ஞாயிறு, நவம்பர் 14

AM 8:48
63



எல்லோருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...குழந்தைகளை நாம் வாழ்த்த வேண்டும்.....ஆனால் 'இந்த ஒரு நாளில் மட்டும் நாம் நம் குழந்தைகளை வாழ்த்தினால் போதுமா ?' என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்...யோசித்து கொண்டே பதிவை தொடர்ந்து படியுங்கள்.


ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்காக படும் பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல. குழந்தை பிறந்து நடக்க தொடங்கியது முதல் அவர்களின் டென்ஷன் அதிகரிக்க தொடங்கி விடும். கணவன் சம்பாத்தியம் மட்டும் போதுமா என்று மனைவியும் வேலைக்கு செல்ல தொடங்குவார்கள். நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்..... இன்றைய ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்காக என்னவெல்லாம் செய்கிறோம் என்று ஒரு லிஸ்ட் போடுவோமே....



* கணவன், மனைவி இருவரும் போட்டி போட்டு கொண்டு பொருள் தேட உழைக்கிறோம்.



* பிள்ளைகள் பெயரில் பாங்கில் பணம் சேர்த்து வைக்கிறோம்.



* நகரத்தில் இருப்பதிலேயே சிறந்த பள்ளி எதுவென்று சல்லடை போட்டு அலசாத குறையா தேடி சேர்க்கிறோம். (டொனேசன் அதிகமா  கொடுத்து இடம் பிடிச்சேன்...?! சலிப்பாக பெருமை பட்டு கொண்டுதான்...!) 



* இன்னும் நல்லா படிக்க வேண்டுமே என்று ஸ்பெஷல் கிளாஸ், கோச்சிங் கிளாஸ் என்று வேறு சேர்த்துவிடுகிறோம்.



* தன் குழந்தை எல்லா கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று டான்ஸ், பாட்டு, கராத்தே, குங்க்பூ, ஸ்கேடிங்....இப்படி பல கிளாஸ்களில் சேர்த்து விடுகிறோம். (அவங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ...!) 



* பண்டிகை விசேச நாட்களில் விலை கூடுதலான துணியா பார்த்து பார்த்து வாங்கி அணிவித்து மகிழ்கிறோம்..(பக்கத்து வீட்டு குழந்தை போட்டு இருக்கிற டிரெஸ்ஸை விட விலை கூடுதலா...! ) 



* குழந்தைகள் அதிகம் உண்ண விரும்பும் பிஸ்சா, பர்கர், நூடுல்ஸ் போன்றவற்றை வாங்கி கொடுக்கிறோம். (உடம்பிற்கு இவை ஆரோக்கியம் இல்லை என்றாலும் குழந்தை விரும்புதே என்று...!)



ஒரு பெற்றோரா இதை விட வேற என்னங்க செய்ய முடியும்....?! உண்மைதான் ஆனால் உங்களிடம் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே.......! 



பதில் : இன்னும் யோசிச்சிட்டு இருக்கிறோம்....!?



சரி விடுங்க நானே சொல்றேன்....என் பதில் சரிதானா என்று மட்டும் சொல்லுங்க... 



உங்கள் குழந்தைகளின் நலனுக்காக ஓடி ஓடி எல்லாம் செய்றீங்க, மிக சிறந்த பெற்றோர் நீங்க தான், ஆனால் ஒண்ணு தெரியுமா...?? 



'உங்கள் குழந்தை உண்மையில் சந்தோசமா இருக்கா ? ஒரு நாளாவது இந்த கேள்வியை உங்க குழந்தைகளிடம் கேட்டு இருக்கீங்களா...?? இது வரை கேட்கவில்லை என்றால் இன்னைக்கு கண்டிப்பாக கேளுங்க...! நீங்கள் அவர்களுக்காக செய்ய கூடிய எல்லாம் விசயமும் அவர்களுக்கு பிடித்து இருக்கிறதா என்று இன்று கேளுங்க....! 



உங்களின் விருப்பங்களை அவர்கள் மேல் திணித்து வளர செய்வதை விட அவர்களின் விருப்பங்கள் என்னவென்று அறிந்து, அதையும் தெரிந்து கொண்டு  அதன் படி வளர்ப்பது நன்மை பயக்கும். நம் குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகள். 



குழந்தைகளை ரசித்து கொண்டாட இந்த ஒரு தினம் போதாது....தினம் தினம் ரசியுங்கள், செல்லமாய் உச்சியில் முத்தமிடுங்கள், உற்சாக படுத்துங்கள், பாராட்டுங்கள் நம் பிள்ளைகள் தானே சந்தோசமாக இருந்து விட்டு போகட்டுமே....! என்ன நான் சொல்ற பதில் சரிதானே...? மறுபடியும் யோசிச்சு பாருங்கள், சரியாதான் இருக்கும்....! 



குழந்தையை முதலில்  'குழந்தையா சந்தோசமாக இருக்க விடுங்கள்' என்று இந்த நாளில் உங்களிடம் கேட்டு கொள்கிறேன்.



சரிங்க நான் இத்துடன் முடிக்கிறேன்...என் பசங்களை இன்னைக்கு இன்னும் நான் கொஞ்சவில்லை...அப்புறம் கோவிச்சுக்க போறாங்க......




உங்களுக்கும் , உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும்.... என்னுடைய மற்றும்  என் இரு சுட்டி வாண்டுகளின் 'குழந்தைகள் தின வாழ்த்துக்கள்'   
  
                                                   

Tweet

63 கருத்துகள்:

  1. அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. சரியாச் சொன்னீங்க. அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...

    ஆமா... இதுவரை நாம் கேட்டிருக்கிறோமா என்றால் இல்லை என்பதே உண்மை... உண்மையை அழகாய் சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  6. i am harini.studying 1 st standard .
    childrens day wishes to every body who coming to u r post.

    And a special wishes to kousalya aunty and to u r childs

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா10:45 AM, நவம்பர் 14, 2010

    குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
    (ம்.. எனக்கு நானே வாழ்த்து சொல்ல வேண்டியிருக்குது ;) )

    பதிலளிநீக்கு
  8. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  9. //'உங்கள் குழந்தை உண்மையில் சந்தோசமா இருக்கா ? ஒரு நாளாவது இந்த கேள்வியை உங்க குழந்தைகளிடம் கேட்டு இருக்கீங்களா...?? இது வரை கேட்கவில்லை என்றால் இன்னைக்கு கண்டிப்பாக கேளுங்க...! //

    நச்

    பதிலளிநீக்கு
  10. //குழந்தைகளை ரசித்து கொண்டாட இந்த ஒரு தினம் போதாது....தினம் தினம் ரசியுங்கள், செல்லமாய் உச்சியில் முத்தமிடுங்கள், உற்சாக படுத்துங்கள், பாராட்டுங்கள் நம் பிள்ளைகள் தானே சந்தோசமாக இருந்து விட்டு போகட்டுமே....!//

    சூப்பர்.
    குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. அருமையான கருத்துக்கள். குழந்தைகள் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. //உங்களின் விருப்பங்களை அவர்கள் மேல் திணித்து வளர செய்வதை விட அவர்களின் விருப்பங்கள் என்னவென்று அறிந்து, அதையும் தெரிந்து கொண்டு அதன் படி வளர்ப்பது நன்மை பயக்கும். நம் குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகள். //

    பதிலளிநீக்கு
  13. உங்களுக்கு எங்கள் வ்லைப்பூவின் சார்பில் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...

    (கொழந்த மனசு உங்களுக்கு...)

    http://bharathbharathi.blogspot.com

    பதிலளிநீக்கு
  14. மிகச்சரியாக சொல்லி இருக்கீங்க, பிள்லைகள் சந்தொமக இருக்கிறார்கலாஎன்று கண்டிப்பா பார்க்கனும்.

    பதிலளிநீக்கு
  15. அருமையான கட்டுரை!
    எல்லோருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. கரெக்டா சொல்லி இருக்கீங்க....

    குழந்தைகளை நாம் அனுதினமும் பேணி பாதுகாக்க வேண்டும்....

    அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  18. சரியாகச் சொல்லியிருக்கிங்க.. அனைத்து குழந்தைகளுக்கும் என் இனிய குழந்தைகள் தின நல்வவழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. நல்ல பதிவு. உங்கள் குழந்தைகளுக்கும் குழந்தை தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. நாம் குழந்தை பருவத்தில் அனுபவித்த சந்தோசங்களை கண்டிப்பாக இன்றைய குழந்தைகள் அனுபவித்திருக்க மாட்டார்கள் ....சின்ன சின்ன விளையாட்டுகள் எவ்வளவோ அனுபவித்துள்ளோம் ...இரவில் கரண்ட் கட்டானால் .தெருவில் வந்து .ஊனு..கத்தி ஒரு ரகளை பண்ணுவோம் ...பவுரன்மி நிலவில் அம்மா உருட்டி தர வட்டமாக அமர்ந்து வீட்டு முன்னாலோ அல்லது மொட்டை மாடியிலோ எல்லோரும் சாப்பிடுவோம் ...கள்ளன் போலிஸ் இப்படி செலவே இல்லாத விளையாட்டுகள் தான் ...
    அதனால் தான் என் குழந்தைகளை லிவிலோ ...அல்லது மாலையிலோ விளையாட அனுமதிப்பேன் ...பள்ளி விடுமரையில் கண்டிப்பாக அத்தை வீட்டுக்கோ ...பெரியப்பா வெட்டுக்கோ போய் வாருங்கள் என்று அனுப்பி வைப்பேன் ...குழந்தைகளுக்கு மாறுதல் அவசியம் ....ஒன்றை மட்டும் ஒத்துகொள்ள வேண்டும் ..நம் குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகளாக தான் இருக்கிறார்கள் .....தச்சை கண்ணன் ...

    பதிலளிநீக்கு
  21. superb!

    குழந்தைகள் சந்தோசமாக இருக்கிறார்களா என்று எப்படித் தெரிந்து கொள்வது? குழந்தைகள் 'சந்தோசமாக இல்லை' என்று சொல்ல மாட்டார்கள். (இன்றைய குழந்தைகள் வயதைப் பொறுத்து நிறைய விவரம் சொல்வார்கள் - அந்த நாளில் என் தந்தை இப்படிக் கேட்டிருந்தால் உதை விழுமே என்ற பயத்தில் 'ரொம்ப சந்தோசமா இருக்கேம்பா' என்று பதில் அவசர அவசரமாகச் சொல்லியிருப்பேன்).
    சரி, எப்படித் தெரிந்து கொள்வது? "நான் எப்படி நடந்துகிட்டா உனக்கு சந்தோசமா இருக்கும்" என்று கேட்கலாம். பேசத் தெரிந்த குழந்தைகள் அத்தனை பேரிடமிருந்தும் பதில் வரும். மாதமொரு முறையாவது கேட்பது நல்லது. அவர்கள் பதிலுக்கேற்றபடி நடந்து கொள்ள முயற்சிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  22. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. happy childrens day to you and your kids(naamum siru pillaigalaga maari avargalodu vilaiyada vendum)
    if a child is happy at home it would be a brilliant child at school.

    பதிலளிநீக்கு
  24. ஆம்... பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களால் நிறைவேற்ற முடியாத செயல்களை குழந்தைகளின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள துடிக்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
  25. ***இன்றைய ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்காக என்னவெல்லாம் செய்கிறோம் என்று ஒரு லிஸ்ட் போடுவோமே8***

    நம்ம ஊர்ல குழந்தை பாக்கியம் இல்லாதவங்க எல்லாம் இன்னைக்கு கொஞ்சம் கஷ்ட்டப்படுவாங்களா?

    பதிலளிநீக்கு
  26. எந்த விஷயத்தையும் தெளிவாகச் சொல்கிறீர்கள் கௌசி.
    குழந்தைகளுக்கும் உங்களுக்கும் கூட வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  27. குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  28. //குழந்தையை முதலில் 'குழந்தையா சந்தோசமாக இருக்க விடுங்கள்' என்று இந்த நாளில் உங்களிடம் கேட்டு கொள்கிறேன்.//

    இது தான் தேவை.

    அதோடு கல்வியை குழந்தைகளின் இயல்புக்கு ஏற்ப கற்றுக் கொடுக்கிறோமா அல்லது கனமான கல்வியை தரமான கல்வியாக நினைத்து பிள்ளைகள் மேல் திணிக்கிறோமா என்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

    அது குறித்த ஒரு பதிவு இதோ

    http://www.virutcham.com/2010/10/நர்சரி-குழந்தைகளின்- மேல்/

    பதிலளிநீக்கு
  29. சௌந்தர்...

    உனக்கும் என் வாழ்த்துக்கள் சௌந்தர்....!!

    கலாநேசன்...

    உங்கள் வீட்டு சுட்டிக்கும் என் வாழ்த்துகளை சொல்லிடுங்க. நன்றி

    S Maharajan...

    உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ...
    வாழ்த்துக்கு நன்றிங்க.

    சே.குமார் said...

    //இதுவரை நாம் கேட்டிருக்கிறோமா என்றால் இல்லை என்பதே உண்மை..//

    கேட்கணும்....முதலில் அவங்க சொல்ல தயங்கினாலும், பிறகு மெதுவா சொல்ல ஆரம்பிப்பாங்க....! புரிதலுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  30. இம்சைஅரசன் பாபு.. said...

    //i am harini.studying 1 st standard .childrens day wishes to every body who coming to u r post.//

    அடடா.....இது என்ன...?? சின்ன குழந்தையை எல்லாம் யார் பிளாக் உலகத்துக்குள்ள வர சொன்னது...? ஏம்மா ஹரிணி எப்படி வந்தியோ, அப்படியே ஓடிடு....இந்த உலகம் ரொம்ப ஆபத்தானது....!

    பூச்சாண்டி வரதுக்குள்ள சமத்தா போயிடு...o.k

    And a special wishes to kousalya aunty and to u r childs

    வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் பாப்பா...

    பதிலளிநீக்கு
  31. Balaji saravana said...

    //குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
    (ம்.. எனக்கு நானே வாழ்த்து சொல்ல வேண்டியிருக்குது ;) )//

    இப்பதான் ஒரு குழந்தைக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பினேன்....மறுபடி நீங்களுமா???

    :))

    பதிலளிநீக்கு
  32. ஹரிஸ் said...

    //குழந்தைகள் தின வாழ்த்துக்கள்..//

    வாழ்த்திற்கு நன்றி ஹரிஸ்.

    பதிலளிநீக்கு
  33. அன்பரசன் said...

    //சூப்பர்.
    குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...//

    நான் கேட்க சொன்னதை கேட்டீங்களா....? வாழ்த்திற்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  34. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    //அருமையான கருத்துக்கள். குழந்தைகள் தின வாழ்த்துகள்//

    வாங்க...ரொம்ப நாள் ஆச்சு...நலமா...??

    வாழ்த்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  35. பாரத்... பாரதி... said...

    //உங்களுக்கு எங்கள் வ்லைப்பூவின் சார்பில் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...

    (கொழந்த மனசு உங்களுக்கு...)//

    உங்களின் முதல் வருகைக்கு மகிழ்கிறேன். உங்களின் வாழ்த்திற்கு என் நன்றிகள். உங்கள் தளத்தை பார்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. Jaleela Kamal said...

    //மிகச்சரியாக சொல்லி இருக்கீங்க, பிள்லைகள் சந்தொமக இருக்கிறார்கலாஎன்று கண்டிப்பா பார்க்கனும்.//

    உண்மைதான். வருகைக்கு நன்றி தோழி

    பதிலளிநீக்கு
  37. எஸ்.கே said...

    //அருமையான கட்டுரை!
    எல்லோருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!//

    வாழ்த்திற்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  38. வெறும்பய said...

    //அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்//

    வாழ்த்திற்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  39. //'உங்கள் குழந்தை உண்மையில் சந்தோசமா இருக்கா ? ஒரு நாளாவது இந்த கேள்வியை உங்க குழந்தைகளிடம் கேட்டு இருக்கீங்களா...?? இது வரை கேட்கவில்லை என்றால் இன்னைக்கு கண்டிப்பாக கேளுங்க...! நீங்கள் அவர்களுக்காக செய்ய கூடிய எல்லாம் விசயமும் அவர்களுக்கு பிடித்து இருக்கிறதா என்று இன்று கேளுங்க....!
    ///

    உண்மைலேயே கலக்கிட்டீங்க அக்கா .,இந்த மாதிரியான குழப்பங்களுக்கு சந்தோஸ் சுப்பிரமணியம் படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு .. அதே மாதிரி குழந்தைகளை தினமும் அன்பு காட்டுவதே சிறந்தது ,,

    பதிலளிநீக்கு
  40. யோசிக்க வேண்டிய விஷயம் தான்....

    பதிலளிநீக்கு
  41. உரைக்கும் உண்மைகளை உரத்துச்சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  42. நல்ல பதிவு கெளசல்யா! ஒவ்வொருத்தரும் இத்தனை விழிப்புணர்வுடன் செயல்பட்டால் குழந்தைகளின் உலகம் சொர்க்கமாகிவிடும். இன்னொன்று எதை விதைக்கிறோமோ, அதுதான் பிற்காலத்தில் நமக்கு அறுவடையாகும். என் மகனை இப்படித்தான் அவருடைய உணர்வுகளுக்கும் ஆசைகளுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து வளர்த்தோம். இன்று மனைவியும் குழந்தையும் வந்த பின்பும்கூட எங்களின் உணர்வுகளுக்கு என்றுமே முதல் மரியாதைதான். ஆசைகள் என்று ஏதேனும் ஏற்படுவதற்கு முன்பே அது டெலிபதிபோல அவர் நிறைவேற்றி விடுவார். இதுதான் பெற்றவர்களுக்குக் கிடைக்கும் சொர்க்கமும் கெளரவமும்!!

    பதிலளிநீக்கு
  43. நம்முடையக் கருத்துக்களைக் குழந்தைகள் மேல் திணிப்பதை விட குழந்தைகளின் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொண்டு குழந்தையோடு குழந்தையாக நாமும் மாறி விடுவது நல்லது.

    பதிலளிநீக்கு
  44. R.Gopi said...

    //குழந்தைகளை நாம் அனுதினமும் பேணி பாதுகாக்க வேண்டும்....//

    இதை நாம் தவிர்த்தால் குழந்தைகளும் நம்மை தவிர்த்து விடுவார்கள் என்பதை நாம் மறக்க கூடாது

    வாழ்த்திற்கு நன்றி கோபி

    பதிலளிநீக்கு
  45. சிநேகிதி....

    உங்களின் வாழ்த்திற்கும் நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  46. வெங்கட் நாகராஜ்...

    வாழ்த்திற்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  47. murugan said...


    //அதனால் தான் என் குழந்தைகளை லிவிலோ ...அல்லது மாலையிலோ விளையாட அனுமதிப்பேன் ...பள்ளி விடுமரையில் கண்டிப்பாக அத்தை வீட்டுக்கோ ...பெரியப்பா வெட்டுக்கோ போய் வாருங்கள் என்று அனுப்பி வைப்பேன் ..//

    உங்களின் மலரும் நினைவுகளை நினைவு படுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன்....அதை எல்லாம் இப்ப நினைக்கிறப்ப ஆதங்கமாக இருக்கிறது. நம் குழந்தைகள் கம்ப்யூட்டர் முன்னாலும், டிவி முன்னாலும் நேரத்தை செலவு பண்ணுவதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது...



    நீங்கள் அடுத்து சொல்லி இருப்பது போல் லீவில் நம் உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பி வைப்பது மிகவும் நல்ல விஷயம்....அன்பும், பாசமும், விட்டுகொடுத்தல், சகிப்பு தன்மை போன்ற குணங்கள் வளர இது வாய்ப்பை கொடுக்கும்....



    நல்ல கருத்துகள் சொன்னதிற்காக மிகவும் நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  48. அப்பாதுரை said...

    //சரி, எப்படித் தெரிந்து கொள்வது? "நான் எப்படி நடந்துகிட்டா உனக்கு சந்தோசமா இருக்கும்" என்று கேட்கலாம். பேசத் தெரிந்த குழந்தைகள் அத்தனை பேரிடமிருந்தும் பதில் வரும். மாதமொரு முறையாவது கேட்பது நல்லது. அவர்கள் பதிலுக்கேற்றபடி நடந்து கொள்ள முயற்சிக்கலாம்.//


    இப்ப நீங்க சொல்லி இருப்பது தான் சூப்பர். இந்த மாதிரி கேள்வியை கேட்கும் போது கண்டிப்பாக குழந்தைகள் உண்மையை சொல்வார்கள், நாமும் அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ளலாம்.



    சகோ எனக்கு உங்களை போன்றோரின் பின்னூட்டங்களை பார்க்கும் போது தான் எனக்கு ஒரு நிறைவு ஏற்படுகிறது. நல்லவற்றை தான் பல மனங்களில் விதைக்கிறோம், என்ற திருப்தி ஏற்படுகிறது. அதற்காக உங்களுக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  49. asiya omar said...


    //குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.//



    வாழ்த்திற்கு நன்றி தோழி...

    பதிலளிநீக்கு
  50. angelin said...

    //happy childrens day to you and your kids(naamum siru pillaigalaga maari avargalodu vilaiyada vendum)//

    கண்டிப்பா விளையாட வேண்டும் angelin , மற்ற நேரம் விளையாடுவதை விட மழை பெய்யும் போது அதில் நனைந்து அவர்களுடன் விளையாடி பாருங்கள்....அப்பொழுது அறிந்து கொள்வீர்கள் சுவர்க்கம் வேறு எங்கும் இல்லை, உங்கள் வீட்டில் தான் என்று...!! (fever வருவதை பற்றியெல்லாம் கவலை படகூடாது...அடிக்கடி நனைந்தால் அந்த காய்ச்சலே உங்களை விட்டு ஓடி விடும் ) :))

    //if a child is happy at home it would be a brilliant child at school.//

    100 % உண்மை.

    முதல் வருகைக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  51. philosophy prabhakaran said...


    //ஆம்... பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களால் நிறைவேற்ற முடியாத செயல்களை குழந்தைகளின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள துடிக்கிறார்கள்.//

    அங்கே தான் பலரும் தவறுகள் செய்கிறோம்... அப்படி வலுகட்டாயமாக பிடிக்காத ஒன்றை திணித்து வளர்க்கப்படும் குழந்தைகள் தான் நாளை நம்மை கொண்டு போய் முதியோர் இல்லத்தில் சேர்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

    புரிதலுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  52. வருண் said...

    //நம்ம ஊர்ல குழந்தை பாக்கியம் இல்லாதவங்க எல்லாம் இன்னைக்கு கொஞ்சம் கஷ்ட்டப்படுவாங்களா?//

    இதற்கு என்னிடம் பதில் இல்லையே வருண். :(

    இருகிறவங்களுக்கு ஒரு பிள்ளை, இல்லாதவர்களுக்கு பார்க்கும் எல்லோருமே தங்கள் பிள்ளைகள் தான்.

    பதிலளிநீக்கு
  53. ஹேமா said...


    //எந்த விஷயத்தையும் தெளிவாகச் சொல்கிறீர்கள் கௌசி.

    குழந்தைகளுக்கும் உங்களுக்கும் கூட வாழ்த்துகள் //


    எல்லாம் என் பசங்களிடம் கத்துகிட்ட பாடம் தான்பா....! வாழ்த்திற்கு நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  54. VELU.G said...


    //சரியாக சொன்னீங்க//

    புரிதலுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  55. ஜோதிஜி said...


    //குழந்தைகள் தின வாழ்த்துக்கள்..//


    பாரதியார் அவர்கள் வந்து வாழ்த்து சொன்னது போல் இருக்கிறது...:)

    நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  56. virutcham said...

    //அதோடு கல்வியை குழந்தைகளின் இயல்புக்கு ஏற்ப கற்றுக் கொடுக்கிறோமா அல்லது கனமான கல்வியை தரமான கல்வியாக நினைத்து பிள்ளைகள் மேல் திணிக்கிறோமா என்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும்.//



    ஆமாம் கண்டிப்பாக இந்த அக்கறை வேண்டும் தான், அவசியமும் கூட. உங்கள் தளத்தை பார்கிறேன். வருகைக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  57. ப.செல்வக்குமார் said...

    //உண்மைலேயே கலக்கிட்டீங்க அக்கா .,இந்த மாதிரியான குழப்பங்களுக்கு சந்தோஸ் சுப்பிரமணியம் படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு .. அதே மாதிரி குழந்தைகளை தினமும் அன்பு காட்டுவதே சிறந்தது ,,//

    எனக்கு கூட இது தோணல செல்வா....அந்த படத்தின் கதையின் கருவே இது தான்..
    புரிதலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  58. அருண் பிரசாத் said...

    //யோசிக்க வேண்டிய விஷயம் தான்....//

    அப்ப இன்னும் யோசிக்க தொடங்கலையா....நீங்க எப்ப யோசிச்சு எப்ப செயல்ல
    இறங்க?? :))

    பதிலளிநீக்கு
  59. நிலாமதி said...

    //உரைக்கும் உண்மைகளை உரத்துச்சொல்லி இருக்கிறீர்கள் //

    புரிதலுக்கு நன்றி அக்கா

    பதிலளிநீக்கு
  60. மனோ சாமிநாதன் said...

    //நல்ல பதிவு கெளசல்யா! ஒவ்வொருத்தரும் இத்தனை விழிப்புணர்வுடன் செயல்பட்டால் குழந்தைகளின் உலகம் சொர்க்கமாகிவிடும். இன்னொன்று எதை விதைக்கிறோமோ, அதுதான் பிற்காலத்தில் நமக்கு அறுவடையாகும். என் மகனை இப்படித்தான் அவருடைய உணர்வுகளுக்கும் ஆசைகளுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து வளர்த்தோம். இன்று மனைவியும் குழந்தையும் வந்த பின்பும்கூட எங்களின் உணர்வுகளுக்கு என்றுமே முதல் மரியாதைதான். ஆசைகள் என்று ஏதேனும் ஏற்படுவதற்கு முன்பே அது டெலிபதிபோல அவர் நிறைவேற்றி விடுவார். இதுதான் பெற்றவர்களுக்குக் கிடைக்கும் சொர்க்கமும் கெளரவமும்!!//

    அக்கா உங்களின் பின்னூட்டம் படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நான் இப்ப சொல்றத நீங்க
    செயல்ல செய்து காண்பித்து விட்டீர்கள்....பெருமித படுகிறேன் உங்களை எண்ணி... உங்கள்
    மகனையும் மருமகளையும், குழந்தையையும் என் மனமார வாழ்த்துகிறேன்...

    மிக நல்ல கருத்தை இங்கே சொல்லி இருக்கிறீர்கள்...இதை படிப்பவர்களுக்கு நீங்கள் ஒரு முன்
    உதாரணம். நன்றி அக்கா

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...