வியாழன், ஜூலை 1

AM 10:51
26

 
                                          
                                            அன்றொரு நாள் மொட்டை மாடியில்
                                                    இரவின் அமைதியில் நீயும் நானும்
                                            நம்மை மறந்து பேசிகொண்டிருந்தோம்...
                                                     அன்று முழு நிலவு ஆதலால் நிலவுப்பெண்
                                            தன் ஒளி கற்றையை நாளா புறமும் வீசி
                                                     இரவை பகலாக்கி கொண்டிருந்தாள்.                                           
                                          
                                           பேசிகொண்டிருந்த நீ என்னை பார்ப்பதை விடுத்து
                                                      அவளையே கண் வைத்து நோக்க
                                           பெண்மைக்கே உரிய பொறாமைத்தீ
                                                       என்னுள் எரிய, கோபத்தில் நான்
                                           அவ்விடத்தை விட்டகன்று செல்ல,
                                                       சுதாரித்துக்கொண்ட நீ தள்ளிச்சென்ற
                                             
                                            என்னை உன் வலு கரத்தால் பற்றி இழுத்து
                                                       அணைத்துக்கொள்ள, சினம் தணியாத
                                            நான் திமிர,  தரையில் அமர்ந்த நீ என்னை
                                                        உன் மடியில் சாய்த்து, முகத்தை நிமிர்த்தி
                                            'நிலவைப்பார்' என்றாய்.  வெறுப்பாய் நான்
                                                        மேலே நோக்க.....,   என்னால்  இயலவில்லை 
                                              
                                            அங்கிருந்து என் கண்ணை அகற்ற!
                                                       முழு  நிலவாய், அழகாய், தென்னங்கீற்றின் 
                                            ஊடாய் பளிரென்று சிரித்து கொண்டிருந்தவள்
                                                        என்னையும் அல்லவா மயக்கி விட்டாள்!
                                            'இப்படித்தான் மாட்டிக்கொண்டேன் நானும்' 
                                                         என்றார் என்னவர் விஷமசிரிப்புடன் !!  
                                                
                                            மெய் உணர்ந்து மடியில் நானும் 
                                                          கண்மூட, அந்தோ என்னாயிற்று...?
                                            மறைந்துவிட்டாள் நிலாப்பெண்
                                                          மேகத்திற்குள்.... என்ன செய்வாள்
                                            அவளும் பெண்தானே ? 
                                                            வந்துவிட்டது பொறாமை..??!!


                                                                     ******
Tweet

26 கருத்துகள்:

  1. // மறைந்துவிட்டாள் நிலாப்பெண்
    மேகத்திற்குள்.... என்ன செய்வாள்
    அவளும் பெண்தானே ?
    வந்துவிட்டது பொறாமை..??//

    பெண்மையின் உணர்வகளை அழகாக சொல்லி இருகிறீர்கள் . கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  2. /////'இப்படித்தான் மாட்டிக்கொண்டேன் நானும்'
    என்றார் என்னவர் விஷமசிரிப்புடன் !! /////


    ...... தொடரட்டும் - இந்த romance மற்றும் கவிதை! :-)

    பதிலளிநீக்கு
  3. //மெய் உணர்ந்து மடியில் நானும் கண்மூட, அந்தோ என்னாயிற்று...? மறைந்துவிட்டாள் நிலாப்பெண் மேகத்திற்குள்....//

    இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது அக்கா, நல்லாயிருக்கு அக்கா .உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா1:12 PM, ஜூலை 01, 2010

    இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது -Jeevakemeni

    பதிலளிநீக்கு
  5. உங்களின் மன உணர்வுகளைப் பிரதிபலிபது போல இருந்தது கவிதை.

    உங்களவருக்கு நிலவு மீது காதலா? நம்ப முடியவில்லை. இயற்கை ரசிக்கத் தெரிந்த மனிதர்!

    பதிலளிநீக்கு
  6. உங்களின் மன உணர்வுகளைப் பிரதிபலிபது போல இருந்தது கவிதை.

    உங்களவருக்கு நிலவு மீது காதலா? நம்ப முடியவில்லை. இயற்கை ரசிக்கத் தெரிந்த மனிதர்!

    பதிலளிநீக்கு
  7. 'நிலவைப்பார்' என்றாய். வெறுப்பாய் நான்
    மேலே நோக்க....., என்னால் இயலவில்லை//


    கற்பனையினூடே காதலையும் நிஜ வடிவில் தந்துள்ளீர்கள். கவிதை யதார்த்தம் என்று சொன்னால் கோபப்படமாட்டீர்கள் தானே! மொட்டை மாடி... ஆயிரம் காதல் கதைகளை நிலவினூடே சொல்லும் ஒரு வர்ணஜாடி!

    பதிலளிநீக்கு
  8. சசி குமார்...

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி. நீங்க அக்கா என்று அழைப்பது அதைவிட பிடித்து இருக்கிறது. எனக்கு பிளாக்கர் பற்றி வரும் சந்தேகங்களை உங்களிடம் கேட்கலாமா?

    வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. jeevakemeni...

    முதல் வருகைக்கு நன்றி. உங்க பெயர் வித்தியாசமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  10. தமிழ் மதுரம்...

    //உங்களவருக்கு நிலவு மீது காதலா? நம்ப முடியவில்லை. இயற்கை ரசிக்கத் தெரிந்த மனிதர்!//

    உண்மைதான் ! எனது கோபம் நியாயம்தானே !

    பதிலளிநீக்கு
  11. தமிழ் மதுரம்...

    உண்மையில் கவிதை யதார்த்தம் என்று சொல்வது மிகவும் சரியே. கருத்துகளை வெளிபடையாக சொல்வது தான் எனக்கு பிடிக்கும். விமர்சனம் அதைவிட பிடிக்கும்.

    அந்த வகையில் நீங்கள் சொன்ன கருத்திற்கு மிகவும் மகிழ்கிறேன்.

    நன்றி. தொடர்ந்து எதிர் பார்கிறேன்

    பதிலளிநீக்கு
  12. நல்லா இருக்குங்க இந்த ரொமான்ஸ் கவிதை.

    பதிலளிநீக்கு
  13. இயல்பான அருமையான வரிகள்....நன்றாக இருக்கிறது...கவிதைகள் அதிகம் எழுதுங்கள்.....

    பதிலளிநீக்கு
  14. அடடா.. கலக்கிடீங்க.. தோழி..
    பெண்ணுக்கு நிலா பெண்ணே.. பொறாமை..

    ஹ்ம்ம். ஹ்ம்ம்.. :-))))
    சூப்பர் சூப்பர் சூப்பர்..
    ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..
    தொடருங்கள்.. :)

    பதிலளிநீக்கு
  15. இராமசாமி கண்ணன்...

    வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  16. ganesh...

    உங்களின் ஊக்கம் என்னை இன்னும் அதிகமாக எழுத வைக்கும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. Ananthi...

    உங்களின் உற்சாகமான வாழ்த்துக்கு நன்றி தோழி

    பதிலளிநீக்கு
  18. அழகான வார்த்தை தேர்வு... நல்ல சொல்லாடல்... ரசனையான காதல் பதிவு

    பதிலளிநீக்கு
  19. தெம்மாங்குப்பாட்டு...

    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  20. அப்பாவி தங்கமணி...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி .

    பதிலளிநீக்கு
  21. //சினம் தணியாத
    நான் திமிர,//



    great.......................

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...