புதன், ஜூன் 16

AM 11:47
29



குறைகள் அல்ல சில பிழைகள்


பல நிறைகளை கொண்ட ஆண்களிடம் கட்டாயம் இந்த குறைகளும் இருந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  குறைகளையும் தெரிந்துகொண்டால் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள எதுவாக இருக்கும் என்பதாலேயே இந்த குறைகளை விளக்க வேண்டியது அவசியமாகிறது .



மனைவி அமைவது எல்லாம்..

எல்லோருக்குமே ஒரே புரிதலுடன் கூடிய மனைவி அமைவது இல்லை. ஆனால் அமைந்த மனைவியை தனக்கு ஏற்றாற்போல், தன் பக்கம் கொண்டு வந்து சரி செய்ய அந்த கணவனால் மட்டும் தான் முடியும்.  அதற்கு தன்னிடம் உள்ள சிலபல குறைகள் என்னவென்று முதலில் உணர்ந்து சரி செய்ய முயல வேண்டும்.  நம்மிடம் என்ன குறை இருக்கிறது ? நல்ல ஆள் என்றுதானே எல்லோரும் சொல்கிறார்கள் என்று எண்ணுவது தவறு (உங்கள் மனைவி சொல்கிறாளா...?) மற்றவர்களைவிட உங்களிடம் நெருங்கி உறவாட கூடியவள் மனைவிதான்.  நீங்கள் நிறை என்று நினைப்பது அவளுக்கு குறையாக தெரியலாம்.

உதாரணமாக, கணவன் அமைதியான, அதிர்ந்துகூட பேசாத, மென்மையான நடவடிக்கை கொண்டவனாக நல்லவிதமாக இருக்கலாம் .  உண்மையில் இந்த குணம் கொண்ட ஆண்களை பல பெண்களுக்கு பிடிப்பது இல்லை என்பது ஆச்சரியம்தான்!!  ஆண் என்றால் கலகலப்பான, பேச்சிலும் சிரிப்பாலும் கலவரபடுத்துகூடிய கம்பீரம் கொண்ட ஆண் மகனாக தன் கணவன் இருக்கவேண்டும் என்பது பல இளம் பெண்களின் எதிர்பார்ப்பு.  ஆனால் இதற்காக மென்மையான குணம் கொண்டவர்கள் மனைவிக்காக தங்களது சுயத்தை இழக்க முடியாது, இழக்கவும் கூடாதுதான்....!!


பிறவி குணத்தை மாற்ற  இயலாது அதைவிட இந்த குணம்தான் சிறந்தது என்பதை மனைவிக்கு புரிய வைக்க வேண்டும்!!


புரிந்து கொள்ளும் தன்மை குறைவு 
பெண்கள் ஒரு ஆணிடம் அரைமணி நேரம் பேசினால் போதும், அந்த ஆணை பற்றி சுலபமாக எடை போட்டு விடுவார்கள்.  ஆனால் இந்த ஆண்கள் அப்படி இல்லை, 40  ௦வருடம் ஒன்றாகவே வாழ்ந்திருந்தாலும் மனைவியை முழுதாக புரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.


ஒரு மனைவியால் தன் கணவனின் விருப்பங்கள் என்ன என்று தெரிந்து வைத்து அதன்படி நடக்கும் போது கணவனால் மட்டும் ஏன் அவ்வாறு இருக்க முடியவில்லை.  மனைவியை புரிந்து கொள்ள நேரம் ஒதுக்காத வரை கணவனால் தாம்பத்திய வாழ்வில் வெற்றி பெறவே முடியாது!       


மரியாதை கொடுக்காத தன்மை 

அவளும் எல்லா உணர்வுகளும் உள்ள சக மனுசிதான் என்று பலருக்கும் தெரிவது இல்லை.  அவள் படிக்காதவளாக இருந்தாலுமே அவளுக்கும் சுய மரியாதை, சுய கௌரவம்  எல்லாம் இருக்கிறது ஆங்கிலத்தில் சொல்வது போல் சம அந்தஸ்துள்ள பார்ட்னர், இதில் சில ஆண்கள் தான் என்னவோ ஒரு முதலாளியை போலவும் மனைவியை அடிமை போலவும் நடத்தும் நிலை இன்றும் இருக்கத்தான் செய்கிறது.  

செவி கொடுக்காத தன்மை

மனைவி பேசும் எதையும் காது கொடுத்து கேட்காத நிலைமைதான் பல வீடுகளில்...!  வீட்டில்  அடைந்து கிடக்கும் அவளுக்கு என்ன தெரியும்? என்ற மட்டமான ஒரு  எண்ணம் பல கணவர்களுக்கும் இருக்கிறது. ஒரு பிரச்னைக்கு ஆண்களால் ஒரு தீர்வைதான் யோசிக்கமுடியும், அதே நேரம் இந்த மனைவி பலவற்றை  அலசி ஆராய்ந்து பல தீர்வுகளை கண்டு பிடித்து வைத்திருப்பாள்.....! 

ஆண்களின் பார்வை குதிரையின் பார்வையை போன்றது, ஆனால் பெண்களின் பார்வை கழுகின் பார்வையை போன்று கூர்மையானது!! பெண்கள்  பிறப்பிலேயே எதையும் பகுத்து அறியும் அறிவையும், எதையும் சந்தேக கண்கொண்டு நோக்கும் இயல்பையும் பெற்றவர்கள்....! அதனால் எந்த பிரச்சனையையும் சுலபமாக எடுத்துகொள்வார்கள். மனைவி ஒரு மந்திரிதான் அவளை புரிந்து கொண்ட கணவனுக்கு!! 
possessiveness  

இந்த குணம் ஆண், பெண் இருவருக்குமே இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாக இருக்கிறது. அதிலும் கல்யாணம் ஆன புதிதில் கணவனின் இந்த குணத்தை பெண்கள் விரும்பவே செய்வார்கள், நம் மேல்தான் கணவனுக்கு எவ்வளவு அன்பு என்று பெருமைகூட பட்டு கொள்வார்கள், ஆனால் வருடங்கள் போக போக கணவனிடம் இந்த குணம் அதிகமாக வெளிப்படும் போது மனைவிக்கு அது, 'நம் மேல் கணவனுக்கு சந்தேகம் வந்து விட்டதா' என்பதில் போய் முடிந்து விடுகிறது. பிறகு என்ன ? அவர் ஒன்று நினைத்து சொல்ல மனைவி வேறு ஒன்றை நினைத்து கோபபட இனி இங்கு தாம்பத்யம் தகராறுதான்....!!

சந்தேகம்

சில கணவர்கள் உண்மையிலேயே தங்கள் மனைவி மேல் கொள்ளும் சந்தேகம், அந்த மனைவியை சிறுக சிறுக கொன்று குடிப்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.  கணவன் மனைவிக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கையும் , அன்பும் இல்லாவிட்டால் சந்தேகம் விஸ்பரூபம் எடுக்கத்தான் செய்யும்.  இருவருக்கும் இடையில் எந்த ஒளி மறைவும் இல்லாமல் வெளிப்படையாக இருக்கும் போது சந்தேகம் என்ற பிசாசு தான் வேலையை காட்டாது.  

இந்த சந்தேக புத்தியால் மனைவிக்கு 65 வயது ஆனபின்னரும் சந்தேகம் கொண்டு குறை சொல்லும் ஆண்கள் இன்றும் இருக்கிறார்கள்.

அதிகமாக உணர்ச்சி வசபடுவது

முன்பு எல்லாம் பெண்கள்தான் எடுத்ததுக்கு எல்லாம் உணர்ச்சி வச படுவார்கள்.  ஆனால் பெண்கள் இப்போது கொஞ்சம் தெளிந்து விட்டார்கள் ?  தேவை இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு கோபபடுவதோ, கண்ணீர் விடுவதோ இல்லை.  அதனால் மனைவியின் முன் அதிக கோபமோ , ஆவேசமோ படுவது பிரச்னைக்கு வடிகால் இல்லை.  அப்படியே நீங்கள் நடந்து கொண்டாலுமே அதை மனைவியர் பெரிது படுத்தவே மாட்டார்கள். 

இதில் சிலர் எப்படி என்றால் மனைவி ஏதாவது ஒரு பிரச்சனை பற்றி பேச தொடங்கி விட்டாலே போதும், 'ஆரம்பிச்சிடியா ? மனுஷன் வந்ததும் உயிரை எடுப்பீயே ? ச்சே' ,என்று ரொம்ப கோபமா பேசிட்டு வீராப்பாக வெளியில் சென்று விடுவது. இந்த நடவடிக்கையா அந்த பிரச்னைக்கு தீர்வு ? கணவனிடம் சொல்லாமல் வேறு யாரிடம் போய் சொல்வாள் ? யோசிக்கிறதே இல்லை...! 

அதே நேரத்தில் இந்த நிலைமையை வேறு மாதிரி, ' சரிமா நான் இப்பதானே வந்திருக்கேன், நான் என்னை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன் அப்புறம் விரிவா பேசுவோம் ' ,என்று சொன்னால் எப்படி இருக்கும்...?! சம்பந்தபட்ட  பிரச்சனை ஒருவேளை உங்களை பற்றியதாக இருந்துவிட்டால்,  உங்களின் இந்த பதிலிலேயே பாதி மேட்டர் சரியாகி விடும் !! 

தேக்கி வைக்கபட்டு இருக்கும் அழகிய, அமைதியான  நீரில் எறியும் ஒரு சிறு கல்தான், சலனத்தை ஏற்படுத்துகிறது...!! கல்யாணம் ஆன அனைவருக்கும் இந்த வரியில் உள்ள அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்....!!!

இந்த பிரிவின் அடுத்த பாகம் நாளை வெளி வரும்....


Tweet

29 கருத்துகள்:

  1. //தேக்கி வைக்கபட்டு இருக்கும் அழகிய, அமைதியான நீரில் எறியும் ஒரு சிறு கல்தான், சலனத்தை ஏற்படுத்துகிறது...!! கல்யாணம் ஆன அனைவருக்கும் இந்த வரியில் உள்ள அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்....!!/

    100% right friend

    whatever u have written in this part is good and right

    பதிலளிநீக்கு
  2. பெண்கள் ஒரு ஆணிடம் அரைமணி நேரம் பேசினால் போதும், அந்த ஆணை பற்றி சுலபமாக எடை போட்டு விடுவார்கள். ஆனால் இந்த ஆண்கள் அப்படி இல்லை, 40 ௦வருடம் ஒன்றாகவே வாழ்ந்திருந்தாலும் மனைவியை முழுதாக புரியாதவர்களாகவே இருக்கிறார்கள்//

    இது உண்மை..//



    முன்பு எல்லாம் பெண்கள்தான் எடுத்ததுக்கு எல்லாம் உணர்ச்சி வச படுவார்கள். ஆனால் பெண்கள் இப்போது கொஞ்சம் தெளிந்து விட்டார்கள் ? தேவை இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு கோபபடுவதோ, கண்ணீர் விடுவதோ இல்லை.//

    இன்னும் பலர் இப்படி இருகிறாக்கள்

    பதிலளிநீக்கு
  3. this articles are as usual clear and perfect. thats why I have no critics. regards. thanks.

    பதிலளிநீக்கு
  4. பறவைகள் பலவிதம் மாதிரி மானிடப்பிறவியில் ஒவ்வொருவரும் ஒருவிதம்,அமையறதை பொருத்து தான் எல்லாம்.முக்கியமாக எதிர்பார்த்தல் அதிகம் இல்லைன்னால் தாம்பத்தியம் நிம்மதியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. //பெண்கள் ஒரு ஆணிடம் அரைமணி நேரம் பேசினால் போதும், அந்த ஆணை பற்றி சுலபமாக எடை போட்டு விடுவார்கள். ஆனால் இந்த ஆண்கள் அப்படி இல்லை, 40 ௦வருடம் ஒன்றாகவே வாழ்ந்திருந்தாலும் மனைவியை முழுதாக புரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.//

    ராக்கெட்லே போய் விண்வெளியில்
    என்ன இருக்கு அப்படின்னு கண்டுபிடிசுறலாம் ஆணா ஜாக்கெட் போட்ட பொண்ணு மசனுகுள்ளே
    என்னே இருக்கு எப்படி கண்டுபிடுக்றது
    கஷ்டம் தான்

    //அதே நேரம் இந்த மனைவி பலவற்றை அலசி ஆராய்ந்து பல தீர்வுகளை கண்டு பிடித்து வைத்திருப்பாள்.....!//

    i agree

    //தேக்கி வைக்கபட்டு இருக்கும் அழகிய, அமைதியான நீரில் எறியும் ஒரு சிறு கல்தான், சலனத்தை ஏற்படுத்துகிறது...!! கல்யாணம் ஆன அனைவருக்கும் இந்த வரியில் உள்ள அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்....!!!//

    எனக்கு இனி மேல்தான் இது புரியும்
    அருமையாகவே சொல்லி இருகிங்க

    (அப்புறம் வீட்டுக்கு போய்
    ஒட்டு போட்டு விடுகிறேன்)

    பதிலளிநீக்கு
  6. அருமையான கருத்துக்கள் கௌசல்யா.. நல்ல கட்டுரை. தம்பதியினர் ஒருவருகொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் சுகமாகும்.

    பதிலளிநீக்கு
  7. LK....

    100% right friend

    whatever u have written in this part is good and right

    நிறை, குறைகளை சமமாக ஏற்று கொள்ளும் பக்குவம் இருந்தாலே போதும், மனிதன் முழுமை பெற்று விடுகிறான்...! :))

    பதிலளிநீக்கு
  8. Soundar...

    சொன்னபடி சீக்கிரம் வந்ததுக்கு நன்றி!

    //இன்னும் பலர் இப்படி இருக்கிறார்கள்//

    அப்படியா...?

    thanks friend

    பதிலளிநீக்கு
  9. asiya omar...

    இந்த தொடரின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டதும் இதைத்தான்! ஆனால் அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் கொண்டு போய் விடும் போது, அதை தாங்கும் சக்தி இல்லாமல் வேறு போய் விடுகிறது. என்ன செய்வது ?

    கருத்திற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. adhiran...

    //this articles are as usual clear and perfect//

    thank u verymuch for ur comment friend!

    பதிலளிநீக்கு
  11. //ஆணா ஜாக்கெட் போட்ட பொண்ணு மசனுகுள்ளே //

    appa sudithar or shirt potta ponan iruntha kandupidikalama???

    பதிலளிநீக்கு
  12. //இந்த ஆண்கள் அப்படி இல்லை, 40 ௦வருடம் ஒன்றாகவே வாழ்ந்திருந்தாலும் மனைவியை முழுதாக புரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.//

    இது ஒத்துக்கொள்ள முடியாத விஷயம்.. என்னதான் நாம மனசு விட்டு பேசினாலும் மனைவியோ ( அல்லது யாராவது இருக்கட்டும் )100 சதவிதம் உன்மையை சொல்வதில்லை. அது பயமா இல்லை முன் ஜாக்கிரதையா அது அவர்களுக்கே வெளிச்சம்.

    கணவன் தன் மனைவியிடம் எதையும் மறைபதில்லை. அதுதான் நீங்க சொன்ன அரைமணி நேரம். மனைவியிடம் முழு பேச்சை கேட்கவே ( தலைவலியே சிலநேரம் வந்து விடும் ) அரைநாள் ஆகிவிடும்

    பதிலளிநீக்கு
  13. நம்ம ப்ளாக் பக்கம் வந்து போங்க தோழி.... :)

    பதிலளிநீக்கு
  14. //இது ஒத்துக்கொள்ள முடியாத விஷயம்.. என்னதான் நாம மனசு விட்டு பேசினாலும் மனைவியோ ( அல்லது யாராவது இருக்கட்டும் )100 சதவிதம் உன்மையை சொல்வதில்லை. அது பயமா இல்லை முன் ஜாக்கிரதையா அது அவர்களுக்கே வெளிச்சம்.//
    thala , i differ with u.. there is exclusions in all cases. but my wife never hide anything from me

    பதிலளிநீக்கு
  15. jailany...

    //இது ஒத்துக்கொள்ள முடியாத விஷயம்.. என்னதான் நாம மனசு விட்டு பேசினாலும் மனைவியோ ( அல்லது யாராவது இருக்கட்டும் )100 சதவிதம் உன்மையை சொல்வதில்லை. அது பயமா இல்லை முன் ஜாக்கிரதையா அது அவர்களுக்கே வெளிச்சம்.//

    சகோதரரே , நிச்சயமா அது முன்ஜாக்கிரதையாக தான் இருக்கும் ! உங்கள் மாதிரியான ஆளிடம் அவங்க வேறு எப்படி இருப்பாங்க...?

    பதிலளிநீக்கு
  16. LK...

    //thala , i differ with u.. there is exclusions in all cases. but my wife never hide anything from me//

    விடுங்க LK , இவர் கிட்ட சொல்லி ஒன்னும் பிரயோஜனம் இல்லை என்பதால் அவர் மனைவி சொல்லாம இருந்திருப்பாங்க...!!

    பதிலளிநீக்கு
  17. S.Maharajan...

    அனைத்தையும் நன்றாக புரிந்து பொறுமையாக படித்ததிற்கும், அதை பற்றிய உங்கள் கருத்துகளுக்கும் மிக்க நன்றி!

    //(அப்புறம் வீட்டுக்கு போய்
    ஒட்டு போட்டு விடுகிறேன்)//

    itharkku special thanks!

    பதிலளிநீக்கு
  18. //விடுங்க LK , இவர் கிட்ட சொல்லி ஒன்னும் பிரயோஜனம் இல்லை என்பதால் அவர் மனைவி சொல்லாம இருந்திருப்பாங்க...//

    hehhe

    பதிலளிநீக்கு
  19. starjan(ஸ்டார்ஜன்)...

    //தம்பதியினர் ஒருவருகொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் சுகமாகும்//

    இந்த ஒரு வரியை புரிய வைப்பதற்கு தான் இந்த தொடர் பதிவே.....!!

    நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு
  20. Soundar...

    //நம்ம ப்ளாக் பக்கம் வந்து போங்க தோழி.... :)//

    kandippa friend!

    thanks

    பதிலளிநீக்கு
  21. இந்த புரிதல் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.


    என்ன அழகாக , ஆண் பெண் மனங்களை புரிந்து கொண்டு எழுதி இருக்கீங்க.... பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  22. chitra...

    உங்க பாராட்டுக்கு நன்றி தோழி. மகிழ்கிறேன் !!

    பதிலளிநீக்கு
  23. //பெண்கள் ஒரு ஆணிடம் அரைமணி நேரம் பேசினால் போதும், அந்த ஆணை பற்றி சுலபமாக எடை போட்டு விடுவார்கள். ஆனால் இந்த ஆண்கள் அப்படி இல்லை, 40 ௦வருடம் ஒன்றாகவே வாழ்ந்திருந்தாலும் மனைவியை முழுதாக புரியாதவர்களாகவே இருக்கிறார்கள்//



    சரி தான்.

    பதிலளிநீக்கு
  24. அருமையான கருத்துக்கள்...

    பதிலளிநீக்கு
  25. அடடா, அடுல்ட்ஸ் ஒன்லின்னு நெனச்சேன். ஆனா நல்ல நாகரிகரிகமா இருக்கே! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  26. @@@Kousalya--//சகோதரரே , நிச்சயமா அது முன்ஜாக்கிரதையாக தான் இருக்கும் //

    // உங்கள் மாதிரியான ஆளிடம் அவங்க வேறு எப்படி இருப்பாங்க...? //

    ////விடுங்க LK , இவர் கிட்ட சொல்லி ஒன்னும் பிரயோஜனம் இல்லை என்பதால் அவர் மனைவி சொல்லாம இருந்திருப்பாங்க...//


    நா சொன்னது பொதுவா உலகத்தில நடக்கிறதை பத்தி மட்டுமே!! என் குடும்பத்தை இல்ல அதுவும் இல்லாம எங்கள் இருவருக்கும் இதுவரை ஒரு சின்ன மன வருத்தம் கூட வந்தது இல்லை இறைவன் அருளால்

    ஒரு கருத்தை சொன்னா அது தன் குடும்பத்தைத்தான்னு நினைப்பதை என்னவென்று சொல்வது..!!!


    இடுகை சூப்பர்..!! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  27. jailany...

    //என் குடும்பத்தை இல்ல அதுவும் இல்லாம எங்கள் இருவருக்கும் இதுவரை ஒரு சின்ன மன வருத்தம் கூட வந்தது இல்லை இறைவன் அருளால்//

    நீங்கள் ஜாலியா இருப்பதில் இருந்தே உங்கள் குடும்பத்தை புரிந்து கொண்டேன் !! :)))

    //ஒரு கருத்தை சொன்னா அது தன் குடும்பத்தைத்தான்னு நினைப்பதை என்னவென்று சொல்வது..!!!//

    ஆனா என் பதிவுதாங்க சீரியஸ் , நான் ரொம்ப ஜாலி ஆன ஆள்தான். LK and me சும்மா உங்களை கிண்டல் பண்ணினோம் !! ( இது உங்களுக்கும் தெரியும் )

    நன்றி சகோதரரே.

    பதிலளிநீக்கு
  28. Sangkavi...

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. Software Engineer...


    வேற என்ன சொல்ல ? வருகைக்கு நன்றி friend

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...