காளான் வளர்ப்பு

>> Sunday, March 14

எப்படி வளர்ப்பது என்பதை பற்றி நான் விரிவாக கூற போவதில்லை. ஏன் என்றால் காளான் வளர்ப்பு என்ற தலைப்பில் ஏற்கனவே அதிக தளங்கள் உள்ளன. அதனால் அதை பற்றியே நான் மறுபடி கூறுவதை விட அதை எவ்வாறு சிறிய அளவில் வீட்டிலேயே வளர்த்து நம் சமையலுக்கு பயன் படுத்தலாம் என்று கூறுகிறேன். காளான் உணவு சத்து மிகுந்தது என்பதால் காய்கறி தோட்டம் போல் இதனையும் வளர்த்து வருகிறேன். மேலும் இதற்காக அதிகமாக மெனக்கிட வேண்டாம்.

தேவையான இடம்:இதனை பொறுத்தவரை வளரும் சூழ்நிலை குளிர்ச்சியாக இருக்கவேண்டும். இதற்கு வீட்டின் ஒரு மூலையே போதும். மூன்று பக்கமும் கயறு கட்டி சனல் சாக்கை screen போல் தொங்கவிடவேண்டும். தரையிலும் மணலை(அல்லது சாக்கை) பரப்பி விடவும். இப்போது போதுமான அளவிற்கு படுக்கை தயார். பிறகு காளான் விதை போட பட்ட பிளாஸ்டிக் கவர்களை ஒரு ஸ்டூல் மீது வரிசையாக வைக்கவும். இதனை நமது காளான் ரூமில் வைக்கவேண்டும். சுற்றி இருக்கும் சாக்கில் நன்கு தண்ணீரை தெளிக்கவேண்டும். அவ்வளவுதான் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை தண்ணீர் தெளித்து ஈரப்பதம் குறையாமல் பார்த்துகொண்டாலே போதும்.


3 வது நாளில் இருந்து மொட்டுகள் வர தொடங்கும். மறுநாள் கவரை பிரித்து எடுத்து விடலாம், காளான் வளர தொடங்கி நன்கு பின்னி செட் ஆகி இருக்கும். மொட்டுகள் விரிய விரிய பறித்து கொண்டே இருக்கலாம். சொந்த வீட்டில் இருப்பவர்கள் compound ஓரமாக சிறிய ஓலை குடில் போட்டும் வளர்க்கலாம். விதைகள் நல்ல தரமானதாக வேண்டும் என்றால் உங்கள் ஊர் வேளாண் பண்ணைகளில் வாங்கலாம். காளான் சமையல் பற்றி தெரியவேண்டும் என்றால் சுவையான சமையல் என்ற பதிவை பாருங்கள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Visitors

Copyright

MyFreeCopyright.com Registered & Protected

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP