போல தோணுகிறது. என்னால் இயன்றவரை தமிழ்மணம் நிர்வாகிகள் கொடுத்த பணியை முடித்திருக்கிறேன் என நினைக்கிறேன்.வந்த வேலை முடிந்தது, கிளம்பிட்டேன்...! போறதுக்கு முன்னாடி உங்க கிட்ட கொஞ்சம் பேசிட்டு போகலாம்னு பார்க்குறேன். (அப்ப ஒரு வாரமா பேசி தொல்லை பண்ணியதுக்கு பேர் என்னவாம்...!?) 

மாதத்துக்கு நாலு பதிவுகள் எழுதிகொண்டிருக்கிற என்னால் தினம் ஒன்று எழுத இயலுமா என ஒரு தயக்கம் இருந்தது...எதை பற்றி எழுதுவது என்று யோசிக்கவே ஒருநாளின் பகல் பொழுது போய்விட்டது, இரவில் எழுதி காலையில் போஸ்ட் செய்வதற்குள் சிந்தனை முழுதும் அதை சுற்றி  வந்ததென்னவோ நிஜம். (ஆமாம் அது எப்படிப்பா தினம் ஒரு போஸ்ட் போடுறீங்க...!?) உண்மையில் அவ்வாறு எழுதுபவர்கள் ரொம்ப பெரிய எழுத்தாளர்கள் என்பதை விட மிக சிறந்த சிந்தனாவாதிகள் !! (ம்...நான் இன்னும் வளரணுமோ...!?)

என் தமிழின் மீது எனக்கு திருப்தி இருந்ததில்லை...பேசுவதை அப்படியே எழுத்தில் கொண்டு வர தெரிந்தால் போதும் என்று எழுத வந்துவிட்டேன்...?!(முன்னாடியே தமிழை ஒழுங்கா படிசிருக்கலாமோ என்று எண்ண வைத்துவிட்டது இந்த பதிவுலகம் !!)  இங்கே பலரின் பதிவுகளை படிக்கும் போது மிக வியந்திருக்கிறேன்...மிக ரசித்து படிப்பேன் அவர்களின் எழுத்துக்களை, அங்கிருந்து கொஞ்சம் தமிழையும் கற்றுகொள்வேன். 

இங்கே நான் கற்றதும்,பெற்றதும் மிக அதிகம்.

எனக்கு மிக பிடித்த ஒரு வாக்கியம்

"பிறர் உன்னிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறாயோ அப்படி முதலில் நீ நட "  இயன்றவரை இப்படி நடக்க வேண்டும் என முயற்சிக்கிறேன்...

நமக்கு பிடித்த மாதிரி மத்தவங்களை நடந்துகொள்ள சொல்லி வற்புறுத்த முடியாது, நாமும் அவர்களுக்கு பிடித்த மாதிரி முழுமையாக மாற்றிக்கொள்ள இயலாது. முக்கியமாக நமக்கு பிடித்த கருத்துக்கள் பிறருக்கு படு அபத்தமாக தவறாக தெரியலாம், அதற்காக நம் கருத்தை மாற்றிக்கொண்டே இருப்பது நம் சுயத்தை இழப்பது போல... 

அதுக்காக நம் நண்பர்களிடத்தில் 'நான் இப்படித்தான் இருப்பேன் , பிடிச்சா என் கூட பேசு, பழகு இல்லைனா அதுதான் வாசல் போயிட்டே இரு' என்பது ஏற்புடையது அல்ல.

'நீ செய்றது பிடிக்கலைனாலும் பரவாயில்லை நீ என் நண்பன் சகித்துகொள்வேன்' என்பது ஒரு விதம்.

என் நண்பன் தவறு செய்தால், நட்பு உடைந்தாலும் பரவாயில்லை என்று நேரடியா அதை சுட்டி காட்டி உணர்த்துவது என்பது மற்றொரு விதம்.

என்னை பொறுத்தவரை சகித்து கொள்வதை விட சுட்டி காட்டுவது தான் சிறந்த நட்பு !

ஆனால் நமக்கு மிக பிடித்தவர்களிடத்தில் இன்னும் அதிகமா அதீத அன்பு என்கிற பெயரில் உரிமை எடுத்துக்கொள்ளும் போது பிரச்சனைகள் வந்துவிடுகிறது...! அது போன்ற நேரத்தில் பேசி மனவருத்தம் ஏற்படுத்தி கொள்வதை விட மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. மௌனம் பல நேரம் நம்மை காக்கும் ஒரு ஆயுதம் !

நம் வாயில் இருந்து வரும் வார்த்தைகளே நம்மை பிறரிடம் உருவகபடுத்துகிறது. கோபமாக பேசும்போதும் அதில் கொஞ்சம் அன்பை கலந்து பேசினால் மனம் வருத்தம் கொள்ளாது.இந்த சமூகத்தில் எல்லோரிடமும் நம்மால் நேசம் கொள்ள இயலாது, ஆனால் இங்கே பதிவுலகத்தில் இருக்கும் சிறுகூட்டத்தினரை நேசிக்க நம்மால் நிச்சயம் இயலும். தூய அன்பால் எல்லோரையும் பிணைத்து கொள்வோம்.

யாராக இருந்தாலும் அவர்களிடம் நிறைய எதிர்பார்த்து பழகும்போது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்...இப்படி இரு அப்படி இரு என்பதை விட அவர்களின் இயல்பை அடிப்படை குணத்தை அப்படியே ஏற்றுகொள்வது மிக சிறப்பு. ஒவ்வொருவரின் தனித்தன்மையும்  போற்றப்படவேண்டும்...மதிக்கப்படவேண்டும் !




எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இந்த ஒரு வார காலமாக எனக்கு வாழ்த்துக்களை சொல்லி ஒவ்வொரு பதிவின் போதும் பின்னூட்டம் இட்டு உற்சாக படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மகிழ்வுடன் என் நன்றிகள் !! 


எனக்கு இந்த சந்தர்ப்பத்தை கொடுத்த தமிழ்மணம் நிர்வாகிகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் !!

அப்பாதுரை 
தேவா
கார்த்திக் (எல்.கே)
தருமி
FOOD சங்கரலிங்கம் 
வை.கோபாலகிருஷ்ணன்
சௌந்தர்
ஜோதிஜி திருப்பூர்
சென்னை பித்தன் 
ராமலக்ஷ்மி 
சே.குமார்
மணிஜி 
வல்லி சிம்ஹன்
கே.ஆர்.விஜயன் 
மகேந்திரன்
முனைவர்.இரா.குணசீலன்
ஷைலஜா 
வேடந்தாங்கல் கருன்
வியபதி
என் ராஜபாட்டை-ராஜா
தோழி பிரஷா 
ஹேமா
துளசி கோபால்
மாதேவி
யோகன் பாரிஸ் 
கணேஷ்
ஓசூர் ராஜன்
நம்பிக்கை பாண்டியன்
புதுகை தென்றல்
புலவர் சா. இராமானுசம் 
பாண்டியன்ஜி 
அரசன்
தமிழ்கிழம் 
இராஜராஜேஸ்வரி
வெளங்காதவன்
தெய்வசுகந்தி
கணேஷ்மூர்த்தி 
சந்திரகெளரி
மாய உலகம் 
நிரூபன்
விச்சு
சத்ரியன்
அமைதிசாரல்
தங்கம் பழனி
இம்சைஅரசன் பாபு
அம்பாலடியாள்   
கவிதை வீதி சௌந்தர் 
அன்புடன் அருணா 
r.selvakumar
koodalbala
Siva
Shiva
angelin
asiya omar
suryajeeva
M.R.
rufina rajkumar
Starjan 
Dhans
nellai ram
Shangar
rajpraba
Robin
Mykitchen Flavours
AT.Mayuran
Lingesh
Muruganandan M .K
Bala
Velu.G
V.Radhakrishnan 



நாளையில் இருந்து தமிழ்மணம் நட்சத்திரமாக ஜொலிக்க போகும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !


விடைபெறும் முன்... 

மனிதர்கள் யாராக எத்தகைய குணத்தை கொண்டவராகவும் இருக்கலாம்...அது எனக்கு முக்கியம் இல்லை...நான் மனிதர்களை மதிக்கிறேன்...அதனால் உங்களை அதிகமாய் நேசிக்கிறேன் ! 


இதன்படி என் மனதை நான் தயார் செய்துவைத்து கொண்டிருப்பதால் தான் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது...இந்த மகிழ்ச்சி என்னை சுற்றி இருப்பவர்களையும் நிச்சயம் மகிழ்ச்சிவுறச் செய்யும் என்று நம்புகிறேன் !!

இன்னும் பேசுவேன்...உங்களின் மனதோடு மட்டும்...........

பிரியங்களுடன்
கௌசல்யா




Tweet

38 கருத்துகள்:

  1. //ஆனால் நமக்கு மிக பிடித்தவர்களிடத்தில் இன்னும் அதிகமா அதீத அன்பு என்கிற பெயரில் உரிமை எடுத்துக்கொள்ளும் போது பிரச்சனைகள் வந்துவிடுகிறது...! அது போன்ற நேரத்தில் பேசி மனவருத்தம் ஏற்படுத்தி கொள்வதை விட மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. மௌனம் பல நேரம் நம்மை காக்கும் ஒரு ஆயுதம் !//

    இது நூறு சதவீதம் உண்மை என்பதை சமீபத்தில் தான் அறிந்து கொண்டேன். தாங்களும் கூடச் சொல்லி விட்டீர்கள் அசரீரி போல. இனி கவனமாகவே மெளனமாகவே இருப்பேன்.

    //இங்கே பதிவுலகத்தில் இருக்கும் சிறுகூட்டத்தினரை நேசிக்க நம்மால் நிச்சயம் இயலும். தூய அன்பால் எல்லோரையும் பிணைத்து கொள்வோம்.//

    நல்லது. அப்படியே செய்வோம். “தூய அன்பு” என்பது தான் இதில் மிகவும் முக்கியம்.

    என்னை மனமார வாழ்த்தியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இன்று உங்களுக்கு விடுதலை போல ஜாலியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது, ஏனென்றால் நாளை முதல் மாட்டப்போவது நான் அல்லவா! ஒரு நகைச்சுவைக்காக எழுதியுள்ளேன். தவறாக நினைக்க வேண்டாம்.

    என்றும் அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  2. "பிறர் உன்னிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறாயோ அப்படி முதலில் நீ நட " இயன்றவரை இப்படி நடக்க வேண்டும் என முயற்சிக்கிறேன்...


    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அடுத்த தமிழ்மண நட்சத்திரமாக
    அசாதாரணமானவருக்கு
    இதயம் நிறைந்த வரவேற்புகளும் வாழ்த்துகளும்..

    பதிலளிநீக்கு
  4. அடடா.. அதுக்குள்ள நட்சத்திர வாரம் முடிந்துவிட்டதா.. ஒருவாரம் போனதே தெரியல. உங்களுடைய நட்சத்திர வாரத்தில் பலவித கருத்துக்களை பகிர்ந்தது மிக்க மகிழ்வை தந்தது. தொடரட்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. நட்சத்திர பதிவுகளை வெற்றிகரமாக முடிததுக்கொண்டு விடைப்பெரும் தங்களுக்கு என்மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான வாரம். இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. /////
    "பிறர் உன்னிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறாயோ அப்படி முதலில் நீ நட "/////////


    உண்மைதான்... கொடுத்து பெருவதில்தான் இன்பம்...

    பதிலளிநீக்கு
  8. என்னமோ எதோ என்று உள்ளே வந்தால், தமிழ் மன நட்சத்திர வாரம் விடைபெறுதலா? நன்றிக்கு பதில் நன்றி...

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு நட்சத்திர வாரம் நல்கிய தங்கைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. ஏழு தினங்கள் நட்சத்திரமாய்
    தமிழ்மணத்தில் அருமையாய் ஒளிவிட்டீர்கள்.
    வாழ்த்துக்கள் சகோதரி..

    பதிலளிநீக்கு
  11. அன்பின் கௌசல்யா = ஆகா அதற்குள் ஒரு வாரம் முடிந்து விட்டதா ? அப்பாடா என்று நன்றி சொல்லி முடித்து விட்டீர்களா ? அததனை இடுகைகளும் நன்று - வாழ்வில் முன்னேற - உதவி - ஆலோசனை அளித்தவர்கள் பற்றி ஒன்று. கூட்டுக் குடும்பம் பற்றி ஒன்று - பெண்களின் மனதைப் பற்றி ஒன்று - குழந்தை வளர்ப்பு பற்றி ஒன்று - பண்புகளைப் பற்றி ஒன்று - என வாழ்வியல் தத்துவங்களை ஒரு வாரம் முழுவதும் அள்ளித் தெளீத்து விடை பெறுகிறீர்கள் - நன்று நன்று. நல்வாழ்த்துகள் கௌசல்யா - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  12. கிடைத்த தருணத்தணத்தைப் பாவித்து அருமையான வாரமாக அமைந்திருந்தீர்கள் கௌசி.வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  13. சிறப்பான வாரத்தைக் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. தோள்ல கை போட்டு பேசிட்டிருந்த நண்பன் ஊருக்குப் போயிட்டு வர்றேன்னு விடைபெறுகிற மாதிரி கஷ்டமா இருக்கு. நல்ல விஷயங்களை உங்களால தெரிஞ்சுக்க முடிஞ்சது. மனமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  15. சிறப்பான வாழ்வியல் வாரம் படைத்த உங்களுக்கு பாராட்டுதல்களும் நன்றிகளும்

    பதிலளிநீக்கு
  16. "பிறர் உன்னிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறாயோ அப்படி முதலில் நீ நட " இயன்றவரை இப்படி நடக்க வேண்டும் என முயற்சிக்கிறேன்...
    //

    மிகச்சரி!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. உங்கள் அடிப்படை எண்ணங்களே இந்த வாரத்தில் நல்ல வார்த்தைகளாக சிந்தனைகளாக வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  18. //மௌனம் பல நேரம் நம்மை காக்கும் ஒரு ஆயுதம் !//well said

    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் கௌசி.அற்புதமான சிந்தனைகள் .

    பதிலளிநீக்கு
  19. //ஆனால் நமக்கு மிக பிடித்தவர்களிடத்தில் இன்னும் அதிகமா அதீத அன்பு என்கிற பெயரில் உரிமை எடுத்துக்கொள்ளும் போது பிரச்சனைகள் வந்துவிடுகிறது...! அது போன்ற நேரத்தில் பேசி மனவருத்தம் ஏற்படுத்தி கொள்வதை விட மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. மௌனம் பல நேரம் நம்மை காக்கும் ஒரு ஆயுதம் !//

    இன்று இப்படி தான், மௌனமாக இருந்து விட்டேன்.
    இனி மேலும் முயல்வேன்.
    சென்று வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  20. எழுத்திலும் எண்ணத்திலும் வெளிப்படும் முதிர்ச்சி செயல்களிலும் பற்றி நிற்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. சகோதரி!


    உவப்பத் தலை கூடி உள்ளப் பிரிதல்
    ஒன்றே புலவர் தொழில் என்பர்
    ஆம்! தாங்களும் புலமை மிக்கவர் தானே!
    எனவே, அனைவரும் மகிழ
    உறவாடி தற்போது அனைவரும்
    நினைக்கும் வண்ணம் விடை பெற்றாலும் மணத்தோடு மட்டுமே!
    மீண்டும் தங்கள் மனத்தோடு
    மட்டும் வழி சந்திப்போம்
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  22. @@ வை.கோபாலகிருஷ்ணன் said...

    //இன்று உங்களுக்கு விடுதலை போல ஜாலியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது, ஏனென்றால் நாளை முதல் மாட்டப்போவது நான் அல்லவா!//

    குருவி தலையில் பனங்காய் போல இருந்தது :))(சரியா சொல்றேனா ?!)

    பொறுப்பை ஓரளவிற்கு முடித்து விட்டாச்சு போல ஒரு நிம்மதி இருக்கிறது. நீங்க சொன்னது போல கொஞ்சம் ஜாலிதான் :))

    நன்றி

    பதிலளிநீக்கு
  23. @@ இராஜராஜேஸ்வரி said...

    //அடுத்த தமிழ்மண நட்சத்திரமாக
    அசாதாரணமானவருக்கு
    இதயம் நிறைந்த வரவேற்புகளும் வாழ்த்துகளும்..//

    ரொம்ப சரியா சொல்லிடீங்க. ஒரு வாரம் பல நல்ல பதிவுகள் படிக்க கூடிய சந்தர்ப்பம் நமக்கு கிடைச்சிருக்கு.

    நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  24. @@ Starjan ( ஸ்டார்ஜன் )...

    நன்றி ஸ்டார்ஜன்



    @@ கவிதை வீதி... // சௌந்தர் //...

    நன்றிகள் சௌந்தர்.



    @@ ராமலக்ஷ்மி...

    நன்றி தோழி.


    @@ suryajeeva...

    நன்றி சூர்யா


    @@ FOOD...

    நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  25. @@ மகேந்திரன்...

    நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  26. @@ cheena (சீனா)...

    ஒரு வாரத்தில் போட்ட பதிவுகளை மிக அழகாக வரிசை படுத்தி அசத்திவிட்டீர்கள்.

    அனைத்து பதிவையும் படித்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  27. @@ ஹேமா...

    நன்றி ஹேமா


    @@ பொதினியிலிருந்து... கிருபாகரன்...

    உங்களின் முதல் வரவிற்கு மகிழ்கிறேன். நன்றிகள்.


    @@ மாதேவி...

    நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
  28. @@ கணேஷ் said...

    தொடர்ந்து வருவீர்கள் தானே ?! உங்களின் உற்சாகமான பின்னூட்டங்கள் சிறப்பானவை.

    நன்றிகள் கணேஷ்

    பதிலளிநீக்கு
  29. @@ middleclassmadhavi...

    மிக்க நன்றி தோழி.


    @@ கோகுல்...

    நன்றி கோகுல்.


    @@ ஜோதிஜி திருப்பூர்...

    மிக்க நன்றிகள்


    @@ angelin...

    நன்றி தோழி.



    @@ யோகன் பாரிஸ்(Johan-Paris)...

    தொடர்ந்து பின்பற்றுங்கள். மனம் அமைதியாக இருக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  30. @@ அப்பாதுரை said...

    //எழுத்திலும் எண்ணத்திலும் வெளிப்படும் முதிர்ச்சி செயல்களிலும் பற்றி நிற்க வாழ்த்துக்கள்.//

    புரிந்து கொண்டேன்.

    நன்றிகள் சகோ.

    பதிலளிநீக்கு
  31. @@ புலவர் சா இராமாநுசம் said..

    //அனைவரும்
    நினைக்கும் வண்ணம் விடை பெற்றாலும் மணத்தோடு மட்டுமே!
    மீண்டும் தங்கள் மனத்தோடு//

    எவ்வளவு அருமையா சொல்றீங்க...உங்கள் கவிதைகளில் விளையாடும் தமிழ் கண்டு வியந்திருக்கிறேன் பலமுறை...!

    உங்கள் ஆசியுடன் நல்ல பதிவுகளை இனியும் தொடருவேன்.

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  32. என்னை வாழ்த்தியுள்ளதற்கு மனமார்ந்த நன்றிகள்.

    உங்கள் எண்ணங்களே நல்ல சிந்தனைகளாக இந்த நட்சத்திர வாரத்தில் வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  33. உண்மை தான் மழுப்பி தொடர்வதை விட..தவறை நேரடியாக சுட்டிக்காட்டி விடுவது சிறந்தது.. அருமையா அதை சொல்லிருக்கீங்க... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. மிகவும் அருமை. உங்களிடமிருந்து நான் கற்றது அதிகம். தொடருங்கள் உங்களது பகிர்தலை. பகிர்தலில் தான் சந்தோசம். நன்றி.

    பதிலளிநீக்கு
  35. மிக அருமையான பகிர்வு தோழி.
    வாழ்த்துகக்ள்

    பதிலளிநீக்கு
  36. நன்று..
    அப்படியே என்னொட வலை பூவுக்கு வாங்க
    http://mydreamonhome.blogspot.com/

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...